Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 61
தண் தேனுண்டே
(திருச்செந்தூர்)

song 61
thaN thEnuNdE
(thiruchchendhUr)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next

 ஒலிப்பதிவுக்கு 
mp3


view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தந்தா தந்தா தந்தா தந்தா
     தந்தா தந்தத் ...... தனதான

......... பாடல் .........

தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
     தண்டார் மஞ்சுக் ...... குழல்மானார்

தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
     சம்பா வஞ்சொற் ...... றடிநாயேன்

மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்
     வண்கா யம்பொய்க் ...... குடில்வேறாய்

வன்கா னம்போ யண்டா முன்பே
     வந்தே நின்பொற் ...... கழல்தாராய்

கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
     கொன்றாய் வென்றிக் ...... குமரேசா

கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
     குன்றா மன்றற் ...... கிரியோனே

கண்டா கும்பா லுண்டா யண்டார்
     கண்டா கந்தப் ...... புயவேளே

கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
     கந்தா செந்திற் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தண் தேனுண்டே ... குளிர்ந்த தேனைப் பருகி

வண்டார் வஞ்சேர் ... வண்டுகள் ஆர்வத்துடன் மொய்க்கின்ற

தண் தார் மஞ்சுக் குழல்மானார் தம்பால் ... தண்மையான மாலைகளைச் சூடிய மேகம் போன்ற கூந்தலையுடைய பெண்களிடத்தில்

அன்பார் நெஞ்சே கொண்டே ... அன்பு நிறைந்த மனத்தைக் கொண்டு சல்லாபித்து

சம்பாவஞ் சொற்று அடிநாயேன் ... சம்பாஷணைகளைச் செய்கின்ற நாயினும் கீழான அடியேன்,

மண் தோயம் தீ மென்கால் விண்தோய் ... மண், நீர், தீ, மென்மையான காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலான

வண்காயம் பொய்க்குடில் வேறாய் ... வளமிக்க இந்த சரீரமாகிய பொய்க் குடிசையிலிருந்து உயிர் நீங்கி,

வன்கானம்போய் அண்டா முன்பே ... கொடும் சுடுகாட்டுக்கு அருகில் நெருங்குவதற்கு முன்பாக

வந்தே நின்பொற்கழல்தாராய் ... என்முன் தோன்றி உன் அழகிய திருவடிகளைத் தந்தருள்வாயாக.

கொண்டாடும்பேர் கொண்டாடுஞ்சூர் ... தன்னைக் கொண்டாடிப் புகழ்பவர்களுடன் கூடி மகிழும் சூரனை

கொன்றாய் வென்றிக் குமரேசா ... கொன்றவனே, வெற்றியை உடைய குமரேசனே,

கொங்கார் வண்டு ஆர் பண்பாடும் ... பூக்களின் மகரந்தங்களில் நிறைந்த வண்டுகள் அருமையாய் இசைக்கும்

சீர்குன்றா மன்றற்கிரியோனே ... சிறப்பு குறையாத வள்ளிமலையில்* வாழ்பவனே,

கண்டாகும் பாலுண்டாய் ... கற்கண்டு போன்று இனிக்கும் உமையின் திருமுலைப்பால் உண்டவனே,

அண்டார் கண்டா கந்தப் புயவேளே ... பகைவர்களைக் கண்டித்தவனே, மணம் கமழும் புயத்தை உடையவனே

கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா ... கம்பம் போன்ற வலிமையுள்ள அழகிய தோள்களை உடைய குமரா,

கந்தா செந்திற் பெருமாளே. ... கந்தனே, திருச்செந்தூர்ப் பதியில் வாழும் பெருமாளே.




* மன்றல் கிரி என்பது வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் நிகழ்ந்த வள்ளிமலை ஆகும்.





Song 61 - thaN thEnuNdE (thiruchchendhUr)

thaNdE nuNdE vaNdAr vanjEr
     thaNdAr manjuk ...... kuzhalmAnAr

thmpAl anbAr nenjE koNdE
     sambA vanchot ...... RadinAyEn

maNdO yanthee menkAl viNdOy
     vaNkA yampoyk ...... kudilvERAy

vankA nampOy aNdA munbE
     vandhE ninpoR ...... kazhalthArAy

koNdA dumpEr koNdA dumsUr
     kondrAy vendrik ...... kumarEsA

kongAr vaNdAr paNpA dumseer
     kundRA mandRaR ...... giriyOnE

kaNdA gumpA luNdA aNdAr
     kaNdA kandhap ...... buyavELE

kandhA maindha ranthOL maindhA
     kandhA sendhiR ...... perumALE.

......... Meaning .........

thaNdEn uNdE vaNdAr vanjEr: The beetles are humming with pleasure, sucking cool honey

thaNdAr manjuk kuzhalmAnAr: from the flowers donning the hair (like black cloud) of women.

thmpAl anbAr nenjE koNdE: I am flirting with those women openly,

sambAvan sotr tradinAyEn: chatting with them; and am I not baser than a dog?

maNdOyan thee menkAl viNdOy vaN kAyam: This so-called healthy body of mine is made of five elements, namely, earth, water, fire, air and sky;

poyk kudil vERAy: and before my life departs this mythical hut of my body

vankAnam pOy aNdA munbE: for its final journey to the cremation ground,

vandhE nin poR kazhal thArAy: please come to me and grant Your lotus feet!

koNdAdum pEr koNdAdum sUr: SUran, who enjoyed the company of those flattering him,

kondrAy vendrik kumarEsA: was killed by You, Oh Victorious KumaresA!

kongAr vaNdAr paNpAdum: At this hill, the beetles make great music around the flowers,

seerkundrA mandraR giriyOnE: and it is a very famous mount called 'Mandral giri' - VaLLimalai*, where You belong!

kaNdAgum pAluNdA: You imbibed the sacred milk of PArvathi, which was sweet as jaggery.

aNdAr kaNdA kandhap buyavELE: You punish all Your enemies, Oh KandhA, the strong shouldered!

kandhu Am maindhu Ar amthOL maindhA: Oh KumarA, Your shoulders are solid as a pillar and are also terrific!

kandhA sendhiR perumALE.: Oh, KandhA, Your abode is ThiruchchendhUr, Oh Great One!





* VaLLimalai is the place where VaLLi and Murugan were formally married.


  (0053-0053-1114_xcz)*fam


இப்பாடலின் ஒலிப்பதிவு(கள்)  audio recording(s) of this song

guruji ragavan  b subashini

view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions