திருப்புகழ் 628 தவள மதியம்  (குன்றக்குடி)
Thiruppugazh 628 thavaLamadhiyam  (kundRakkudi)
Thiruppugazh - 628 thavaLamadhiyam - kundRakkudiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனன தனத்தந் ...... தனதான

......... பாடல் .........

தவள மதிய மெறிக்குந் ...... தணலாலே

சரச மதனன் விடுக்குங் ...... கணையாலே

கவன மிகவு முரைக்குங் ...... குயிலாலே

கருதி மிகவு மயக்கம் ...... படவோநான்

பவள நிகரு மிதழ்ப்பைங் ...... குறமானின்

பரிய வரையை நிகர்க்குந் ...... தனமேவுந்

திவளு மணிகள் கிடக்குந் ...... திருமார்பா

திகழு மயிலின் மலைக்கண் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தவள(ம்) மதியம் எறிக்கும் தணலாலே ... வெண்ணிறமுள்ள
சந்திரன் வீசும் நெருப்பாலும்,

சரச மதனன் விடுக்கும் கணையாலே ... காமலீலைக்கு இடம்
தரும் மன்மதன் செலுத்தும் பாணத்தாலும்,

கவன(ம்) மிகவும் உரைக்கும் குயிலாலே ... சோகத்தை மிகவும்
தெரியப்படுத்தும் குயிலாலும்,

கருதி மிகவு(ம்) மயக்கம் படவோ நான் ... எனது மனதில் மிகவும்
நினைத்து நான் மயக்கத்தை அடையலாமோ?

பவள(ம்) நிகரும் இதழ்ப் பைங் குறமானின் ... பவளத்தை ஒத்த
வாயிதழை உடைய பச்சை நிறமுள்ள குறத்தியான வள்ளியின்

பரிய வரையை நிகர்க்கும் தனம் மேவும் ... பருத்த மலை போன்ற
மார்பகங்களின் மீது புரளும்

திவளு(ம்) மணிகள் கிடக்கும் திருமார்பா ... ஒளி வீசும் மணி
மாலைகள் பொருந்தும் அழகிய மார்பனே,

திகழு(ம்) மயிலின் மலை கண் பெருமாளே. ... விளங்குகின்ற
மயூரகிரி என்கின்ற குன்றக்குடியில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே
7 மைலில் உள்ளது.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.
புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது. நிலவு, மன்மதன், பாணங்கள்,
குயில், முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1023  pg 1.1024 
 WIKI_urai Song number: 410 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 628 - thavaLa madhiyam (kundRakkudi)

thavaLa mathiya meRikkum ...... thaNalAlE

sarasa mathanan vidukkung ...... kaNaiyAlE

kavana mikavu muraikkung ...... kuyilAlE

karuthi mikavu mayakkam ...... padavOnAn

pavaLa nikaru mithazhppaing ...... kuRamAnin

pariya varaiyai nikarkkum ...... thanamEvum

thivaLu maNikaL kidakkum ...... thirumArpA

thikazhu mayilin malaikkaN ...... perumALE.

......... Meaning .........

thavaLa(m) mathiyam eRikkum thaNalAlE: Because of the fiery rays emitted by the white moon,

sarasa mathanan vidukkum kaNaiyAlE: because of the arrows shot by the provocative God of Love (Manmathan),

kavana(m) mikavum uraikkum kuyilAlE: and because of the extreme melancholy in the cuckoo's cooing,

karuthi mikavu(m) mayakkam padavO nAn: should I ponder so much to the extent of being in a trance?

pavaLa(m) nikarum ithazhp paing kuRamAnin: She is of a green complexion with lips looking like coral; She is VaLLi, the damsel of the KuRavAs;

pariya varaiyai nikarkkum thanam mEvum: swaying on top of her hill-like bosom

thivaLu(m) maNikaL kidakkum thirumArpA: are her gem chains resting on Your broad chest, Oh Lord!

thikazhu(m) mayilin malai kaN perumALE.: You are seated in the famous place MayUragiri (KundRakkudi)*, Oh Great One!


* KundRakkudi is in RAmanAthapuram District, 7 miles west of KAraikkudi.


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's role, expresses the pang of separation from the hero, Murugan.
The moonlight, the God of Love Manmathan, His arrows and the cuckoo are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 628 thavaLa madhiyam - kundRakkudi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]