திருப்புகழ் 1279 வீணை இசை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1279 veeNaiisai  (common)
Thiruppugazh - 1279 veeNaiisai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தாத்த தானதன தாத்த
     தானதன தாத்த ...... தனதான

......... பாடல் .........

வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு
     வீரமுனை யீட்டி ...... விழியார்தம்

வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில்
     வீழுமயல் தீட்டி ...... யுழலாதே

ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை
     யாவலுட னீட்டி ...... யழியாதே

ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி
     யானநிலை காட்டி ...... யருள்வாயே

கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்
     கேள்சுருதி நாட்டி ...... லுறைவோனே

கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு
     கீரரியல் கேட்ட ...... க்ருபைவேளே

சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி
     சீதவிரு கோட்டி ...... லணைவோனே

சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி
     தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீர(ம்) முனை
ஈட்டி விழியார் தம்
... வீணையில் இசையைப் பிறப்பித்து, ஆலகால
விஷம் தாக்குதலைச் செய்யும் வீரத்தையும், கூர்மையையும் கொண்ட
ஈட்டி போன்ற கண்களை உடைய விலைமாதர்களால் ஏற்படும்

வேதனையில் நாட்டம் ஆகி இடர் பாட்டில் வீழும் மயல் தீட்டி
உழலாதே
... வேதனையில் கவனம் வைத்தவனாய், துன்பக் குழியில்
விழுவதான காம மோகம் கூராகி மிகுந்து நான் திரியாமல்,

ஆணி உள வீட்டை மேவி உளம் மாட்டை ஆவலுடன் ஈட்டி
அழியாதே
... (தங்குவதற்கு) ஆதாரமாய் உள்ள வீட்டை விரும்பி,
பொன்னை ஆசையுடன் சேர்த்து இங்ஙனம் பொழுதைப் போக்கி
அழிந்து போகாமல்,

ஆவி உறை கூட்டில் ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டி
அருள்வாயே
... உயிர் வாசம் செய்யும் கூடாகிய இந்த உடலில் ஞான
மறைப் பொருள்களை உபதேசித்து, நன்மை தருவதான நிலையைக்
காட்டி அருள்வாயாக.

கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி
நாட்டில் உறைவோனே
... கிணறு போல ஆழமாக ஊறுகின்ற,
விரும்பப்படுவதான, ஞான மார்க்கத்தை நாடுபவர்கள் ஆராய்கின்ற
வேதத்தில் உறைபவனே,

கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட
க்ருபை வேளே
... கீத இசையுடன் வேத மொழி போன்ற
திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைச் சூட்டிய நக்கீரருடைய
இயற்றமிழைக் கேட்டருளிய கருணையாளனே,

சேணின் உயர் காட்டில் வாழும் மறவாட்டி சீத இரு கோட்டில்
அணைவோனே
... ஆகாயம் வரை உயர்ந்துள்ள வள்ளி மலைக்
காட்டில் வசிக்கின்ற வேடப் பெண்ணாகிய வள்ளியின் குளிர்ந்த மலை
போன்ற மார்பகங்களை அணைபவனே,

சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட
பெருமாளே.
... கோபக் குணம் உடைய அசுரர்களுடைய நாட்டில்
நிரம்ப நெருப்பை மூளச்செய்து, தேவர்களைச் சிறையினின்றும்
மீள்வித்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.650  pg 3.651  pg 3.652  pg 3.653 
 WIKI_urai Song number: 1278 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1279 - veeNai isai (common)

veeNaiyisai kOtti yAlamida RUttu
     veeramunai yeetti ...... vizhiyArtham

vEthanaiyil nAtta mAkiyidar pAttil
     veezhumayal theetti ...... yuzhalAthE

ANiyuLa veettai mEviyuLa mAttai
     yAvaluda neetti ...... yazhiyAthE

AviyuRai kUttil njAnamaRai yUtti
     yAnanilai kAtti ...... yaruLvAyE

kENiyuRa vEtta njAnaneRi vEttar
     kELsuruthi nAtti ...... luRaivOnE

keethavisai kUtti vEthamozhi cUttu
     keerariyal kEtta ...... krupaivELE

sENinuyar kAttil vAzhumaRa vAtti
     seethaviru kOtti ...... laNaivOnE

seeRavuNar nAtti lAravazhal mUtti
     thEvarsiRai meetta ...... perumALE.

......... Meaning .........

veeNai isai kOtti Alam idaRu Uttu veera(m) munai eetti vizhiyAr tham: They play the instrument veeNai and create nice music; their eyes are virulent like the AlakAla poison and sharp like the spear; these whores cause

vEthanaiyil nAttam Aki idar pAttil veezhum mayal theetti uzhalAthE: so much agony that my attention is only on them; I do not wish to roam about honing my passion for them obsessively, falling into pits of misery;

ANi uLa veettai mEvi uLam mAttai Avaludan eetti azhiyAthE: nor do I wish to develop attachment to my house, serving as the anchor (for my staying); I do not wish to amass gold, destroying myself in avarice, wasting my precious time;

Avi uRai kUttil njAna maRai Utti Ana nilai kAtti aruLvAyE: for that, kindly teach me, staying in this shell of a body, in which life is sustained, principles of vEdic knowledge and show me the state that would benefit me.

kENi uRa vEtta njAna neRi vEttar kEL suruthi nAttil uRaivOnE: You dwell in the most desirable VEdAs which are like a deep well from which water springs up and which are sought after, for research, by pursuers of the path of knowledge!

keetha isai kUtti vEtha mozhi cUttu keerar iyal kEtta krupai vELE: The Poet Nakkeerar composed a musical and literary collection of Tamil verses (called ThirumurugAtRuppadai), sounding like the chanting of vEdAs; You graciously listened to his singing, Oh Compassionate One!

sENin uyar kAttil vAzhum maRavAtti seetha iru kOttil aNaivOnE: You hugged the cool, mountain-like bosom of VaLLi, the damsel of the hunters, who lived in the forest of VaLLimalai, with sky-high trees!

seeRu avuNar nAttil Ara azhal mUtti thEvar siRai meetta perumALE.: You set fire extensively in the land of the angry demons and freed the celestials from their prisons, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1279 veeNai isai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]