திருப்புகழ் 781 பாட கச்சிலம்போடு  (வைத்தீசுரன் கோயில்)
Thiruppugazh 781 pAdakachchilambOdu  (vaiththeeswaran kOyil)
Thiruppugazh - 781 pAdakachchilambOdu - vaiththeeswarankOyilSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்தனந் தான தத்ததன
     தான தத்தனந் தான தத்ததன
          தான தத்தனந் தான தத்ததன ...... தனதான

......... பாடல் .........

பாட கச்சிலம் போடு செச்சைமணி
     கோவெ னக்கலந் தாடு பொற்சரணர்
          பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி ...... னிடைநூலார்

பார பொற்றனங் கோபு ரச்சிகர
     மாமெ னப்படர்ந் தேம லிப்பரித
          மாகு நற்கரும் போடு சர்க்கரையின் ...... மொழிமாதர்

ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ
     டாட ளிக்குலம் பாட நற்றெருவி
          லேகி புட்குலம் போல பற்பலசொ ...... லிசைபாடி

ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம்
     வாரு முற்பணந் தாரு மிட்டமென
          ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் ...... செயலாமோ

சேட னுக்கசண் டாள ரக்கர்குல
     மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள்
          சேர வற்றநின் றாட யிற்கரமி ...... ரறுதோள்மேல்

சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி
     யோர்கள் கட்டியம் பாட எட்டரசர்
          சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி ...... புகழ்வேலா

நாட கப்புனங் காவ லுற்றசுக
     மோக னத்திமென் தோளி சித்ரவளி
          நாய கிக்கிதம் பாடி நித்தமணி ...... புனைவோனே

ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல்
     நாய கிக்குநன் பாக ரக்கணியும்
          நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாடகம் சிலம்போடு செச்சை மணி கோ எனக் கலந்து ஆடு
பொன் சரணர்
... கொலுசு, சிலம்பு இவற்றுடன் சிவந்த மணிகள்,
கோமேதகம் சேர்க்கப்பட்டது போல ஒன்று சேர்ந்து அசைகின்ற அழகிய
பாதங்களை உடையவர்.

பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் இடை நூலார்
பார பொன் தனம் கோபுரச் சிகரமாம் எனப் படர்ந்த
ஏமலிப்பர்
... சித்திரப் பதுமை போன்றவர்கள். பட்டு உடை
அணிந்துள்ள நூல் போல் நுண்ணியதான இடையை உடையவர்கள்.
கனத்த, அழகிய மார்பகம் கோபுர உச்சி என்று சொல்லும்படியாக வளர்ந்து
களிப்பு கொள்பவர்கள்.

இத(ம்) பாகு நல் கரும்போடு சர்க்கரையின் மொழி மாதர்
ஏடகக் குலம் சேரு மைக் குழலொடு ஆடு அளிக் குலம் பாட
...
இன்பகரமான வெல்லம் நல்ல சர்க்கரை போல இனிய சொற்களைப் பேசும்
மாதர்கள். மலர்க் கூட்டங்களைக் கொண்ட கரிய கூந்தலில் விளையாடும்
வண்டுகளின் கூட்டம் பாட,

நல் தெருவில் ஏகி புட் குலம் போல பற்பல சொல் இசை பாடி
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரு(ம்) முன் பணம் தாரும்
இட்டம் என ஏணி வைத்து வந்து ஏற விட்டிடுவர்
செயலாமோ
... அழகிய தெருக்களில் சென்று, பறவை இனம் போல பல
பல சொற்களை அமைந்த ராகங்களைப் பாடி, மிகுந்த முகஸ்துதியான
பேச்சுக்களைப் பேசி வஞ்சித்து, இன்ப மொழியால், வாருங்கள்,
முன்னதாகப் பணத்தைக் கொடுங்கள், உங்கள் அன்பையும் கொடுங்கள்
என்று சொல்லி, ஏணி வைத்து ஏறும்படி செய்து (பின்னர் இறங்க
முடியாமல்) ஏணியை எடுத்துச் செல்பவர்களாகிய விலைமாதர்களின்
செயல்களை நம்புதல் தகுமோ?

சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று
ஏழு அலைக் கடல்கள் சேர வற்ற நின்று ஆட
... ஆதிசேஷன்
மெலிய, கொடும் பாதகர்களான அசுரர்கள் குலம் மாண்டு ஒழிய, எட்டு
மலைகளும் அலை மிகுந்த ஏழு கடல்களும் ஒன்று சேர உலர்ந்து
போகும்படியாக நின்று விளையாடிய

இல் கரம் ஈரறு தோள் மேல் சேண் நிலத்தர் பொன் பூவை
விட்டு இருடியோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர் சே செ
ஒத்த செம் தாமரைக் கிழவி புகழ் வேலா
... வேல் ஏந்திய
கைகளாகிய பன்னிரண்டு தோளின் மேல் விண்ணுலகத்தினர் பொன்
மலரைப் பொழிய, முனிவர்கள் புகழ்ப் பாடல்கள் பாட, எட்டுத் திக்கிலும்
உள்ள அரசர்கள் ஜே ஜே என்று தாளம் இட்டு முழங்க, செந்தாமரையில்
வாழும் லக்ஷ்மி தேவி புகழும் வேலனே,

அகம் நாடு புனம் காவலுற்ற சுக மோகனத்தி மென் தோளி
சித்ர வ(ள்)ளி நாயகிக் கீதம் பாடி நித்தம் அணி
புனைவோனே
... நீ மனத்தில் விரும்பிச் சென்ற வள்ளி மலையில்
இருக்கும் தினைப் புனத்தில் காவல் இருந்தவளும், உன்னைச் சுகமாக
மயக்கியவளும், மெல்லிய தோளை உடையவளும் ஆகிய அழகிய வள்ளி
நாயகிக்கு இன்பகரமான பாடல்களைப் பாடி, நாள் தோறும்
அணிகலன்களை அணிவித்து மகிழ்பவனே,

ஞான வெற்பு உகந்து ஆடும் அத்தர் தையல் நாயகிக்கு நன்
பாகர் அக்கு அணியும் நாதர் மெச்ச வந்து ஆடு முத்தம்*
அருள் பெருமாளே.
... ஞானம் என்னும் மலையில் மகிழ்ந்து
விளையாடும் பெருமான், தையல்நாயகி** என்னும் திருநாமம் உடைய
தேவியை நல்ல தமது பாகத்தில் கொண்டவர், ருத்ராக்ஷ மாலை
அணிந்துள்ள சிவபெருமான் மெச்சும்படி வந்து விளையாடி, முத்தம்
அவருக்குத் தந்தருளும் பெருமாளே.


* வைத்தீசுரன் கோயில் முருகனுக்கு முத்துக் குமரர் என்று பெயர்.


** தையல்நாயகி என்பது வைத்தீசுரன் கோயிலில் எழுந்தருளி இருக்கும்
உமா தேவியின் பெயர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.885  pg 2.886  pg 2.887  pg 2.888  pg 2.889  pg 2.890 
 WIKI_urai Song number: 785 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 781 - pAda kachchilambOdu (vaiththeeswaran kOyil)

pAda kacchilam pOdu secchaimaNi
     kOve nakkalan thAdu poRcharaNar
          pAvai chiththiram pOlvar pattudaiyi ...... nidainUlAr

pAra potRanang kOpu racchikara
     mAme nappadarn thEma lipparitha
          mAku naRkarum pOdu sarkkaraiyin ...... mozhimAthar

Eda kakkulanj chEru maikkuzhalo
     dAda Likkulam pAda natReruvi
          lEki putkulam pOla paRpalaso ...... lisaipAdi

