திருப்புகழ் 898 ஈயெறும்பு நரி  (வாலிகொண்டபுரம்)
Thiruppugazh 898 eeyeRumbunari  (vAlikoNdapuram)
Thiruppugazh - 898 eeyeRumbunari - vAlikoNdapuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தந்ததன தான தந்ததன
     தான தந்ததன தான தந்ததன
          தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான

......... பாடல் .........

ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
     காக முண்பவுட லேசு மந்துஇது
          ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத ...... வும்பல்போலே

ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
     மேவி நம்பியிது போது மென்கசில
          ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச ...... னங்கள்பேசிச்

சீத தொங்கலழ காவ ணிந்துமணம்
     வீச மங்கையர்க ளாட வெண்கவரி
          சீற கொம்புகுழ லூத தண்டிகையி ...... லந்தமாகச்

சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
     மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ
          சேவை கண்டுனது பாத தொண்டனென ...... அன்புதாராய்

சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி
     சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
          சூரி யன்புரவி தேர்ந டந்துநடு ...... பங்கினோடச்

சோதி யந்தபிர மாபு ரந்தரனு
     மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது
          சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத ...... லன்புகூர

வாது கொண்டவுணர் மாள செங்கையயி
     லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்
          மாதர் சிந்தைகளி கூர நின்றுநட ...... னங்கொள்வோனே

வாச கும்பதன மானை வந்துதினை
     காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய
          வாலி கொண்டபுர மேய மர்ந்துவளர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

ஈயெறும்பு நரி நாய்கணங் கழுகு ... ஈ, எறும்பு, நரி, நாய், பேய்,
கழுகு,

காகம் உண்ப வுடலே சுமந்து ... காகம் இவைகள் கடைசியில்
உண்ணப்போகும் இந்த உடலை நான் சுமந்து,

இது ஏல்வதென்று மதமேமொழிந்து மத உம்பல்போலே ...
இது தக்கது என நினைத்து ஆணவ மொழிகளையே பேசி, மதயானை
போலே

ஏதும் என்றனிட கோல் எனும்பரிவு மேவி நம்பி ... எல்லாமே
என்னுடைய ஆட்சியில் அடங்கியவை என்னும்படியான சுகநிலையை
அடைந்து, இது நிலைத்திருக்கும் என நம்பி,

இது போது மென்கசிலர் ... சிலர் இந்த ஆடம்பரங்கள் இவனுக்குப்
போதுமோ என்று கூறும்படியாக,

ஏய்தனங்கள்தனி வாகு சிந்தை வசனங்கள்பேசி ... பொருட்
செல்வங்களால், ஒப்பற்ற கர்வம் மிக்க எண்ணங்களுடன் பேச்சுக்கள்
பேசி,

சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச ... குளிர்ந்த
மாலைகளை அழகாக அணிந்துகொண்டு அவற்றின் நறுமணம் வீச,

மங்கையர்களாட ... மங்கையர்கள் நடனமாட,

வெண்கவரி சீற கொம்புகுழலூத ... வெண்சாமரங்கள் வீச,
ஊதுகொம்பு, புல்லாங்குழல் முதலியவை ஊதிவர,

தண்டிகையில் அந்தமாக ... பல்லக்கில் அழகாக

சேர்கனம்பெரிய வாழ்வு கொண்டுழலும் ... நான் வீற்றிருக்கும்
பகட்டான பெரிய வாழ்வைத் தேடிக்கொண்டு திரியும்

ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி ... ஆசையானது வெந்தழிய,
உன்மீது ஆசை மிகுந்து,

சிவ சேவை கண்டு ... மங்களகரமான உனது தரிசனத்தைக் கண்டு
அனுபவித்து,

உனது பாத தொண்டனென அன்புதாராய் ... உன் திருவடித்
தொண்டன் என்னும்படியான அன்பை எனக்குத் தருவாயாக.

