திருப்புகழ் 655 அருவரை எடுத்த  (வயிரவிவனம்)
Thiruppugazh 655 aruvaraieduththa  (vayiravivanam)
Thiruppugazh - 655 aruvaraieduththa - vayiravivanamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனத்த தான தனதன தனத்த தான
     தனதன தனத்த தான ...... தனதான

......... பாடல் .........

அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு
     மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே

அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
     மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே

பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
     னிருகர மிகுத்த பார ...... முருகாநின்

பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
     பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே

சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி
     சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா

சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
     துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
     வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி

வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
     வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அருவரை யெடுத்த வீரன் ... அரியதான கயிலை மலையை அசைத்து
எடுக்க முயன்ற வீரனான ராவணன்

நெரிபட விரற்கள் ஊணும் ... நெரிபடும்படி தமது விரல்களை
ஊன்றிய

அரனிட மிருக்கு மாயி யருள்வோனே ... சிவபிரானின் இடது
பாகத்தில் உள்ள அன்னை பார்வதி பெற்றருளிய குழந்தையே,

அலைகட லடைத்த ராமன் ... அலை வீசும் கடலை அணையிட்டு
அடைத்த ஸ்ரீராமன்

மிகமன மகிழ்ச்சி கூரும் ... மிக்க மனமகிழ்ச்சி கொள்ளும்,

அணிமயில் நடத்தும் ஆசை மருகோனே ... அழகிய மயிலை
வாகனமாகக் கொண்டு எட்டுத் திக்கிலும் நடத்திச் செல்லும், மருமகனே,

பருதியி னொளிக்கண் வீறும் ... சூரியனது ஒளி தம்மிடத்தே
விளங்கும்

அறுமுக நிரைத்த தோள்பனிருகர ... முகங்கள் ஆறும்,
வரிசையான தோள்களும், பன்னிரண்டு கரங்களும் உடையவனே,

மிகுத்த பார முருகா ... மிகுந்த பெருமை வாய்ந்த முருகனே,

நின்பதமல ருளத்தி னாளு நினைவுறு ... உன் திருவடி மலரை
உள்ளத்தில் தினமும் நினைத்துத் தொழுதிருக்கும்

கருத்தர் தாள்கள் பணியவும் ... கருத்தை உடைய அடியார்களின்
தாள்களைப் பணிந்திடவும்

எனக்கு ஞானம் அருள்வாயே ... எனக்கு ஞானத்தைத்
தந்தருள்வாயாக.

சுருதிகளுரைத்த வேதன் உரைமொழி தனக்குள் ஆதி ...
வேதங்களை ஓதும் பிரமன் சொன்ன மொழிகளுள் முதலாவதான ஓம்
என்ற பிரணவத்தின் பொருளை

சொலுவென வுரைத்த ஞானகுருநாதா ... எனக்கு நீ சொல்லுக
என தந்தை சிவனார் கேட்க அவ்வாறே பொருள் உரைத்த ஞான குரு
நாதனே,

சுரர்பதி தழைத்து வாழ ... தேவர்களுக்குத் தலைவனான இந்திரன்
செழிப்புடன் வாழவும்,

அமர்சிறை யனைத்து மீள ... இருந்த சிறையினின்றும் தேவர்கள்
யாவரும் மீளவும்,

துணிபட அரக்கர் மாள விடும்வேலா ... வெட்டுண்டு அசுரர்கள்
இறந்தொழியவும், வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே,

மருமலர் மணக்கும் வாச நிறைதரு ... வாசனை மலர்கள் மணம்
வீசும் நறுமணம் நிறைந்துள்ள

தருக்கள் சூழும் வயல்புடை கிடக்கு ... மரங்கள் சூழ்ந்த வயல்கள்
பக்கத்தில் உள்ள

நீல மலர்வாவி வளமுறு தடத்தினோடு ... நீலோத்பல மலர்கள்
மலர்ந்துள்ள நீர்நிலைகளின் செழிப்பு வாய்ந்த கரைகளோடு

