திருப்புகழ் 660 கள்ளம் உள்ள  (வெள்ளிகரம்)
Thiruppugazh 660 kaLLamuLLa  (veLLigaram)
Thiruppugazh - 660 kaLLamuLLa - veLLigaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்ய தய்ய தய்ய தய்ய
     தய்ய தய்ய ...... தனதான

......... பாடல் .........

கள்ள முள்ள வல்ல வல்லி
     கையி லள்ளி ...... பொருளீயக்

கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு
     கல்வி செல்வர் ...... கிளைமாய

அள்ளல் துள்ளி ஐவர் செல்லு
     மல்லல் சொல்ல ...... முடியாதே

ஐய ரைய மெய்யர் மெய்ய
     ஐய செய்ய ...... கழல்தாராய்

வள்ளல் புள்ளி நவ்வி நல்கு
     வள்ளி கிள்ளை ...... மொழியாலே

மைய லெய்து மைய செய்யில்
     வையில் வெள்வ ...... ளைகளேற

மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின்
     வெள்ள வெள்ளி ...... நகர்வாழ்வே

வெய்ய சைய வில்லி சொல்லை
     வெல்ல வல்ல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய ...
கள்ளத் தனம் வாய்ந்த, சாமர்த்தியமான ஒரு விலைமகளின் கையிலே
(நான்) அள்ளிப் பொருள்களைக் கொடுப்பதால்,

கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளை மாய ...
(என்னுடைய) நவரத்தினக் கற்களும், நெற் குவியல்களும், வெள்ளிப்
பொருள்களும், தெளிந்த கல்விச் செல்வமும், செல்வமுள்ள
சுற்றத்தார்களும், எல்லாம் அழிந்து விலக,

அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே ...
(மாயைச்) சேற்றிலிருந்து குதித்து ஐம்புலன்கள் செலுத்துகின்ற துன்பம்
விவரிக்க முடியாது.

ஐயர் ஐய மெய்யர் மெய்ய ஐய செய்ய கழல் தாராய் ...
முனிவர்களுக்கு முனிவனே, மெய்யர்க்கு மெய்யனே, அழகிய, சிவந்த
உனது திருவடியைத் தாராய்.

வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே
மையல் எய்தும் ஐய
... வள்ளலே, புள்ளிகளை உடைய பெண் மான்
(லக்ஷ்மி) ஈன்ற வள்ளி நாயகியாகிய கிளியின் மொழிகளைக் கேட்டு,
மோகம் கொண்ட ஐயனே,

செய்யில் வையில் வெள் வளைகள் ஏற ... வயல்களில், புல்லில்
வெள்ளைச் சங்குகள் நிறைந்திட,

மெள்ள மள்ளர் கொய்யு(ம்) நெல்லின் வெள்ள வெள்ளிநகர்
வாழ்வே
... வயலில் உழவர்கள் மெதுவாக அறுவடை செய்த நெல் மிக்க
உள்ள வெள்ளிகர* நகரத்தில் வாழ்பவனே,

வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே. ...
விரும்புதற்குரிய (மேரு) மலையை வில்லாக வளைத்த சிவபெருமானுக்கு,
பிரணவ மொழியின் பொருளை (அவருக்குக் குருவாயிருந்து)
வெற்றியுடன் மொழிய வல்ல பெருமாளே.


* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா
ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.580  pg 2.581  pg 2.582  pg 2.583 
 WIKI_urai Song number: 664 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 660 - kaLLam uLLa (veLLigaram)

kaLLa muLLa valla valli
     kaiyi laLLi ...... poruLeeyak

kallu nellu veLLi theLLu
     kalvi selvar ...... kiLaimAya

aLLal thuLLi aivar sellum
     allal solla ...... mudiyAthE

aiya raiya meyyar meyya
     aiya seyya ...... kazhalthArAy

vaLLal puLLi navvi nalku
     vaLLi kiLLai ...... mozhiyAlE

maiya leythu maiya seyyil
     vaiyil veLva ...... LaikaLERa

meLLa maLLar koyyu nellin
     veLLa veLLi ...... nakrvAzhvE

veyya saiya villi sollai
     vella valla ...... perumALE.

......... Meaning .........

kaLLam uLLa valla valli kaiyil aLLi poruL eeya: By my generous giving away of the riches to the surreptitious and crafty whore,

kallu nellu veLLi theLLu kalvi selvar kiLai mAya: my precious gems, heaps of paddy, silver articles, lucid knowledge gained through education and wealthy relatives have all dwindled and disappeared;

aLLal thuLLi aivar sellum allal solla mudiyAthE: I cannot describe the misery caused by the five sensory organs leaping out of the sludge of my delusion;

aiyar aiya meyyar meyya aiya seyya kazhal thArAy: You are the Supreme Sage among all sages! You are the truthful Lord of all true devotees! Kindly grant me Your hallowed and rosy feet!

vaLLal puLLi navvi nalku vaLLi kiLLai mozhiyAlE maiyal eythum aiya: Oh my benefactor, You became enchanted with love after hearing the sweet words of the parrot-like VaLLi who was delivered by a spotted deer (Lakshmi)!

seyyil vaiyil veL vaLaikaL ERa: The paddy fields and green meadows of this town are filled with white conch shells;

meLLa maLLar koyyu(m) nellin veLLa veLLinakar vAzhvE: and the farmers leisurely harvest the paddy crop which fills the town of VeLLigaram* where You are seated!

veyya saiya villi sollai vella valla perumALE.: He bent the nice mountain MEru like a bow; He is Lord SivA to whom You taught (as His Master) the PraNava ManthrA very successfully, Oh Great One!


* VeLLigaram is 12 miles west of VEppagunta Railway Station, 22 miles north of ArakkOnam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 660 kaLLam uLLa - veLLigaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]