Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 271
சொரியும் முகிலை
(திருத்தணிகை)

song 271
soriyum mugilai
(thiruththaNigai)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next




view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தனன தனனத் தனன தனனத்
     தனன தனனத் ...... தனதான

......... பாடல் .........

சொரியு முகிலைப் பதும நிதியைச்
     சுரபி தருவைச் ...... சமமாகச்

சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
     சுமட ரருகுற் ...... றியல்வாணர்

தெரியு மருமைப் பழைய மொழியைத்
     திருடி நெருடிக் ...... கவிபாடித்

திரியு மருள்விட் டுனது குவளைச்
     சிகரி பகரப் ...... பெறுவேனோ

கரிய புருவச் சிலையும் வளையக்
     கடையில் விடமெத் ...... தியநீலக்

கடிய கணைபட் டுருவ வெருவிக்
     கலைகள் பலபட் ...... டனகானிற்

குரிய குமரிக் கபய மெனநெக்
     குபய சரணத் ...... தினில்வீழா

உழையின் மகளைத் தழுவ மயலுற்
     றுருகு முருகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சொரியும் முகிலைப் பதும நிதியைச் சுரபி தருவைச் சமமாகச் சொ (ல்) லியும் ... மழை பொழிகின்ற மேகத்தையும், பதும நிதியையும், காமதேனுவையும், கற்பக மரத்தையும் (கொடையில்) நீ ஒப்பாய் என்று சொல்லிப் புகழ்ந்தாலும்,

மனம் எள் (அத்) தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகு உற்று ... மனம் ஓர் எள் அளவும் இளகி இரங்குதல் இல்லாத கீழ் மக்களின் அருகில் சென்று,

இயல் வாணர் தெரியும் அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவி பாடி ... இலக்கியத் தமிழ்ப் புலவர்கள் தெரிந்து பாடிய அருமையான பழைய பாடல்களைத் திருடியும், திரித்து நுழைத்தும் பாடல்களைப் பாடி,

திரியு மருள் விட்டு உனது குவளைச் சிகரி பகரப் பெறுவேனோ ... திரிகின்ற மயக்க அறிவை விட்டு, குவளை மலர் தினமும் மலர்கின்ற, உன்னுடைய, திருத்தணிகை மலையின் பெருமையைக் கூறும்படியான பாக்கியத்தை நான் பெறுவேனோ?

கரிய புருவச் சிலையும் வளைய ... (வள்ளியின்) கரிய புருவம் என்னும் வில் (காம வேதனையால்) வளைந்து சுருங்க,

கடையில் விடம் மெத்திய நீலக் கடிய கணை பட்டு உருவ ... (காமனது ஐந்தாவது) கடைசிப் பாணமானதும்*, விஷம் நிறைந்ததும் ஆகிய நீலோற்பலம் என்னும் கொடுமை வாய்ந்த அம்பு உன் மேல் பட்டு, நீ அதனால் விரக வேதனை மிகுந்து,

வெருவிக் கலைகள் பல பட்டன கானிற்கு உரிய குமரிக்கு அபயம் என நெக்கு ... மிகுந்த அச்சத்துடன், மான்கள் பல உள்ள வள்ளி மலைக் காட்டுக்குச் சென்று, அவ்விடத்துக்கு உரிய குமரியாகிய வள்ளிக்கு அபயம் என்று உரைத்து,

உபய சரணத்தினில் வீழா உழையின் மகளைத் தழுவ மயல் உற்று உருகு (ம்) முருகப் பெருமாளே. ... அவளது இரண்டு பாதங்களிலும் விழுந்து, பின்பு, மான் பெற்ற மகளாகிய வள்ளியைத் தழுவ மோகம் கொண்டு உருகி நின்ற முருகப் பெருமாளே.




* நீலோற்பல மலர் மன்மதனின் ஐந்தாவது ஈற்றுப் பாணம். மற்ற கணைகள் - தாமரை, மா, அசோகம், முல்லை.





Song 271 - soriyum mugilai (thiruththaNigai)

coriyu mukilaip pathuma nithiyaic
     curapi tharuvaic ...... camamAkac

coliyu manamet tanaiyu nekizhviR
     sumada rarukut ...... RiyalvANar

theriyu marumaip pazhaiya mozhiyaith
     thirudi nerudik ...... kavipAdith

thiriyu maruLvit tunathu kuvaLaic
     cikari pakarap ...... peRuvEnO

kariya puruvac cilaiyum vaLaiyak
     kadaiyil vidameth ...... thiyaneelak

kadiya kaNaipat turuva veruvik
     kalaikaL palapat ...... tanakAniR

kuriya kumarik kapaya menanek
     kupaya saraNath ...... thinilveezhA

uzhaiyin makaLaith thazhuva mayalut
     Ruruku murukap ...... perumALE.

......... Meaning .........

coriyum mukilaip pathuma nithiyaic curapi tharuvaic camamAkac co(l)liyum: "(In granting alms) you are like the cloud that showers rain, like the (wish-yielding) Padmanidhi, KamadhEnu and KaRpaga tree" - even if one praises in such words -

manam eL (ath)thanaiyum nekizhvu il sumadar aruku utRu: those miserly, base people would not be moved nor would they show an iota of kindness; approaching such people,

iyal vANar theriyum arumaip pazhaiya mozhiyaith thirudi nerudik kavi pAdi: and composing songs on them by stealing from ancient and rare songs written by Tamil poets, well-versed in literature, or by inserting such poems in my own songs with slight modifications,

thiriyu maruL vittu unathu kuvaLaic cikari pakarap peRuvEnO: I do not want to roam about with such deceptive knowledge; instead, I would like to sing about the greatness of Your mountain in ThiruththaNigai where everyday a black lily blossoms; will I be fortunate to sing like that?

kariya puruvac cilaiyum vaLaiya: When the black bow-like brows (of VaLLi) were bent (due to pangs of passion),

kadaiyil vidam meththiya neelak kadiya kaNai pattu uruva: and when the (fifth and) last flowery and severe arrow of blue lily (neelOthpalam)*, full of poison, struck You, You became very passionate, being unable to bear separation (from VaLLi);

veruvik kalaikaL pala pattana kAniRku uriya kumarikku apayam ena nekku: with utmost fear, You went to the forest in VaLLimalai, belonging to that maiden, where many deers roam about, and declared that You sought refuge in VaLLi;

upaya saraNaththinil veezhA uzhaiyin makaLaith thazhuva mayal utRu uruku(m) murukap perumALE.: then You fell in prostration at her feet; later, You stood there melting with intense passion to embrace her, the daughter of a deer, Oh Great One!





* NeelOthpalam -blue lily- is the fifth and last of the flowery arrows shot by Manmathan; the others are lotus, mango, asOkam, and jasmine.


  (0233-0000-2290_000CA)*fxm

view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions