திருப்புகழ் 1239 சலமலம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1239 salamalam  (common)
Thiruppugazh - 1239 salamalam - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த
     தனதன தனத்த தத்த ...... தனதான

......... பாடல் .........

சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த
     தடியுடல் தனக்கு ளுற்று ...... மிகுமாயம்

சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி
     தனிலுரு மிகுத்து மக்க ...... ளொடுதாரம்

கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி
     கருவழி யவத்தி லுற்று ...... மகிழ்வாகிக்

கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றி
     கடுவினை தனக்குள் நிற்ப ...... தொழியாதோ

மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து
     மழுவனல் கரத்துள் வைத்து ...... மருவார்கள்

மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து
     மறைதொழ நகைத்த அத்தர் ...... பெருவாழ்வே

பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற
     படையது பொருப்பில் விட்ட ...... முருகோனே

பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்
     பலருய அருட்கண் வைத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சலமலம் அசுத்த மிக்க தசை ... ஜலம், மலம், அழுக்குகள் நிறைந்த
மாமிசம்,

குருதி யத்தி மொய்த்த தடியுடல் தனக்குள் ... ரத்தம், எலும்பு
- இவைகள் நெருங்கிச் சூழ்ந்துள்ள தடித்த இந்த உடலில்

உற்று மிகுமாயம் சகலமு மியற்றி ... வாசம் செய்து, மிக்க
வஞ்சனையான செயல்கள் பலவற்றையும் செய்து,

மத்தமிகும் இரு தடக்கை யத்தி தனிலுரு மிகுத்து ... மதம்
மிகுந்ததும், பெரும் துதிக்கையை உடையதுமான யானையைப் போல்
உருவம் பெருத்து,

மக்களொடு தாரம் கலனணி துகிற்கள் ... குழந்தைகள், மனைவி,
ஆபரணங்கள், அணிந்து கொள்ளும் துணிமணிகள்,

கற்பி னொடுகுல மனைத்து முற்றி ... கல்வி இவைகளுடன் குலம்
வரை முழுவதுமாக வளர்ச்சி பெற்று,

கருவழி யவத்தி லுற்று மகிழ்வாகி ... பிறப்பு வழி என்ற பயனற்ற
பாதையில் சென்று அதில் மகிழ்ச்சி அடைந்தவனாகி,

கலைபல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்த முற்றி ... பலவித
சாத்திர நூல்களைக் கற்று, நாள்தோறும் அலைச்சல் உறும் வேதனையை
அடைந்து,

கடுவினை தனக்குள் நிற்பதொழியாதோ ... பொல்லாத வினைக்கு
உள்ளாகி நிற்கும் இச்செயல் நீங்காதோ?

மலைமகள் இடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து ...
மலைமகள் பார்வதியை இடது பாகத்தில் வைத்து, சந்திரனையும்
கங்கையையும் ஜடைக்குள்ளே வைத்து,

மழுவனல் கரத்துள் வைத்து ... மழு என்ற கோடரியையும்
நெருப்பையும் கையிலே வைத்து,

மருவார்கள் மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை
வைத்து
... பகைவர்களாகிய திரிபுரத்து அசுரர்கள் இறந்தொழிய
நினைத்து, மேருமலையைக் கட்டப்பட்ட வில்லாக இடது கையிலே வைத்து,

மறைதொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே ... வேதங்கள் தொழுது
நிற்க, சிரிப்பினாலேயே திரிபுரத்தை எரித்த பெருமானாம் சிவபிரானின்
பெரும் செல்வக் குழந்தையே,

பலதிசை நடுக்க முற்று நிலைகெட ... பல திசைகளில்
உள்ளவர்களும் நடுக்கம் அடைந்து நிலை தடுமாற,

அடற்கை யுற்ற படையது பொருப்பில் விட்ட முருகோனே ...
வலிமை பொருந்திய திருக்கையிலே இருந்த படையாகிய வேலாயுதத்தை
கிரெளஞ்சகிரியின் மீது செலுத்திய முருகனே,

பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர் பலருய ...
குற்றமற்ற தவநிலையில் இருந்து துதி மொழிகளைச் சொல்கின்ற பக்தர்கள்
பலரும் நற்கதி பெற,

அருட்கண் வைத்த பெருமாளே. ... திருக்கண்களால் அருள்
பாலித்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.572  pg 3.573  pg 3.574  pg 3.575 
 WIKI_urai Song number: 1238 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1239 - salamalam (common)

salamala masuththa mikka thasaikuru thiyaththi moyththa
     thadiyudal thanakku LutRu ...... mikumAyam

sakalamu miyatRi maththa mikumiru thadakkai yaththi
     thaniluru mikuththu makka ...... LoduthAram

kalanaNi thukiRkaL kaRpi nodukula manaiththu mutRi
     karuvazhi yavaththi lutRu ...... makizhvAkik

kalaipala pidiththu niththa malaipadu manarththa mutRi
     kaduvinai thanakkuL niRpa ...... thozhiyAthO

malaimaka Lidaththu vaiththu mathipunal sadaikkuL vaiththu
     mazhuvanal karaththuL vaiththu ...... maruvArkaL

madivuRa ninaiththu veRpai varisilai yidakkai vaiththu
     maRaithozha nakaiththa aththar ...... peruvAzhvE

palathisai nadukka mutRu nilaikeda adaRkai yutRa
     padaiyathu poruppil vitta ...... murukOnE

pazhuthaRu thavaththi lutRu vazhimozhi yuraiththa paththar
     palaruya arutkaN vaiththa ...... perumALE.

......... Meaning .........

salamalam asuththa mikka thasai: The urine, the faeces, flesh full of dirt and germs,

kuruthi yaththi moyththa thadiyudal thanakkuL: blood and bones are packed into this portly body;

utRu mikumAyam sakalamu miyatRi: living in this body, I have been indulging in many deceitful acts;

maththamikum iru thadakkai yaththi thaniluru mikuththu: my body has grown huge like a wild elephant with a trunk;

makkaLodu thAram kalanaNi thukiRkaL: centering around my children, my wife, jewels, clothings,

kaRpi nodukula manaiththu mutRi: my education and my clan, my life grew up into a complete state of aggrandizement;

karuvazhi yavaththi lutRu makizhvAki: Entering this woeful world through a womb, I felt happy following this futile path;

kalaipala pidiththu niththam alaipadum anarththa mutRi: I learnt so many diverse works of art and went through the daily drill of wandering about with pain;

kaduvinai thanakkuL niRpathozhiyAthO: I am caught within the web of my bad deeds; will this misery never end?

malaimakaL idaththu vaiththu mathipunal sadaikkuL vaiththu: He kept PArvathi, the daughter of HimavAn, on the left side of His body and the moon and River ganga inside His tresses;

mazhuvanal karaththuL vaiththu: He held the pickaxe and fire in His hands;

maruvArkaL madivuRa ninaiththu veRpai varisilai yidakkai vaiththu: with the intention of destroying the enemies, the three demons of Thiripuram, He stretched the Mount Meru as a bow and held it in His left arm

maRaithozha nakaiththa aththar peruvAzhvE: and burnt down Thiripuram by His mere smile, as the VEdAs stood worshipping; You are the Great Treasure of a Son of that Lord SivA!

palathisai nadukka mutRu nilaikeda: People in many directions trembled and lost their balance

adaRkai yutRa padaiyathu poruppil vitta murukOnE: when You threw the powerful spear from Your strong arms at the Mount Krouncha, Oh Lord MurugA!

pazhuthaRu thavaththi lutRu vazhimozhi yuraiththa paththar palaruya: Your devotees who praise Your glory, pursuing an impeccable path of penance, reach the exalted state because

arutkaN vaiththa perumALE.: You cast Your gracious eyes on them, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1239 salamalam - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]