திருப்புகழ் 835 சந்தனந்திமிர்ந்து  (எண்கண்)
Thiruppugazh 835 sandhanandhimirndhu  (eNkaN)
Thiruppugazh - 835 sandhanandhimirndhu - eNkaNSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த
     தந்த தந்த தந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
     சண்ப கஞ்செ றிந்தி லங்கு ...... திரடோளுந்

தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
     சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ...... மயிலேறித்

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
     சென்ற சைந்து கந்து வந்து ...... க்ருபையோடே

சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
     செம்ப தம்ப ணிந்தி ரென்று ...... மொழிவாயே

அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
     அங்க முங்கு லைந்த ரங்கொள் ...... பொடியாக

அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
     அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே

இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
     டும்ப ரன்ற னன்பில் வந்த ...... குமரேசா

இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
     எண்க ணங்க மர்ந்தி ருந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சந்த னந்தி மிர்ந்த ணைந்து ... சந்தனத்தை நிரம்பப் பூசிக் கலந்து,

குங்குமங் கடம்பு இலங்கு சண்பகம் ... குங்குமமும், கடப்பம்பூவும்,
விளங்கும் சண்பக மலரும்,

செறிந்திலங்கு திரள் தோளும் ... இவையாவும் நெருங்கி மிளிரும்
திரண்ட புயங்களும் துலங்க,

தண்டையஞ் சிலம்பு அலம்ப ... தண்டையும், அழகிய சிலம்பும் ஒலி
செய்ய,

வெண்டையம் சலன்சல் என்று ... வீரக் காலணி சலன்சல் என்று
ஒலிக்க

சஞ்சு இதஞ் சதங்கை கொஞ்ச ... உருவம் இனிதாக அமைந்த
கிண்கிணியானது கொஞ்சுவதுபோல ஒலிக்க,

மயிலேறி ... மயில் வாகனத்தில் ஏறி

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்தனந்தனந்தன ... (அதே ஓசை)

என்று சென்றசைந்து உகந்து வந்து ... என்ற தாளத்தில் ஆடி
அசைந்து ஆனந்தத்துடன் வந்து,

க்ருபையோடே சிந்தை அம் குலம் புகுந்து ... அருள் கூர்ந்து என்
மனக் கோயிலுக்குள் புகுந்து,

சந்ததம் புகழ்ந்து ணர்ந்து செம்ப தம் ... எப்போதும் புகழ்ந்து
அறிந்து செவ்விய பதங்களை

பணிந்திரு என்று மொழிவாயே ... பணிந்து இருப்பாய் என்று
என்னிடம் அறிவுரை கூறுவாயாக.

அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்தழிந்து ... அந்தப் புகழ்
பெற்ற குரங்காம் அனுமனைக் கொண்டு இலங்கை எரியுண்டு அழியவும்,

இடும்ப கண்டன் அங்க முங்கு லைந்து ... கொடுஞ் செயலையே
கொண்ட ராவணன் தனது உடலும் அழிபட்டு

அரங்கொள் பொடியாக ... ரம்பத்தால் ராவினது போல
பொடிப்பொடியாகத் தூளாகவும்,

அம்ப கும்பனுங் கலங்க ... அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட
கும்பகர்ணனும் உள்ளம் கலங்குமாறு

வெஞ்சினம்புரிந்து நின்று ... மிக்க கோபத்துடன் போர்க்களத்தில்
நின்று

அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே ... அம்புகளை
ஏவி வென்ற மேகவர்ணன் ராமனின் மருகனே,

இந்துவுங் கரந்தை தும்பை கொன்றையும் சலம்
புனைந்திடும்
... பிறையும், திருநீற்றுப் பச்சை, தும்பைப்பூ, கொன்றை,
கங்கை இவற்றை அணியும்

பரன்றன் அன்பில் வந்த குமரேசா ... சிவபெருமான் தேவர்கள்
பால்வைத்த அன்பினால் தோன்றிய குமரேசனே,

இந்தி ரன்பதம்பெற ... தேவேந்திரன் தன் பதவியை மீண்டும்
பெறும்படியாக,

அண்டர் தம்பயங் கடிந்த பின்பு ... தேவர்களுடைய பயத்தைத் தீர்த்த
பின்னர்

எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே. ... எண்கண்* என்ற
தலத்தில் வந்து வீற்றிருந்த பெருமாளே.


