திருப்புகழ் 1193 முலைமேலிற் கலிங்க  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1193 mulaimEliRtkalingka  (common)
Thiruppugazh - 1193 mulaimEliRtkalingka - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனானத் தனந்த தந்தன
     தனனானத் தனந்த தந்தன
          தனனானத் தனந்த தந்தன ...... தனதான

......... பாடல் .........

முலைமேலிற் கலிங்க மொன்றிட
     முதல்வானிற் பிறந்த மின்பிறை
          நுதல்மேல்முத் தரும்ப புந்தியி ...... லிதமார

முகநேசித் திலங்க வும்பல
     வினைமூசிப் புரண்ட வண்கடல்
          முரணோசைக் கமைந்த வன்சர ...... மெனமூவா

மலர்போலச் சிவந்த செங்கணில்
     மருள்கூர்கைக் கிருண்ட அஞ்சனம்
          வழுவாமற் புனைந்து திண்கய ...... மெனநாடி

வருமாதர்க் கிரங்கி நெஞ்சமு
     மயலாகிப் பரந்து நின்செயல்
          மருவாமற் கலங்கும் வஞ்சக ...... மொழியாதோ

தொலையாநற் றவங்க ணின்றுனை
     நிலையாகப் புகழ்ந்து கொண்டுள
          அடியாருட் டுலங்கி நின்றருள் ...... துணைவேளே

துடிநேரொத் திலங்கு மென்கொடி
     யிடைதோகைக் கிசைந்த வொண்டொடி
          சுரர்வாழப் பிறந்த சுந்தரி ...... மணவாளா

மலைமாளப் பிளந்த செங்கையில்
     வடிவேலைக் கொடந்த வஞ்சக
          வடிவாகக் கரந்து வந்தமர் ...... பொருசூரன்

வலிமாளத் துரந்த வன்திறல்
     முருகாமற் பொருந்து திண்புய
          வடிவாமற் றநந்த மிந்திரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முலை மேலில் கலிங்கம் ஒன்றிட வானில் முதல் பிறந்த மின்
பிறை நுதல் மேல் முத்து அரும்ப புந்தியில் இதம் ஆர
...
தனங்களின் மேல் ஆடை பொருந்த, வானில் அப்போது தோன்றிய
ஒளி வீசும் பிறைச் சந்திரன் போன்ற நெற்றியின் மேல் முத்துப் போல
வேர்வை அரும்ப, இதயமெல்லாம் இன்பம் நிரம்ப,

முகம் நேசித்து இலங்கவும் பல வினை மூசிப் புரண்ட வண்
கடல் முரண் ஓசைக்கு அமைந்தவன் சரம் என மூவா மலர்
போலச் சிவந்த செம் க(ண்)ணில்
... முகத்தில் நேசத் தன்மை
விளங்கவும், பல வஞ்சக எண்ணங்கள் நிறைந்தும், அலைகள் புரளும்
வளப்பமுள்ள கடலின் வலிய ஓசைக்கு பொருந்தி (மன்மதன் வீசும்)
வலிய பாணங்கள் என்று சொல்லும்படியும், வாடாத பூக்களைப்
போலச் சிவந்தும் இருந்த செவ்விய கண்களில்,

மருள் கூர்கைக்கு இருண்ட அஞ்சனம் வழுவாமல் புனைந்து
திண் கயம் என நாடி வரும் மாதர்க்கு இரங்கி நெஞ்சமும்
மயலாகிப் பரந்து நின் செயல் மருவாமல் கலங்கும் வஞ்சகம்
ஒழியாதோ
... மயக்கம் மிகக் கொள்ளுவதற்கு கரிய மையை தவறாமல்
அணிந்து, திண்ணிய யானை போல மதத்துடன் தேடி வருகின்ற
பெண்கள்பால் இரக்கம் வைத்து, மனமும் காம மயக்கம் பெருகி,
உனக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளில் ஈடுபடாமல் கலங்குகின்ற
மோக நிலை என்னை விட்டு அகலாதோ?

தொலையா நல் தவங்கள் நின்று உ(ன்)னை நிலையாகப்
புகழ்ந்து கொண்டு உ(ள்)ள அடியார் உள் துலங்கி நின்று
அருள் துணை வேளே
... கெடாத நல்ல தவ நிலைகளில் இருந்து
உன்னை நிலைத்த புத்தியுடன் புகழ்ந்து கொண்டிருக்கும் அடியார்களின்
உள்ளத்தே விளக்கத்துடன் இருந்து துணை புரிகின்ற செவ்வேளே,

துடி நேர் ஒத்து இலங்கு மென் கொடி இடை தோகைக்கு
இசைந்த ஒண் தொடி சுரர் வாழப் பிறந்த சுந்தரி மணவாளா
...
உடுக்கைக்கு நேர் ஒப்பாக நின்று நன்கு விளங்குவதும் மெல்லிய கொடி
போன்றதுமான இடையை உடையவளும், மயில் போன்றவளும், ஒளி
பொருந்திய கை வளையை அணிந்தவளும், தேவர்கள் வாழப்
பிறந்தவளுமாகிய அழகி தேவயானையின் கணவனே,

