திருப்புகழ் 784 மேக வார்குழல  (வைத்தீசுரன் கோயில்)
Thiruppugazh 784 mEgavArkuzhala  (vaiththeeswaran kOyil)
Thiruppugazh - 784 mEgavArkuzhala - vaiththeeswarankOyilSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தானதன தானதன தானதன
     தான தானதன தானதன தானதன
          தான தானதன தானதன தானதன ...... தனதான

......... பாடல் .........

மேக வார்குழல தாடதன பாரமிசை
     யார மாடகுழை யாடவிழி யாடபொறி
          மேனி வாசனைகள் வீசஅல்குல் மோதிபரி ...... மளமேற

மீனு லாடையிடை யாடமயில் போலநடை
     யோல மோலமென பாதமணி நூபுரமு
          மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் ...... முழவோசை

ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு
     வோரை வாருமென வேசரச மோடுருகி
          ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவ ...... டதிபார

ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு
     வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட
          ரான சூலைபல நோய்கள்கட லாடியுட ...... லுழல்வேனோ

நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி
     நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை
          நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் ...... முநிவோர்கள்

நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை
     வேத கீதவொலி பூரையிது பூரையென
          நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட ...... விடும்வேலா

தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்
     தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக
          சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை ...... புணர்வோனே

தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு
     மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர்
          சூழு காவிரியும் வேளூர்முரு காவமரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மேக வார் குழல் அது ஆட தன பார(ம்) மிசை ஆரம் ஆட
குழை ஆட விழி ஆட பொறி மேனி வாசனைகள் வீச அல்குல்
மோதி பரிமளம் ஏற
... மேகம் போல் கறுத்து நீண்ட கூந்தல் ஆடவும்,
மார்பின் பாரங்களின் மேல் முத்து மாலை ஆடவும், காதில் குண்டலங்கள்
ஆடவும், கண்கள் ஆடவும், பொலிவு பரந்துள்ள உடல் நறு மணங்கள்
வீசவும், பெண்குறியின் மேற்பட்டு நல்ல மணம் அதிகரிக்கவும்,

மீ(மி)ன் நூல் ஆடை இடை ஆட மயில் போல நடை ஓலம்
ஓலம் என பாத மணி நூபுரமு(ம்) மேல் வில் வீச பணி கீர
குயில் போல குரல் முழவு ஓசை ஆகவே அவைகள்
கூடிடுவர்
... ஒளி வீசும் நூலாடை இடையில் ஆடவும், மயிலைப் போல
நடை நடக்க, பாதத்தில் உள்ள ரத்தினச் சிலம்பு ஓலம் ஓலம் என்று
முறையிடும் ஒலியுடன் சப்திக்க, ஒளியை ஆபரணங்கள் வீச, பால்
போலவும் குயில் போலவும், முரசொலி போலவும் ஒலி பெருகவே
சபையில் கூட்டம் கூட்டமாகக் கூடுவார்கள்.

வீதி வருவோரை வாரும் எனவே சரசமோடு உருகி ஆசை
போல மனையே கொ(ண்)டு அணைவார்கள்
... தெருவில் வரும்
ஆடவர்களை வாருங்கள் என்று நயமுடன் இனிய வார்த்தைகள் சொல்லி,
மன உருக்கத்துடன் ஆசை பூண்டவர்கள் போல தங்களுடைய
வீட்டிற்குக் கொண்டு போய் தழுவுவார்கள்.

குவடு அதி பார ஆணி மா முலையின் மூழ்கி சுக வாரி கொடு
வேர்வை பாய அணையூடு அமளி ஆடி இடரான சூலை பல
நோய்கள் கடல் ஆடி உடல் உழல்வேனோ
... காமத்துக்கு
ஆதாரமாயுள்ள அழகுள்ள மார்பகத்தில் முழுகி, சுகக் கடலில்
அனுபவித்து வேர்வை பாய படுக்கையில் கோலாகலத்துடன் இன்பம்
அனுபவிக்க, (அதனால் பின்னர்) வருத்தம் தருவதான சூலை நோய்
மற்றும் பல நோய்களாகிய கடலில் சிக்கி வேதனைப் பட்டு இந்த
உடலுடன் அலைவேனோ?

