திருப்புகழ் 612 கோதி முடித்து  (ஊதிமலை)
Thiruppugazh 612 kOdhimudiththu  (Udhimalai)
Thiruppugazh - 612 kOdhimudiththu - UdhimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தனத்தத் தனத்த தந்தன
     தான தனத்தத் தனத்த தந்தன
          தான தனத்தத் தனத்த தந்தன ...... தனதான

......... பாடல் .........

கோதி முடித்துக் கனத்த கொண்டையர்
     சூது விதத்துக் கிதத்து மங்கையர்
          கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் ...... நினையாதே

கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
     ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
          கூறு மிடத்துக் கிதத்து நின்றருள் ...... புரிவாயே

நாத நிலைக்குட் கருத்து கந்தருள்
     போதக மற்றெச் சகத்தை யுந்தரு
          நான்முக னுக்குக் கிளத்து தந்தையின் ...... மருகோனே

நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது
     தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு
          நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள் ...... வடிவேலா

தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
     டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
          தோதிமி தித்தித் தனத்த தந்தவெ ...... னிசையோடே

சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி
     ரான துறத்தற் கிரக்க முஞ்சுப
          சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் ...... புரிவோனே

ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ
     காரண பத்தர்க் கிரக்க முந்தகு
          ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட ...... ரொளியோனே

ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன
     காபர ணத்திற் பொருட் பயன்றரு
          ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கோதி முடித்துக் கனத்த கொண்டையர் ... மயிர் சிக்கெடுத்து
முடித்த பெருத்த கூந்தல் முடியை உடையவர்கள்,

சூது விதத்துக்கு இதத்து மங்கையர் கூடிய அற்பச் சுகத்தை
நெஞ்சினில் நினையாதே
... சூதான வழிகளுக்கு சாமர்த்தியமாக
உதவி செய்யும் விலைமாதர்களைக் கூடுவதால் வரும் அற்பமான
இன்பத்தை மனத்தில் நினைக்காமல்,

கோழை மனத்தைக் கெடுத்து வன் புல ஞான குணத்தைக்
கொடுத்து
... திடம் இல்லாத மனத்தை ஒழித்து, திடமுள்ள கூரிய
மதியையும் ஞானத்தையும் கொண்ட குணத்தை அடையச் செய்து,

நின் செயல் கூறும் இடத்துக்கு இதத்து நின்று அருள்
புரிவாயே
... உனது வீரச் செயல்கள் புகழப்பெறும் இடங்களில்
இன்பமுடன் நான் நிற்கும்படியாக அருள் புரிவாயாக.

நாத நிலைக்குள் கருத்து உகந்து அருள் போதக ... நாத
நிலையில் (சிவ தத்துவத்தில்) கருத்து நிலைக்கும்படி மகிழ்ந்து அருள்
புரியும் ஞான குருவே,

மற்று எச்சகத்தையும் தரு நான் முகனுக்குக் கிளத்து
தந்தையின் மருகோனே
... எல்லா உலகங்களையும் படைக்கும்
பிரமனுக்கு தந்தை என்று
போற்றப்படும் திருமாலின் மருகனே,

நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீரிடுதற்குப்
பதத்தையும் தரு
... உன்னை நாடும் அடியேனுக்கு வந்த துன்பத்தைத்
தீரும்படி திருவடியையும் தந்தருளுகின்றவனே,

நாயகர் புத்ரக் குருக்கள் என்று அருள் வடிவேலா ... தலைவர்
சிவபிரான் அன்புடன் உன்னை மைந்தனே, தகப்பன் சாமியே என்று
அழைத்தருளிய கூரிய வேலனே,

தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
     டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
          தோதிமி தித்தித் தனத்த தந்த என
இசையோடே சூழ நடித்து
... தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
     டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
          தோதிமி தித்தித் தனத்த தந்த என்ற இசையுடன்
(சிவலோகத்துப்) பூதகணங்கள் சூழ நடனம் செய்து,

சடத்தில் நின்று உயிரான(து) துறத்தற்கு ... யான் உடலினின்றும்
உயிரை விடும்போது,

இரக்கமும் சுபசோபனம் உய்க்கக் கருத்தும் வந்து அருள்
புரிவோனே
... இரக்கமும், (என்னைச்) சுப மங்கள வாழ்த்து நிலையில்
சேர்ப்பதற்குத் திருவுள்ளமும் கூடிவந்து அருள் புரிவோனே,

ஓதி எழுத்துக்கு அடக்கமும் சிவ காரண பத்தர்க்கு
இரக்கமும்
... ஓதப்படும் மந்திரங்களுக்கு உட் பொருள் என்றும், சிவ
சம்பந்தமான பக்தர்களிடத்தில் இரக்கமுள்ளவன் என்றும்,

தகு ஓம் என எழுத்துக்கு உயிர்ப்பும் என் சுடர் ஒளியோனே ...
உயர்ந்த ஓம் என்ற பிரணவ எழுத்துக்கு உயிர் நாடி என்றும் சொல்ல
நின்ற பேரொளியானவனே,

ஓதி இணர்த்திக் குகைக்கு இடும் கனக ஆபரணத்தின்
பொருள் பயன் தரு
... ஒதியமரம் பூத்துக் குகையில் மலருக்குப்
பதிலாக உதிர்க்கின்ற பொன் ஆபரணம் போல அருமையான மோட்சப்
பலனைத் தருகின்றவனும்,

ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே. ... ஊதி
மலையில் உள்ளம் மகிழ்ந்து வீற்றிருப்பவனும் ஆகிய பெருமாளே.


