திருப்புகழ் 1019 சிற்று ஆயக் கூட்ட  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1019 sitRuAyakkUtta  (common)
Thiruppugazh - 1019 sitRuAyakkUtta - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தானத் தாத்தத் தனதன
     தத்தானத் தாத்தத் தனதன
          தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான

......... பாடல் .........

சிற்றாயக் கூட்டத் தெரிவையர்
     வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி
          சற்றேறப் பார்த்துச் சிலபணி ...... விடையேவிச்

சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடு
     பித்தேறிக் கூப்பிட் டவர்பரி
          செட்டாமற் றூர்த்தத் தலைபடு ...... சிறுகாலை

உற்றார்பெற் றார்க்குப் பெரிதொரு
     பற்றாயப் பூட்டுக் கயிறுகொ
          டுச்சாயத் தாக்கைத் தொழிலொடு ...... தடுமாறி

உக்காரித் தேக்கற் றுயிர்நழு
     விக்காயத் தீப்பட் டெரியுட
          லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வது ...... மொருநாளே

வற்றாமுற் றாப்பச் சிளமுலை
     யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு
          மைக்காமக் கோட்டக் குலமயில் ...... தருபாலா

மத்தோசைப் போக்கிற் றயிருறி
     நெய்பாலுக் காய்ச்சிக் கிருபதம்
          வைத்தாடிக் காட்டிப் பருகரி ...... மருகோனே

கற்றாவிற் காட்டிக் கரைதுறை
     நற்றாயிற் காட்டிப் புகழ்கலை
          கற்றார்சொற் கேட்கத் தனிவழி ...... வருவோனே

கைச்சூலக் கூற்றைக் கணைமத
     னைத்தூள்பட் டார்ப்பக் கனல்பொழி
          கர்த்தாவுக் கேற்கப் பொருளருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சிற்று ஆயக் கூட்டத் தெரிவையர் வித்தாரச் சூழ்ச்சிக் கயல்
விழி சற்று ஏறப் பார்த்து
... சிறிய கூட்டமாக தமது தோழியர் சூழ்ந்த
(விலை) மாதர்கள் விரிவான தந்திரங்களைக் கொண்ட கயல் மீன் போன்ற
கண்களைக் கொஞ்சம் தூக்கிப் பார்த்து,

சில பணிவிடை ஏவிச் சில் தாபத்து ஆக்கைப் பொருள்
கொடு பித்து ஏறிக் கூப்பிட்டவர் பரிசு எட்டாமல்
... சில
வேலைகளைக் கட்டளை இட்டு, அற்பமான காம தாகம் கொண்ட
உடலை விற்றுப் பொருளைச் சம்பாதித்து, காமப் பித்தை வருவோருக்கு
ஏற்றிக் கூப்பிடும் விலைமாதர்களுக்குக் கொடுக்க வேண்டிய கொடைப்
பொருள் கிட்டாமையால்,

தூர்த்தத்து அலைபடு சிறு காலை ... கெட்ட நெறியில் அலைச்சல்
உறும் இளம் பருவத்தில்,

உற்றார் பெற்றார்க்குப் பெரிது ஒரு பற்றாயப் பூட்டுக் கயிறு
கொடு
... நெருங்கிய சுற்றத்தார், நண்பர்கள் ஆகியோருக்கும், தாய்
தந்தையர்களுக்கும் மிகவும் அன்புக்கு இடமான பாசம் என்ற
கயிற்றினால் கட்டுண்டும்,

உச்சாயத்து ஆக்கைத் தொழிலொடு தடுமாறி உக்காரித்து
ஏக்கற்று
... உயர்ந்த நிலையில் இந்த உடல் கொண்டு செய்ய வேண்டிய
தொழில்களில் ஈடுபட்டு அலைந்தும், சத்தமிட்டும், இளைத்து
அவதிப்பட்டும்,

உயிர் நழுவிக் காய் அத் தீப் பட்டு எரி உடல் உக்கேன்
மெய்க்கு ஆட்டைத் தவிர்வதும் ஒரு நாளே
... முடிவில் உயிர்
நழுவிப் போய், காய்கின்ற அந்த (சுடு காட்டு) நெருப்பில் பட்டு எரிந்து
போகின்ற இந்த உடலைத் தொலையும் வழியைத் தேடவில்லை. இந்த
உடலுக்கு உள்ள ஆட்டங்களை ஒழிப்பதான ஒருநாள் எனக்குக்
கிடைக்குமா?

