திருப்புகழ் 656 அடல் அரி மகவு  (வெள்ளிகரம்)
Thiruppugazh 656 adalarimagavu  (veLLigaram)
Thiruppugazh - 656 adalarimagavu - veLLigaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனன தனதன தனன
     தய்ய தனத்த தந்த ...... தனதானா

......... பாடல் .........

அடலரி மகவு விதிவழி யொழுகு
     மைவ ருமொய்க்கு ரம்பை ...... யுடனாளும்

அலைகட லுலகி லலம்வரு கலக
     வைவர் தமக்கு டைந்து ...... தடுமாறி

இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
     டெல்லை விடப்ர பஞ்ச ...... மயல்தீர

எனதற நினது கழல்பெற மவுன
     வெல்லை குறிப்ப தொன்று ...... புகல்வாயே

வடமணி முலையு மழகிய முகமும்
     வள்ளை யெனத்த யங்கு ...... மிருகாதும்

மரகத வடிவு மடலிடை யெழுதி
     வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா

விடதர திகுணர் சசிதரர் நிமலர்
     வெள்ளி மலைச்ச யம்பு ...... குருநாதா

விகசித கமல பரிபுர முளரி
     வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அடல் அரி மகவு விதி வழி ஒழுகு(ம்) ... வலிமை வாய்ந்த
திருமாலின் பிள்ளையாகிய பிரமன் எழுதிவிட்ட விதியின் வழியின்படி
செல்லுகின்ற

ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும் ... சுவை, ஒளி, ஊறு, ஓசை,
நாற்றம் ஆகிய ஐந்து உணர்ச்சிகளும் நெருங்கி (வேலை செய்யும்)
குடிலாகிய உடலுடன் நாள்தோறும்

அலைகடல் உலகில் அலம் வரு கலக ... அலைகளை உடைய
கடல் சூழ்ந்த உலகத்தில் துன்பம் உண்டாக்கி கலகம் செய்யும்

ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி ... ஐந்து (மெய், வாய், கண், மூக்கு,
செவி ஆகிய) இந்திரியங்களால் மனம் உடைந்து தடுமாற்றம் அடைந்து,

இடர் படும் அடிமை உளம் உரை உடலொடு ... வருத்தங்களுக்கு
ஆளான அடிமையாகிய நான் மனம், வாக்கு, காயம் இவை மூன்றும்

எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர ... உலகத்தில் ஈடுபடுதலில் இருந்து
விடுபடவும், மயக்கம் தீரவும்,

எனது அற நினது கழல் பெற ... எனது எனப்படும் பாசம் (மமகாரம்)
நீங்கவும், உனது திருவடியைப் பெறவும்,

மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே ... மோன வரம்பைக்
குறிப்பதாகிய ஓர் உபதேசத்தை அருள்புரிவாயாக.

வட மணி முலையும் அழகிய முகமும் ... (வள்ளியின்) மணி வடம்
அணிந்த மார்பும், அழகான முகமும்,

வள்ளை என தயங்கும் இரு காதும் மரகத வடிவும் ... வள்ளைக்
கொடி போல விளங்கும் இரண்டு காதுகளும், மரகத நிறமும்,

மடல் இடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா ...
படத்தில் எழுதி வள்ளியினுடைய தினைப்புனத்தில் நின்ற மயில் வீரனே,

விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் ... விஷத்தைக் கண்டத்தில்
தரித்தவர், மேலான குணத்தை உடையவர், சந்திரனைச் சடையில்
தரித்தவர், பரிசுத்தமானவர்,

வெள்ளி மலை சயம்பு குருநாதா ... வெள்ளி மலையாகிய கயிலையில்
வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான சிவபெருமானுக்கு குருநாதனே,

விகசிதம் கமல பரிபுர முளரி ... மலர்ந்த தாமரை போன்ற,
சிலம்பணிந்த தாமரை மலர் போன்ற, திருவடியை உடையவனே,

வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே. ... வெள்ளிகரம்* என்னும்
தலத்தில் அமர்ந்த பெருமாளே.


* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா
ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.572  pg 2.573 
 WIKI_urai Song number: 660 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 656 - adal ari magavu (veLLigaram)

adalari makavu vithivazhi yozhuku
     maiva rumoykku rampai ...... yudanALum

alaikada lulaki lalamvaru kalaka
     vaivar thamakku dainthu ...... thadumARi

idarpadu madimai yuLamurai yudalo
     dellai vidapra panja ...... mayaltheera

enathaRa ninathu kazhalpeRa mavuna
     vellai kuRippa thonRu ...... pukalvAyE

vadamaNi mulaiyu mazhakiya mukamum
     vaLLai yenaththa yangu ...... mirukAthum

marakatha vadivu madalidai yezhuthi
     vaLLi punaththil ninRa ...... mayilveerA

vidathara thikuNar sasitharar nimalar
     veLLi malaicca yampu ...... gurunAthA

vikasitha kamala paripura muLari
     veLLi karaththa marntha ...... perumALE.

......... Meaning .........

adalari makavu vithivazhi yozhukum: BrahmA, the son of powerful Vishnu, has already decreed the path of fate; according to that fate,

aiva rumoykku rampai yudanALum: the five senses (taste, sight, feeling, sound and smell) work in collusion in the cottage of my body. Every day,

alaikada lulakil alamvaru kalaka aivar thamakkudainthu thadumARi: the five sensory organs (mouth, eyes, body, ears and nose) create trouble in this world that is surrounded by wavy oceans, thereby causing heart-break and dizziness.

idarpadu madimai yuLamurai yudalodu ellai vida: In order for this miserable lowly person to be relieved of indulgence through mind, speech and action

pra panja mayaltheera: in worldly affairs, to put an end to this delusion,

enathaRa ninathu kazhalpeRa: to sever the attachment arising from my egoism and to attain Your hallowed feet,

mavuna vellai kuRippa thonRu pukalvAyE: kindly teach me a lesson indicating the frontier of tranquility.

vadamaNi mulaiyu mazhakiya mukamum: VaLLi's bejewelled bosoms, her pretty face,

vaLLai yenaththa yangu mirukAthum: her creeper-like delicate ears,

marakatha vadivu madalidai yezhuthi: and her emerald green complexion were all sketched by You on a lotus leaf,

vaLLi punaththil ninRa mayilveerA: and You stood there at the millet field, Oh valorous One mounting the peacock!

vidathara thikuNar sasitharar nimalar: He holds poison in His neck; He is extremely virtuous; He has placed the crescent moon on His tresses; He is unblemished;

veLLi malaicca yampu gurunAthA: His abode is the silvery mount KailAsh where He materialised as a 'lingA'*; You are the Master of that Lord SivA!

vikasitha kamala paripura muLari: Your feet are like the freshly blossomed lotus wearing the anklets;

veLLi karaththa marntha perumALE.: You have chosen Your abode at VeLLigaram*, Oh Great One!


* 'nAdha bhindu' ('vindhu') is explained here:

'nAdha' is the principle of sound. It is also known as 'nAma' or name. From this 'nAdha' or name, came out 'bhindu' or 'rUba' which is the form. These name and form are 'nAma' and 'rUba' or 'nAdha' and 'bhindu', what is known as 'OmkAra praNava', and these are the seed and seat of all matter and force. 'nAdha' is represented by a line or a pillar and the 'bhindu' by a disc or elliptic base. It is this 'nAdha' or vibration that is known as 'lingA', and 'bhindu' is what is known as its 'peetam'. This 'lingam' along with 'peetam' is the principle of name and form, that is beyond any comprehension, and the form that could be comprehended little better came out of the 'bhindu' in the order of evolution. This is what is known as 'Siva-Sakthi aikkiyam' which is 'rUbArUbam' ('rUba - arUbam'), that is with shape or without shape. (reference - Siva Agamam and Saiva SidhdhAndham).


** VeLLigaram is 12 miles west of VEppagunta Rail Station, 22 miles north of ArakkOnam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 656 adal ari magavu - veLLigaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]