திருப்புகழ் 1032 கார் உலாவு குழற்கும்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1032 kArulAvukuzhaRtkum  (common)
Thiruppugazh - 1032 kArulAvukuzhaRtkum - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தான தனத்தம் தான தான தனத்தம்
     தான தான தனத்தம் ...... தனதான

......... பாடல் .........

காரு லாவு குழற்குங் கூரி தான விழிக்குங்
     காதல் பேணு நுதற்குங் ...... கதிர்போலுங்

காவி சேர்ப வளத்தின் கோவை வாயி தழுக்குங்
     காசு பூணு முலைக்குங் ...... கதிசேரா

நேரி தான இடைக்குஞ் சீத வார நகைக்கும்
     நேரி லாத தொடைக்குஞ் ...... சதிபாடும்

நீத மான அடிக்கும் மாலு றாத படிக்குன்
     னேய மோடு துதிக்கும் ...... படிபாராய்

பார மேரு வளைக்கும் பாணி யார்ச டையிற்செம்
     பாதி சோம னெருக்கும் ...... புனைவார்தம்

பால காஎ னநித்தம் பாடு நாவ லர்துக்கம்
     பாவ நாச மறுத்தின் ...... பதமீவாய்

சோரி வாரி யிடச்சென் றேறி யோடி யழற்கண்
     சூல காளி நடிக்கும் ...... படிவேலாற்

சூரர் சேனை தனைக்கொன் றார வார மிகுத்தெண்
     தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கார் உலாவு(ம்) குழற்கும் கூரிதான விழிக்கும் காதல்
பேணு(ம்) நுதற்கும்
... (வேசையர்களின்) மேகம் போன்ற கூந்தலுக்கும்,
கூர்மை வாய்ந்த கண்களுக்கும், ஆசை விருப்பத்தை எழச் செய்யும்
நெற்றிக்கும்,

கதிர்போலும் காவி சேர் பவளத்தின் கோவை வாய்
இதழுக்கும்
... ஒளிக் கிரணம் போல் பிரகாசம் கொண்டதாய், செந்நிறம்
கொண்ட பவளத்தை ஒப்பதாய், கொவ்வைப் பழம் போல் சிவப்பான
வாயிதழுக்கும்,

காசு பூணு(ம்) முலைக்கும் கதி சேரா நேரிதான இடைக்கும்
சீத வார(ம்) நகைக்கும்
... தங்கக் காசுமாலை அணிந்துள்ள
மார்புக்கும், உறுதித் தன்மை இல்லாது (ஒடிவது போல) நுண்ணியதான
இடுப்புக்கும், குளிர்ச்சியையும் அன்பையும் காட்ட வல்ல புன்சிரிப்புக்கும்,

நேர் இலாத தொடைக்கும் சதி பாடும் நீதமான அடிக்கும்
மால் உறாத படிக்கு
... நிகரில்லாத தொடைக்கும், தாளக் கட்டுடன்
ஜதிகளைக் காட்டும் தகுதியைக் கொண்டதான பாதத்துக்கும், நான்
மோக மயக்கம் கொள்ளாதபடிக்கு,

உன் நேயமோடு துதிக்கும்படி பாராய் ... உன் மேல்
அன்போடு துதிக்கும்படி என்னைக் கண் பார்த்து அருள்வாய்.

பார மேரு வளைக்கும் பாணியார் சடையில் செம் பாதி
சோமன் எருக்கும் புனைவார் தம் பாலகா என
... கனத்த மேரு
மலையை வில்லாய் வளைத்த திருக்கைகளை உடையவரும், சடையிலே
செம்மை வாய்ந்த பிறைச் சந்திரனையும், எருக்க மலரையும்
அணிந்துள்ளவரும் ஆகிய சிவபெருமானுடைய மகனே என்று

நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம்
ஈவாய்
... நாள் தோறும் துதித்துப் பாடும் புலவர்களின் துக்கத்தையும்
பாபத்தையும் தொலைத்து, இனிமை தரும் திருவடிகளைத் தருவாயாக.

