திருப்புகழ் 737 பரவுவரிக் கயல்  (திருவதிகை)
Thiruppugazh 737 paravuvarikkayal  (thiruvadhigai)
Thiruppugazh - 737 paravuvarikkayal - thiruvadhigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
     தனதனனத் தனதனனத் ...... தனதான

......... பாடல் .........

பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
     பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல்

பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
     படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர்

சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
     துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன்

சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
     சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே

கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
     கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா

கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
     கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே

திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
     செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித்

திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
     திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பரவு வரிக் கயல் குவியக் குயில் கிளி ஒத்து உரை பதற ...
ரேகைகளோடு கூடிய, கயல் மீன் போன்ற கண்கள் குவியவும்,
குயிலையும் கிளியையும் ஒத்ததான பேசும் மொழி பதற்றத்துடன்
வெளி வரவும்,

பவள நிறத்து அதரம் விளைத்த அமுது ஊறல் பருகி நிறத்
தரளம் அணிக் களப முலைக் குவடு அசைய
... பவளத்தின் நிறம்
கொண்ட வாயிதழ்கள் விளைவிக்கும் அமுது போன்ற ஊறலை உண்டும்,
ஒளி வீசும் முத்து மாலை அணிந்த, (சந்தனக்) கலவை பூண்ட, மார்பாகிய
மலை அசைவு தரவும்,

படை மதனக் கலை அடவிப் பொதுமாதர் சொருகு
மலர்க்குழல் சரியத் தளர்வுறு சிற்றிடை துவள துகில் அகல
...
ஐந்து மலர்ப் பாணங்களை உடைய மன்மதனது காமசாஸ்திரக் குப்பையை
உணர்ந்துள்ள பொது மாதர்களின் பூக்கள் சொருகியுள்ள கூந்தல்
சரியவும், தளர்ந்துள்ள சிறிய இடை துவளவும், ஆடை விலகவும்,

க்ருபை விளைவித்து உருகா முன் சொரி மலர் மட்டு அலர்
அணை புக்கு இத மதுரக் கலவி தனில் சுழலும் மனக் கவலை
ஒழித்து அருள்வாயே
... காம ஆசையை விளைவித்து உருகி எதிரே
சொரியப்பட்ட பூக்களின் வாசனை பரந்துள்ள படுக்கையில் புகுந்து
இன்பம் தரும் இனிமையான புணர்ச்சியிலே சுழலுகின்ற என் மனக்
கவலையை நீக்கி அருள்வாயாக.

கருகு நிறத்து அசுரன் முடித் தலை ஒரு பத்து அற முடுகிக்
கணை தொடும் அச்சுதன் மருகக் குமரேசா
... கரிய நிறம்
கொண்ட அசுரனாகிய ராவணனது மகுடம் அணிந்த தலைகள் பத்தும்
அற்று விழ, வேகமாகச் சென்று அம்பைச் செலுத்திய ராமனின்
(திருமாலின்) மருகனே, குமரேசனே,

கயிலை மலைக் கிழவன் இடக் குமரி விருப்பொடு கருதக்
கவி நிறையப் பெறும் வரிசைப் புலவோனே
... கயிலை மலைக்கு
உரியவனாகிய சிவ பெருமானுடைய இடது பாகத்தில் உள்ள பார்வதி
விருப்பத்துடன் (கொடுக்கக்) கருதிய (பால் அமுது ஊட்டவும்),
பாடல்கள் நிறையப் பாடும் திறத்தைப் பெற்ற கீர்த்தியை உடைய
திருஞான சம்பந்தப் புலவனே,

திரள் கமுகின் தலை இடறிப் பல கதலிக் குலை சிதறிச்
செறியும் வயல் கதிர் அலையத்
... திரண்ட கமுகு மரத்தின் உச்சியில்
இடறியும், பல வாழைகளின் குலைகள் சிதறிடவும், நிறைந்த வயல்களில்
நெற்கதிர்கள் அலைபாயவும்,

திரை மோதி திமிதிமி எனப் பறை அறையப் பெருகு புனல்
கெடில நதித் திருவதிகைப் பதி முருகப் பெருமாளே.
...
அலைகள் வீசி, திமிதிமி எனப் பறைகள் முழங்கவும், பெருகி வரும்
நீருடைய கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை* என்னும் தலத்தில்
வீற்றிருக்கும் முருகப் பெருமாளே.