வற்றா முற்றாப் பச்சிள முலையில் பால் கைப் பார்த்துத் தரும்
ஒரு மைக் காமக் கோட்டக் குல மயில் தரு பாலா
... வற்றாததும்,
முதிராததும் ஆன, பசுமையும் இளமையும் வாய்ந்த மார்பில் பாலை இடம்
பார்த்துத் தந்த ஒப்பற்றவளும், மை பூசிய கண்ணை உடையவளும், காம
கோட்டம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருக்கும் சிறந்த மயிலை
ஒத்தவளுமான காமாட்சி தந்த குழந்தையே,

மத்து ஓசைப் போக்கில் தயிர் உறி நெய்ப் பாலுக்கு
ஆய்ச்சிக்கு இரு பதம் வைத்து ஆடிக் காட்டிப் பருகு அரி
மருகோனே
... மத்தின் ஓசை செல்லும் போக்கை அறிந்து, உறியில்
உள்ள தயிர், நெய், பால் ஆகியவற்றை அடைய வேண்டி, தாயாகிய
யசோதைக்குத் தன் இரண்டு திருவடிகளைக் கொண்டு கூத்தாடி, தனது
ஆடல்களைக் காட்டி, அந்தத் தயிர் முதலியவற்றை உண்ட கண்ணனாம்
திருமாலின் மருகனே,

கல் தா வில் காட்டிக் கரை துறை நற்றாயில் காட்டிப் புகழ்
கலை கற்றார் சொல் கேட்கத் தனி வழி வருவோனே
...
மலையைப் போன்ற வலிமை கொண்ட வில்லைக் காட்டி, சிறந்த
நற்றாயிரங்கல் என்னும் துறையில் பாடிக் காட்டிப் புகழ்ந்த கலைகள்
கற்றறிந்த பொய்யாமொழிப் புலவரின் பாடலைக் கேட்க தனியாக (அவர்
வந்து கொண்டிருந்த) காட்டு வழியில் வந்தவனே*,

கைச் சூலக் கூற்றைக் கணை மதனைத் தூள் பட்டு ஆர்ப்ப ...
கையில் சூலாயுதம் ஏந்திய நமனும், மலர்ப் பாணங்களைக் கொண்டிருந்த
மன்மதனும் முற்றும் அழிந்து ஓலம் இடும்படி,

கனல் பொழி கர்த்தாவுக்கு ஏற்கப் பொருள் அருள்
பெருமாளே.
... கோப நெருப்பைச் சொரிந்த தலைவரான சிவபெருமான்
மகிழ்ந்து ஏற்கும்படி பிரணவப் பொருளை உபதேசித்து அருளிய
பெருமாளே.


* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க,
அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக
வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.78  pg 3.79  pg 3.80  pg 3.81 
 WIKI_urai Song number: 1022 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1019 - sitRu Ayak kUtta (common)

sitRAyak kUttath therivaiyar
     viththArac sUzhcchik kayalvizhi
          satRERap pArththuc chilapaNi ...... vidaiyEvi

sitRApath thAkkaip poruLkodu
     piththERik kUppit tavarpari
          settAmat RUrththath thalaipadu ...... siRukAlai

utRArpet RArkkup perithoru
     patRAyap pUttuk kayiRuko
          ducchAyath thAkkaith thozhilodu ...... thadumARi

ukkArith thEkkat Ruyirnazhu
     vikkAyath theeppat teriyuda
          lukkEnmeyk kAttaith thavirvathu ...... morunALE

