திருப்புகழ் 1038 ஊனே தானாய்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1038 UnEthAnAi  (common)
Thiruppugazh - 1038 UnEthAnAi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

......... பாடல் .........

ஊனே தானா யோயா நோயா
     லூசா டூசற் ...... குடில்பேணா

ஓதா மோதா வாதா காதே
     லோகா சாரத் ...... துளம்வேறாய்

நானே நீயாய் நீயே நானாய்
     நானா வேதப் ...... பொருளாலும்

நாடா வீடா யீடே றாதே
     நாயேன் மாயக் ...... கடவேனோ

வானே காலே தீயே நீரே
     பாரே பாருக் ...... குரியோனே

மாயா மானே கோனே மானார்
     வாழ்வே கோழிக் ...... கொடியோனே

தேனே தேனீள் கானா றாய்வீழ்
     தேசார் சாரற் ...... கிரியோனே

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசற் குடில்பேணா ...
ஊன் பொருந்திய இவ்வுடலே நான்தான் என்று நினைத்து, என்றும்
முடிவில்லாத நோயாளனாய், அழிவுள்ளதும், ஊஞ்சலைப்போல் மாறி
மாறி வருகின்றதுமான இத்தேகத்தை விரும்பி,

ஓதா மோதா வாது ஆகாதே லோக ஆசாரத்து உளம்
வேறாய்
... நூல்களை ஓதியும், தாக்கிப் பேசியும், செய்கின்ற சமய
வாதங்களில் ஈடுபடாமலும், உலக ஆசாரங்களில் கட்டுப்படாமல் உள்ளம்
வேறுபட்டு,

நானே நீயாய் நீயே நானாய் ... எனது ஜீவாத்மா பரமாத்மாவாகிய
உன்னிடம் ஒன்றுபட்டுப் பொருந்தி,

நானா வேதப் பொருளாலும் நாடா வீடாய் ... பலவகையான
வேதப்பொருள் கொண்டு உன்னை நாடி விரும்பி வீடு பேற்றை
அடைந்தவனாய்,

ஈடேறாதே நாயேன் மாயக் கடவேனோ ... என் ஜன்மம் சாபல்யம்
அடையாமல் நாயனைய அடியேன் இறந்துபோகக் கடவேனோ?

வானே காலே தீயே நீரே பாரே பாருக்கு உரியோனே ...
விண், காற்று, தீ, நீர், பார் ஆகிய ஐந்து பூதங்களாக விளங்கி,
இவ்வுலகிலுள்ள பெரியோருக்கு உரியவனாகத் திகழ்பவனே,

மாயா மானே கோனே மானார் வாழ்வே கோழிக்
கொடியோனே
... என்றும் அழிவில்லாத பெரியோனே, அரசனே,
மான்போன்ற அழகியர் வள்ளி, தேவயானைக்கு செல்வக் கணவனே,
கோழிக் கொடியை உயர்த்தியவனே,

தேனே தேன் நீள் கான் ஆறாய்வீழ் ... தேன் போன்று
இனிப்பவனே, தேனாறு என்னும் நீண்ட காட்டாறு பாய்கின்ற

தேசு ஆர் சாரற் கிரியோனே ... ஒளி பொருந்திய மலைப்பகுதியான
(குன்றக்குடி* என்ற) தலத்தில் அமர்ந்தவனே,

சேயே வேளே பூவே கோவே ... ஈசன் மகனே, செவ்வேள் முருகனே,
அழகனே, தலைவனே,

தேவே தேவப் பெருமாளே. ... தேவனே, தேவர்களின் பெருமாளே.


* தேனாறு பாயும் ஊர் குன்றக்குடியாதலால், இப்பாடல் அத்தலத்தைக்
குறிப்பதாகவும் கொள்ளலாம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.116  pg 3.117 
 WIKI_urai Song number: 1041 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1038 - UnE thAnAi (common)

UnE thAnA yOyA nOyA
     lUsA dUsaR ...... kudilpENA

OthA mOthA vAthA kAthE
     lOkA sArath ...... thuLamvERAy

nAnE neeyAy neeyE nAnAy
     nAnA vEthap ...... poruLAlum

nAdA veedA yeedE RAthE
     nAyEn mAyak ...... kadavEnO

vAnE kAlE theeyE neerE
     pArE pAruk ...... kuriyOnE

mAyA mAnE kOnE mAnAr
     vAzhvE kOzhik ...... kodiyOnE

thEnE thEneeL kAnA RAyveezh
     thEsAr sAraR ...... kiriyOnE

sEyE vELE pUvE kOvE
     thEvE thEvap ...... perumALE.

......... Meaning .........

UnE thAnAy OyA nOyAl UsAdu UsaR kudilpENA: I always thought that this body of flesh is myself; endlessly ailing without any remission, I still cherished this mortal body of mine that swayed like a swing;

OthA mOthA vAthu AkAthE lOka AsAraththu uLam vERAy: without learning the texts, without being involved in religious debates and without conforming to ritualistic stipulations of this world, I wish my mind to be distinctly aloof;

nAnE neeyAy neeyE nAnAy: my inner soul should merge with the Supreme Soul, namely, You;

nAnA vEthap poruLAlum nAdA veedAy: I must seek You willingly by chanting several scriptures and then experience self-realisation;

eedERAthE nAyEn mAyak kadavEnO: am I, the lowly dog, destined to die without such insight?

vAnE kAlE theeyE neerE pArE pArukku uriyOnE: You manifest as the five elements, namely, the cosmos, air, fire, water and earth, and You belong to all the revered people of the world!

mAyA mAnE kOnE mAnAr vAzhvE kOzhik kodiyOnE: You are immortal and great, Oh King! You are the beloved consort of the deer-like damsels, VaLLi and DEvayAnai; You have raised the staff of the Rooster!

thEnE thEn neeL kAn ARAyveezh thEsu Ar sAraR giriyOnE: You are sweet as honey! You are seated in the bright hilly side (KundRakkudi*) where the long and wild river ThEnARu flows!

sEyE vELE pUvE kOvE thEvE thEvap perumALE.: Oh the son of Lord SivA, Lord MurugA, You are stunningly handsome, Oh Leader! Oh God, You are the lord of the celestials, Oh Great One!


* ThEnARu is the river that flows near KundRakkudi; hence this common song may be considered as referring to that place.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1038 UnE thAnAi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]