திருப்புகழ் 1248 திதலை உலாத்து  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1248 thidhalaiulAththu  (common)
Thiruppugazh - 1248 thidhalaiulAththu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தாத்தனத் தனதன தாத்தனத்
     தனதன தாத்தனத் ...... தனதான

......... பாடல் .........

திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத்
     த்ரிவிதக டாக்களிற் ...... றுரகோடு

சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற்
     சுரர்குடி யேற்றிவிட் ...... டிளநீரை

மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்டுசெப்
     பிணைமுலை மாத்தவக் ...... கொடிபோல்வார்

வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற்
     றெனையுனை வாழ்த்தவைத் ...... தருள்வாயே

சததள பார்த்திபற் கரிபுரு ஷோத்தமற்
     கெரிகன லேற்றவற் ...... குணராதோர்

சகலச மார்த்தசத் தியவன சூக்ஷமுக்
     கியபர மார்த்தமுற் ...... புகல்வோனே

கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக்
     கலகப ராக்ரமக் ...... கதிர்வேலா

கருதிய பாட்டினிற் றலைதெரி மாக்ஷணக்
     கவிஞரு சாத்துணைப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

திதலை உலாத்து பொன் களபம் விடா புதுத் த்ரி வித கடாக்
களிற்று உர(ம்) கோடு
... தேமல் பரவி உள்ளதும், அழகிய கலவைச்
சாந்தை விடாததாய், புதிதாய் (கன்னமதம், கைமதம், கோசமதம் என்னும்)
மூன்று விதமான மத நீர்களைக் கொண்ட யானையின் பலமான தந்தம்
என்றும்,

சிகர மகா ப்ரபைக் குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றி
விட்டு இளநீரை
... சிகரங்களைக் கொண்டு மிக்க பொலிவு உடைய
மலையை ஒக்கும் என்று சொல்லும்படி அமைந்து, தேவர்கள் பருகுவதான
அமுதத்தை நிரம்பக் கொண்டதாய், இள நீரைப் போன்றதாய்,

மதன விடாய்த் தனத்து இளைஞரை வாட்டு செப்பு இணை
முலை மாத் தவக் கொடி போல்வார்
... காம இச்சை என்னும்
தாகத்துக்கு ஏற்றதாய், செல்வமுடைய இளைஞர்களை வாட்டும் தன்மை
உடையதாய், செப்புக் குடம் போன்றதான இரு மார்பகங்களைக் கொண்டு
சிறந்த தோற்றம் உடையவர்களாய், கொடி போன்ற சாயலை உடைய
விலைமாதர்களின்

வலையில் இராப் பகல் பொழுதுகள் போக்கும் அற்று எனை
உனை வாழ்த்த வைத்து அருள்வாயே
... வலையில் இரவிலும்
பகலிலும் காலம் கழித்தலை நீக்கி, என்னை உன் புகழை
வாழ்த்தும்படியாக செய்து அருள் புரிவாயாக.

சத தள பார்த்திபற்கு அரி புருஷோத்தமற்கு எரி கனல்
ஏற்றவற்கு உணராத
... நூறு இதழ்களை உடைய தாமரையில்
இருக்கும் அரசரான பிரமனுக்கும், திருமாலாகிய புருஷ உத்தமருக்கும்,
நெருப்பைக் கையில் ஏந்திய சிவபெருமானுக்கும் அறிய முடியாததான,

ஓர் சகல சம அர்த்த சத்திய வன சூக்ஷ(ம்) முக்கிய பர
மார்த்த(ம்) முன் புகல்வோனே
... ஒப்பற்றதும், எல்லாவிதமானதும்,
ஒத்த பொருளானதும், உண்மை நிறைந்ததும், அழகுள்ளதும்,
நுட்பமானதும், முக்கியமானதுமான மேலான உண்மைப் பொருளை
முன்பு உபதேசித்தவனே,

கதிர் மணி நீர்க் கடல் சுழி புகு ராக்ஷதக் கலக பராக்ரமக்
கதிர் வேலா
... ஒளி பொருந்தியதும், முத்தும் பவளமும் உடையதுமான
தன்மையை உடைய கடலின் நீர்ச் சுழியில் புகுந்திருந்த அரக்கர்களுடன்
போர் புரிந்த வல்லமை உடைய கதிர் வேலனே,

