திருப்புகழ் 785 ஏட்டின் விதிப்படி  (திருக்கடவூர்)
Thiruppugazh 785 Ettinvidhippadi  (thirukkadavUr)
Thiruppugazh - 785 Ettinvidhippadi - thirukkadavUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாத்த தனத்தன தானன தானன
     தாத்த தனத்தன தானன தானன
          தாத்த தனத்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர
     வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
          லேற்றி யடித்திட வேகட லோடம ...... தெனவேகி

ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ
     ளாத்து வெனத்திரி யாபரி யாதவ
          மேற்றி யிருப்பிட மேயறி யாமலு ...... முடல்பேணிப்

பூட்டு சரப்பளி யேமத னாமென
     ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில்
          பூத்த மலக்குகை யோபொதி சோறென ...... கழுகாகம்

போற்றி நமக்கிரை யாமென வேகொள
     நாட்டி லொடுக்கென வேவிழு போதினில்
          பூட்டு பணிப்பத மாமயி லாவருள் ...... புரிவாயே

வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக
     னாட்டை விடுத்திட வேபல சூதினில்
          வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் ...... வனமேபோய்

வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது
     பார்த்து முடித்திட வேயொரு பாரத
          மேற்புனை வித்தம காவிர மாயவன் ...... மருகோனே

கோட்டை யழித்தசு ரார்பதி கோவென
     மூட்டி யெரித்தப ராபர சேகர
          கோத்த மணிக்கதி ரேநிக ராகிய ...... வடிவேலா

கூற்று மரித்திட வேயுதை பார்வதி
     யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்
          கோட்டு முலைக்கதி பாகட வூருறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஏட்டின் விதிப்படியே கொ(ண்)டு மா புர வீட்டில் அடைத்து ...
பிரமனது ஓலையில் கண்ட விதியின்படி, (இந்த உயிரைக்) கொண்டு
போய் நல்ல உடலாகிய வீட்டில் சேர்த்து,

இசைவே கசை மூணு அதில் ஏற்றி அடித்திடவே ...
பொருந்தும்படியாக (அடிக்கும்) சவுக்குப்போன்ற, (சுழுமுனை,
இடைகலை, பிங்கலை என்னும்)* மூன்று நாடிகளை அதில் பொருத்தி
அடித்துச் செலுத்த,

கடல் ஓடம் அது என ஏகி ... கடலில் படகு ஓடுவது போலத்
தடுமாறி காலம் கழித்து,

ஏற்கும் எனப் பொருள் ஆசை பெ(ண்)ணாசை கொளாது என
திரியா பரியா
... நல்லது என்று நினைத்து பொன், பெண் ஆகிய
ஆசைகளை மேற்கொண்டு, தூ எனப் பலர் இகழத் திரிந்தும், வருந்தியும்,

தவம் ஏற்றி இருப்பிடமே அறியாமலும் உடல் பேணி ... தவம்
சேர்ந்துள்ள இடமே எங்கிருக்கின்றது என்று தெரியாமலும், இந்த உடலை
விரும்பிப் பாதுகாத்து,

பூட்டு சரப்பளியே மதனாம் என ... வைரம் அழுத்தமாகப் பதித்த
கழுத்தணி விளங்க, மன்மதன் இவன் என்னும்படி,

ஆட்டி அசைத்தி இயலே திரி நாளையில் ... உடலை ஆட்டியும்
அசைத்தும் இயல்பாகத் திரியும் காலத்தில்,

பூத்த மலக் குகையோ பொதி சோறோ என ... நிரம்பின மலம்
சேர்ந்த குகையோ, அல்லது சோற்றுப் பொதியோ இந்த உடல் என்னும்படி,

கழு காகம் போற்றி நமக்கு இரையாம் எனவே கொள ... கழுகும்
காகமும் விரும்பி நமக்கு (இவ்வுடல்) உணவாகும் என்று கொள்ளும்படி,

நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில் ... பூமியில் யாவும்
அடங்கியாயிற்று என்று (இவ்வுடல்) விழுகின்ற, இறந்து போகும் அந்தச்
சமயத்தில்

பூட்டு பணி பத மா மயிலா அருள் புரிவாயே ... கால்களில்
பாம்பை அழுத்தமாகக் கட்டியுள்ள அழகிய மயிலின் மீது அமர்வோனே,
நீ அருள் புரிவாயாக.

வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன் ... (அரக்கு) மாளிகையில்
(பஞ்ச பாண்டவர்களை) இருக்கச் செய்து, நெருப்பை இட்ட பாதகனாகிய
துரியோதனன்

நாட்டை விடுத்திடவே பல சூதினில் வீழ்த்த ... நாட்டை விட்டுப்
போகும்படி பல சூதாட்டங்களில் தோற்கடிக்க,

விதிப்படியே குரு காவலர் வனமே போய் ... விதியின்படி
குருகுலத்து அரசராம் பாண்டவர்கள் காட்டுக்குச் சென்று,

வேற்றுமை உற்று உருவோடு இயல் நாளது பார்த்து
முடித்திடவே
... மாறு வேடம் பூண்டு அஞ்ஞாத வாசம் செய்திருந்த
நாளின் முடிவைப் பார்த்து, வனவாசம் முடிந்திடவே,

ஒரு பாரத மேற் புனைவித்த மகா விர மாயவன் மருகோனே ...
ஒரு பாரதப் போரையே மேலே நடக்கும்படித் துவக்கிவைத்த பெரிய
வீரனாகிய திருமாலின் மருகனே,

கோட்டை அழித்த அசுரர் பதி கோ என ... (சூரனது
மகேந்திரபுரியின்) கோட்டைகளை அழித்து, அசுரர்களின் தலைவனான
சூரன் கோ என்று கூச்சலிட

மூட்டி எரித்த பராபர சேகர ... (அவனுடைய நகரத்தை) நெருப்பு
மூட்டி எரித்த பராபரப் பொருளே, அழகனே,

கோத்த மணிக் கதிரே நிகராகிய வடிவேலா ... கோக்கப்பட்ட
இரத்தின ஒளிக்கு நிகரான கூரிய வேலனே,

கூற்று மரித்திடவே உதை பார்வதியார்க்கும் ... யமன் இறந்து
போகும்படியாக (இடது காலால்) உதைத்த பார்வதி தேவியார்க்கும்

இனித்த பெ(ண்)ணாகிய மான் மகள் ... இனிமை தரும்
பெண்ணாகிய, மானின் வயிற்றில் பிறந்த வள்ளியின்

கோட்டு முலைக்கு அதிபா ... மலை போன்ற மார்பகங்களுக்கு
உரிய தலைவனே,

கடவூர் உறை பெருமாளே. ... திருக்கடவூரில்* வீற்றிருக்கும்
பெருமாளே.


* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:

நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு
'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று
பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள்,
சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம
கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும்.
இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும்
ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த
ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி,
ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை,
சுழுமுனை முதலியன) உள்ளன.

'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.

'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.

'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.

'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும்
ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.

சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்
மன அமைதி ஏற்படும்.


** திருக்கடவூர் மயிலாடுதுறைக்குத் தென்கிழக்கே 13 மைலில் உள்ளது.
தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக சிவபிரான் யமனை உதைத்துத் தள்ளி,
காலபைரவ மூர்த்தியாக இருக்கும் தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.899  pg 2.900  pg 2.901  pg 2.902 
 WIKI_urai Song number: 789 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 785 - Ettin vidhippadi (thirukkadavUr)

Ettin vidhippadiyE kodu mA pura
     veettil adaith thisaivE kasai mUNadhil
          Etri adiththidavE kadal Odamadhu ...... ena vEgi

ERkum ena poruLAsai peNAsai ko
     LA thu enath thiriyA pariyA thavam
          Etri iruppidamE aRiyAmalum udal pENi

pUttu sarappaLiyE madhanAmena
     Atti asaith iyalE thiri nALaiyil
          pUththa malakguhaiyO podhi sORena ...... kazhu kAgam

pOtri namak iraiyAm enavE koLa
     nAtti lodukkenavE vizhu pOdhinil
          pUttu paNip padha mA mayilA aruL ...... purivAyE

veettil adaith theriyE idu pAthakan
     nAttai viduth thidavE pala sUdhinil
          veezhththa vidhip padiyE kuru kAvalar ...... vanamE pOy

vEtrumai yutruru vOdiyal nAL adhu
     pArththu mudith thidavE oru bAratha
          mERpunai viththa mahAvira mAyavan ...... marugOnE

kOttai azhiththa surArpathi gO ena
     mUtti eriththa parApara sEkara
          kOththa maNik kadhirE nigarAgiya ...... vadivElA

kUtru marith thidavE udhai pArvathi
     yArkkum iniththa peNAgiya mAn magaL
          kOttu mulaik adhipA kadavUr uRai ...... perumALE.