* ஊதிமலை கோவை மாவட்டத்தில் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும்
வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.979  pg 1.980  pg 1.981  pg 1.982 
 WIKI_urai Song number: 394 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 612 - kOdhi mudiththu (Udhimalai)

kOthi mudiththuk kanaththa koNdaiyar
     cUthu vithaththuk kithaththu mangaiyar
          kUdiya aRpac cukaththai nenjinil ...... ninaiyAthE

kOzhai manaththaik keduththu vanpula
     njAna kuNaththaik koduththu ninseyal
          kURu midaththuk kithaththu ninRaruL ...... purivAyE

nAtha nilaikkut karuththu kantharuL
     pOthaka matRec cakaththai yuntharu
          nAnmuka nukkuk kiLaththu thanthaiyin ...... marukOnE

nAdu makaththeR kidukkaN vanthathu
     theeridu thaRkup pathaththai yuntharu
          nAyakar puthrak kurukka LenRaruL ...... vadivElA

thOthimi thiththith thimiththa dinguku
     deekuku dikkud dikukku diNdimi
          thOthimi thiththith thanaththa thanthave ...... nisaiyOdE

sUzha nadiththuc cadaththil ninRuyi
     rAna thuRaththaR kirakka munjcupa
          sOpana muykkak karuththum vantharuL ...... purivOnE

Otha vezhuththuk kadakka munjsiva
     kAraNa paththark kirakka munthaku
          Ome nezhuththuk kuyirppu mencuda ...... roLiyOnE

Othi yiNarththik kukaikki dungkana
     kApara NaththiR porut payanRaru
          Uthi kirikkut karuththu kantharuL ...... perumALE.

......... Meaning .........

kOthi mudiththuk kanaththa koNdaiyar: Their large coiffure is bound after untangling the hair and combing;

cUthu vithaththukku ithaththu mangaiyar: they are the whores who craftily facilitate illicit relationship;

kUdiya aRpac cukaththai nenjinil ninaiyAthE: ridding my mind of the trivial pleasure derived from such whores,

kOzhai manaththaik keduththu van pula njAna kuNaththaik koduththu: clearing my unsteady mind and granting me the virtues of a steady and sharp intellect and true knowledge,

nin seyal kURum idaththukku ithaththu ninRu aruL purivAyE: kindly bless me to remain blissfully at all places where Your valorous acts are praised!

nAtha nilaikkuL karuththu ukanthu aruL pOthaka: Bless me graciously so that my mind remains unswervingly in the musical sublimity (of SivA Principle), Oh Great Master!

matRu eccakaththaiyum tharu nAn mukanukkuk kiLaththu thanthaiyin marukOnE: You are the nephew of Lord VishNu, worshipped as the Father of BrahmA, the four-faced Lord who creates all the worlds!

nAdum akaththu eRku idukkaN vanthathu theeriduthaRkup pathaththaiyum tharu: Kindly grant me, Your ardent devotee, Your hallowed feet to destroy all my miseries that have arisen, Oh Lord!

nAyakar puthrak kurukkaL enRu aruL vadivElA: Lord SivA addresses You graciously as "Oh My Son, You are the Master of Your Father"; Oh Lord with a sharp spear!

thOthimi thiththith thimiththa dingkuku deekuku dikkud dikukku diNdimi thOthi mithiththith thanaththa thantha ena isaiyOdE sUzha nadiththu: To the meter of "thOthimi thiththith thimiththa dingkuku deekuku dikkud dikukku diNdimi thOthi mithiththith thanaththa thantha", You dance encircled by the devils in SivA's kingdom!

sadaththil ninRu uyirAna(thu) thuRaththaRku: At the time of shedding my life from this body,

irakkamum supasOpanam uykkak karuththum vanthu aruL purivOnE: You bless me with compassion and great munificence sending me to an auspicious state of prosperity, Oh Lord!

Othi ezhuththukku adakkamum siva kAraNa paththarkku irakkamum: You are the underlying principle of all chantings offered; You are kindhearted towards all Saivite devotees;

thaku Om ena ezhuththukku uyirppum en cudar oLiyOnE: You are the effulgent one being the pulse of the great PraNava ManthrA, OM!

Othi iNarththik kukaikku idum kanaka AparaNaththin poruL payan tharu: Just like a blooming odhiya tree in a cave, showers golden jewels in lieu of flowers, You bestow Your blessings in the rare form of liberation!

Uthi kirikkuL karuththu ukanthu aruL perumALE.: You are seated with relish in Udhimalai*, Oh Great One!


* Udhimalai is in Coimbatore District, 10 miles away from ThArApuram on the way to KangkEyam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 612 kOdhi mudiththu - Udhimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]