திருப்புகழ் 870 கரியகுழல் சரிய  (சோமீச்சுரம்)
Thiruppugazh 870 kariyakuzhalsariya  (sOmeechchuram)
Thiruppugazh - 870 kariyakuzhalsariya - sOmeechchuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனதன தனனதன தானான தானதன
     தனனதன தனனதன தானான தானதன
          தனனதன தனனதன தானான தானதன ...... தனதான

......... பாடல் .........

கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு
     களபமுலை புளகமெழ நேரான வேல்விழிகள்
          கயல்பொருது செயலதென நீள்பூச லாடநல ...... கனிவாயின்

கமழ்குமுத அதரவிதழ் தேனூறல் பாயமிகு
     கடலமுத முதவியிரு தோள்மாலை தாழவளை
          கலகலென மொழிபதற மாமோக காதலது ...... கரைகாணா

தெரியணுகு மெழுகுபத மாய்மேவி மேவியிணை
     யிருவருட லொருவரென நாணாது பாயல்மிசை
          யிளமகளிர் கலவிதனி லேமூழ்கி யாழுகினு ...... மிமையாதே

இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
     இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும்
          இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை ...... யருள்வாயே

உரியதவ நெறியில்நம நாராய ணாயவென
     ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
          னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு ...... னுறுதூணில்

உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்
     உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
          உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு ...... முயர்வாக

வரியளிக ளிசைமுரல வாகான தோகையிள
     மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ
          வளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிட ...... மதில்சூழும்

மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக
     மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில்
          மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட ... கரு நிறம் உள்ள கூந்தல்
சரிந்து விழ, முகம் வியர்வை கொள்ள,

வாசம் உறு களப முலை புளகம் எழ ... நறு மணம் உள்ள கலவைச்
சாந்து அணிந்த மார்புகள் புளகாங்கிதம் கொண்டு விம்மி எழ,

நேரான வேல் விழிகள் கயல் பொருது செயல் அது என நீள்
பூசல் ஆட
... செவ்வையான வேலை ஒத்த கண்களாகிய கயல் மீன்கள்
(காதுகளோடு) சண்டையிடும் செயலை ஒக்க பெரிய போர் செய்ய,

நல கனி வாயின் கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய ...
நறு மணம் உள்ள குமுத மலரை ஒத்த அதரம் எனப்படும் இதழினின்றும்
தேனைப் போன்ற ஊறல் பாய,

மிகு கடல் அமுதம் உதவி இரு தோள் மாலை தாழ ... அது
நிரம்பிக் கடல் போன்ற அமுதத்தை உதவ, இரண்டு தோள்களிலும்
மாலை தாழ்ந்து புரள,

வளை கல கல என மொழி பதற ... கையில் உள்ள வளையல்கள்
கல கல என்று ஒலிக்க, வாய்ப் பேச்சு பதற்றமுடன் வெளிவர,

மா மோக காதல் அது கரை காணாது ... மிக்க காம ஆசை கரை
கடந்து பெருகி,

எரி அணுகு மெழுகு பதமாய் மேவி மேவி இணை இருவர்
உடல் ஒருவர் என
... தீயில் பட்ட மெழுகின் நிலையை அடைந்து
இணையாக ஒன்றுபட்டு, இருவர் உடலும் ஒருவர் உடல் போல்
இணைந்து,

நாணாது பாயல் மிசை இளமகளிர் கலவிதனிலே மூழ்கி
ஆழுகினும்
... கூச்சமின்றி படுக்கையில் இளம் பெண்களுடன்
புணர்ச்சி இன்பத்தில் நான் மூழ்கி ஆழ்ந்து இருந்தாலும்,

இமையாதே இரவின் இடை துயில் உகினும் ... கண் இமை
கொட்டுதல் இன்றி இரவில் தூங்கினாலும்,

யாரோடு பேசுகினும் ... யாரோடு பேசினாலும்,

இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும் ...
இளமையும் அழகும் பூண்டுள்ள உனது பன்னிரண்டு தோள்
வரிசையையும்,

இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை
அருள்வாயே
... இரண்டு திருவடிகளையும், ஆறு முகங்களையும் நான்
ஓதும்படியான ஞானத்தைத் தந்து அருள்வாயாக.

