திருப்புகழ் 1086 அகிலநறுஞ் சேறு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1086 agilanaRunjchERu  (common)
Thiruppugazh - 1086 agilanaRunjchERu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனனந் தான தனதனனந் தான
     தனதனனந் தான ...... தனதான

......... பாடல் .........

அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு
     மசலமிரண் டாலு ...... மிடைபோமென்

றடியில்விழுந் தாடு பரிபுரசெஞ் சீர
     தபயமிடுங் கீத ...... மமையாதே

நகமிசைசென் றாடி வனசரர்சந் தான
     நவையறநின் றேனல் ...... விளைவாள்தன்

லளிதவிர்சிங் கார தனமுறுசிந் தூர
     நமசரணென் றோத ...... அருள்வாயே

பகலிரவுண் டான இருவரும்வண் டாடு
     பரிமளபங் கேரு ...... கனுமாலும்

படிகநெடும் பார கடதடகெம் பீர
     பணைமுகசெம் பால ...... மணிமாலை

முகபடசிந் தூர கரியில்வருந் தேவு
     முடியஅரன் தேவி ...... யுடனாட

முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழி
     முடிவினுமஞ் சாத ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அகில நறும் சேறு ம்ருகமதமும் தோயும் அசலம் இரண்டாலும்
இடை போ(கு)மென்று
... முழுவதுமாக நறுமணக் கலவையும்
கஸ்தூரியும் தோய்ந்துள்ள (மார்பகங்களாகிய) மலைகள் இரண்டாலும்
இடுப்பு ஒடிந்து போகும் என்று,

அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடும்
கீதம் அமையாதே
... பாதத்தில் விழுந்து ஒலிக்கின்ற சிலம்பின்
செவ்விய சீர் பொருந்திய அபயக் கூச்சலிடும் இசை ஒலி போதாதென்று,

நகம் மிசை சென்று ஆடி வனசரர் சந்தான(ம்) நவை அற
நின்று ஏனல் விளைவாள் தன்
... (வள்ளி) மலைக்குப் போய்
லீலைப் பேச்சுடன் விளையாடி, வேடர்களின் தவப்புதல்வியும், குற்றம்
இல்லாத வகையில் இருந்து தினைப்பயிர் விளைவித்தவளும், ஆகிய
வள்ளியின்

லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத
அருள்வாயே
... ஒளிரும் நளினமும், அணிகளின் விளக்கமுமுள்ள
அலங்காரமான மார்பில் அணையும் செந்நிறச் செல்வனே, உன்னை
வணங்குகிறேன் என்று கூறி நான் உன்னைப் போற்ற அருள் புரிய
வேண்டும்.

பகல் இரவு உண்டான இருவரும் வண்டு ஆடு(ம்) பரிமள
பங்கேருகனும் மாலும்
... சூரியனும், சந்திரனும், வண்டுகள்
விளையாடும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும்,

படிக நெடும் பார கட(ம்) தட(ம்) கெம்பீர பணை முகம்
செம்பால மணி மாலை முக பட(ம்) சிந்தூர கரியில் வரும்
தேவு(ம்)
... படிகம் போல் வெண்ணிறம் உடையதும், மிக்க கனம்
கொண்டதும், மத நீர் கொண்டதும், பெருமை வாய்ந்ததும், கம்பீரமானதும்,
பருத்த முகத்தில் செவ்விய நெற்றியில் மணி மாலையும் முகத்தில் இடும்
அலங்காரத் துணியும் உள்ளதும், புள்ளி முகத்தைக் கொண்டதுமான
(ஐராவதம் என்னும்) யானை மீது வரும் இந்திரனும்,

முடிய அரன் தேவி உடன் ஆட ... (இவர்கள் முதலான யாவரும்)
அழிவுறும் (யுகாந்த) காலத்தில் சிவபெருமான் பராசக்தியுடன் நடனம்
செய்ய,

முழுது உலகும் தாவி எழு கடல் மண்டு ஊழி முடிவினும்
அஞ்சாத பெருமாளே.
... உலகம் முழுதிலும் பரந்தெழுந்து ஏழு
கடல்களும் நெருங்கிப் பொங்கும் முடிவு காலமாகிய ஊழிக் காலத்தும்
(நல்ல சக்தியும் தீய சக்தியும் போராடி யுகத்தை முடிக்கும் காலத்தும்),
அஞ்சாமல் விளங்கி நிலையாக நிற்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.202  pg 3.203  pg 3.204  pg 3.205 
 WIKI_urai Song number: 1089 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1086 - akilanaRunj chERu (Common)

akilanaRum chERu mrukamathamun thOyu
     masalamiraN dAlu ...... midaipOmen

Radiyilvizhun thAdu paripurasem cheera
     thapayamidung keetha ...... mamaiyAthE

nakamisaisen RAdi vanasararsan thAna
     navaiyaRanin REnal ...... viLaivALthan

laLithavirsing kAra thanamuRusin thUra
     namasaraNen ROtha ...... aruLvAyE

pakaliravuN dAna iruvarumvaN dAdu
     parimaLapang kEru ...... kanumAlum

padikanedum pAra kadathadakem peera
     paNaimukasem pAla ...... maNimAlai

mukapadasin thUra kariyilvarun thEvu
     mudiya aran thEvi ...... yudanAda

muzhuthulakun thAvi ezhukadalmaN dUzhi
     mudivinuman jAtha ...... perumALE.

......... Meaning .........

akila naRum chERu mrukamathamum thOyum asalam iraNdAlum idai pO(ku)menRu: Because of the weight of the heavy mountain-like bosom smeared fully with the mixture of fragrant substances and kastUri (an aromatic essence derived from the deer), her waist is likely to cave in;

adiyil vizhunthu Adu paripuram sem seer athu apayam idum keetham amaiyAthE: as if the methodical rhythm and musical sound of appeal made by the anklets on her feet is not enough,

nakam misai senRu Adi vanasarar santhAna(m) navai aRa ninRu Enal viLaivAL than: You went up to Mount VaLLimalai and engaged in the sport of flirtatious conversation with the dear damsel of the hunters; she is VaLLi, the innocent girl who was merely cultivating the crop of millet;

laLitha avir singAra thanam uRu sinthUra nama saraN enRu Otha aruLvAyE: You embraced the bright and elegant bosom of that VaLLi, bedecked with decorative ornaments, Oh Lord with a reddish complexion! Kindly bless me to prostrate at Your feet saying "I am worshipping You, Oh Lord!"

pakal iravu uNdAna iruvarum vaNdu Adu(m) parimaLa pangkErukanum mAlum: The Sun, the Moon, Lord BrahmA seated on the lotus around which the beetles hum, Lord VishNu,

padika nedum pAra kada(m) thada(m) kempeera paNai mukam sempAla maNi mAlai muka pada(m) sinthUra kariyil varum thEvu(m): Lord IndrA who mounts the elephant (AirAvatham) that has a crystal-white hue, has a huge and majestic body, has oozing saliva of rage and has garlands made of gems and decorative garment on the reddish forehead of its big and spotted face,

mudiya aran thEvi udan Ada: and all others were facing extinction (at the end of the aeon) when Lord SivA and Goddess ParAsakthi danced together;

muzhudhu ulagum thAvi ezhu kadal maNdu Uzhi mudivinum anjAtha perumALE.: when all the seven seas merge together and rise, submerging the entire world resulting in the ultimate war between the good and the evil, You shall stand steadily without fear, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1086 agilanaRunj chERu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]