திருப்புகழ் 962 முகமெலா நெய்  (மதுரை)
Thiruppugazh 962 mugamelAnei  (madhurai)
Thiruppugazh - 962 mugamelAnei - madhuraiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானத் தனந்த
     தனன தான தானத் தனந்த
          தனன தான தானத் தனந்த ...... தனதான

......... பாடல் .........

முகமெ லாநெய் பூசித் தயங்கு
     நுதலின் மீதி லேபொட் டணிந்து
          முருகு மாலை யோதிக் கணிந்த ...... மடமாதர்

முதிரு மார பாரத் தனங்கள்
     மிசையி லாவி யாய்நெக் கழிந்து
          முடிய மாலி லேபட் டலைந்து ...... பொருள்தேடிச்

செகமெ லாமு லாவிக் கரந்து
     திருட னாகி யேசற் றுழன்று
          திமிர னாகி யோடிப் பறந்து ...... திரியாமல்

தெளியு ஞான மோதிக் கரைந்து
     சிவபு ராண நூலிற் பயின்று
          செறியு மாறு தாளைப் பரிந்து ...... தரவேணும்

அகர மாதி யாம க்ஷரங்க
     ளவனி கால்வி ணாரப் பொடங்கி
          அடைய வேக ரூபத் திலொன்றி ...... முதலாகி

அமரர் காண வேயத் தமன்றில்
     அரிவை பாட ஆடிக் கலந்த
          அமல நாத னார்முற் பயந்த ...... முருகோனே

சகல வேத சாமுத் ரியங்கள்
     சமய மாறு லோகத் ரயங்கள்
          தரும நீதி சேர்தத் துவங்கள் ...... தவயோகம்

தவறி லாம லாளப் பிறந்த
     தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று
          தவிர ஆல வாயிற் சிறந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முகம் எ(ல்)லாம் நெய் பூசித் தயங்கு(ம்) நுதலின் மீதிலே
பொட்டு அணிந்து முருகு மாலை ஓதிக்கு அணிந்த மட
மாதர்
... முகம் முழுமையும் வாசனைத் தைலத்தைப் பூசியும், விளங்கும்
நெற்றியில் பொட்டு இட்டுக் கொண்டும், வாசனை உள்ள பூ மாலையை
கூந்தலில் அணிந்து கொண்டும் உள்ள அழகிய மாதர்களின்

முதிரும் ஆர பார தனங்கள் மிசையில் ஆவியாய் நெக்கு
அழிந்து முடிய மாலிலே பட்டு அலைந்து பொருள் தேடி
...
முற்றினதும் முத்து மாலை அணிந்தனவும் கனத்ததுமான மார்பகங்களில்
உயிராய் (உள்ளம்) நெகிழ்ந்து அழிந்து எப்போதும் காம மயக்கத்தால்
வசப்பட்டு நான் அலைந்து பொருள் தேடி,

செகம் எ(ல்)லாம் உலாவிக் கரந்து திருடனாகியே சற்று
உழன்று திமிரனாகி ஓடிப் பறந்து திரியாமல்
... உலகம் முழுதும்
உலவித் திரிந்தும், (பிறரிடமிருந்து) ஒளித்தும், திருட்டுத் தொழிலனாகி
சற்று அலைந்து திமிர்பிடித்து அங்கும் இங்கும் ஓடிப் பறந்து திரியாமல்,

தெளியு ஞானம் ஓதிக் கரைந்து சிவ புராண நூலில் பயின்று
செறியுமாறு தாளைப் பரிந்து தர வேணும்
... தெளிவைத் தரும்
ஞான நூல்களை ஓதி ஒலித்தும், சிவ புராண நூல்களில் பயின்றும், மனம்
நெருங்கிப் பொருந்துமாறு உன் திருவடிகளை அன்பு கூர்ந்து தந்தருள
வேண்டும்.

அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பு
ஒடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி
... அகரம்
முதலான (51)* அக்ஷரங்கள், மண், காற்று, ஆகாயம், நிறைந்த நீர்
இவைகளுடன் நெருப்பு ஆகிய ஐம்பூதங்கள் எல்லாம் கூடி ஓர் உருவமாக
அமைந்து (கூத்த பிரானாகிய நடராஜப் பெருமானாகி), முதற்
பொருளாக விளங்கி,

அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த
அமல நாதனார் முன் பயந்த முருகோனே
... தேவர்கள் தரிசிக்க
(தில்லைப்) பொன்னம்பலத்தில் பார்வதி தேவி பாட அங்கு ஆடி விளங்கிய
மலம் அற்றவராகிய சிவபெருமான் முன்பு பெற்றருளிய முருகனே,

சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள்
தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம் தவறு இ(ல்)லாமல்
ஆளப் பிறந்த தமிழ் செய்
... எல்லா வேதங்களிலும் கூறப்பட்ட
லட்சணங்கள், ஆறு சமயங்கள், மூன்று உலகங்கள், தரும நீதிகளுடன்
சேர்ந்த உண்மைகள், தவம், யோகம் (இவை எல்லாம் சிறந்து ஓங்கும்படி)
பிழையின்றி ஆட்சி செய்வதற்கே தோன்றிய தமிழ் வளர்த்த திருஞான
சம்பந்தனே,

மாறர் கூன் வெப்பொடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த
பெருமாளே.
... பாண்டியனுடைய சுரத்தோடு கூனும் அன்று நீங்க
மதுரையில் (திருநீறு தந்து) சிறந்த பெருமாளே.


