திருப்புகழ் 1054 குருதி மூளை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1054 kurudhimULai  (common)
Thiruppugazh - 1054 kurudhimULai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு
     குடிசை கோழை மாசூறு ...... குழிநீர்மேற்

குமிழி போல நேராகி அழியு மாயை யாதார
     குறடு பாறு நாய்கூளி ...... பலகாகம்

பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில்
     படியின் மூழ்கி யேபோது ...... தளிர்வீசிப்

பரவு நாட காசார கிரியை யாளர் காணாத
     பரம ஞான வீடேது ...... புகல்வாயே

எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான
     இமய மாது மாசூலி ...... தருபாலா

எழுமை யீறு காணாதர் முநிவ ரோடு வானாடர்
     இசைக ளோடு பாராட ...... மகிழ்வோனே

அரவி னோடு மாமேரு மகர வாரி பூலோக
     மதிர நாக மோரேழு ...... பொடியாக

அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட
     அசுரர் மாள வேலேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை
கோழை மாசு ஊறு குழி நீர் மேல் குமிழி போல நேராகி
அழியு(ம்) மாயை ஆதார(ம்)
... ரத்தம், மூளை, மாமிசம், நாற்றம்
மிக்க மலம் இவை நீங்காததும், தோலால் மூடியதுமான இந்தக்
குடிசையாகிய உடல், கோழையும் மற்ற அழுக்குகள் ஊறியுள்ள ஒரு
நீர்க் குமிழி போன்று உடனே அழிகின்ற ஒரு பொய்த் தோற்றமான
பற்றுக் கோடாக நினைக்கப்படும்.

குறடு பாறு நாய் கூளி பல காகம் பருகு காயமே பேணி
அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே
... இறந்த பின்,
இறைச்சியைக் கொத்தும் பட்டடை மரத் துண்டாக வைத்து, பருந்துகளும்,
நாய்களும், பேய்களும், பல காகங்களும் உண்ணும் இத்தகைய உடலை
விரும்பிப் பேணி அறிவில்லாத நான் வீணாகப் பூமியில் முழுகியவன்.

போது தளிர் வீசிப் பரவு நாடக ஆசார கிரியையாளர்
காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே
... மலர்களையும்
வில்வம் போன்ற இலைகளையும் உனக்கு இட்டுப் பணிந்து, போற்றப்
படுகின்ற ஒரு கூத்துப் போன்ற பணியாகிய ஆசாரப் பணியை
மேற்கொண்டுள்ள கிரியையாளர்கள் காண முடியாத மேலான ஞான
வீடு எது என்பதை எனக்கு உபதேசிக்க வேண்டும்.

எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான இமய மாது
மா சூலி தரு பாலா
... நெருப்புப் போன்ற திருமேனியில் திரு நீறு
விளங்கும் பரமராகிய சிவபெருமானின் (இடது) பாகத்தில்
வாழ்கின்றவளும், இமய மலை அரசனின் பெண்ணும், சிறந்த
சூலாயுதத்தை ஏந்தியவளுமான பார்வதி ஈன்ற குழந்தையே,

எழுமை ஈறு காண் நாதர் முநிவரோடு வான் நாடர்
இசைகளோடு பாரா(ட்)ட மகிழ்வோனே
... எழு வகைத்
தோற்றத்தின் முடிவையும் கண்டு உணர்ந்த (அகத்தியர் முதலான)
நாதர்களாகிய முனிவர்களும், வானில் உள்ள தேவர்களும் பாரா(ட்)ட
மகிழ்கின்றவனே,

