திருப்புகழ் 933 காந்தட் கரவளை  (திருப்பாண்டிக்கொடுமுடி)
Thiruppugazh 933 kAndhatkaravaLai  (thiruppANdikkodumudi)
Thiruppugazh - 933 kAndhatkaravaLai - thiruppANdikkodumudiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாந்தத் தனதன தாந்தத் தனதன
     தாந்தத் தனதன ...... தனதான

......... பாடல் .........

காந்தட் கரவளை சேந்துற் றிடமத
     காண்டத் தரிவைய ...... ருடனூசி

காந்தத் துறவென வீழ்ந்தப் படிகுறி
     காண்டற் கநுபவ ...... விதமேவிச்

சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில்
     சாய்ந்திட் டயில்விழி ...... குழைமீதே

தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரி
     தாங்கித் தழுவுத ...... லொழியேனோ

மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர்
     வாஞ்சைப் படியருள் ...... வயலூரா

வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை
     மான்சிற் றடிதொழு ...... மதிகாமி

பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய
     பாண்டிக் கொடுமுடி ...... யுடையாரும்

பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு
     பாண்சொற் பரவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

காந்தள் கர வளை சேந்து உற்றிட மத காண்டத்து
அரிவையருடன் ஊசி காந்தத்து உறவு என வீழ்ந்து
... காந்தள்
மலரைப் போன்ற, வளையல் அணிந்துள்ள, கைகள் சிவக்க,
மன்மதனுடைய வில்லுக்குத் தோதாகும் மாதர்களுடன் ஊசிக்கும்
காந்தத்துக்கும் உள்ள உறவைப் போல, அக் காம மயக்கத்தில் விழுந்து,

அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவிச் சாந்தைத்
தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு
... அவ்வாறே
பெண்குறியைக் காண்பதற்கு அனுபவ வழிகளை நாடிப் பொருந்தி,
நறுஞ்சாந்து தடவப்பட்ட கரிய மேகம் போன்ற கூந்தலின் மேல்
சாய்ந்து படுத்து,

அயில் விழி குழை மீதே தாண்டிப் பொர உடை தீண்டித் தன
கிரி தாங்கித் தழுவுதல் ஒழியேனோ
... வேல் போன்ற கண்கள்
(காதில் உள்ள) குண்டலங்களின் மேல் தாவிச் சென்று தாக்கும்படியாக,
ஆடையைத் தொட்டு மார்பகங்களாகிய மலையைப் பிடித்துத் தழுவும்
செயலை ஒழிக்க மாட்டேனோ?

மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப் படி
அருள் வயலூரா
... மனிதர்களுக்கும் தேவ அரசனாகிய இந்திரனுக்கும்
அவரவர்களுடைய விருப்பப்படி அருள் பாலிக்கும் வயலூரனே,

வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி
தொழும் அதிகாமி
... ஆகாயத்தைக் கிட்டிய பெரிய மூங்கில் காடு
உள்ள (வள்ளிமலைத்) தினைப்புனத்தின் மீது இருந்த மான் போன்ற
வள்ளியின் சிறிய பாதங்களைத் தொழுத காதல் மிக்கவனே,

பாந்தள் சடை முடி ஏந்திக் குலவிய பாண்டிக் கொடுமுடி
உடையாரும் பாங்கில் பர குருவாம் கற்பனையொடு பாண்
சொல் பரவிய பெருமாளே.
... பாம்பை தனது சடா முடியில் தாங்கி
விளங்குபவரும் பாண்டிக் கொடுமுடி* என்னும் தலத்தை உடையவரும்
ஆகிய சிவபெருமானுக்கு, உரிய முறையில் மேலான குருவான
சங்கற்பத்தோடு பண் போன்ற சொற்களைக் கொண்டு (பிரணவ
மந்திரத்தை) உபதேசித்தளித்த பெருமாளே.


* கொடுமுடி ஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1283  pg 2.1284  pg 2.1285  pg 2.1286 
 WIKI_urai Song number: 937 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru L. Vasanthakumar M.A.
திரு L. வசந்த குமார்

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 933 - kAndhat karavaLai (thiruppANdikkodumudi)

kAnthat karavaLai sEnthut Ridamatha
     kANdath tharivaiya ...... rudanUsi

kAnthath thuRavena veezhnthap padikuRi
     kANdaR kanupava ...... vithamEvic

chAnthaith thadaviya kUnthaR karumukil
     sAynthit tayilvizhi ...... kuzhaimeethE

thANdip poravudai theeNdith thanakiri
     thAngith thazhuvutha ...... lozhiyEnO

mAnthark kamararkaL vEnthaR kavaravar
     vAnjaip padiyaruL ...... vayalUrA

vAnkit tiyaperu mUngiR punamisai
     mAnsit Radithozhu ...... mathikAmi

pAnthat chadaimudi yEnthik kulaviya
     pANdik kodumudi ...... yudaiyArum

pAngiR parakuru vAngaR panaiyodu
     pANchoR paraviya ...... perumALE.

......... Meaning .........

kAnthaL kara vaLai sEnthu uRRida matha kANdaththu arivaiyarudan Usi kAnthaththu uRavu ena veezhnthu: Their bangled arms are like the daffodils (kAnthaL); their reddened hands are ideally suited for wielding (as flowery arrows) from the bow of Manmathan (God of Love); my relationship with those women is like that between the needle and the magnet; falling into the dizzy passionate pit,

appadi kuRi kANdaRku anupava vitham mEvic chAnthaith thadaviya kUnthal karu mukil sAynthittu: and similarly seeking and adopting ways and means of seeing their genital, I recline and doze off over their dense hair, smeared with fragrant pigment, that looks like the black cloud;

ayil vizhi kuzhai meethE thANdip pora udai theeNdith thana kiri thAngith thazhuvuthal ozhiyEnO: making their spear-like eyes leap up to, and attack, their swinging studs (on the ears), I have been fondling their attire and grabbing their mountain-like bosom to hug; will I never desist from such acts?

mAntharkku amararkaL vEnthaRku avaravar vAnjaip padi aruL vayalUrA: To all human beings and Indra, the Lord of the celestials, You dispense grace according to their desires, Oh Lord of VayalUr!

vAn kittiya peru mUngil punam misai mAn sitRadi thozhum athikAmi: The fields of millet (in VaLLimalai) enclosed a large forest of bamboos that shot right up to the sky; there lived this deer-like damsel, VaLLi, and You worshipped her petite feet out of overwhelming love, Oh Lord!

pAnthaL sadai mudi Enthik kulaviya pANdik kodumudi udaiyArum pAngil para kuruvAm kaRpanaiyodu pAN chol paraviya perumALE.: He holds the serpent on His matted hair; His abode is PANdik Kodumudi*; to that Lord SivA, with the avowed determination of an apt and esteemed master, You preached (PraNava ManthrA) in words that sounded like music, Oh Great One!


* Kodumudi is 23 miles Southeast of EerOde (Erode) towards KarUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 933 kAndhat karavaLai - thiruppANdikkodumudi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]