......... Meaning .........

Ettin vidhippadiyE kodu mA pura veettil adaiththu: This life has been filled in this good body as assigned by BrahmA in the leaf of destiny.

isaivE kasai mUNadhil Etri adiththidavE: Three whip-like veins (namely, cuzhumunai, idaikalai and pingalai)* have been rivetted to this body;

kadal Odamadhu ena vEgi: like a little boat being tossed about in the sea, I have passed time hovering around;

ERkum ena poruLAsai peNAsai koLA thu enath thiriyA pariyA: I hankered after gold and women thinking that such a pursuit was advisable; many people mocked at me while I was roaming about in misery;

thavam Etri iruppidamE aRiyAmalum udal pENi: not knowing where I could seek solace through penance, I carried on nurturing this body of mine,

pUttu sarappaLiyE madhanAmena: displaying pompously the diamond pendant around my neck so that others could look upon me as the God of Love (Manmathan).

Atti asaith iyalE thiri nALaiyil: In those days, when I was showing off, shaking and moving my body hither and thither,

pUththa malakguhaiyO podhi sORena kazhu kAgam pOtri namak iraiyAm enavE koLa: vultures and crows considered this body to be a potential prey as if it were a cavern full of faeces or a bundle of cooked rice.

nAtti lodukkenavE vizhu pOdhinil: On this earth, at the final hour when all my vital signs would have ebbed,

pUttu paNip padha mA mayilA aruL purivAyE: kindly bless me graciously; You are the One mounting the great peacock that has a serpent tied to its feet tightly!

veettil adaith theriyE idu pAthakan: Duryodhanan, the treacherous one, set fire to the palace of lacquer in which the five PANdavAs were confined;

nAttai viduth thidavE pala sUdhinil veezhththa: he eventually banished them from the country by defeating them in many gambling games;

vidhip padiyE kuru kAvalar vanamE pOy: led by their fate, the PANdavAs, the princes of Kuru Dynasty, went to the forest;

vEtrumai yutruru vOdiyal nAL adhu pArththu mudith thidavE: they were leading a life in disguise, and when the stipulated time of banishment ended,

oru bAratha mERpunai viththa mahAvira mAyavan marugOnE: a major battle of the BhAratha was initiated by the great warrior, Krishna; and You are His nephew!

kOttai azhiththu asurArpathi kO ena: You destroyed SUran's fort of Mahendrapuri; the head of the demons shrieked in fear;

mUtti eriththa parApara sEkara: and his town was burnt down by You, the Supreme and Handsome One!

kOththa maNik kadhirE nigarAgiya vadivElA: Your sharp spear dazzles like the bright red rubies studded together, Oh Lord!

kUtru marith thidavE udhai pArvathiyArkkum: She kicked him with Her left leg to knock Yaman (God of Death) dead; to that Goddess PArvathi

iniththa peNAgiya mAn magaL kOttu mulaik adhipA: this girl is very dear, having been delivered by a deer; You are the Lord of that VaLLi's mountain-like bosom!

kadavUr uRai perumALE.: You have Your abode in ThirukkadavUr,** Oh Great One!


* In this song, several Siva-yOgA principles are explained:

The inhaled air is known as 'pUragam' and the exhaled air is 'rechagam'. The retained air is 'kumbagam'. The oxygen that enters the body climbs up step by step through several centres, known as 'chakrAs' and ultimately reaches 'sahasrAram' or 'bindhuchakram' on the top of the skull. At that point of union, nectar flows from that chakrA and seeps through and soaks the six centres of the body and returns to the basic chakrA, 'mUlAthAram'. Three zones (namely, the sun zone, the moon zone and the fire zone) and ten nerves ('nAdis') govern the six centres; the principal nerves are 'susumna', 'idaikala' and 'pingala'.

idakala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the left nostril;
pingala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the right nostril;
susumna: one of the ten 'nAdis' (nerves), situated between the above two 'nadis', and running through the spinal chord covering all the six centres of 'kundalini'. ('idakala' and 'pingala' are entwined around 'susumna').

If breathing is controlled through a yOgA called 'praNAyAmA', the mind becomes tranquil.


** ThirukkadavUr is 13 miles southeast of MayilAduthurai - MAyUram.
This place is famous for KAla Bhairava MUrthy (Lord SivA) who kicked away the God of Death (Yaman) to protect His devotee, MArkaNdEyA.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 785 Ettin vidhippadi - thirukkadavUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]