Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 81
புகரப் புங்க
(திருச்செந்தூர்)

song 81
pugarap pungka
(thiruchchendhUr)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next

 ஒலிப்பதிவுக்கு 
mp3


view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தனனத் தந்தத் தனனத் தந்தத்
     தனனத் தந்தத் ...... தனதான

......... பாடல் .........

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
     புயலிற் றங்கிப் ...... பொலிவோனும்

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
     பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
     திகிரிச் செங்கைத் ...... திருமாலும்

திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
     டெளிதற் கொன்றைத் ...... தரவேணும்

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
     தடநற் கஞ்சத் ...... துறைவோனே

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
     தையளித் தன்புற் ...... றருள்வோனே

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
     படியிற் சிந்தத் ...... தொடும்வேலா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
     பதியிற் கந்தப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புகரப் புங்கப் பகரக் குன்றில் ... புள்ளிகளை உடையதும் தூய்மையானதும் அழகியதுமான மலையை ஒத்த ஐராவத யானையின் மேலும்

புயலிற் றங்கிப் பொலிவோனும் ... மேகத்தின் மேலும் தங்கிப் பொலிகின்ற தேவேந்திரனும்,

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளை ... இணையற்றதும், எல்லாக் கலைகளுக்கும் தஞ்சமானதும் ஆகிய வேதத் தொகுப்புகளின் பொருளை

பண்பிற் புகல்வோனும் ... முறையாக மொழிபவராகிய பிரமதேவனும்,

திகிரிச் செங்கட் செவியில் துஞ்ச ... மலை போன்றதும், செம்மைப் பண்புடையதுமான ஆதிசேஷன் மீது துயின்ற

அத்திகிரிச் செங்கைத் திருமாலும் ... அந்தச் செங்கையில் சக்ராயுதத்தை ஏந்திய நாராயணமூர்த்தியும்,

திரியப் ... தமக்கு இந்த உபதேசம் கிடைக்கவில்லையே என்று இங்கும் அங்கும் திரிந்திடவும்,

பொங்கித் திரையற்று உண்டு ... உவகை பொங்கி, உள்ளத்தில் எண்ண அலைகள் நீங்கி, சிவானுபவத்தை உட்கொண்டு,

உள்தெளிதற்கு ஒன்றைத் தரவேணும் ... என் உள்ளம் தெளியுமாறு ஒரு மொழியை உபதேசித்து அருள வேண்டும்.

தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றி ... தகராகாசமாக இருந்து* அழகிய வேதசிரோமுடியாம் பேரிடத்தைப் பொருந்தி,

தடநற் கஞ்சத் துறைவோனே ... அகன்ற நல்லிடமான இதயக் கமலத்தில் வீற்றிருப்பவனே,

தருணக் கொங்கைக் குறவிக்கு ... இளமையான மார்பகங்களை உடைய குறப்பெண் வள்ளிக்கு

இன்பத்தையளித்து அன்புற்று அருள்வோனே ... பேரின்பத்தை வழங்கி அவள்மீது அன்புகொண்டு அருள்பவனே,

பகரப் பைம்பொற் சிகரக் குன்றை ... ஒளியுடைய பசும்பொற் சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்சமலையை

படியிற் சிந்தத் தொடும்வேலா ... இந்தப் பூமியின் கண் பொடியாகுமாறு தொடுத்தருளிய வேலாயுதனே,

பவளத் துங்கப் புரிசை ... பவளம் போன்று சிவந்த தூய மதில்கள் சூழ்ந்த

செந்திற்பதியிற் கந்தப் பெருமாளே. ... திருச்செந்தூர்த் தலத்தில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.




* ஆன்மாக்களின் இதய தாமரைக்கு நடுவே ஞானமயமாக விளங்கும் ஆகாயம் 'தகராகாசம்' எனப்படும்.





Song 81 - pugarap pungka (thiruchchendhUr)

pugarap pungap pagarak kundRiR
     puyalil thangip ...... polivOnum

poruvil thanjach churudhich changap
     poruLaip paNbiR ...... pugalvOnum

thigirich chengat seviyil thunjath
     thigirich chengaith ...... thirumAlum

thiriyap pongith thiraiyath thuNdut
     teLidhaR kondRaith ...... tharavENum

thagarath thandhach chikarath thondRith
     thadanaR kanjath ...... thuRaivOnE

tharuNak kongaik kuRavik kinbath
     thaiaLith thanbut ...... RaruLvOnE

pagarap paimpoR chikarak kundRaip
     padiyiR sindhath ...... thodumvElA

pavaLath thungap purisaic chendhiR
     padhiyil kandhap ...... perumALE.

......... Meaning .........

pugarap pungap pagarak kundRiR: There is this dotted, beautiful, pure and mountain-like elephant, AirAvatham;

puyalil thangip polivOnum: and the one who mounts it and also the clouds is IndrA.

poruvil thanjach churudhich sanga: There is this unique collection of Scriptures, called VEdAs, a repository of all arts,

poruLaip paNbiR pugalvOnum: whose meaning is well interpreted by BrahmA.

thigirich chengat seviyil thunjath: There is this humongous red Snake called AdhisEshan upon whom He slumbers

thigirich chenkaith thirumAlum: holding in his hand the great weapon called ChakrA; and He is Vishnu.

thiriya: The three of them were roaming hither and thither (looking for You to preach to them)!

pongith thiraiyath thuNdu: Enthralling my mind and freeing it from worries, deeply immersed in Siva-yOgA,

utteLidhaR kondRaith tharavENum: and for my inner clarity, You should come and teach me that unique ManthrA (OM)!

thagarath thandhach chikarath thondRith: In the Cosmos of Thakaram*, sitting on the zenith of the VEdAs

thadanaR kanjath thuRaivOnE: is my lotus heart; and You dwell in it!

tharuNak kongaik kuRavik: To VaLLi, the damsel of the KuRavAs, with youthful bosom,

inbaththai aLith thanbutr aruLvOnE: You bestow the greatest bliss with a lot of love, Oh Lord!

pagarap paimpoR sikarak kundRai: The golden peaks of the bright mount Krouncha

padiyiR sindhath thodumvElA: were reduced to powder on this earth by the force of Your Spear!

pavaLath thungap purisaic sendhiR: Surrounded by the pure coral red fortresses is ThiruchchendhUr

padhiyil kandhap perumALE.: which place is Your favourite abode, Oh Great One!





* Thakara Akasam is the cosmos in the inner soul of the AthmA where True Knowledge glows like a light.


  (0070-0044-1064_000CA)*fam


இப்பாடலின் ஒலிப்பதிவு(கள்)  audio recording(s) of this song

guruji ragavan

view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions