திருப்புகழ் 1244 செழும் தாது  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1244 sezhumthAthu  (common)
Thiruppugazh - 1244 sezhumthAthu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்தான தானான தனந்தான தானான
     தனந்தான தானான ...... தனதான

......... பாடல் .........

செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு
     சிறந்தியாதி லூமாசை ...... யொழியாத

திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி
     செயுங்காய நோயாள ...... னரகேழில்

விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி
     விடுங்கால மேநாயென் ...... வினைபாவம்

விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான
     விளம்போசை யேபேசி ...... வரவேணும்

அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடி
     அழன்றேகி மாசீத ...... நெடுவேலை

அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர
     அலங்கார வேலேவு ...... முருகோனே

கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு
     குருந்தேறு மால்மாயன் ...... மருகோனே

குறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு
     குணங்கூடி யேவாழு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

செழும் தாது பார் மாது ... செழுமையான பொன், மண், பெண்
(என்னும் மூவாசைகளும்)

அரும்பு ஆதி ரூபோடு ... முதலில் அரும்பு விட்டுப் பின்னர்
வளருவது போன்ற உருவத்துடன்,

சிறந்து யாதிலும் ஆசை ஒழியாத ... மேலும் மேலும் விளங்கி
எதிலுமே ஆசை நீங்காத

திறம் பூத வேதாளன் ... கோட்பாட்டினை உடைய பேய் பிசாசு (நான்).

அரும் பாவமே கோடி செ(ய்)யும் காய நோயாளன் ... கொடிய
பாவங்களைக் கோடிக் கணக்கில் செய்யும் உடலில் நோய் கொண்டவன்.

நரகு ஏழில் விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ...
ஏழு நரகங்களிலும் விழுந்து ஆழ்ந்து முழுகும்படி தள்ளுகின்ற யமன்
என்னை அணுக,

ஆவி விடும் காலமே நாயேன் ... நான் உயிர் விடும் காலத்தில்
அடியேனுடைய

வினை பாவம் விரைந்து ஏகவே ... வினை பாவம் ஆகியவை அதி
வேகத்தில் என்னை விட்டு அகலும்படி,

வாசி துரந்து ஓடியே ... குதிரையாகிய மயிலை வேகமாகச் செலுத்தி,

ஞான விளம்பு ஓசையே பேசி வர வேணும் ... ஞான மொழிகளைச்
சொல்லும் ஒலியே எனக்குக் கேட்கும்படியாக பேசி வந்தருள வேண்டும்.

அழும் கோடி தேவர்கள் அமர்ந்து ஆர வான் நீடி ... அழுத
கோடிக் கணக்கான தேவர்கள் விண்ணில் நீண்ட காலம் அமர்ந்து
வாழ்ந்திருக்கும்படியாக,

அழன்று ஏகி மா சீத நெடு வேலை அதிர்ந்து ஓடவே ...
கொதிப்புடன் கோபித்துச்சென்று, மிகவும் குளிர்ச்சியான பெரிய கடல்
அதிர்ச்சி அடையும்படி நீ வேகமாகப் பாய்ந்து செல்ல,

காலன் விழுந்து ஓடவே ... யமன் (அசுரர்களின் உயிரைக் கவர)
விழுந்து அடித்துக்கொண்டு (போர் முனைக்கு) ஓடவே,

கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே ... கூர்மையான,
அலங்காரம் உள்ள வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே,

கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு ... செழிப்பான
காட்டிலே பெண்களின் நல்ல ஆடைகளை எடுத்துக் கொண்டு

குருந்து ஏறு மால் மாயன் மருகோனே ... குருந்த மரத்தில் ஏறி
(ஆடைகளை மறைத்த) மாயக் கண்ணனாகிய திருமாலின் மருகோனே,

குறம் பாடுவார் சேரி புகுந்து ... குறம் என்னும் பாடல் வகையைப்
பாடுபவர்களாகிய குறவர்களின் சேரியில் புகுந்து,

ஆசை மாதோடு குணம் கூடியே வாழு(ம்) பெருமாளே. ... உன்
ஆசைக்கு உகந்த வள்ளியுடன், அவள் குணத்துக்கு மகிழ்ந்து, பிறகு
அவளுடன் கூடியே வாழ்கின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.582  pg 3.583  pg 3.584  pg 3.585 
 WIKI_urai Song number: 1243 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1244 - sezhum thAthu (common)

sezhunthAthu pArmAthu marumpAthi rUpOdu
     siRanthiyAthi lUmAsai ...... yozhiyAtha

thiRampUtha vEthALa narumpAva mEkOdi
     seyunkAya nOyALa ...... narakEzhil

vizhunthAzha vEmUzhka idunkAlan mEyAvi
     vidunkAla mEnAyen ...... vinaipAvam

virainthEka vEvAsi thuranthOdi yEnjAna
     viLampOsai yEpEsi ...... varavENum

azhunkOdi thEvarfka LamarnthAra vAneedi
     azhanREki mAseetha ...... neduvElai

athirnthOda vEkAlan vizhunthOda vEkUra
     alankAra vElEvu ...... murukOnE

kozhungkAni lEmAthar sezhuncElai yEkOdu
     kurunthERu mAlmAyan ...... marukOnE

kuRampAdu vArsEri pukunthAsai mAthOdu
     kuNankUdi yEvAzhu ...... perumALE.

......... Meaning .........

chezhun thAthu pAr mAthu: Desire for solid gold, land and woman (known as the three desires)

arumpu Athi rUpOdu: starts like a little bud later growing into a fullfledged blossom;

siRanthu yAthilum Asai ozhiyAtha: the desire grows bigger and bigger and never leaves the mind,

thiRam pUtha vEthALan: becoming an obsession; and I am like the devil possessed.

arum pAvamE kOdi se(y)yum kAya nOyALan: I have a sick and wretched body with which I committed millions of sins.

naraku Ezhil vizhunthu AzhavE mUzhka idum kAlan mEvi Avi vidum kAlamE: When Yaman (God Of Death) approaches to push me deep down under the seven hells, and I am about to shed this life,

nAyEn vinai pAvam virainthu EkavE: all my sins and misdeeds should be driven away swiftly;

vAsi thuranthu OdiyE: for that, You must come speedily mounting Your horse-like Peacock and

njAna viLampu OsaiyE pEsi vara vENum: speaking words of wisdom within my audible range!

azhum kOdi thEvarkaL amarnthu Ara vAn needi: The crying DEvAs in millions were peacefully settled to live long in their celestial land

azhanRu Eki mA seetha nedu vElai athirnthu OdavE: because You rushed with rage to the cold and wide sea which shuddered at Your ferocious speed;

kAlan vizhunthu OdavE: Yaman (God of Death) dashed to the battlefield (to take the lives of the demons);

kUra alankAra vEl Evum murukOnE: when You wielded the sharp and highly decorated Spear of Yours, Oh Lord MurugA!

kozhum kAnilE mAthar sezhum sElaiyE kOdu: In the rich forest, He grabbed the pretty clothes of women,

kurunthu ERu mAl mAyan marukOnE: and climbed the kurunthai tree (to hide their clothes); You are the nephew of that mystic Krishna (VishNu)!

kuRam pAduvAr sEri pukunthu: You entered the commune of the KuRavAs where the folksy song, KuRam, is sung,

Asai mAthOdu kuNam kUdiyE vAzhu(m) perumALE.: and wooed Your beloved consort, VaLLi, pleased with her virtuous qualities; then, You lived happily for ever with her, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1244 sezhum thAthu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]