சோரி வாரியிடச் சென்று ஏறி ஓடி அழல் கண் சூல காளி
நடிக்கும்படி
... ரத்தம் கடல் போல் பெருக, (போர்க்களத்தில்) போய்ச்
சேர்ந்து ஓடி, நெருப்புப் போன்ற கண்களை உடைய, சூலம் ஏந்திய காளி
தேவி நர்த்தனம் ஆடும்படியாக,

வேலால் சூரர் சேனைதனைக் கொன்று ஆரவாரம் மிகுத்து ...
வேலாயுதத்தால் அசுரர்களின் படைகளைக் கொன்று, போரொலி மிகவும்
பெருக,

எண் தோகை வாசி நடத்தும் பெருமாளே. ... மதிக்கத் தக்க
மயிலாகிய குதிரையை நடத்தும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.104  pg 3.105 
 WIKI_urai Song number: 1035 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1032 - kAr ulAvu kuzhaRtkum (common)

kAru lAvu kuzhaRkung kUri thAna vizhikkung
     kAthal pENu nuthaRkung ...... kathirpOlung

kAvi sErpa vaLaththin kOvai vAyi thazhukkung
     kAsu pUNu mulaikkung ...... kathisErA

nEri thAna idaikkunj seetha vAra nakaikkum
     nEri lAtha thodaikkum..... sathipAdum

neetha mAna adikkum mAlu RAtha padikkun
     nEya mOdu thuthikkum ...... padipArAy

pAra mEru vaLaikkum pANi yArsa daiyiRchem
     pAthi sOma nerukkum ...... punaivArtham

pAla kAe naniththam pAdu nAva larthukkam
     pAva nAsa maRuththin ...... pathameevAy

sOri vAri yidacchen RERi yOdi yazhaRkaN
     cUla kALi nadikkum ...... padivElAR

cUrar sEnai thanaikkon RAra vAra mikuththeN
     thOkai vAsi nadaththum ...... perumALE.

......... Meaning .........

kAr ulAvu(m) kuzhaRkum kUrithAna vizhikkum kAthal pENu(m) nuthaRkum: For the whores' cloud-like hair, sharp eyes and provocative foreheads,

kathirpOlum kAvi sEr pavaLaththin kOvai vAy ithazhukkum: for their radiant bright red lips like the kovvai fruit, comparable to the red coral,

kAsu pUNu(m) mulaikkum kathi sErA nErithAna idaikkum seetha vAra(m) nakaikkum: for their bosom adorned with chain of gold coins, for their slender waist looking as if it is about to break, for their smile that displays coolness and love,

nEr ilAtha thodaikkum sathi pAdum neethamAna adikkum mAl uRAtha padikku: for their matchless thighs, and for their feet that show dancing gestures with rhythmic patterns, I do not want to fall reeling in passion;

un nEyamOdu thuthikkumpadi pArAy: (for that), kindly bless me graciously so that I can worship You with love!

pAra mEru vaLaikkum pANiyAr sadaiyil sem pAthi sOman erukkum punaivAr tham pAlakA ena: "You are the Son of Lord SivA, who once bent the huge mountain MEru as a bow and who wears on His matted hair the reddish crescent moon and erukkam flower" - so praise

niththam pAdu nAvalar thukkam pAva nAsam aRuththu in patham eevAy: the poets everyday whose sufferings and sins are all eradicated by Your hallowed feet; kindly grant me those sweet feet, Oh Lord!

sOri vAriyidas senRu ERi Odi azhal kaN cUla kALi nadikkumpadi: She rushed to the battlefield where blood was gushing like the sea, holding the trident in Her hand, that KALi DEvi with fire-like eyes began to dance

vElAl cUrar sEnaithanaik konRu AravAram mikuththu: when You killed the armies of the demons with Your spear; generating a high level of uproarious noise,

eN thOkai vAsi nadaththum perumALE.: You drove Your highly regarded peacock like a horse, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1032 kAr ulAvu kuzhaRtkum - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]