திருப்புகழ் 1199 வளைகரம் ஆட்டி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1199 vaLaikaramAtti  (common)
Thiruppugazh - 1199 vaLaikaramAtti - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த
     தனதன தாத்த தாத்த ...... தனதான

......... பாடல் .........

வளைகர மாட்டி வேட்டி னிடைதுயில் வாட்டி யீட்டி
     வரிவிழி தீட்டி யேட்டின் ...... மணம்வீசும்

மழைகுழல் காட்டி வேட்கை வளர்முலை காட்டி நோக்கின்
     மயில்நடை காட்டி மூட்டி ...... மயலாகப்

புளகித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து
     புணர்முலை சேர்த்து வீக்கி ...... விளையாடும்

பொதுமட வார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை
     புலைகுண மோட்டி மாற்றி ...... யருள்வாயே

தொளையொழு கேற்ற நோக்கி பலவகை வாச்சி தூர்த்து
     சுடரடி நீத்த லேத்து ...... மடியார்கள்

துணைவன்மை நோக்கி நோக்கி னிடைமுறை யாய்ச்சி மார்ச்சொல்
     சொலியமு தூட்டி யாட்டு ...... முருகோனே

இளநகை யோட்டி மூட்டர் குலம்விழ வாட்டி யேட்டை
     யிமையவர் பாட்டை மீட்ட ...... குருநாதா

இயல்புவி வாழ்த்தி யேத்த எனதிடர் நோக்கி நோக்க
     மிருவினை காட்டி மீட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வளை கரம் மாட்டி வேட்டின் இடை துயில் வாட்டி ஈட்டி வரி
விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும் மழை குழல் காட்டி
...
வளையல்களைக் கையில் மாட்டிக் கொண்டு, காம வேட்கையின் இடையே
தூக்கத்தைக் கெடுத்து, ஈட்டி போல் கூரியதும் ரேகைகளை உடையதும்
ஆகிய கண்களுக்கு மையை இட்டு, மலர் இதழ்களின் நறு மணம்
வீசுகின்ற, கருமேகம் போன்ற கூந்தலைக் காட்டி,

வேட்கை வளர் முலை காட்டி நோக்கின் மயில் நடை காட்டி மூட்டி மயல்
ஆகப் புளகித வார்த்தை ஏற்றி
... காமத்தை வளர்க்கும் மார்பினைக்
காட்டி, மயில் போன்ற தமது நடை அழகைக் காட்டி, காமப் பற்று
உண்டாகும்படி செய்து புளகிதம் கொள்ளும்படியான வார்த்தைகளை
(வந்தவர்களின்) காதில் ஏற வைத்து,

வரி கலை வாழ்த்தி ஈழ்த்து புணர் முலை சேர்த்து வீக்கி
விளையாடும் பொது மடவார்க்கு ஏற்ற வழி உறு வாழ்க்கை
வேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே
... கட்டியுள்ள
ஆடையைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இழுத்து, நெருங்கிப் பொருந்திய
மார்பில் அணைத்துக் கட்டி விளையாடுகின்ற விலைமாதர்களுக்கு
உகந்ததான வழியில் செல்லும் வாழ்க்கையில் விருப்பம் கொள்ளும்
இழிவான என் குணத்தை ஓட்டி நீக்கி, எனக்கு அருள் புரிவாயாக.

தொளை ஒழுகு ஏற்ற(ம்) நோக்கி பல வகை வாச்சி தூர்த்து
சுடர் அடி நீ(நி)த்தல் ஏத்தும் அடியார்கள் துணை
... (குழல்
போன்ற) தொளைக் கருவிகளில் (பரந்து வரும் இசையின்) மேன்மையைக்
கேட்டு, பல விதமான வாத்திய வகைகளை பெருக்க ஒலித்து, உனது ஒளி
வீசும் திருவடிகளை தினந்தோறும் போற்றி வணங்கும் அடியவர்களின்
துணைவனே,

வன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல்
சொல்லி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே
... உனது
வலிமையைக் கண்டு, தங்கள் விருப்பத்தினிடையே ஒருவர் பின்
ஒருவராக முறைப்படி (கார்த்திகை மாதர்களாகிய) தாய்மார்கள் அன்பு
வார்த்தைகளைக் கூறி, பாலை ஊட்டி, உன்னைத் தாலாட்டித் துங்கச்
செய்த முருகனே,

இள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர்
பாட்டை மீட்ட குரு நாதா
... புன்சிரிப்பைச் சிரித்து*, மூடர்களாகிய
அசுரர்களின் குலம் அழிய அவர்களை வாட்டி, சோர்வுற்றிருந்த
தேவர்களின் துன்பத்தை நீக்கிய குரு நாதனே,

இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இரு
வினை காட்டி மீட்ட பெருமாளே.
... தகுதியுள்ள உலகப்
பெரியோர்கள் வாழ்த்திப் போற்ற, எனது வருத்தங்களைக் கண்டு, உனது
அருட் பார்வையால், என் இரு வினைகளின் நிலையை எனக்குப்
புலப்படுத்தி, என்னை இழிந்த குணத்தினின்றும் மீள்வித்த பெருமாளே.