vatRAmut RAppac chiLamulai
     yiRpAlkaip pArththuth tharumoru
          maikkAmak kOttak kulamayil ...... tharupAlA

maththOsaip pOkkit RayiruRi
     neypAluk kAycchik kirupatham
          vaiththAdik kAttip parukari ...... marukOnE

katRAviR kAttik karaithuRai
     natRAyiR kAttip pukazhkalai
          katRArsoR kEtkath thanivazhi ...... varuvOnE

kaicchUlak kUtRaik kaNaimatha
     naiththULpat tArppak kanalpozhi
          karththAvuk kERkap poruLaruL ...... perumALE.

......... Meaning .........

sitRu Ayak kUttath therivaiyar viththAras sUzhcchik kayal vizhi satRu ERap pArththu: These whores are surrounded by a small group of maids; they look up with their wide and treacherous eyes, that are like the kayal fish,

sila paNividai Evic chil thApaththu Akkaip poruL kodu piththu ERik kUppittavar parisu ettAmal thUrththaththu alaipadu siRu kAlai: and command them to carry out a few errands; they sell their body, converting it to cash, to quench the trifling thirst of passion; they lift up the level of obsessive passion in their suitors; the lack of resources to satisfy the monetary demand of these whores leads to much roaming about in destructive paths during the youthful days;

utRAr petRArkkup perithu oru patRAyap pUttuk kayiRu kodu: one is attached through the strong bond of love, like a rope, to close relatives and friends as well as to parents;

ucchAyaththu Akkaith thozhilodu thadumARi ukkAriththu EkkatRu: one toils with the body carrying out the duties of a great career concentrating on the work, makes a lot of noise, tires out and feels miserable;

uyir nazhuvik kAy ath theep pattu eri udal ukkEn meykku Attaith thavirvathum oru nALE: ultimately, life slips from the body which is laid on a burning pyre in the cremation ground; not having found any means of getting rid of the body, will there be a day when I can put an end to all the flurry of activities of this body?

vatRA mutRAp pacchiLa mulaiyil pAl kaip pArththuth tharum oru maik kAmak kOttak kula mayil tharu pAlA: Her breasts never dry up nor are they full-blown; they are fresh and young; She breast-fed You with tender care; She is the matchless One having eyes painted with black pigment; She is the peacock-like Goddess KAmAkshi seated in the sacred temple of KAmakOttam; You are Her child, Oh Lord!

maththu Osaip pOkkil thayir uRi neyp pAlukku Aycchikku iru patham vaiththu Adik kAttip paruku ari marukOnE: He could follow the trail of the sound of the milk-churner and knew where his favourite curd, refined butter, and milk were stored on the hanger from the roof; He danced in front of His mother YasOdhai with His hallowed feet impressing her with all the dances He knew and ate all that curd and other things; You are the nephew of that KrishNA (Lord VishNu)!

kal thA vil kAttik karai thuRai natRAyil kAttip pukazh kalai katRAr sol kEdkath thani vazhi varuvOnE: Displaying Your mountain-like strong bow, You confronted the learned poet PoyyAmozhi in a lonely track in a forest to listen to his poem composed in the great branch of "natRay irangal" (where the heroine's mother laments to the hero about the agony of separation of her daughter), Oh Lord!*

kaic cUlak kUtRaik kaNai mathanaith thUL pattu Arppa kanal pozhi karththAvukku ERkap poruL aruL perumALE.: He is the leader who showered fiery sparks of anger on the screaming Yaman (God of Death), holding a trident in his hand, and Manmathan (God of Love), holding flowery arrows in his hand; that Lord SivA listened to You ardently when You preached the meaning of PraNava ManthrA to Him, Oh Great One!


* PoyyAmozhi was a poet bent upon praising only SivA and was totally against Murugan. In an interesting episode, Murugan came in the disguise of a hunter with a spear, encountered the poet in a forest, challenged him for a debate and eventually won him to His side.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1019 sitRu Ayak kUtta - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]