நாக லோகர் மதி லோகர் பக(ல்) லோகர் விதி நாடுளோர்கள்
அமரோர்கள் கண நாதர் விடை நாதர் வேதியர்கள் ஆதி
சரசோதி திகழ் முநிவோர்கள்
... நாக லோகத்தில் உள்ளவர்கள்,
சந்திர மண்டலத்தில் உள்ளவர்கள், சூரிய மண்டலத்தில் உள்ளவர்கள்,
பிரம லோகத்தில் இருப்பவர்கள், தேவர்கள், கணநாதர்கள், நந்திகண
நாதர்கள், அந்தணர்கள், முதன்மையான யோக மார்க்கத்தில் ஏற்படும்
ஜோதி விளங்கும் முனிவர்கள்,

நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை
இது பூரை எனநாசமாய் அசுரர் மேவி கிரி தூளி பட விடும்
வேலா
... நவ நாத சித்தர்கள், மனிதர்கள், நிலை பெற்ற நாராயண
மூர்த்திகள், பதினெண் புராணங்கள், வேதங்களின் ஒலிகள் எல்லாம்
இதுவே (அசுரர்களின்) முடிவு காலம், இதுவே முடிவு காலம் என்று
சொல்ல, அசுரர் அழிந்து போக, அவர்கள் இருந்த கிரவுஞ்ச கிரி
பொடிபடச் செலுத்திய வேலனே,

தோகை மாது குற மாது அமுத மாதுவின் நல் தோழி மாது
வ(ள்)ளி நாயகி மி(ன்)னாளை சுக சோகமோடு இறுகி மார்
முலை விடாமல் அணை புணர்வோனே
... மயில் போன்ற மாது,
குற மாது, அமுத வல்லி எனப் பெயர் பூண்டிருந்த தேவயானையின் நல்ல
துணையாய் அமைந்த மாது, வள்ளி நாயகி என்கின்ற மின்னொளி
போன்றவளை சுகத்துடனும் விரக தாபத்துடனும் அழுந்தக் கட்டி, உனது
மார்பில் அவளுடைய மார்பகத்தை விடாமல் அணைத்துத் தழுவியவனே,

தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது
எ(ஏ)ய்வான வடிவா தொழுது எ(ண்)ணா வயனர் சூழு
காவிரியும் வேளூர் முருகா அமரர் பெருமாளே.
... பன்னிரண்டு
தோள்களும், ஆறு திருமுகங்களும், மயில், வேல், இவைகளின் அழகுக்கு
மேம்பட்டுப் பொருந்தியுள்ள எழில் வடிவம் உள்ளவனே, தொழுது
வணங்கி ஜடாயு, சம்பாதி என்னும் பறவை வடிவினரும், காவிரி ஆறும்
சூழ்ந்து பரவும் புள்ளிருக்கும் வேளூர் என்ற வைத்தீசுரன் கோயிலில்
வீற்றிருக்கும் முருகா, தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.895  pg 2.896  pg 2.897  pg 2.898  pg 2.899  pg 2.900 
 WIKI_urai Song number: 788 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 784 - mEga vArkuzhala (vaiththeeswaran kOyil)

mEka vArkuzhala thAdathana pAramisai
     yAra mAdakuzhai yAdavizhi yAdapoRi
          mEni vAsanaikaL veesaalkul mOthipari ...... maLamERa

meenu lAdaiyidai yAdamayil pOlanadai
     yOla mOlamena pAthamaNi nUpuramu
          mElvil veesapaNi keerakuyil pOlakural ...... muzhavOsai

Aka vEyavaikaL kUdiduvar veethivaru
     vOrai vArumena vEsarasa mOduruki
          Asai pOlamanai yEkodaNai vArkaLkuva ...... dathipAra

ANi mAmulaiyin mUzhkisuka vArikodu
     vErvai pAyaaNai yUdamaLi yAdiyida
          rAna cUlaipala nOykaLkada lAdiyuda ...... luzhalvEnO

nAka lOkarmathi lOkarpaka lOkarvithi
     nAdu LOrkaLama rOrkaLkaNa nAtharvidai
          nAthar vEthiyarkaL Athisara sOthithikazh ...... munivOrkaL

nAtha rEnararma nAraNarpu rANavakai
     vEtha keethavoli pUraiyithu pUraiyena
          nAsa mAyasurar mEvukiri thULipada ...... vidumvElA

thOkai mAthukuRa mAthamutha mAthuvinal
     thOzhi mAthuvaLi nAyakimi nALaisuka
          sOka mOdiRuki mArmulaivi dAmalaNai ...... puNarvOnE

thOLi rARumuka mARumayil vElazhaku
     meethey vAnavadi vAthozhuthe NAvayanar
          cUzhu kAviriyum vELUrmuru kAvamarar ...... perumALE.

......... Meaning .........

mEka vAr kuzhal athu Ada thana pAra(m) misai Aram Ada kuzhai Ada vizhi Ada poRi mEni vAsanaikaL veesa alkul mOthi parimaLam ERa: Their black and long hair looking like the cloud waved about; the string of pearls on their huge bosom swayed; the swinging studs on their ears oscillated; their eyes rolled; their beautiful body exuded pleasant fragrance; the breeze over their genital had an enhanced aroma;

mee(mi)n nUl Adai idai Ada mayil pOla nadai Olam Olam ena pAtha maNi nUpuramu(m) mEl vil veesa paNi keera kuyil pOla kural muzhavu Osai AkavE avaikaL kUdiduvar: the dazzling attire of cotton fluttered around their waist; their gait was like that of the peacock; the gem-studded anklets on their feet made a jingling sound of surrender; their jewels radiated bright light; and these whores crowded in the assembly hall making sounds sweet like milk, cooing like cuckoo and resonating loudly like the drum.

veethi varuvOrai vArum enavE sarasamOdu uruki Asai pOla manaiyE ko(N)du aNaivArkaL: They invite the men walking along the streets with cajoling words, and putting on an act of melting away for them with desire, they take them to their home and hug them.

kuvadu athi pAra ANi mA mulaiyin mUzhki suka vAri kodu vErvai pAya aNaiyUdu amaLi Adi idarAna cUlai pala nOykaL kadal Adi udal uzhalvEnO: Sinking into their beautiful bosom which is the root of passion, drowning in the sea of bliss, making love ostentatiously on their bed with perspiration gushing about, and later suffering from miserable venereal disease and a sea of other sexually transmitted diseases, am I destined to languish with this body?

nAka lOkar mathi lOkar paka(l) lOkar vithi nAduLOrkaL amarOrkaL kaNa nAthar vidai nAthar vEthiyarkaL Athi sarasOthi thikazh munivOrkaL: People in the Cobra-Kingdom (NAkalOkam), in the Lunar Zone, in the Solar Zone and in the domain of Lord Brahma, the celestials, the leaders of the GaNApathya kingdom, the kingdom of the Bull-God (Nandi), brahmins, the sages who shine with the halo of light around their heads treading the path of the foremost YogA,

nAtharE narar man nAraNar purANa vakai vEtha keetha oli pUrai ithu pUrai enanAsamAy asurar mEvi kiri thULi pada vidum vElA: the great sidhdhAs (achievers through penance) of nine kinds, the human beings, the permanent forms of NArAyaNAs, the eighteen PurANAs, and all the vEdAs loudly proclaimed repeatedly that the dynasty of the demons had reached an end, as the demons were all destroyed and their dwelling place, Mount Krouncha, was shattered to pieces when You wielded the spear, Oh Lord!

thOkai mAthu kuRa mAthu amutha mAthuvin nal thOzhi mAthu va(L)Li nAyaki mi(n)nALai suka sOkamOdu iRuki mAr mulai vidAmal aNai puNarvOnE: She is the peacock-like damsel of the KuRavAs; She is a great companion of DEvayAnai, previously known by the name Amuthavalli; She is the lightning-like goddess VaLLi; You blissfully hugged her showing pangs of prior separation and held her bosom closely entwined with Your chest, Oh Lord!

thOL irARu mukam ARu mayil vEl azhaku meethu e(E)yvAna vadivA thozhuthu e(N)NA vayanar cUzhu kAviriyum vELUr murukA amarar perumALE.: With twelve shoulders, six hallowed faces, the peacock, the spear and a figure that surpasses all these in terms of beauty, You are very handsome, Oh Lord! The famous eagles JampAthi and JadaAyu prostrate at Your feet and worship at this place; River KAvEri flows around Your shrine in PuLLirukkum VELUr (Vaiththeeswaran KOyil) which is Your abode, Lord MurugA! You are the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 784 mEga vArkuzhala - vaiththeeswaran kOyil

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]