ERi yicchakam pEsi yeththiyitham
     vAru muRpaNan thAru mittamena
          ENi vaiththuvan thERa vittiduvar ...... seyalAmO

sEda nukkachaN dALa rakkarkula
     mALa attakun REzha laikkadalkaL
          sEra vatRanin RAda yiRkarami ...... raRuthOLmEl

sENi laththarpon pUvai vittirudi
     yOrkaL kattiyam pAda ettarasar
          sEse yoththasen thAma raikkizhavi ...... pukazhvElA

nAda kappunang kAva lutRasuka
     mOka naththimen thOLi chithravaLi
          nAya kikkitham pAdi niththamaNi ...... punaivOnE

njAna veRpukan thAdu maththarthaiyal
     nAya gikkunan pAka rakkaNiyum
          nAthar mecchavan thAdu muththamaruL ...... perumALE.

......... Meaning .........

pAdakam silampOdu secchai maNi kO enak kalanthu Adu pon charaNar: They have pretty feet that move about with dazzling red gems and hessonite stones embedded in a variety of anklets they wear.

pAvai chiththiram pOlvar pattu udaiyin idai nUlAr pAra pon thanam kOpurac chikaramAm enap padarntha Emalippar: They look like statuettes. Their slender thread-like waist is wrapped around with silk sari. They derive pleasure in showing off their heavy and beautiful bosom that has grown like the temple tower.

itha(m) pAku nal karumpOdu sarkkaraiyin mozhi mAthar Edakak kulam sEru maik kuzhalodu Adu aLik kulam pAda: Their speech is a sweet combination of enjoyable jaggery and sugar of good quality. Around their black hair, adorned with bunches of flowers, a group of beetles swarm humming.

nal theruvil Eki put kulam pOla paRpala sol isai pAdi ERi icchakam pEsi eththi itham vAru(m) mun paNam thArum ittam ena ENi vaiththu vanthu ERa vittiduvar seyalAmO: Walking through the grand streets, they sing many a song in various tunes like the song-birds and flatter their suitors excessively and treacherously; using sweet words, they say "Come on in; first, pay me and then grant me your love"; they are capable of setting up the ladder for one to climb up, but later they pull it out (disabling their suitors' descent); how can I ever trust the acts of such whores?

sEdan ukkac chaNdALa arakkar kulam mALa atta kunRu Ezhu alaik kadalkaL sEra vatRa ninRu Ada: The Serpent AdhisEshan shrank; the evil and sinful demons were annihilated;the eight mountains and the seven seas became dried up all together; such was the playful sport of

il karam eeraRu thOL mEl sEN nilaththar pon pUvai vittu irudiyOrkaL kattiyam pAda ettu arasar sE se oththa sem thAmaraik kizhavi pukazh vElA: the spear held in Your twelve hands; on those twelve shoulders, the celestials showered golden flowers, sages sang songs of Your glory, the kings from all the eight directions hailed You with joy beating the drums and screaming "victory! victory!" and Goddess Lakshmi seated on the red lotus extolled You, Oh Lord with the Spear!

akam nAdu punam kAvalutRa suka mOkanaththi men thOLi sithra va(L)Li nAyakik keetham pAdi niththam aNi punaivOnE: You went to Mount VaLLimalai with excitement to see VaLLi who stood guard to the crop of millet in the field; She enchanted You blissfully; She is endowed with tender shoulders; You sang to her many pleasing songs and were delighted to adorn her everyday with precious jewellery, Oh Lord!

njAna veRpu ukanthu Adum aththar thaiyal nAyagikku nan pAkar akku aNiyum nAthar meccha vanthu Adu muththam* aruL perumALE.: He is the Lord who plays joyfully in the Mountain of Knowledge; on His hallowed left side, the Goddess named ThaiyalnAyagi** is concorporate; He wears the garland of rudhrAksha; You come playfully to that elated Lord SivA and plant a kiss on His cheek, Oh Great One!


* Lord Murugan in Vaiththeeswaran kOyil is known as Muththuk Kumarar; Muththu has two meanings: Pearl and Kiss.


** ThaiyalnAyagi is the name of Goddess UmA DEvi in Vaiththeeswaran kOyil.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 781 pAda kachchilambOdu - vaiththeeswaran kOyil

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]