சரஸ்வதி நதிக்கண் வீறு ... சரஸ்வதி என்னும் ஆற்றினிடத்தே
விளங்குகின்ற

வயிரவி வனத்தில் மேவு பெருமாளே. ... வயிரவிவனம்* என்னும்
தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* இது பஞ்சாப் மாநிலத்தில் சரஸ்வதி நதிக்கரையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.570  pg 2.571 
 WIKI_urai Song number: 659 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 655 - aruvarai eduththa (vayiravivanam)

aruvarai eduththa veeran eripada viraRgaL UNu
     maran idam irukkum Ayi ...... aruLvOnE

alaikadal adaiththa rAman migamana magizhchchi kUru
     maNimayil nadaththum Asai ...... marugOnE

parudhiyin oLikkaN veeRum aRumuga niraiththa thOLpa
     nirukara miguththa bAra ...... murugAnin

padhamalar uLaththi nALu ninaivuRu karuththar thALgaL
     paNiyavum enakku nyAnam ...... aruLvAyE

surudhigaL uraiththa vEdhan uraimozhi thanakkuL Adhi
     soluvena uraiththa nyAna ...... gurunAthA

surarpathi thazhaiththu vAzha amarsiRai anaiththu meeLa
     thuNipada arakkar mALa ...... vidum vElA

marumalar maNakkum vAsa niRaitharu tharukkaL sUzhum
     vayalpudai kidakku neela ...... malarvAvi

vaLamuRu thadaththi nOdu sarasvathi nadhik kaN veeRu
     vayiravi vanaththil mEvu ...... perumALE.

......... Meaning .........

aruvarai eduththa veera neripada viraRgaL UNum: He pressed His toes so hard that RAvana, the great warrior, who tried to lift the rare mount KailAsh, was crushed underneath!

aran idam irukkum Ayi aruLvOnE: He is SivA who holds UmAdEvi on the left side of His body; and You are Her beloved son!

alaikadal adaiththa rAman migamana magizhchchi kUru: You are the most favourite (nephew) of Vishnu who as RAmA built a bridge across the ocean!

maNimayil nadaththum Asai marugOnE: You move around in all the eight directions, mounted on Your vehicle that is the lovely Peacock!

parudhiyin oLikkaN veeRum aRumuga niraiththa thOL panirukara: Your six faces shine like the Sun, and You have broad shoulders and twelve arms!

miguththa bAra murugA: Oh MurugA of great fame!

nin padhamalar uLaththi nALu ninaivuRu karuththar: Your devotees contemplate Your lotus feet in their hearts everyday;

thALgaL paNiyavum enakku nyAnam aruLvAyE: please grant me the wisdom to prostrate at the feet of such devotees.

surudhigaL uraiththa vEdhan uraimozhi thanakkuL Adhi soluvena: Your father SivA asked You to explain the significance of OM, the foremost ManthrA of the scriptures, first uttered by BrahmA,

uraiththa nyAna gurunAthA: and You readily spoke to Him of its significance, Oh Wise Master!

surarpathi thazhaiththu vAzha: For the prosperity of IndrA, the Leader of the DEvAs,

amarsiRai anaiththu meeLa: for the release of all DEvAs from the prisons of SUran,

thuNipada arakkar mALa: and for the mutilation of all asuras (demons),

vidum vElA: You threw Your Spear, Oh Lord!

marumalar maNakkum vAsa niRaitharu tharukkaL sUzhum vayal: Fragrant flowers blossom plentifully in trees in the surrounding fields,

pudai kidakku neela malarvAvi vaLamuRu thadaththi nOdu: along with the adjacent lily ponds full of blue lillies (neelOthpala flowers) and

sarasvathi nadhik kaN veeRu: on the fertile banks of the river Saraswathi which flows along

vayiravi vanaththil mEvu perumALE.: Your abode at Vayiravivanam*, Oh Great One!


* Vayiravivanam is said to be in the state of Punjab on the banks of river Saraswathi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 655 aruvarai eduththa - vayiravivanam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]