திருப்புகழ் 754 அஞ்சுவித பூதமும்  (நிம்பபுரம்)
Thiruppugazh 754 anjuvidhabUdhamum  (nimbapuram)
Thiruppugazh - 754 anjuvidhabUdhamum - nimbapuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

......... பாடல் .........

அஞ்சுவித பூத முங்கரண நாலு
     மந்திபகல் யாது ...... மறியாத

அந்தநடு வாதி யொன்றுமில தான
     அந்தவொரு வீடு ...... பெறுமாறு

மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
     மங்கைதனை நாடி ...... வனமீது

வந்தசர ணார விந்தமது பாட
     வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே

குஞ்சரக லாப வஞ்சியபி ராம
     குங்குமப டீர ...... வதிரேகக்

கும்பதன மீது சென்றணையு மார்ப
     குன்றுதடு மாற ...... இகல்கோப

வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
     வென்றிவடி வேலை ...... விடுவோனே

விம்பமதில் சூழு நிம்பபுர வாண
     விண்டலம கீபர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அஞ்சுவித பூதமும் ... பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற
பஞ்ச பூதங்களும்,

கரண நாலும் ... மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு
கரணங்களும்,

அந்திபகல் யாதும் அறியாத ... இரவு - பகல் என்ற இரண்டும்
அறியாத

அந்தநடு ஆதி யொன்றுமிலதான ... முடிவு, நடு, முதல் ஒன்றும்
இல்லாததான

அந்தவொரு வீடு பெறுமாறு ... அந்த ஒப்பற்ற மோக்ஷ இன்பத்தைப்
பெறுமாறு,

மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர் ... மேகம் தவழ்கின்ற சிகரங்களை
உடைய அழகிய மலைவாழ் வேடர்களின்

மங்கைதனை நாடி வனமீது ... மகளாகிய வள்ளியை விரும்பி
வள்ளிமலைக் காட்டில்

வந்த சரணார விந்தம் அது பாட ... வந்தடைந்த திருவடித்
தாமரைகளைப் பாட எனக்கு

வண்டமிழ் விநோதம் அருள்வாயே ... வண்தமிழில் அற்புதக்
கவித்துவத்தை நீ அருள்வாயாக.

குஞ்சர கலாப வஞ்சி ... ஐராவதம் என்ற யானை வளர்த்த, மயிலின்
சாயலுடைய, மங்கை தேவயானையின்

அபிராம குங்கும படீர அதிரேக ... அழகிய செஞ்சாந்தும்
சந்தனமும் மிகுதியாகப் பூசியுள்ள

கும்பதன மீது சென்றணையு மார்ப ... மார்பின் மீது மனதாரத்
தழுவி அணைக்கும் திருமார்பா,

குன்று தடுமாற இகல்கோப ... கிரெளஞ்சகிரி தடுமாற்றம்
அடையுமாறு அதன்மீது பகைத்துக் கோபித்தவனே,

வெஞ்சமர சூரன் நெஞ்சு பக ... கொடிய போரினைச் செய்த
சூரனுடைய நெஞ்சு பிளவுபட

வீரவென்றிவடி வேலை விடுவோனே ... வீரம் வாய்ந்த வெற்றி
தரும் கூரிய வேலினைச் செலுத்தியவனே,

விம்பமதில் சூழு நிம்பபுர வாண ... ஒளி பொருந்திய மயில்கள்
சூழ்ந்துள்ள நிம்பபுரம்* என்ற தலத்தவனே,

விண்டல மகீபர் பெருமாளே. ... விண்ணுலகத்துத்
தேவேந்திரர்களின் பெருமாளே.


* நிம்பபுரம் என்பது வேப்பூர் என்று கருதப்படுகிறது. நிம்பம் என்றால் வேம்பு.
வேப்பூர் தென்னாற்காடு மாவட்டத்தில் பாலாற்றங் கரையில் ஆற்காட்டுக்கு
அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.817  pg 2.818 
 WIKI_urai Song number: 758 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 754 - anjuvidha bUdhamum (nimbapuram)

anju vidha bUtha mungkaraNa nAlum
     andhi pagal yAdhum ...... aRiyAdha

andha nadu vAdhi ondru miladhAna
     andha oru veedu ...... peRumARu

manju thavazh sAral anchayila vEdar
     mangai thanai nAdi ...... vanameedhu

vandha charaNAra vindham adhu pAda
     vaNdamizh vinOdham ...... aruLvAyE

kunjara kalApa vanji abirAma
     kungkuma pateera ...... adhirEka

kumbathana meedhu sendraNaiyu mArba
     kundru thadu mARa ...... igalkOpa

vensamara sUra nenjupaga veera
     vendri vadivElai ...... viduvOnE

vimba madhil sUzhu nimbapura vANa
     viNdala mageepar ...... perumALE.

......... Meaning .........

anju vidha bUthamum: The five elements, namely, earth, water, fire, air and sky, and

karaNa nAlum: the four entities, namely, mind, intellect, perception and egoism,

andhi pagal yAdhum aRiyAdha: are unable to discern anything about It in day or night;

andha nadu vAdhi ondru miladhAna: It does not have an end, or middle or origin;

andha oru veedu peRumARu: and It is that blissful liberation which I want to attain. To do that,

manju thavazh sAral anchayila vEdar mangai thanai nAdi vanameedhu: (the feet that went to the forest looking for) the damsel of the KuRavAs, VaLLi, who was brought up by the hunters at the hill with its peak covered by clouds -

vandha charaNAra vindham adhu pAda: those lotus feet of Yours will have to be eulogised by me in songs of Glory

vaNdamizh vinOdham aruLvAyE: in beautiful Tamil language; kindly bless me with that miraculous power!

kunjara kalApa vanji abirAma: DEvayAnai, the damsel looking like a peahen, reared by AirAvatham, the elephant of DEvAs,

kungkuma pateera adhirEka kumbathana meedhu: and who has a rich fragrant coating of vermilion and sandal paste on her bosom,

sendraNaiyu mArba: is embraced by Your loving chest!

kundru thadu mARa igalkOpa: Your rage scared the mount of the enemies, Krouncha, and left it trembling!

vensamara sUra nenjupaga veera: Oh Brave One, who split the heart of the fierce warrior SUran

vendri vadivElai viduvOnE: You released Your victorious and sharp Spear!

vimba madhil sUzhu nimbapura vANa: Nimbapuram*, Your abode, is surrounded by bright fortress walls.

viNdala mageepar perumALE.: You are praised by all the leaders of the land of DEvAs, Oh Great One!


* Nimbapuram is also known as VEppUr as Nimbam means VEmbu, the neem tree.
VEppUr is in South Arcot district, near Arcot, on the banks of River PAlARu.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 754 anjuvidha bUdhamum - nimbapuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]