திருப்புகழ் 1215 ஆல மேற்ற விழியினர்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1215 AlamEtRavizhiyinar  (common)
Thiruppugazh - 1215 AlamEtRavizhiyinar - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தாத்த தனதன தான தாத்த தனதன
     தான தாத்த தனதன ...... தனதான

......... பாடல் .........

ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு
     தாக மாய்க்க முறைமுறை ...... பறைமோதி

ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையம
     யான மேற்றி யுறவின ...... ரயலாகக்

கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர்
     காவ லாக்கி யுயிரது ...... கொடுபோமுன்

காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை
     காத லாற்க ருதுமுணர் ...... தருவாயே

வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண
     வியாழ கோத்ர மருவிய ...... முருகோனே

வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியை
     வேட மாற்றி வழிபடு ...... மிளையோனே

ஞால மேத்தி வழிபடு மாறு பேர்க்கு மகவென
     நாணல் பூத்த படுகையில் ...... வருவோனே

நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவ
     ஞான வார்த்தை யருளிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆல மேற்ற விழியினர் சால நீட்டி அழுதழுது ஆகம் மாய்க்க ...
விஷம் கொண்ட கண்களை உடையவர் நிரம்ப வெகு நேரம் அடிக்கடி
அழுது மனம் வருந்தி நைந்து அழிய,

முறைமுறை பறைமோதி ஆடல் பார்க்க ... நியமப்படி பறை
வாத்தியம் ஒலித்து, கூத்தாடுபவர்கள் மூலமாக யாவரும் (சாவு
நேர்ந்த) செய்தியைத் தெரிந்து கொள்ள,

நிலை எழு பாடை கூட்டி விரைய மயானம் ஏற்றி உறவினர்
அயலாக
... உறுதியாகக் கட்டப்பட்ட பாடையை ஏற்பாடு செய்து
வேகமாக சுடு காட்டுக்குக் கொண்டு போய் சுற்றத்தினர் யாவரும்
விலகிச் செல்ல,

காலமாச்சு வருக என ஓலை காட்டி யமபடர் காவலாக்கி
உயிரது கொடு போ முன்
... உன் ஆயுள் காலம் முடிந்து விட்டது,
புறப்படு என்று கூறி யம தூதர்கள் சீட்டோலையைக் காட்டி, காவல்
வைத்து உயிரைக் கொண்டு போவதற்கு முன்பு,

காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழல் இணை
காதலால் கருதும் உணர் தருவாயே
... இந்தக் காம ஆசை
பாழ்பட்டு ஒழிய, மெய்ஞ் ஞான நிலையதான உனது கழல் அணிந்த
திருவடிகளை உண்மையான அன்புடன் தியானிக்கும் உணர்வைத்
தந்து அருளுக.

வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண ... வேலாயுதனே,
புகழ் பெற்ற கொடையாளனே, பரிசுத்த மனமுடையவர்கள் வாழ்த்திப்
போற்றும் சரவணபவனே,

வியாழ கோத்ரம் மருவிய முருகோனே ... குரு மலையாகிய
சுவாமி மலையில் வீற்றிருக்கும் முருகனே,

வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட
மாற்றி வழி படும் இளையோனே
... வேடர்கள் வாழும்
வள்ளிமலையில் தினைக் கொல்லையைக் காவல் புரிந்த சிறுமியாகிய
வள்ளியை, (உனது உண்மையான உருவைக் காட்டாது) பல*
வேடங்களில் வந்து, வணங்கிய இளைஞனே,

ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல்
பூத்த படுகையில் வருவோனே
... பூமியில் உள்ளோர் போற்றி
வழிபடும் ஆறு கார்த்திகைப் பெண்களுக்கும் குழந்தை என்று
சொல்லும்படி நாணல் புல் சூழ்ந்த மடுவில் (சரவணப் பொய்கையில்)
தோன்றியவனே,

நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான
வார்த்தை அருளிய பெருமாளே.
... தலைவா போற்றி என்று
தந்தையாகிய மூத்த சிவபெருமான் கேட்க, பேரின்ப அனுபவத்தைத்
தரும் ஞான மொழியாகிய பிரணவத்தை உபதேசித்த பெருமாளே.