சூதிருந்த விடர் மேயி ருண்டகிரி ... வஞ்சத் தொழில்களுக்கு
இடமான மலைப்பிளவுகளைக் கொண்டு மிக இருண்ட மலையான
கிரெளஞ்சகிரியும்,

சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ ... அசுர சூரர்களும் வெந்து
பொடியாகி அழிந்து விழ,

சூரியன்புரவி தேர்நடந்துநடு பங்கினோட ... சூரியனது
குதிரைகள் பூட்டிய தேர் (சூரனது ஆட்சிக்கு முன்பு போல) சென்று
நேர்வழியில் வானின் நடுப்பாகத்தில் ஓட*,

சோதி யந்தபிரமா புரந்தரனும் ... ஒளி பொருந்திய அந்தப் பிரமனும்,
இந்திரனும்,

ஆதி யந்தமுதல் தேவரும் தொழுது சூழ ... முதல் தேவரிலிருந்து
கடைசித் தேவர்வரை எல்லாத் தேவர்களும் வணங்கிச் சூழ்ந்து நிற்க,

மன்றில்நட மாடும் எந்தைமுதல் அன்புகூர ... கனகசபையில்
நடனமாடும் எந்தை, முழுமுதல் கடவுள், சிவபிரான் மகிழ்ந்து
அன்புகூர்ந்து நிற்க,

வாது கொண்ட அவுணர் மாள ... போருக்கு என்று வாதுசெய்து
வந்த அசுரர்கள் மாண்டு அழிய,

செங்கையயில் ஏவி ... உனது செவ்விய கையில் உள்ள
வேலாயுதத்தைச் செலுத்தி,

அண்டர்குடி யேற ... தேவர்கள் தம்நாட்டில் குடியேற,

விஞ்சையர்கள் மாதர் சிந்தைகளி கூர ... வித்தியாதரர்களின்
மாதர்கள் மனம் மிக மகிழ,

நின்றுநடனங்கொள்வோனே ... போர்க்களத்திலே நின்று நடனம்
புரிந்தவனே,

வாச கும்பதன மானை வந்து ... மணம் வீசும் குடம் போன்ற
மார்புடைய, மான் சாயல் உள்ள, வள்ளியிடம் வந்து,

தினை காவல் கொண்டமுருகா ... தினைப்புனத்தைக் காவல்
காக்கும் தொழிலை மேற்கொண்ட முருகனே,

எணும்பெரிய வாலி கொண்டபுரமே யமர்ந்துவளர்
தம்பிரானே.
... மதிக்கத்தக்க பெருமைவாய்ந்த வாலிகொண்டபுரம்**
என்ற தலத்தில் வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே.


* சூரனது ஆட்சியில் சூரியன் வானின் நடுவில் செல்லத் தடை இருந்தது.
சூர சம்ஹாரம் ஆனபிறகே சூரியன் நடுவானில் செல்ல முடிந்தது
- கந்த புராணம்.


** வாலிகொண்டபுரம் திருச்சிக்கு வடக்கே 40 மைலில் பெரம்பலூருக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1189  pg 2.1190  pg 2.1191  pg 2.1192  pg 2.1193  pg 2.1194 
 WIKI_urai Song number: 902 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 898 - eeyeRumbu (vAlikoNdapuram)

ee eRumbu nari nAy kaNang kazhugu
     kAga muNba udalE sumandhu idhu
          Elva dhendru madhamE mozhindhu madha ...... umbal pOlE

Edhu mendranida kOlenum parivu
     mEvi nambi idhu pOdhu menga sila
          rEydha nangaL thani vAgu chinthai vacha ...... nangaL pEsi

seetha thongal azhagA aNindhu maNam
     veesa mangaiyargaL Ada veNkavari
          seeRa kombu kuzhalUdha thaNdigaiyil ...... anthamAga

sEr ganam periya vAzhvu koNduzhalum
     Asai vendhida vunAsai minji siva
          sEvai kaNdunadhu pAdha thoNdan ena ...... anbuthArAy

sUdhi rundhavidar mEyi ruNdagiri
     sUrar vendhu podiyAgi mangivizha
          sUriyan puravi thEr nadandhu nadu ...... panginOda

jOthi andha biramA purandharanum
     Adhi antha mudhal dhEvarun thozhudhu
          sUzha mandril nata mAdum endhai mudhal ...... anbukUra

vAdhu koNdavuNar mALa senkai ayi
     lEvi aNdarkudi ERa vinjaiyargaL
          mAdhar chinthai kaLi kUra nindru natanang ...... koLvOnE

vAsa kumba thana mAnai vandhu thinai
     kAval koNda murugA eNum periya
          vAli koNdapura mEya marndhu vaLar ...... thambirAnE.

