திருப்புகழ் 1164 தனஞ் சற்றுக் குலுங்க  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1164 thananjchatRukulungka  (common)
Thiruppugazh - 1164 thananjchatRukulungka - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத்
     தனந்தத்தத் தனந்தத்தத் ...... தனதான

......... பாடல் .........

தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற்
     சதங்கைக்கற் சிலம்பொத்திக் ...... கையில்வீணை

ததும்பக்கைக் குழந்தைச்சொற் பரிந்தற்புக் கிதங்கப்பொற்
     சரஞ்சுற்றிட் டிணங்கக்கட் ...... சரவேலால்

தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத்
     தினந்தெட்டிக் கடன்பற்றிக் ...... கொளுமாதர்

சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச்
     சிவம்பெற்றுத் தவம்பற்றக் ...... கழல்தாராய்

தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட்
     டடண்டட்டட் டிமிண்டுட்டுட் ...... டியல்தாளந்

தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயர்ந்துக்கத்
     தகண்டத்தர்க் குடன்பட்டுற் ...... றசுராரைச்

சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச்
     சிரந்தத்தப் பிளந்துட்கக் ...... கிரிதூளாச்

செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச்
     செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தனம் சற்றுக் குலுங்கப் பொன் கலன்கள் பட்டு இலங்கப்
பொன் சதங்கைக் கல் சிலம்பு ஒத்திக் கையில் வீணை
ததும்ப
... மார்பகங்கள் கொஞ்சம் குலுங்க, பொன் ஆபரணங்களும்
பட்டாடையும் இலங்க, அழகிய சலங்கையும், ரத்தினங்கள் இழைக்கப்
பெற்ற சிலம்பும், கையில் வீணையும் சிறப்பாக விளங்க,

கை குழந்தைச் சொல் பரிந்து அற்புக்கு இதங்கப் பொன் சரம்
சுற்றிட்டு
... கைக்குழந்தையின் மழலைச் சொல் போலச் சொற்களைப்
பேசி, அன்புக்கு இதமான பொன்னாலாகிய மாலைகளைக் கழுத்தினில்
சுற்றிக்கொண்டு,

இணங்கக் கண் சர வேலால் தினம் பித்திட்டு இணங்கிச்
சொல் கரம் கட்டிப் புணர்ந்திட்டுத் தினம் தெட்டிக் கடன்
பற்றிக் கொ(ள்)ளு மாதர்
... ஒருசேர இரு கண்களாகிய அம்பாலும்
வேலாலும் நாள் தோறும் (காம மயக்கமாகிய) பித்தத்தைத் தந்து, மனம்
ஒத்து, சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் கைகட்டி
நடப்பவர்களாகவும் நடந்து கலவியில் கூடி, தினமும் வஞ்சிப்பவர்களாக
தங்களுக்கு உரிய பணத்தை (வந்தவரிடம் இருந்து) அபகரிக்கும்
விலைமாதர்களின்

சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்கக் குணம் செற்றுச்
சிவம் பெற்றுத் தவம் பற்றக் கழல் தாராய்
... தந்திர உபாயங்களில்
அகப்பட்டுத் திரிந்தவனாக பயனற்ற வழியில் புகுகின்ற எனது இழி
குணத்தை ஒழித்து, மங்களகரமான உயர் நிலையைப் பெற்று தவ
நிலையை நான் அடைய உனது திருவடிகளைத் தந்து அருள்க.

தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட்
டடண்டட்டட் டிமிண்டுட்டுட் இயல் தாளம் தகுந்தொத்தித்
திமிந்தித்தித் தவண்டைக்கு உட்கு அயர்ந்து உக்க
...
தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட்
டிமிண்டுட்டுட் இவ்வாறான ஒலிகளுடன் சப்திக்கும் முரசுகளின்
தாளங்களுக்கும், தகுந்தொத்தித் திமிந்தித்தித் என்று ஒலிக்கும்
பேருடுக்கைகளுக்கும் பயந்து சோர்ந்து அசுரர்கள் சிதற,

தகு அண்டர்த்தர்க்கு உடன் பட்டு உற்ற அசுராரைச் சினம்
தத்திக் கொளுந்தக் கைச் சரம் தொட்டுச் சதம் பொர்ப்பைச்
சிரம் தத்த
... தக்கவர்களான தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி,
போருக்கு வந்த அசுரர்களை கோபம் மேலெழுந்து பொங்கி எரிக்க,
கையில் இருந்த அம்புகளைத் தொடுத்ததால் நூற்றுக் கணக்கான
மலைகளின் உச்சிகள் யாவும் நடுக்கம் கொள்ள,