* எண்கண் தலம் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் செல்லும் ரயில் பாதையில்
திருமதிக்குன்றம் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1019  pg 2.1020  pg 2.1021  pg 2.1022 
 WIKI_urai Song number: 839 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 835 - sandhanandhimirndhu (eNkaN)

santha nanthi mirntha Nainthu kungku mangka dampi langku
     saNpa kanje Rinthi langku ...... thiradOLum

thaNdai yanji lampa lampa veNdai yanja lanca lenRu
     sanji thanja thangkai konja ...... mayilERith

thinthi minthi minthi minthi thantha nantha nantha nenRu
     senRa sainthu kanthu vanthu ...... krupaiyOdE

sinthai yangku lampu kunthu santha thampu kaznthu Narnthu
     sempa thampa Ninthi renRu ...... mozhivAyE

antha manthi koNdi langkai ventha zhinthi dumpa kaNdan
     angka mungku laintha rangkoL ...... podiyAka

ampa kumpa nungka langka venji nampu rinthu ninRu
     ampu koNdu venRa koNdal ...... marukOnE

inthu vungka ranthai thumpai konRai yunja lampu nainthi
     dumpa ranRa nanpil vantha ...... kumarEsA

inthi ranpa thampe RaNdar thampa yangka dintha pinpu
     eNka Nangka marnthi runtha ...... perumALE.

......... Meaning .........

santha nanthi mirntha Nainthu: Mixing pleanty of sandalwood paste

kungkumang kadampu ilangku saNpakam: with vermillion, kadappa flowers, and elegant shanbaga flowers

seRinthilangku thiraL thOLum: You have adorned Your mighty shoulders!

thaNdaiyanj cilampu alampa: The victorious anklets around Your ankles are making a nice sound;

veNdaiyam chalanchal enRu: and the special anklet of bravery veNdaiyam is sounding like "Chalanchal".

sanju ithanj sathangkai konja: The pretty little beads (kiNkiNi) are jingling softly!

mayilERi: You have mounted on Your peacock which is dancing to the meter of

thinthi minthi minthi minthi thantha nantha nanthana: (same sound).

senRasainthu ukanthu vanthu: You are slowly moving towards me at a leisurely pace and with pleasure

krupaiyOdE sinthai am kulam pukunthu: to enter the Temple of my heart graciously!

santhatham pukaznthu Narnthu sempatham: "Always keep praising my lotus feet after realising their greatness

paNinthiru enRu mozhivAyE: and surrender to them" - This is Your advice to me!

antha manthi koNdu ilangkai venthazhinthu: After that famous monkey, HanumAn, set fire to LankA destroying it

idumpa kaNdan angka mungku lainthu: the evil demon RAvaNA's body was decimated

arangkoL podiyAka: and powdered just like sawdust;

ampa kumpanung kalangka: the well-armed KumbakarNan, arrows and all, was devastated

venjinampurinthu ninRu: when RAmAstood at the battlefield full of rage

ampu koNdu venRa koNdal marukOnE: and shot His arrows victoriously; and You are the nephew of that Rama of cloud-like hue!

inthuvung karanthai thumpai konRaiyum salam punainthidum: With a crescent moon, green VibUthi, thumbai (leucas) and kondRai (Indian laburnum) flowers, along with River Ganga, adorning His tresses,

paranRan anpil vantha kumarEsA: Is Lord SivA whose love for DEvAs delivered You, Oh KumarEsA,

inthi ranpathampeRa: After IndrA's kingdom was redeemed to him

aNdar thampayang kadintha pinpu: and after removing all the fears of the DEvAs,

eNkaN angku amarnthiruntha perumALE.: You chose this place, ENkaN, as Your abode, Oh Great One!


* ENkaN is on the rail route from ThiruvArUr to NeedAmangalam, very close to ThirumathikkundRam railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 835 sandhanandhimirndhu - eNkaN

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]