......... Meaning .........

ee eRumbu nari nAy kaNang kazhugu kAgam: Flies, ants, foxes, dogs, devils, eagles and crows

uNba udalE sumandhu idhu: will ultimately prey on this body that I am carrying.

Elva dhendru madhamE mozhindhu madha umbal pOlE: Thinking that this body suits me well, I keep saying arrogant words and move about like a wild elephant.

Edhu mendranida kOlenum parivu mEvi nambi: Believing that everything is under my firm control, I live merrily in the hope that this life would last for ever.

idhu pOdhu menga silar: A few people wonder if I am content with this luxurious life.

Eydha nangaL thani vAgu chinthai vacha nangaL pEsi: Abundant wealth has led me to unique thoughts and words of conceit.

seetha thongal azhagA aNindhu maNam veesa: Wearing cool and fragrant garlands elegantly,

mangaiyargaL Ada: with girls dancing around me,

veNkavari seeRa kombu kuzhalUdha: while large white fans (chAmaram) drive a current of cool air and trumpets and flutes blow nearby,

thaNdigaiyil anthamAga sEr ganam periya vAzhvu koNdu uzhalum: I imagine myself seated smartly in a palanquin; hankering after that great luxurious life, I roam around.

Asai vendhida vunAsai minji siva sEvai kaNdu: That desire must be burnt. Instead, love towards You must intensify, and I must have Your blissful vision!

unadhu pAdha thoNdan ena anbuthArAy: Please bestow me with Your love so that I am known as the servant of Your hallowed feet!

sUdhi rundhavidar mEyi ruNdagiri: The dark mount Krouncha, with its peaks and valleys notorious for several plotting schemes, and

sUrar vendhu podiyAgi mangivizha: the demons were all destroyed, being crushed to their death;

sUriyan puravi thEr nadandhu nadu panginOda: the Sun's chariot, fastened with horses, drove along its orbit in the mid-sky (unlike during the rule of SUran)*;

jOthi andha biramA purandharanum: the bright Lord BrahmA, IndrA,

Adhi antha mudhal dhEvarun thozhudhu sUzha: and all the celestials from the first DEvA to the last encircled in worship;

mandril nata mAdum endhai mudhal anbukUra: our Father, the Primordial Lord SivA, who dances in the golden stage, stood there delighted with love;

vAdhu koNdavuNar mALa: and the hostile demons who came to the war died;

senkai ayilEvi: when You wielded the Spear from Your reddish hand!

aNdarkudi ERa: The celestials were all able to go back to their land;

vinjaiyargaL mAdhar chinthai kaLi kUra: and the women folk of the VidhyAdharAs (the teaching faculty of the Celestials) were all rejoicing when

nindru natanang koLvOnE: You stood at the battlefield and danced!

vAsa kumba thana mAnai vandhu: You approached VaLLi, the deer-like damsel with fragrant pot-like bosoms, and

thinai kAval koNda murugA: took over from her the duty of guarding the millet field, Oh MurugA!

eNum periya vAli koNdapura mEya marndhu vaLar thambirAnE.: You are seated auspiciously in VAlikoNdapuram**, which is considered to be a great place, Oh Great One!


* During SUran's rule, the Sun was never allowed to orbit along the mid-sky.
It was only after SUran's demise that the Sun was able to resume its normal orbit - Kandha PurANam.


** VAlikoNdapuram is about 40 miles north of Tiruchi, near PerambalUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 898 eeyeRumbu nari - vAlikoNdapuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]