உரிய தவ நெறியில் நம நாராயணாய என ... சரியான தவ
நெறியிலிருந்து, நமோ நாராயணாய என்று

ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் ... ஒப்பற்ற
குழந்தையாகிய (பிரகலாதன்) சொன்னதும், எண்ணமுடியாத
கோபத்துடன்,

உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் ...
உன்னுடைய கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு
முடியும் முன்னே,

உறு தூணில் உரமுடைய அரி வடிவதாய் ... அங்கிருந்த தூணில்
வலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து,

மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார்பீறி ...
இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து, நகங்களைப் புதைத்து
மார்பைக் கிழித்துப் பிளந்து,

வாகை புனை உவண பதி நெடியவனும் ... வெற்றிக் கொடி
ஏற்றினவரும், கருடனுக்குத் தலைவருமான நெடிய திருமாலும்,

வேதாவும் நான் மறையும் உயர்வாக ... பிரமனும், நான்கு
வேதங்களும் மேன்மை பெறும்படியாக,

வரி அளிகள் இசை முரல ... ரேகைகள் உள்ள வண்டுகள் இசை
எழுப்ப,

வாகு ஆன தோகை இள மயில் இடையில் நடனம் இட ...
அழகுள்ள தோகையை உடைய இள மயில் நடுவில் நடனம் செய்ய,

ஆகாசம் ஊடுருவ வளர் கமுகின் விரி குலைகள் பூண்
ஆரமாகியிட
... ஆகாயம் வரை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு
வளர்ந்துள்ள கமுக மரங்களின் விரிந்த குலைகள் பூணுதற்குரிய
மாலைபோல ஆபரணமாக விளங்க,

மதில் சூழும் மருத அரசர் படை விடுதி வீடாக ... மதில்கள்
சூழ்ந்ததும், மருத நிலத்து மன்னர்கள் பாசறையிடத்துக்குத் தக்க
தலமாகவும்* அமைந்த (சோமீச்சுரம் என்னும்)** பதியில்,

நாடி மிக மழம் விடையின் மிசையி(ல்) வரு(ம்) சோமீசர்
கோயில் தனில்
... மிகவும் விரும்பி இளமை வாய்ந்த ரிஷபத்தின் மேல்
வருகின்ற சோமீசர் என்ற நாமம் படைத்த சிவபிரானின் கோயிலில்

மகிழ்வு பெற உறை முருகனே ... மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும்
முருகனே,

பேணு வானவர்கள் பெருமாளே. ... விரும்பி நிற்கும் தேவர்கள்
பெருமாளே.


* இடைக்காலத்தில் கோயில்கள் மன்னர்களின் படைவீடாகப் பயன்பட்டன.


** சோமீச்சுரம் கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் ஒன்று.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1113  pg 2.1114  pg 2.1115  pg 2.1116 
 WIKI_urai Song number: 874 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 870 - kariyakuzhal sariya (sOmeechchuram)

kariya kuzhal sariya mukam vErvAda vAsam uRu
     kaLaba mulai puLagamezha nErAna vElvizhigaL
          kayal porudhu seyaladhena neeL pUsalAda nala ...... kani vAyin

kamazh kumudha adhara idhazh thEnURal pAya migu
     kadal amudha mudhavi iru thOL mAlai thAzha vaLai
          kalakalena mozhi padhara mAmOha kAdhaladhu ...... karai kANA

dheriyaNugu mezhugupadha mAy mEvi mEviyiNai
     iruvarudal oruvarena nANAdhu pAyal misai
          iLamagaLir kalavi thanilE mUzhgi yAzhuginum ...... imaiyAdhE

iravin idai thuyiluginum yArOdu pEsuginum
     iLamaiyumun azhagu punai eerARu thOL niraiyum
          irupadhamum aRumugamum yAn Odha nyAna madhai ...... aruLvAyE

uriya thava neRiyil nama nArAyaNAya ena
     oru madhalai mozhi aLavil OrAdha kObamudan
          unadhiRaivan edhanil uLan OdhAyadA enu munu ...... Ru thUNil

uram udaiya ari vadivadhAy mOdhi veezha viral
     ugir pudhaiya iraNiyanai mAr peeRi vAgai punai
          uvaNapathi nediyavanum vEdhAvum nAn maRaiyum ...... uyarvAga

variyaLigaL isai murala vAgAna thOgai iLa
     mayil idaiyil natanamida AkAsam Uduruva
          vaLar kamugin virikulaigaL pUNAra mAgi ida ...... madhil sUzhum

marudharasar padaividudhi veedAga nAdimiga
     mazhavidaiyin misaiyivaru sOmeesar kOyil thanil
          magizhvu peRa uRai muruganE pENu vAnavargaL ...... perumALE.