அரவினோடு மா மேரு மகர வாரி பூலோகம் அதிர நாகம்
ஓர் ஏழு பொடியாக அலகை பூத மாகாளி சமர பூமி மீது ஆட
அசுரர் மாள வேல் ஏவு பெருமாளே.
... ஆதிசேஷனும், பெரிய
மேரு மலையும், மகர மீன்கள் உள்ள கடலும், பூ லோகமும் அதிர்ச்சி
கொள்ளவும், (சூரனின்) ஏழு மலைகளும் பொடியாகவும், பேய்கள்,
பூதங்கள், சிறந்த காளி ஆகியோர் போர்க்களத்தில் கூத்தாடவும்,
அசுரர்கள் மடியவும் வேலைச் செலுத்திய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.148  pg 3.149  pg 3.150  pg 3.151 
 WIKI_urai Song number: 1057 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1054 - kurudhi mULai (common)

kuruthi mULai yUnARu malama RAtha thOlmUdu
     kudisai kOzhai mAcURu ...... kuzhineermER

kumizhi pOla nErAki azhiyu mAyai yAthAra
     kuRadu pARu nAykULi ...... palakAkam

paruku kAya mEpENi aRivi lAma lEveeNil
     padiyin mUzhki yEpOthu ...... thaLirveesip

paravu nAda kAsAra kiriyai yALar kANAtha
     parama njAna veedEthu ...... pukalvAyE

eriyin mEni neeRAdu paramar pAlil vAzhvAna
     imaya mAthu mAcUli ...... tharupAlA

ezhumai yeeRu kANAthar muniva rOdu vAnAdar
     isaika LOdu pArAta ...... makizhvOnE

aravi nOdu mAmEru makara vAri pUlOka
     mathira nAka mOrEzhu ...... podiyAka

alakai pUtha mAkALi samara pUmi meethAda
     asurar mALa vElEvu ...... perumALE.

......... Meaning .........

kuruthi mULai Un nARu malam aRAtha thOl mUdu kudisai kOzhai mAsu URu kuzhi neer mEl kumizhi pOla nErAki azhiyu(m) mAyai AthAra(m): Blood, brain, flesh and the stenchy faeces never leave this cottage of a body, covered by the skin, this body serves as the breeding ground for phlegm and other dirty germs; it is flimsy like an air bubble which perishes no sooner than it is formed, giving a delusory impression that the body is a safe haven;

kuRadu pARu nAy kULi pala kAkam paruku kAyamE pENi aRivilAmalE veeNil padiyin mUzhkiyE: upon demise, this body is going to be devoured by vultures, dogs, devils and many crows who will peck into the flesh keeping the pieces upon a chunk of wood; nurturing such a body with affection, I have been stupidly drowning myself in worldly matters in vain;

pOthu thaLir veesip paravu nAdaka AsAra kiriyaiyALar kANAtha parama njAna veedu Ethu pukalvAyE: those traditional worshippers, who offer flowers and tender leaves like vilvam (bael) to You and those who have taken up their mission of worship zealously as though it is a thespian service, have not been able to discern the great bliss of liberation; kindly preach to me what that liberation is, Oh Lord!

eriyin mEni neeRAdu paramar pAlil vAzhvAna imaya mAthu mA cUli tharu pAlA: She is concorporate on the left side of the Supreme Lord SivA whose body glows like fire and is smeared with the holy ash; She is the daughter of Mount HimavAn; She holds the famous trident in Her hand; and You are the child of that Goddess PArvathi!

ezhumai eeRu kAN nAthar munivarOdu vAn nAdar isaikaLOdu pArA(d)da makizhvOnE: These great sages (like Agasthiyar) who have researched into, and realised the finishing stages of, the seven species of life, along with the Celestials in the skies, praise You to Your delight, Oh Lord!

aravinOdu mA mEru makara vAri pUlOkam athira nAkam Or Ezhu podiyAka alakai pUtha mAkALi samara pUmi meethu Ada asurar mALa vEl Evu perumALE.: The serpent, AdhisEshan, the huge Mount MEru, the seas filled with makara fish and the entire world were shaken; the seven mountains (of the demon SUran) were shattered to pieces; the devils, the fiends and the great Goddess KALi danced about on the battlefield; and the demons perished as You wielded the spear, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1054 kurudhi mULai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]