திருப்புகழ் 735 தாரகாசுரன் சரிந்து  (தேவனூர்)
Thiruppugazh 735 thAragAsuransarindhu  (dhEvanUr)
Thiruppugazh - 735 thAragAsuransarindhu - dhEvanUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
     தான தான தந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
     சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச்

சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
     தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை

ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
     மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும்

ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
     ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ

பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க
     பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி

பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
     பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே

சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த
     சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே

தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
     தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தாரகாசுரன்சரிந்து வீழ ... தாரகாசுரன் நிலை பெயர்ந்து வீழ்ந்து
இறக்க,

வேருடன்பறிந்து சாதி பூதரம் குலுங்க ... வேருடன் பறிபட்டு
மேலான மேருமலையும் நடுக்கம் கொள்ள,

முதுமீனச் சாகர ஓதை அம் குழம்பி நீடு தீகொளுந்த ...
முற்றிய மீன்களைக் கொண்ட அழகும் ஓசையும் உடைய சமுத்திரம்
கலக்கமுற்று பெரும் தீயில் பட,

அன்று தாரை வேல்தொ டுங்கடம்ப ... அன்று கூரிய வேலினைச்
செலுத்திய கடம்பனே என்றும்,

மததாரை ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் ... மதநீர்
ஒழுகும் வாயையும், ஆரவாரத்தை உடையதும், தேவலோகத்தில் உள்ள
பெருந்தலை கொண்டதுமான மலைபோன்ற ஐராவதம் என்ற யானை மீது

பொருந்து மானை யாளு ... அமர்ந்த தேவயானை என்னும் மானைப்
போன்றவளும்,

நின்ற குன்ற மறமானும் ... வள்ளிமலை என்ற குன்றத்தில் இருந்த
மான் போன்ற வேடப்பெண் வள்ளியும்,

ஆசை கூரு நண்ப என்று ... இருவரும் ஆசை கொள்ளும் நண்பனே
என்றும்,

மாம யூர கந்த என்றும் ... சிறந்த மயில்வாகனனே என்றும்,

ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ ... என் ஆசை தீர என்று
மனம் ஒருநிலையில் நின்று புகழ்வேனோ?

பார மார்தழும்பர் செம்பொன் மேனியாளர் ... (பார்வதி தேவியின்)
பாரமான மார்பின் தழும்பை உடையவர், செம்பொன் போன்ற
திருமேனியாளர்,

கங்கை வெண்கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி ...
கங்கை நதி, வெண்ணிறத்துக் கபால மாலை, கொன்றை, தும்பை,
சிறுதாளி என்னும் பூக்கள்,

பார மாசுணங்கள் சிந்து வார ஆரம் என்பு அடம்பு ... பாரமான
பாம்புகள், நொச்சிப்பூ இவற்றை மாலையாகப் பூண்டவர், எலும்பு, அடம்பு
என்ற மலர்,

பானல் கூவிளம் கரந்தை அறுகோடே ... கருங்குவளை, வில்வம்,
கரந்தை, அறுகம்புல் இவற்றோடு

சேரவே மணந்த நம்பர் ஈசனார் ... சேர்ந்து விளங்கி மணக்கும்
பெருமான், ஈசனார் ஆகிய சிவனின்

இடம் சிறந்த சீதளாரவிந்த வஞ்சி பெருவாழ்வே ... இடது
பாகத்தில் சிறந்து விளங்கும் குளிர்ந்த தாமரையில் அமரும் மாது பார்வதி
தேவியின் பெருஞ் செல்வமே,

தேவர் யாவருந்திரண்டு பாரின் மீது வந்திறைஞ்சு ... தேவர்கள்
யாவரும் ஒன்றுகூடி பூமியில் வந்து வணங்கும்

தேவனூர்விளங்க வந்த பெருமாளே. ... தேவனூருக்கு விளக்கம்
தர வந்த பெருமாளே.


* தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல்
தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.769  pg 2.770  pg 2.771  pg 2.772 
 WIKI_urai Song number: 740 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 735 - thAragAsuran sarindhu (dhEvanUr)

thAra kAsuran sarindhu veezha vErudan paRindhu
     jAthi bUtha rang kulunga ...... mudhumeena

sAga rOdhai yang kuzhambi needu thee koLundha andru
     thArai vEl thodung kadamba ...... madha thArai

Ara vAra vumbar kumba vAraN Achalam porundhu
     mAnai yALu nindra kundra ...... maRamAnum

Asai kUru naNba endru mA mayUra kandha endrum
     Aval theera endru nindru ...... pugazh vEnO

pAra mArtha zhumbar sempon mEni yALar gangai veN
     kapAla mAlai kondrai thumbai ...... chiRu thALi

bAra mAsu NangaL sindhu vAra vAra men padambu
     pAnal kUviLang karandhai ...... aRugOdE

sEravE maNandha nambar eesanAr idam siRandha
     seetha LAra vindha vanji ...... peru vAzhvE

dhEvar yAvarun thiraNdu pArin meedhu vandhi Rainju
     dhEvanUr viLanga vandha ...... perumALE.

......... Meaning .........

thAra kAsuran sarindhu veezha: The demon ThArakAsuran was knocked down and destroyed.

vErudan paRindhu jAthi bUtharang kulunga: The celebrated Mount Meru trembled on being uprooted.

mudhumeena sAga rOdhai yang kuzhambi needu thee koLundha: The awesome and noisy ocean, containing large fish, became turbulent and broke out with a big fire.

andru thArai vEl thodung kadamba: On that day, You wielded the sharp spear, Oh Lord, wearing the garland of kadappa flowers!

madha thArai Ara vAra vumbar kumba vAraN Achalam: Juices indicating wildness profusely flow from the mouth of the clamouring, large-headed and mountain-like elephant (AirAvadham) belonging to the celestials;

porundhu mAnai yALu: and mounting that elephant is the deer-like damsel, DEvayAnai;

nindra kundra maRamAnum: VaLLi, the damsel of the hunters, looking like a deer is residing in VaLLimalai;

Asai kUru naNba endru: and You are the beloved friend of both consorts, Oh Lord!

mA mayUra kandha endrum: You mount the great peacock, Oh KandhA!

Aval theera endru nindru pugazh vEnO: When shall I praise You as above to my heart's content and with single-minded devotion?

pAra mArtha zhumbar sempon mEni yALar: His chest has scars from the hugging large bosoms (of Mother PArvathi); His complexion is reddish-golden;

gangai veNkapAla mAlai kondrai thumbai chiRu thALi: the river Ganga, a garland of white skulls, flowers of kondRai (Indian laburnum), thumbai (leucas) and siruthALi,

bAra mAsu NangaL sindhu vAra vAra men padambu: large snakes, garlands of nochchi flowers, bones, adambu flowers,

pAnal kUviLang karandhai aRugOdE: black lily, leaves of vilwa, karanthai and aRugam (cynodon) grass - all these

sEravE maNandha nambar eesanAr: blended, adorn His fragrant body; He is our Lord SivA;

idam siRandha seetha LAra vindha vanji peru vAzhvE: and on the left part of His body, vanji (rattan reed) creeper-like Mother PArvathi is seated on a grand and cool lotus. You are the great treasure delivered by Her!

dhEvar yAvarun thiraNdu pArin meedhu vandhi Rainju: All the celestials congregate and come to the earth to worship You ardently in

dhEvanUr viLanga vandha perumALE.: DhEvanUr* that is brightened by Your presence, Oh Great One!


* DhEvanUr is a place of worship in South Arcot District, 5 miles away in the Northeastern direction of Fort Senji and 2 miles from ThirukkOvilUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 735 thAragAsuran sarindhu - dhEvanUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]