......... Meaning .........

kariya kuzhal sariya mukam vErvAda: The dark hair became dishevelled and fell loosely; drops of perspiration formed in the face;

vAsam uRu kaLaba mulai puLagamezha: the bosom coated with fragrant sandalwood paste swelled in ecstasy;

nErAna vElvizhigaL kayal porudhu seyaladhena neeL pUsalAda: the spear-like straight eyes, looking like the kayal fish, extended up to the ears as if to instigate a war with them;

nala kani vAyin kamazh kumudha adhara idhazh thEnURal pAya: from the lips, resembling the fragrant lilies, honey-like sweet spittle seeped;

migu kadal amudha mudhavi iru thOL mAlai thAzha: when that filled up, it tasted like a sea of nectar; on both shoulders a garland tossed about drooping;

vaLai kalakalena mozhi padhara: the bangles made lilting sound; words came out falteringly;

mAmOha kAdhaladhu karai kANAdh(u): the deluge of extreme passion knew no bounds;

eriyaNugu mezhugupadha mAy mEvi mEviyiNai iruvarudal oruvarena: like the wax falling into the fire, the bodies joined as if the two bodies had become one;

nANAdhu pAyal misai iLamagaLir kalavi thanilE mUzhgi yAzhuginum: although I reclined in bed shamelessly enjoying carnal pleasure with many a young girl,

imaiyAdhE iravin idai thuyiluginum yArOdu pEsuginum: although I slept throughout the night without even a wink of my eyelashes, although I kept talking to someone or other,

iLamaiyumun azhagu punai eerARu thOL niraiyum: Your twelve youthful and beautiful shoulders in a row,

irupadhamum aRumugamum yAn Odha nyAna madhai aruLvAyE: Your hallowed feet and Your six holy faces should always be extolled by me; kindly bless me with that True Knowledge!

uriya thava neRiyil nama nArAyaNAya ena: He followed the righteous path of penance and praised the name of the Lord as "Om NamO NArAyaNAya";

oru madhalai mozhi aLavil OrAdha kObamudan: when that unique child (PrahlAdhan) called out the Lord's name, he (HiraNyan) became incensed with anger and

unadhiRaivan edhanil uLan OdhAyadA enu mun: admonished him demanding to show where his God was hiding. No sooner than he asked,

uRu thUNil uram udaiya ari vadivadhAy: He appeared assuming the form of a strong lion from the nearby pillar,

mOdhi veezha viral ugir pudhaiya iraNiyanai mAr peeRi: knocked HiraNyan down, plunging His sharp nails into his chest and tore it apart;

vAgai punai uvaNapathi nediyavanum: He conquered him, raising His flag of victory; He is the Master of Garuda; and He is the tall Lord, VishNu;

vEdhAvum nAn maRaiyum uyarvAga: along with Him, BrahmA and the four VEdAs were exalted;

variyaLigaL isai murala vAgAna thOgai iLa mayil idaiyil natanamida: the striped beetles made a humming sound musically; the pretty and young peacock with a stylish tail came in the middle and danced;

AkAsam Uduruva vaLar kamugin virikulaigaL pUNAra mAgi ida: the large bunches of betelnuts grown in tall trees piercing the sky looked like jewellery worth wearing;

madhil sUzhum marudharasar padaividudhi veedAga: surrounded by fortresses, this temple town (SOmeeswaram)* was large enough for the kings of the valley to set up their armouries**;

nAdimiga mazhavidaiyin misaiyivaru sOmeesar kOyil thanil: to this temple, Lord SivA, assuming the name of SOmeesar, comes with relish, mounted on His young vehicle, Nandi;

magizhvu peRa uRai muruganE: You are also delighted to have Your abode there, Oh MurugA!

pENu vAnavargaL perumALE.: You are the Lord of all those celestials who seek You, Oh Great One!


* SOmeechchuram is a SivA Temple in the suburb of KumbakONam.


** In the medieval times, the kings used the temples as armouries.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 870 kariyakuzhal sariya - sOmeechchuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]