பிளந்து உட்கக் கிரி தூளா(கி)ச் செகம் திக்குச் சுபம்
பெற்றுத் துலங்க
... கிரெளஞ்ச மலை அஞ்ச அதைப் பிளந்து
பொடியாக்கி, உலகத்தின் எல்லாத் திக்கில் உள்ளவர்களும் நன்மை
பெற்று விளங்கச் செய்து,

பொர்க் களம் புக்குச் செயம் பற்றிக் கொ(ள்)ளும் சொக்கப்
பெருமாளே.
... போர்க் களத்துக்குச் சென்று வெற்றியைக் கைப்பற்றிக்
கொண்ட அழகிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.404  pg 3.405  pg 3.406  pg 3.407 
 WIKI_urai Song number: 1165 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1164 - thananjchatRu (common)

thananjchatRuk kulungappoR kalankadpat tilangappoR
     chathangaikkaR chilampoththik ...... kaiyilveeNai

thathumpakkaik kuzhanthaicchoR parinthaRpuk kithangappoR
     charamchutRit tiNangakkat ...... charavElAl

thinampiththit tiNangicchoR karangattip puNarnthittuth
     thinanthettik kadanpatRik ...... koLumAthar

silampaththit RirinthutRit tavampukkak kuNamchetRuc
     chivampetRuth thavampatRak ...... kazhalthArAy

thananthaththath thananthaththath thaduNduttut tidiNdittid
     dadaNdattat timiNduttut ...... tiyalthALan

thakunthoththith thiminthiththith thavaNdaikkut kayarnthukkath
     thakaNdaththark kudanpattut ...... RasurAraic

chinanthaththik koLunthakkaic charanthottuc chathamporppaic
     chiranthaththap piLanthutkak ...... kirithULAc

chekanthikkuc chupampetRuth thulangappork kaLampukkuc
     cheyampatRik koLumchokkap ...... perumALE.

......... Meaning .........

thanam chatRuk kulungap pon kalankaL pattu ilangap pon sathangaik kal silampu oththik kaiyil veeNai thathumpa: Shaking their bosom slightly, displaying golden ornaments, silky attire and beautiful gem-studded anklets, holding the veeNa (a string instrument) elegantly in their hand,

kai kuzhanthaic chol parinthu aRpukku ithangap pon charam sutRittu: speaking words like baby's prattle, wearing golden chains around their neck in a loving and soothing manner,

iNangak kaN chara vElAl thinam piththittu iNangic chol karam kattip puNarnthittuth thinam thettik kadan patRik ko(L)Lu mAthar: and simultaneously wielding from both eyes, that are like arrow and spear, a maddening dose of passionate dizziness everyday, these whores appear congenial as though they heed to the command with folded hands; then they engage in carnal act and begin their daily routine of treachery by grabbing the money due to them (from their suitors);

silampaththil thirinthu utRittu avam pukkak kuNam setRuc chivam petRuth thavam patRak kazhal thArAy: putting an end to my debased instinct of falling victim to their tricky ploys and roaming about by treading the useless and unrighteous path, kindly bless me graciously so that I attain glorious exaltation and a level of sacrament.

thananthaththath thananthaththath thaduNduttut tidiNdittit tadaNdattat timiNduttud iyal thALam thakunthoththith thiminthiththith thavaNdaikku udku ayarnthu ukka: The terrified and exhausted demons were scattered listening to the drum-beats "thananthaththath thananthaththath thaduNduttut tidiNdittit tadaNdattat timiNduttut" and to the loud noise from the huge hand-drums to the meter "thakunthoththith thiminthiththith";

thaku aNdarththarkku udan pattu utRa asurAraic chinam thaththik koLunthak kaic charam thottuc chatham porppaic chiram thaththa: acceding with compassion to the prayer of the worthy celestials, You became enraged against the demons who came to the war and burnt them all; when You wielded the arrows from Your hand, the peaks of hundreds of mountains shook;

piLanthu utkak kiri thULA(ki)c chekam thikkuc chupam petRuth thulanga: the terrified Mount Krouncha was split and shattered to pieces; and people in all the directions in this world became prosperous

pork kaLam pukkuc cheyam patRik ko(L)Lum sokkap perumALE.: when You entered the battlefield and became victorious, Oh Handsome and Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1164 thananj chatRu kulungka - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]