திருப்புகழ் 619 மருவுமலர் வாசம்  (புகழிமலை)
Thiruppugazh 619 maruvumalarvAsam  (pugazhimalai)
Thiruppugazh - 619 maruvumalarvAsam - pugazhimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனதன தான தனனதன தான
     தனனதன தான ...... தனதான

......... பாடல் .........

மருவுமலர் வாச முறுகுழலி னாலும்
     வரிவிழியி னாலு ...... மதியாலும்

மலையினிக ரான இளமுலைக ளாலு
     மயல்கள்தரு மாதர் ...... வகையாலும்

கருதுபொரு ளாலு மனைவிமக வான
     கடலலையில் மூழ்கி ...... அலைவேனோ

கமலபத வாழ்வு தரமயிலின் மீது
     கருணையுட னேமுன் ...... வரவேணும்

அருமறைக ளோது பிரமன்முதல் மாலும்
     அமரர்முநி ராசர் ...... தொழுவோனே

அகிலதல மோது நதிமருவு சோலை
     அழகுபெறு போக ...... வளநாடா

பொருதவரு சூரர் கிரியுருவ வாரி
     புனல்சுவற வேலை ...... யெறிவோனே

புகலரிய தான தமிழ்முநிவ ரோது
     புகழிமலை மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மருவுமலர் வாச முறுகுழலினாலும் ... தலையில் வைத்துள்ள
பூங்கொத்துக்களின் நறுமணம் வீசும் கூந்தலினாலும்,

வரிவிழியினாலு மதியாலும் ... செவ்வரி ஓடிய விழிகளாலும்,
சந்திரன் போன்ற முகத்தாலும்,

மலையினிகரான இளமுலைகளாலு ... மலையை ஒத்த இளம்
மார்பகங்களாலும்,

மயல்கள்தரு மாதர் வகையாலும் ... வகைவகையான விதங்களில்
மோகத்தைத் தருகின்ற பெண்களாலும்,

கருதுபொருளாலு ... பேராசையுடன் விரும்பிச் சேர்க்கிற செல்வத்தாலும்,

மனைவிமகவான கடலலையில் மூழ்கி அலைவேனோ ...
மனைவி, மக்கள் என்ற சம்சார சாகர அலைகளில் மூழ்கி அல்லல்
அடைவேனோ?

கமலபத வாழ்வு தர ... உன் தாமரையைப் போன்ற திருவடிகளில்
படியும் வாழ்வைத் தர,

மயிலின் மீது கருணையுடனே முன் வரவேணும் ... மயில் மீது
ஏறி கருணையுடன் என்முன்பு நீ வர வேண்டும்.

அருமறைகளோது பிரமன்முதல் மாலும் ... அரிய வேதங்களை
ஓதும் பிரமன் முதலாக, திருமாலும்

அமரர்முநி ராசர் தொழுவோனே ... மற்ற தேவர்களும், முநிவர்களும்,
அரசர்களும் தொழப்பெற்றோனே,

அகிலதலம் ஓது நதிமருவு சோலை ... உலகத்துத் தலங்களில்
உள்ள யாவரும் புகழும் நதியின் அருகிலுள்ள சோலைகளால்

அழகுபெறு போக வளநாடா ... அழகு பெறும் செல்வ வளங்கள்
கூடிய நாடனே,

பொருதவரு சூரர் கிரியுருவ வாரி புனல்சுவற ... போர் செய்ய
வந்த சூரர்களையும், கிரெளஞ்ச மலையையும் ஊடுருவும்படியும், கடலில்
நீர் வற்றவும்

வேலை யெறிவோனே ... வேலைச் செலுத்தியவனே,

புகலரியதான தமிழ்முநிவர் ஓது ... சொல்லுதற் அரிதான தமிழ்
முநிவராகிய அகஸ்தியர் புகழ்கின்ற

புகழிமலை மேவு பெருமாளே. ... புகழிமலையில்* வீற்றிருக்கின்ற
பெருமாளே.


* புகழிமலை திருச்சி மாவட்டத்தில் புகலூர் ரயில் நிலையத்துக்கு 2 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.999  pg 1.1000  pg 1.1001  pg 1.1002 
 WIKI_urai Song number: 401 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 619 - maruvumalar vAsam (pugazhimalai)

maruvumalar vAsa muRukuzhali nAlum
     varivizhiyi nAlu ...... mathiyAlum

malaiyinika rAna iLamulaika LAlu
     mayalkaLtharu mAthar ...... vakaiyAlum

karuthuporu LAlu manaivimaka vAna
     kadalalaiyil mUzhki ...... alaivEnO

kamalapatha vAzhvu tharamayilin meethu
     karuNaiyuda nEmun ...... varavENum

arumaRaika LOthu piramanmuthal mAlum
     amararmuni rAsar ...... thozhuvOnE

akilathala mOthu nathimaruvu sOlai
     azhakupeRu pOka ...... vaLanAdA

poruthavaru cUrar kiriyuruva vAri
     punalcuvaRa vElai ...... yeRivOnE

pukalariya thAna thamizhmuniva rOthu
     pukazhimalai mEvu ...... perumALE.

......... Meaning .........

maruvumalar vAsa muRukuzhalinAlum: The fragrant hair of women adorned with bunches of flowers,

varivizhiyinAlu mathiyAlum: their eyes with thin red lines, their moon-like faces,

malaiyinikarAna iLamulaikaLAlu: their mountain-like young bosoms,

mayalkaLtharu mAthar vakaiyAlum: the many enticing methods of the tantalizing women,

karuthuporuLAlu: the wealth that is garnered with greed,

manaivimakavAna kadalalaiyil mUzhki alaivEnO: my wife and my children - will I have to drown in these waves of the sea of life, roaming about aimlessly?

kamalapatha vAzhvu thara: To bless me with a life dedicated to Your holy lotus feet,

mayilin meethu karuNaiyudanE mun varavENum: You must come before me mounting Your peacock!

arumaRaikaLOthu piramanmuthal mAlum: BrahmA who preaches the rare scriptures, Vishnu

amararmuni rAsar thozhuvOnE: and all other celestials, sages and kings worship You!

akilathalam Othu nathimaruvu sOlai azhakupeRu pOka vaLanAdA: Your kingdom is fertile and prosperous, with lovely groves enriched by the famous river and praised by people all over the world.

poruthavaru cUrar kiriyuruva vAri punalcuvaRa vElai yeRivOnE: You wielded the Spear that pierced through demons who waged war against You and also Mount Krouncha, dried up the water in the seas!

pukalariyathAna thamizhmunivar Othu pukazhimalai mEvu perumALE.: Your abode in Pugazhimalai* is praised by the Tamil Sage Agasthiyar whose fame is beyond description, Oh Great One!


* Pugazhimalai is 2 miles away from Pugalur Railway Station in Trichy District.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 619 maruvumalar vAsam - pugazhimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]