கருதிய பாட்டில் நிற்றலை தெரி மா க்ஷணக் கவிஞர்
உசாத்துணைப் பெருமாளே.
... உன்னை நினைத்துப் பாடப்பட்ட
பாடலிடத்து நீ அமர்ந்திருத்தலை தெரிந்துள்ளவர்களும், நொடியில் கவி
பாட வல்லவர்களுமான பெரியோர்களின் ஆராய்ச்சிக்குத் துணை
புரியும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.588  pg 3.589  pg 3.590  pg 3.591 
 WIKI_urai Song number: 1247 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1248 - thidhalai ulAththu (common)

thithalaiyu lAththupoR kaLapamvi dApputhuth
     thrivithaka dAkkaLit ...... RurakOdu

sikarama kAprapaik kuvadena vAyththunaR
     surarkudi yEtRivit ...... tiLaneerai

mathanavi dAyththanath thiLainjarai vAttuchep
     piNaimulai mAththavak ...... kodipOlvAr

valaiyili rAppakaR pozhuthukaL pOkkumat
     Renaiyunai vAzhththavaith ...... tharuLvAyE

sathathaLa pArththipaR karipuru shOththamaR
     kerikana lEtRavaR ...... kuNarAthOr

sakalasa mArththasath thiyavana cUkshamuk
     kiyapara mArththamuR ...... pukalvOnE

kathirmaNi neerkkadaR chuzhipuku rAkshathak
     kalakapa rAkramak ...... kathirvElA

karuthiya pAttinit Ralaitheri mAkshaNak
     kavinjaru sAththuNaip ...... perumALE.

......... Meaning .........

(The first six lines of the song describe the breasts of the whores).

thithalai ulAththu pon kaLapam vidA puthuth thri vitha kadAk kaLitRu ura(m) kOdu: Their bosom is afflicted by decolorisation (acne); sandalwood paste is constantly applied on it; their breasts are like the ivory tusks of an elephant in rage whose fierce juices are of three types (that flow on the jaws, on the trunk and from the mouth);

sikara makA prapaik kuvadu ena vAyththu nal surar kudi EtRi vittu iLaneerai: they are also comparable to the mountain whose peak glows in brightness and beauty; they appear to be filled with the divine nectar upto the brim; they look like tender coconuts;

mathana vidAyth thanaththu iLainjarai vAttu seppu iNai mulai mAth thavak kodi pOlvAr: They are the most appropriate quenchers of the thirst of passion; they have the quality of haunting wealthy young men; with breasts like two copper pots, these women have a stunning appearance; such whores, resembling a creeper,

valaiyil irAp pakal pozhuthukaL pOkkum atRu enai unai vAzhththa vaiththu aruLvAyE: have trapped me in their net where I am spending day and night; putting an end to this plight, kindly bless me to praise Your glory, Oh Lord!

satha thaLa pArththipaRku ari purushOththamaRku eri kanal EtRavaRku uNarAtha: BrahmA, the Lord seated on a lotus with a hundred petals, Lord VishNu, the noblest deity in human form, and Lord SivA, holding fire in His hand are unable to comprehend the Principle

Or sakala sama arththa saththiya vana cUksha(m) mukkiya para mArththa(m) mun pukalvOnE: that is matchless, that is all kinds of things, that fits in everywhere and that is filled with truth, beauty, sharpness, and importance; that supreme true knowledge was once preached by You, Oh Lord!

kathir maNi neerk kadal chuzhi puku rAkshathak kalaka parAkramak kathir vElA: You fought with the demons who hid themselves under the eddies of the bright sea that contains pearls and corals, wielding Your powerful and dazzling spear, Oh Lord!

karuthiya pAttil nitRalai theri mA kshaNak kavinjar usAththuNaip perumALE.: Those poets who know that You are seated in the songs written by them thinking about You and those great people who can instantaneously compose poems are highly aided by You in their research, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1248 thidhalai ulAththu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]