* வள்ளியைக் காண முருகன் பூண்ட வேடங்கள்:

வேடன், வளையல் செட்டி, வேங்கை, கிழவன் முதலியன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.526  pg 3.527  pg 3.528  pg 3.529 
 WIKI_urai Song number: 1214 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1215 - Ala mEtRa vizhiyinar (common)

Aala mEtRa vizhiyinar sAla neetti yazhuthazhu
     thAka mAykka muRaimuRai ...... paRaimOthi

Aadal pArkka nilaiyezhu pAdai kUtti viraiyama
     yAna mEtRi yuRavina ...... rayalAkak

kAla mAcchu varukena Olai kAtti yamapadar
     kAva lAkki yuyirathu ...... kodupOmun

kAma vAzhkkai podipada njAnam vAyththa kazhaliNai
     kAtha lARka ruthumuNar ...... tharuvAyE

vEla keerththi vitharaNa seelar vAzhththu saravaNa
     viyAzha kOthra maruviya ...... murukOnE

vEdar nAttil viLaipuna Enal kAththa siRumiyai
     vEda mAtRi vazhipadu ...... miLaiyOnE

njAla mEththi vazhipadu mARu pErkku makavena
     nANal pUththa padukaiyil ...... varuvOnE

nAtha pOtRi yenamuthu thAthai kEtka anupava
     njAna vArththai yaruLiya ...... perumALE.

......... Meaning .........

Ala mEtRa vizhiyinar sAla neetti azhuthazhuthu Akam mAykka: Women with poison-filled eyes crying repeatedly, for a long time, pouring their hearts out;

muRaimuRai paRaimOthi Adal pArkka: the ritualistic drums being beaten loudly, and people coming to know (about the news of death) by watching all those dancers;

nilai ezhu pAdai kUtti viraiya mayAnam EtRi uRavinar ayalAka: arrangements being made to securely fasten the bier to be taken in a hurry to the cremation ground, with all the relatives going away thereafter;

kAlamAcchu varuka ena Olai kAtti yamapadar kAvalAkki uyirathu kodu pO mun: and before the messengers of Yaman (God of Death) presenting the message saying "Your time is up; get ready to leave", and securely taking my life away,

kAma vAzhkkai podipada njAnam vAyththa kazhal iNai kAthalAl karuthum uNar tharuvAyE: in order to destroy this lust-filled life, kindly grant me the sagacity to contemplate, with love, Your hallowed feet, adorned with anklets, which is the safe haven of True Knowledge!

vEla keerththi vitharaNa seelar vAzhththu saravaNa: Oh Lord with the spear, Oh benefactor of fame, Oh SaravaNabhava whom devotees with a pure mind worship,

viyAzha kOthram maruviya murukOnE: Oh MurugA, having Your abode in the Mount of Jupiter (namely, SwAmimalai),

vEdar nAttil viLai puna Enal kAththa siRumiyai vEda mAtRi vazhi padum iLaiyOnE: Oh Young Lord, assuming several* disguises (and without revealing Your true identity), You worshipped VaLLi, the damsel of the KuRavAs, guarding the millet-field in VaLLimalai which is the abode of the hunters!

njAlam Eththi vazhipadum ARu pErkkum makavu ena nANal pUththa padukaiyil varuvOnE: You were known as the child of six KArththigai maids whom the entire world worships, and You materialised in the pond (SaravaNa) full of reedy grass!

nAtha pOtRi ena muthu thAthai kEtka anupava njAna vArththai aruLiya perumALE.: When the senior Lord SivA, Your father, beseeched You saying "Hail to You, Oh Master!", You preached to Him the PraNava ManthrA that gives Knowledge of eternal bliss, Oh Great One!


* The several disguises assumed by Murugan in pursuit of VaLLi were:

hunter, bangle merchant, neem tree and an old man.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1215 Ala mEtRa vizhiyinar - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]