திருப்புகழ் 912 திரு உரூப நேராக  (வயலூர்)
Thiruppugazh 912 thiruurUbanErAga  (vayalUr)
Thiruppugazh - 912 thiruurUbanErAga - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

திருவு ரூப நேராக அழக தான மாமாய
     திமிர மோக மானார்கள் ...... கலைமூடுஞ்

சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி
     செருகு மால னாசார ...... வினையேனைக்

கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு
     கனவி லாள்சு வாமீநின் ...... மயில்வாழ்வுங்

கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத
     கழலு நீப வேல்வாகு ...... மறவேனே

சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி
     சயில நாரி பாகாதி ...... புதல்வோனே

சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை
     சகச மான சாரீசெ ...... யிளையோனே

மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான
     வரையில் வீசு தாள்மாயன் ...... மருகோனே

மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை
     வயலி மீது வாழ்தேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

திரு உரூப நேராக அழகதான மா மாய திமிர மோக
மானார்கள்
... லக்ஷ்மியினுடைய உருவத்துக்கு நிகரான அழகைக்
கொண்டவர்களும், மகா மாய, இருளான காம இச்சையை ஊட்டும்
மான் போன்ற விலைமாதர்களின்

கலை மூடும் சிகரி ஊடு தே மாலை அடவி ஊடு போய் ஆவி
செருகும் மால் அனாசார வினையேனை
... ஆடை மறைக்கும்
மார்பகங்களிலும், இனிய பூ மாலை அணிந்துள்ள காடு போன்ற
கூந்தலிலும் உயிரே போய்ச் சிக்கிக் கொள்ளும் காம மயக்கம் உள்ள,
ஒழுக்கம் இல்லாத தொழிலனாகிய என்னை,

கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள்
சுவாமீ
... பிறப்பில் மீண்டும் விழாத வண்ணம், உனது திருப்புகழை
நான் ஓதி, உனக்கு அடிமை பூணும் வகை வரும்படி, எனது கனவில்
வந்து ஆண்டருளிய சுவாமியே,

நின் மயில் வாழ்வும் கருணை வாரி கூர் ஏக முகமும் வீர(ம்)
மாறாத கழலு(ம்) நீப வேல் வாகு(ம்) மறவேனே
... மயில் மேல்
வீற்றிருக்கும் உனது வாழ்வையும், கருணைக் கடல் போல மிக்க ஒளி
வீசும் உனது திருமுகத்தையும்*, வீரம் என்றும் மாறுதல் இல்லாத
திருவடியையும், கடம்பையும், வேல் ஏந்திய திருப்புயத்தையும் நான்
என்றும் மறவேன்.

சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாக ஆதி
புதல்வோனே
... எல்லாத் தேவர்களுக்கும் தேவனாக விளங்குபவனும்,
ஆதிப்பிரானும், நமசிவாய என்னும் திருநாமத்தை உடையவனும்,
(இமய) மலைப் பெண்ணாகிய பார்வதியின் பாகனும், முதல்வனுமாகிய
சிவபெருமானின் மகனே,

சத மகீ வல் போர் மேவு குலிச பாணி மால் யானை சகசமான
சாரீ செய் இளையோனே
... நூறு யாகங்களை முடித்தவனும், வலிய
போரில் ஈடுபட்டவனும், வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவனுமாகிய
இந்திரனுடைய பெரிய ஐராவதம் என்னும் யானை மீது வழக்கமான
உலாவுதலைச் செய்யும் இளைஞனே,

மருவு லோகம் ஈரேழும் அளவிட ஒ(ண்)ணாவான வரையில்
வீசு தாள் மாயன் மருகோனே
... பொருந்திய பதினான்கு
உலகங்களிலும் உள்ளவர்கள் அளவிட முடியாத எல்லை அளவுக்கு,
தனது திருவடியை நீட்டிய திருமாலின் மருகனே,

மநு நியாய சோ (ழ) நாடு தலைமை யாகவே மேலை வயலி
மீது வாழ் தேவர் பெருமாளே.
... மனு நீதிச் சோழன் நீதியோடு
ஆண்ட சோழ நாடு சிறந்த நிலையை அடையும் பொருட்டு, மேலை
வயலூர்** என்னும் தலத்தில் வந்து வாழ்பவனும், தேவர்களின்
தலைவன் ஆனவனுமான, பெருமாளே.