* சூரனுடைய சேனைகள் முருகனைச் சூழ்ந்த போது அந்தச் சேனைகளைப்
புன்சிரிப்பால் முருக வேள் எரித்தார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.494  pg 3.495 
 WIKI_urai Song number: 1198 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1199 - vaLaikaram mAtti (common)

vaLaikara mAtti vEtti nidaithuyil vAtti yeetti
     varivizhi theetti yEttin ...... maNamveesum

mazhaikuzhal kAtti vEtkai vaLarmulai kAtti nOkkin
     mayilnadai kAtti mUtti ...... mayalAkap

puLakitha vArththai yEtRi varikalai vAzhththi yeezhththu
     puNarmulai sErththu veekki ...... viLaiyAdum

pothumada vArkku EtRa vazhiyuRu vAzhkkai vEtkai
     pulaikuNa mOtti mAtRi ...... yaruLvAyE

thoLaiyozhu kEtRa nOkki palavakai vAcchi thUrththu
     sudaradi neeththa lEththu ...... madiyArkaL

thuNaivanmai nOkki nOkki nidaimuRai yAycchi mArcchol
     soliyamu thUtti yAttu ...... murukOnE

iLanakai yOtti mUttar kulamvizha vAtti yEttai
     yimaiyavar pAttai meetta ...... gurunAthA

iyalpuvi vAzhththi yEththa enathidar nOkki nOkka
     miruvinai kAtti meetta ...... perumALE.

......... Meaning .........

vaLai karam mAtti vEttin idai thuyil vAtti eetti vari vizhi theetti Ettin maNam veesum mazhai kuzhal kAtti: Wearing the bangles in their arms, these women spoil my sleep causing in me a pursuit of passionate desire by applying black paint to their sharp spear-like eyes, having capillary lines; they show off their black hair, like the dark cloud, exuding fragrance from the petals of the adorning flowers;

vEtkai vaLar mulai kAtti nOkkin mayil nadai kAtti mUtti mayal Akap puLakitha vArththai EtRi: they exhibit their provocative bosom and their elegant gait like that of the peacock; they make sure that their suitors are obsessed with passion by speaking enthralling words into their ears;

vari kalai vAzhththi eezhththu puNar mulai sErththu veekki viLaiyAdum pothu madavArkku EtRa vazhi uRu vAzhkkai vEtkai pulai kuNam Otti mAtRi aruLvAyE: while praising (their suitors), they pull off their clothes and hug them tightly to their bosom; I hanker after such playfully teasing whores, indulging in the way that pleases them; kindly drive away and remove this base desire of mine and bless me graciously.

thoLai ozhuku EtRa(m) nOkki pala vakai vAcchi thUrththu sudar adi nee(ni)ththal Eththum adiyArkaL thuNai: After listening to the great music emanating from many wind instruments that have perforations in them, Your devotees play on many many kinds of instruments loudly; they praise Your bright hallowed feet and worship them daily; and You closely guard them, Oh Lord!

vanmai nOkki nOkkin idai muRai AycchimAr sol solli amuthu Utti Attu murukOnE: Considering Your strength, the six foster-mothers of KArththigai took turn willingly and breast-fed You, one after the other, spoke to You words of love and sang lullaby to put You to sleep, Oh MurugA!

iLa nakai Otti mUttar kulam vizha vAtti Ettai imaiyavar pAttai meetta kuru nAthA: With a smile on Your lips*, You persecuted the foolish demons, annihilated their lineage and removed the misery of the depressed celestials, Oh Great Master!

iyal puvi vAzhththi Eththa enathu idar nOkki nOkkam iru vinai kAtti meetta perumALE.: As the worthy wise men of this world praised Your glory, You saw how miserable I was and, with Your gracious look, You made me see the status of both good and bad deeds of mine; and You redeemed me from my worst vices, Oh Great One!


* When SUran's armies encircled Lord Murugan in combat, He burnt them all merely by His smile.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1199 vaLaikaram Atti - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]