மலை மாளப் பிளந்த செம் கையில் வடி வேலைக் கொ(ண்)டு
அந்த வஞ்சக வடிவாகக் கரந்து வந்து அமர் பொரு சூரன்
வலி மாளத் துரந்த வன் திறல் முருகா
... கிரவுஞ்ச மலை
மாளும்படி அதைப் பிளந்து எறிந்த, செவ்விய கையில் உள்ள கூர்மையான
வேலைக் கொண்டு, அந்த வஞ்சக வடிவுடன் ஒளித்து வந்து சண்டை
செய்த சூரனுடைய வலிமை அழியும்படி நீக்கிய வன்மையைக் கொண்ட
வீர முருகனே,

மல் பொருந்து திண் புய வடிவா மற்று அநந்தம் இந்திரர்
பெருமாளே.
... மற் போருக்குத் தகுதியான வலிய திருப்புயங்களை
உடையவனே, அழகனே, மேலும் அளவற்ற இந்திரர்களுக்குப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.480  pg 3.481  pg 3.482  pg 3.483 
 WIKI_urai Song number: 1192 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1193 - mulaimEliRt kalingka (common)

mulaimEliR kalinga monRida
     muthalvAniR piRantha minpiRai
          nuthalmElmuth tharumpa punthiyi ...... lithamAra

mukanEsith thilanga vumpala
     vinaimUsip puraNda vaNkadal
          muraNOsaik kamaintha vanchara ...... menamUvA

malarpOlac chivantha sengaNil
     maruLkUrkaik kiruNda anjanam
          vazhuvAmaR punainthu thiNkaya ...... menanAdi

varumAthark kirangi nenjamu
     mayalAkip paranthu ninseyal
          maruvAmaR kalangum vanjaka ...... mozhiyAthO

tholaiyAnat Ravanga NinRunai
     nilaiyAkap pukazhnthu koNduLa
          adiyArut tulangi ninRaruL ...... thuNaivELE

thudinEroth thilangu menkodi
     yidaithOkaik kisaintha voNdodi
          surarvAzhap piRantha sunthari ...... maNavALA

malaimALap piLantha sengaiyil
     vadivElaik kodantha vanjaka
          vadivAkak karanthu vanthamar ...... porucUran

valimALath thurantha vanthiRal
     murukAmaR porunthu thiNpuya
          vadivAmat Ranantha minthirar ...... perumALE.

......... Meaning .........

mulai mElil kalingam onRida vAnil muthal piRantha min piRai nuthal mEl muththu arumpa punthiyil itham Ara: Their breasts are covered by a fitting attire; on their forehead looking like the crescent moon that has risen just this minute, pearl-like beads of perspiration spring forth; their hearts are filled with pleasure;

mukam nEsiththu ilangavum pala vinai mUsip puraNda vaN kadal muraN Osaikku amainthavan saram ena mUvA malar pOlac chivantha sem ka(N)Nil: their face depicts affability; they are filled with many treacherous thoughts; they look like the powerful arrows wielded (by Manmathan, God of Love) in keeping with the meter of the noise of the rich sea's swaying waves; those eyes are like the red flowers that never wither;

maruL kUrkaikku iruNda anjanam vazhuvAmal punainthu thiN kayam ena nAdi varum mAtharkku irangi nenjamum mayalAkip paranthu nin seyal maruvAmal kalangum vanjakam ozhiyAthO: these whores never fail to apply black pigment on those eyes to provoke delusory passion; they come on too strongly like a huge elephant in a frenzy; falling for them with a deep sense of compassion and reeling in passion, I have neglected to be in Your service that I ought to have performed; will I ever be able to get rid of this sensual obsession that haunts me, Oh Lord?

tholaiyA nal thavangaL ninRu u(n)nai nilaiyAkap pukazhnthu koNdu u(L)La adiyAr uL thulangi ninRu aruL thuNai vELE: You remain prominently in the hearts of the devotees who observe unshakable penance praising You with a steadfast mind and guide them well, Oh Reddish Lord!

thudi nEr oththu ilangu men kodi idai thOkaikku isaintha oN thodi surar vAzhap piRantha sunthari maNavALA: Her waist is comparable to the hand-drum and to a slender creeper; She looks like a peacock and wears bright bangles on her arms; She is born to uplift the lives of the celestials; and You are the Consort of that beautiful damsel, DEvayAnai, Oh Lord!

malai mALap piLantha sem kaiyil vadi vElaik ko(N)du antha vanjaka vadivAkak karanthu vanthu amar poru cUran vali mALath thurantha van thiRal murukA: With the sharp spear in Your reddish hand that was wielded to split the mountain Krouncha shattering it away, You destroyed the valour of that mighty demon SUran who fought assuming several treacherous disguises, Oh Valiant Lord MurugA!

mal porunthu thiN puya vadivA matRu anantham inthirar perumALE.: Your hallowed shoulders are strong and ready for a wrestling war, Oh Handsome One! Furthermore, You are the Lord of innumerable IndrAs, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1193 mulaimEliRt kalingka - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]