* கோல் எழுத்துக் காலத்திலும், வட்டெழுத்துக் காலத்திலும் தமிழில்
16 உயிர்களும் 35 மெய்களும் சேர்ந்து 51 எழுத்துக்கள் இருந்தன. சதுர
எழுத்து காலத்தில்தான் தமிழுக்கு 12 உயிர்களும் 18 மெய்களும் சேர்ந்து
30 எழுத்துக்களும் - அவற்றுக்கு உரிய உயிர்மெய் எழுத்துக்களும்
இருப்பதாக அறிஞர்கள் வகுத்தார்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1357  pg 2.1358  pg 2.1359  pg 2.1360  pg 2.1361  pg 2.1362 
 WIKI_urai Song number: 966 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 962 - mugamelA nei (madhurai)

mukame lAney pUsith thayangu
     nuthalin meethi lEpot taNinthu
          muruku mAlai yOthik kaNintha ...... madamAthar

muthiru mAra pArath thanangaL
     misaiyi lAvi yAynek kazhinthu
          mudiya mAli lEpat talainthu ...... poruLthEdic

chekame lAmu lAvik karanthu
     thiruda nAki yEchat RuzhanRu
          thimira nAki yOdip paRanthu ...... thiriyAmal

theLiyu njAna mOthik karainthu
     sivapu rANa nUliR payinRu
          seRiyu mARu thALaip parinthu ...... tharavENum

akara mAthi yAma ksharanga
     Lavani kAlvi NArap podangi
          adaiya vEka rUpath thilonRi ...... muthalAki

amarar kANa vEyath thamanRil
     arivai pAda Adik kalantha
          amala nAtha nArmuR payantha ...... murukOnE

sakala vEtha sAmuth riyangaL
     samaya mARu lOkath rayangaL
          tharuma neethi sErthath thuvangaL ...... thavayOkam

thavaRi lAma lALap piRantha
     thamizhsey mARar kUnvep podanRu
          thavira Ala vAyiR chiRantha ...... perumALE.

......... Meaning .........

mukam e(l)lAm ney pUsith thayangu(m) nuthalin meethilE pottu aNinthu muruku mAlai Othikku aNintha mada mAthar: These pretty women apply a lot of perfume all over their face, place a round dot on their elegant forehead and adorn their hair with fragrant garland of flowers;

muthirum Ara pAra thanangaL misaiyil AviyAy nekku azhinthu mudiya mAlilE pattu alainthu poruL thEdi: in their fully-grown and heavy bosom, wearing a string of pearls, I have melted my soul and heart, being always obsessed with passionate delusion, and roaming about to earn money for them;

chekam e(l)lAm ulAvik karanthu thirudanAkiyE satRu uzhanRu thimiranAki Odip paRanthu thiriyAmal: running around all over this world, hiding myself (from others) and engaging in stealthy acts at times, I wander arrogantly hither and thither; preventing me from doing so,

theLiyu njAnam Othik karainthu siva purANa nUlil payinRu seRiyumARu thALaip parinthu thara vENum: kindly make me chant loudly the texts of Knowledge that will give clarity to my mind, making me learn the treatises of Lord SivA and grant me Your hallowed feet so that I could contemplate on them with focus, Oh Lord!

akaram AthiyAm aksharangaL avani kAl viN Ar appu odu angi adaiya Eka rUpaththil onRi muthalAki: The 51* letters of the alphabet beginning with 'a', the five elements, namely, the earth, the air, the sky, the filled-up water, along with the fire, have all merged into one form (that being the Dancing Lord NadarAjar), the Primordial One;

amarar kANavE aththa manRil arivai pAda Adik kalantha amala nAthanAr mun payantha murukOnE: He danced exquisitely before the celestials against the background music of DEvi PArvathi on the golden stage (in Chidhambaram); He is the unblemished Lord SivA; and He once delivered You to this world, Oh MurugA!

sakala vEtha sAmuthriyangaL samayam ARu lOka thrayangaL tharuma neethi sEr thaththuvangaL thava yOkam thavaRu i(l)lAmal ALap piRantha thamizh sey: All characteristics defined in the VEdAs, the six religious sectors, the three worlds, all truths accompanied by righteousness and justice, penance and YOgA were all meant to thrive and reign in this world because You were born, Oh Great ThirugnAna SambandhA, who nurtured the Tamil language!

mARar kUn veppodu anRu thavira AlavAyil siRantha perumALE.: You removed the hunch-back and remitted the fever of King PANdiyan the other day (by distributing the holy ash) in Madhurai, where You became distinguished, Oh Great One!


* In the ages of stroke-script and round-script Tamil language had 16 vowels and 35 consonants totalling 51 letters. Only when square-script came into vogue, Tamil language was confined to 12 vowels and 18 consonants - along with corresponding joint letters of vowel - consonants - according to linguistic researchers.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 962 mugamelA nei - madhurai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]