* இப்பாடல் அருணகிரிநாதருக்கு முருகவேள் ஒரு முகத்துடன் வயலூரில்
தரிசனம் கொடுத்ததைக் குறிக்கும்.


** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.


வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1227  pg 2.1228  pg 2.1229  pg 2.1230 
 WIKI_urai Song number: 916 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 912 - thiru urUba nErAga (vayalUr)

thiruvu rUpa nErAka azhaka thAna mAmAya
     thimira mOka mAnArkaL ...... kalaimUdunj

sikari yUdu thEmAlai yadavi yUdu pOyAvi
     seruku mAla nAsAra ...... vinaiyEnaik

karuvi zhAthu seerOthi yadimai pUNa lAmARu
     kanavi lALsu vAmeenin ...... mayilvAzhvung

karuNai vAri kUrEka mukamum veera mARAtha
     kazhalu neepa vElvAku ...... maRavEnE

saruva thEva thEvAthi namasi vAya nAmAthi
     sayila nAri pAkAthi ...... puthalvOnE

sathama keeval pOrmEvu kulisa pANi mAlyAnai
     sakasa mAna sAreese ...... yiLaiyOnE

maruvu lOka meerEzhu maLavi dAvo NAvAna
     varaiyil veesu thALmAyan ...... marukOnE

manuni yAya sONAdu thalaimai yAka vEmElai
     vayali meethu vAzhthEvar ...... perumALE.

......... Meaning .........

thiru urUpa nErAka azhakathAna mA mAya thimira mOka mAnArkaL: These deer-like whores, whose beauty was comparable to that of Goddess Lakshmi, were very provocative, stimulating dark and delusory passion;

kalai mUdum sikari Udu thE mAlai adavi Udu pOy Avi serukum mAl anAsAra vinaiyEnai: I pursued immoral activities in a daze of fervour, with my life tangled in their bosom covered by blouse and dark forest-like hair adorned with nice garlands;

karu vizhAthu seer Othi adimai pUNalAmARu kanavil AL suvAmee: Oh Lord, You came in my dream and took charge of me so that I could sing Your glory as Your devoted slave, avoiding rebirth!

nin mayil vAzhvum karuNai vAri kUr Eka mukamum veera(m) mARAtha kazhalu(m) neepa vEl vAku(m) maRavEnE: Your majestic demeanor, mounted on the peacock, Your singular face* dazzling like a sea of compassion, Your hallowed feet with unswerving valour, the garland of kadappa flowers and the spear resting on Your shoulders will never be forgotten by me!

saruva thEva thEvAthi namasivAya nAmAthi sayila nAri pAka Athi puthalvOnE: He is the Lord of all the celestials; He is the Primordial One; He has the holy five-lettered name "NamasivAya"; in Him is concorporate the Goddess PArvathi, daughter of Mountain-King HimavAn; You are the son of that Foremost Lord SivA!

satha makee val pOr mEvu kulisa pANi mAl yAnai sakasamAna sAree sey iLaiyOnE: He has completed a hundred yajnAs (sacrifices); He has participated in many major battles; He holds the weapon vajra in His hand; You mount His huge elephant, AirAvadham, and usually stroll about, Oh Young Lord!

maruvu lOkam eerEzhum aLavida o(N)NAvAna varaiyil veesu thAL mAyan marukOnE: He stretched His leg to such a distance that no one in the fourteen worlds could discern the frontier; You are the nephew of that VishNu, Oh Lord!

manu niyAya sO(zha) nAdu thalaimai yAkavE mElai vayali meethu vAzh thEvar perumALE.: This ChOzhA kingdom was ruled by the most just king, Manu Neethi ChOzhan; for the upliftment of this kingdom, You came to MElai VayalUr** and chose it as Your abode; You are the Lord of the celestials, Oh Great One!


* This song refers to the vision granted by Lord Murugan to AruNagirinAthar with a singular face in VayalUr.


** VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily.


** VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 912 thiru urUba nErAga - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]