* திருவதிகை பண்ணுருட்டிக்கு கிழக்கே 2 மைலில் கெடிலநதிக் கரையில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.773  pg 2.775  pg 2.776 
 WIKI_urai Song number: 742 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 737 - paravuvari (thiruvathigai)

paravuvarik kayalkuviyak kuyilkiLiyoth thuraipathaRap
     pavaLaniRath thatharamviLaith ...... thamuthURal

parukiniRath tharaLamaNik kaLapamulaik kuvadasaiyap
     padaimathanak kalaiyadavip ...... pothumAthar

sorukumalark kuzhalsariyath thaLarvuRusit RidaithuvaLath
     thukilakalak krupaiviLaivith ...... thurukAmun

sorimalarmat talaraNaipuk kithamathurak kalavithaniR
     chuzhalumanak kavalaiyozhith ...... tharuLvAyE

karukuniRath thasuranmudith thalaiyorupath thaRamudukik
     kaNaithodumac chuthanmarukak ...... kumarEsA

kayilaimalaik kizhavanidak kumarivirup podukaruthak
     kaviniRaiyap peRumvarisaip ...... pulavOnE

thiraLkamukit RalaiyidaRip palakathalik kulaisithaRic
     cheRiyumvayaR kathiralaiyath ...... thiraimOthith

thimithimenap paRaiyaRaiyap perukupunaR kedilanathith
     thiruvathikaip pathimurukap ...... perumALE.

......... Meaning .........

paravu varik kayal kuviyak kuyil kiLi oththu urai pathaRa: With their eyes, lined with tiny blood vessels and looking like the kayal fish, drooping agitated words coming out of their mouth like the voice of the cuckoo and the parrot,

pavaLa niRaththu atharam viLaiththa amuthu URal paruki niRath tharaLam aNik kaLapa mulaik kuvadu asaiya: imbibing the nectar-like saliva oozing from their coral-hued mouth, with their shifting mountain-like bosom, wearing the bright pearl necklace and smeared with sandalwood paste,

padai mathanak kalai adavip pothumAthar soruku malarkkuzhal sariyath thaLarvuRu sitRidai thuvaLa thukil akala: these whores who know all about the trash of erotic art of Manmathan (God of Love) untie and set free their tufted hair covered with flowers, let their slender waist cave in and deliberately loosen their garment;

krupai viLaiviththu urukA mun sori malar mattu alar aNai pukku itha mathurak kalavi thanil suzhalum manak kavalai ozhiththu aruLvAyE: they provoke so much passion and melt, lead to the flower-sprinkled bed and offer so much carnal pleasure that my mind begins to reel; kindly put an end to this delusion and misery and bless me!

karuku niRaththu asuran mudith thalai oru paththu aRa mudukik kaNai thodum acchuthan marukak kumarEsA: He knocked down the ten crowned heads of RAvaNan, the dark-complexioned demon, by swiftly wielding His arrow; You are the nephew of that RAmA (Lord VishNu), Oh Lord KumarA!

kayilai malaik kizhavan idak kumari viruppodu karuthak kavi niRaiyap peRum varisaip pulavOnE: She is Goddess PArvathi, concorporate on the left side of Lord SivA, who belongs to Mount KailAsh; She willingly considered (breast-feeding You) and blessed You with the ability to compose many a song as the famous poet, ThirugnAna Sambandhar!

thiraL kamukin thalai idaRip pala kathalik kulai sithaRic cheRiyum vayal kathir alaiyath: Reaching up to the top of dense kamuku (betelnut) trees, knocking down bunches of many plantains and creating waves among the crops of paddy in the vast fields,

thirai mOthi thimithimi enap paRai aRaiyap peruku punal kedila nathith thiruvathikaip pathi murukap perumALE.: the water of River Kedila rushes with swelling waves amidst the sound of many drums making the noise "dhimi dhimi"; on its banks is the town Thiruvathigai*, Your abode, Oh MurugA, the Great One!


* Thiruvathigai is located 2 miles east of PaNNurutti on the banks of River KediLa.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 737 paravuvarik kayal - thiruvadhigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]