Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 329
அற்றைக்கு இரைதேடி
(காஞ்சீபுரம்)

song 329
atRaikku iraithEdi
(kAnjeepuram)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next

 ஒலிப்பதிவுக்கு 
mp3


view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தத்தத் தனதான தத்தத் ...... தனதான
     தத்தத் தனதான தத்தத் ...... தனதானா

......... பாடல் .........

அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை
     பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ

வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா
     கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அற்றைக்கு இரைதேடி ... அன்றாடத்துக்கு வேண்டிய உணவைத் தேடி,

அத்தத்திலும் ஆசை ... பொருள் மீதும் ஆசையினை

பற்றித் தவியாத பற்றை ... வைத்துக்கொண்டு தவிக்காத உறுதிப்பாடை

பெறுவேனோ ... யான் பெறுதற்கு இயலுமோ?

வெற்றிக் கதிர்வேலா ... வெற்றியே விளங்கும் ஜோதி வேலவனே,

வெற்பைத் தொளைசீலா ... கிரெளஞ்சமலையைத் தொளைத்த பரிசுத்தனே,

கற்றுற் றுணர்போதா ... கற்றுத் தியானித்து உணரத்தக்க ஞானஸ்வரூபனே,

கச்சிப் பெருமாளே. ... காஞ்சிபுரத்தில் அமர்ந்த பெருமாளே.





Song 329 - atRaikku iraithEdi (kAnjeepuram)

atraik iraithEdi aththath ...... thilumAsai
     patrith thaviyAdha patraip ...... peRuvEnO

vetrik kadhirvElA veRpaith ...... thoLaiseelA
     katrutr uNarbOdhA kachchip ...... perumALE.

......... Meaning .........

atraikiraithEdi: Going about in search of daily food

aththath thilumAsai: and having a desire to acquire wealth,

patrith thaviyAdha patraip peRuvEnO: I suffer from too many attachments; can I develop the resolve to get rid of them and attach myself to You alone?

vetrik kadhirvElA: You carry the victorious and bright spear.

veRpaith thoLaiseelA: To You goes the credit of having pierced the Mount Krauncha.

katrutr uNarbOdhA: You are the embodiment of knowledge acquired after learning.

kachchip perumALE.: You reside at KAnchipuram, Oh Great One!

(0281-0313-3066_000CA)*fam1



இப்பாடலின் ஒலிப்பதிவு(கள்)  audio recording(s) of this song

guruji ragavan

view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions