திருப்புகழ் 695 திரைவார் கடல்  (திருமயிலை)
Thiruppugazh 695 thiraivArkadal  (thirumayilai)
Thiruppugazh - 695 thiraivArkadal - thirumayilaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தனனாதன தனனா தனனாதன
     தனனா தனனாதன ...... தனதான

......... பாடல் .........

திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு
     திரிவே னுனையோதுதல் ...... திகழாமே

தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ
     சுதனே திரிதேவர்கள் ...... தலைவாமால்

வரைமா துமையாள் தரு மணியே குகனேயென
     அறையா வடியேனுமு ...... னடியாராய்

வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு
     மகநா ளுளதோசொல ...... அருள்வாயே

இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு
     மிழிவா கிமுனேயிய ...... லிலராகி

இருளா மனதேயுற அசுரே சர்களேமிக
     இடரே செயவேயவ ...... ரிடர்தீர

மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ
     மதமா மிகுசூரனை ...... மடிவாக

வதையே செயுமாவலி யுடையா யழகாகிய
     மயிலா புரிமேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு ... அலைகள்
கொண்ட நீண்ட கடலால் சூழப்பட்ட பூமியிலே உலகத்தாரோடு

திரிவேனுனையோதுதல் திகழாமே ... உன்னை ஓதிப் புகழ்தல்
இன்றித் திரிகின்றேன்.

தினநாளுமுனேதுதி மனதார பினே ... நாள்தோறும் முன்னதாகத்
துதிக்கும் மனநிலை நிரம்பப் பெற்று, அப்படிப்பட்ட மனம் வாய்த்த
பின்னர்,

சிவசுதனே திரிதேவர்கள் தலைவா ... சிவகுமாரனே,
மும்மூர்த்திகளின் தலைவனே,

மால் வரைமாது உமையாள் தரு மணியே ... இமயமலை மாதரசி
உமையாள் பெற்ற மணியே,

குகனேயென அறையா அடியேனும் உன் அடியாராய் ... குகனே
என்று ஓதி அடியேனும், உன் தொண்டர்களாய்

வழிபாடு உறுவாரொடு அருளா தரமாயிடு ... வழிபடும்
அடியார்களோடு அருளன்பு கூடியவனாக ஆகின்ற

மகநா ளுளதோ சொல அருள்வாயே ... விசேஷமான நாளும்
எனக்கு உண்டோ? உன் நாமங்களைச் சொல்ல நீ அருள் புரிவாயாக.

இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும் ... தலைமையான
யானை ஐராவதத்தின் தேவனாம் இந்திரனும், ஏனைய தேவர்கள்
அனைவரும்,

இழிவாகி முனே இயல் இலராகி ... தாழ்ந்த நிலையை அடைந்து,
முன்னர் தமது தகுதியை இழந்தவராகி,

இருளா மனதேயுற அசுரேசர்களேமிக ... மயக்க இருளடைந்த
மனத்தினராகி, அசுரத் தலைவர்கள் மிகவும்

இடரே செயவே அவர் இடர்தீர ... துன்பங்கள் செய்யவே, அந்த
தேவர்களது துயரம் நீங்க,

மறமா அயிலேகொடு வுடலே யிருகூறெழ ... வீரமிக்க சிறந்த
வேலினைக் கொண்டு உடல் இரண்டு கூறுபட,

மதமா மிகுசூரனை மடிவாக ... ஆணவமிக்க சூரனை, அவன்
மாமரமாக உருமாறினும், அழித்து

வதையே செயுமாவலி யுடையாய் ... வதை செய்த பெரும்
வலிமையை உடையவனே,

அழகாகிய மயிலா புரிமேவிய பெருமாளே. ... அழகு வாய்ந்த
மயிலாப்பூர்* தலத்தில் வாழ்கின்ற பெருமாளே.


* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின்
மையத்தில் இருக்கிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.669  pg 2.670  pg 2.671  pg 2.672 
 WIKI_urai Song number: 699 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 695 - thiraivAr kadal (thirumayilai)

thiraivAr kadal sUzhbuvi thanilE ulagOrodu
     thirivEn unai Odhudhal ...... thigazhAmE

dhina nALu munE thudhi manadhAra pinE siva
     suthanE thiri dhEvargaL ...... thalaivA mAl

varai mAdhu maiyAL tharu maNiyE guhanE ena
     aRaiyA adiyEnumun ...... adiyArAy

vazhipAd uRuvArodu aruLAdharam Ayidu
     mahanAL uLadhO sola ...... aruL vAyE

iRai vAraNa dhEvanum imaiyOr avarE varum
     izhivAgi munE iyal ...... ilarAgi

iruLA manadhE uRa asurEsargaLE miga
     idarE seyavEyavar ...... idartheera

maRa mA ayilEkodu udalE iru kURezha
     madhamA migusUranai ...... madivAga

vadhaiyE seyu mAvali udaiyAy azhagAgiya
     mayilApuri mEviya ...... perumALE.

......... Meaning .........

thiraivAr kadal sUzhbuvi thanilE ulagOrodu thirivEn: I roam around with people in this world, surrounded by wavy seas,

unai Odhudhal thigazhAmE: but without saying any prayers to You.

dhina nALu munE thudhi manadhAra: Every day, I must first have my heart filled with words of praise for You,

pinE sivasuthanE thiri dhEvargaL thalaivA: and then I must pray "Oh, SivA's Son, You are the Lord of the Trinity,

mAlvarai mAdhumaiyAL tharu maNiyE guhanE: You are the jewel delivered by Mother UmA, the daughter of the great Mount HimavAn, Oh GuhA!"

ena aRaiyA adiyEnumun adiyArAy: Extolling You like this, the humble me should become one among Your devotees

vazhipAd uRuvArodu aruLAdharam Ayidu: who worship You; and I must mingle with them and acquire devotion.

mahanAL uLadhO sola aruL vAyE: Will such a great day occur to me? Kindly bless me to chant Your names!

iRai vAraNa dhEvanum imaiyOr avarE varum: IndrA, who is the master of the royal elephant, AirAvadham, and all the celestials

izhivAgi munE iyal ilarAgi: were once humiliated and lost their status;

iruLA manadhE uRa asurEsargaLE miga idarE seyavE: their hearts were filled with darkness and delusion as the demon kings harassed them immensely.

yavar idartheera maRa mA ayilEkodu udalE iru kURezha: To end their sufferings, You took the mighty spear in Your hand and threw it at SUran and split his body into two.

madhamA migusUranai madivAga: The arrogant demon, SUran, who had disguised himself as a mango tree, was destroyed and

vadhaiyE seyu mAvali udaiyAy: killed by You, Oh strong and powerful one!

azhagAgiya mayilApuri mEviya perumALE.: You reside in the beautiful town, Mylapore*, Oh Great One!


* Mylapore (Thirumayilai), is in the heart of the city of Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 695 thiraivAr kadal - thirumayilai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]