திருப்புகழ் 605 கொடிய மறலி  (திருச்செங்கோடு)
Thiruppugazh 605 kodiyamaRali  (thiruchchengkodu)
Thiruppugazh - 605 kodiyamaRali - thiruchchengkoduSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

கொடிய மறலியு மவனது கடகமு
     மடிய வொருதின மிருபதம் வழிபடு
          குதலை யடியவ னினதருள் கொடுபொரு ...... மமர்காண

குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
     மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
          கொடியு மகிலமும் வெளிபட இருதிசை ...... யிருநாலும்

படியு நெடியன எழுபுண ரியுமுது
     திகிரி திகிரியும் வருகென வருதகு
          பவுரி வருமொரு மரகத துரகத ...... மிசையேறிப்

பழய அடியவ ருடனிமை யவர்கண
     மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
          பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும்

சடில தரவிட தரபணி தரதர
     பரசு தரசசி தரசுசி தரவித
          தமரு கமிருக தரவனி தரசிர ...... தரபாரத்

தரணி தரதநு தரவெகு முககுல
     தடினி தரசிவ சுதகுண தரபணி
          சயில விதரண தருபுர சசிதரு ...... மயில்வாழ்வே

நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
     எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
          நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ ...... நெடுவானும்

நிலனும் வெருவர வருநிசி சரர்தள
     நிகில சகலமு மடியவொர் படைதொடு
          நிருப குருபர சுரபதி பரவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொடிய மறலியும் அவனது கடகமு மடிய ... கொடியவனான
யமனும், அவனது யமப்படையும் இறக்க,

ஒருதினம் இருபதம் வழிபடு ... ஒருநாள் உன் இரண்டு
திருவடிகளையும் வழிபட்டு நிற்கும்

குதலை அடியவன ... மழலைச் சிறுவனாகிய நான்

நினதருள் கொடு ... உன் திருவருளையே துணையாகக்கொண்டு

பொரும் அமர்காண ... யமனோடு சண்டை செய்யும் போரினைக்
காண்பதற்கு,

குறவர் மகள்புணர் புயகிரி சமுகமும் ... குறமகள் வள்ளி கட்டித்
தழுவும் பன்னிரு புயமலைகளும்,

அறுமுகமும் வெகு நயனமும் ... ஆறு திருமுகங்களும், பலவான
(பதினெட்டு)* கண்களும்,

ரவியுமிழ் கொடியும் ... சூரியனைக் கூவி வெளிப்படுத்தும் சேவல்
இருக்கும் கொடியும்,

அகிலமும் வெளிபட ... இவையாவும் பிரத்யக்ஷமாக,

இருதிசை யிருநாலும் ... மேல் கீழ் என்ற இரு திசைகளோடு எட்டுத்
திசைகளையும்,

படியு நெடியன எழுபுண ரியும் ... பூமியையும், நீண்ட ஏழு
கடல்களையும்,

முது திகிரி ... பழமையான சக்ரவாளகிரியையும்,

திகிரியும் வருகென வருதகு ... வலம் செய்து வருக என்று
ஆணையிட்டதும் உடனேயே ஆடிவந்து

பவுரி வருமொரு மரகத துரகத மிசையேறி ... கூத்தாடுகின்ற
ஒரு பச்சைமயில் வாகனத்தின் மீது ஏறி,

பழய அடியவருடன் ... பழமையான அடியார்களுடன்,

இமையவர்கணம் இருபுடையும் ... தேவர் கூட்டம் இருபுறமும்

மிகு தமிழ்கொடு மறைகொடு பரவ ... மிகுந்த தமிழ்ப்
பாடல்களையும் வேதகீதங்களையும் பாடி வணங்க,

வரும் அதில் அருணையில் ... முன்னொருமுறை
திருவண்ணாமலையில் என்முன் வந்ததுபோல

ஒருவிசை வரவேணும் ... இன்னொரு முறை வந்தருளல் வேண்டும்.

சடிலதர விடதர ... ஜடாமுடியைத் தாங்குபவரும், ஆலகால
விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும்,

பணிதர தரபரசுதர ... பாம்புகளை ஆபரணங்களாகப் பூண்டவரும்,
மேன்மையான மழுவைத் தாங்கியவரும்,

சசிதர சுசிதர ... சந்திரனை முடியில் தரித்தவரும், தூய்மையே
உருவாக நிற்பவரும்,

இத தமருக மிருக தர ... இதமாய் ஒலிக்கும் உடுக்கையையும்,
மானையும் திருக்கரங்களில் ஏந்தியவரும்,

வனிதர சிரதர ... பார்வதிதேவியை இடப்பாகத்தில் தாங்கியவரும்,
பிரம்மனின் சிரத்தைத் தாங்கியவரும்,

பாரத் தரணிதர ... சுமையான இந்த பூமியைத் தாங்கியவரும்,

தநுதர ... மேருமலையையே வில்லாகத் தரித்தவரும்,

வெகு முககுல தடினி தர ... ஆயிரம் முகங்களை உடைய சிறந்த
கங்காதேவியைச் சிரத்தில் தாங்கியவரும்

சிவ சுத ... ஆகிய சிவ பெருமானுடைய திருப்புதல்வனே,

குண தர ... அரும் குணங்களை உடையவனே,

பணி சயில ... நாகமலை** என்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளி
இருப்பவனே,

விதரண ... தயாள மூர்த்தியே,

தருபுர சசிதரு ... கற்பகத் தருவுள்ள தேவநாட்டின் இந்திராணி
மகள்

மயில்வாழ்வே ... மயிலை ஒத்த அழகி தேவயானையின் வாழ்வாக
இருப்பவனே,

நெடிய வுடலுரு இருளெழ ... அசுரர்களின் நீண்ட உடம்பின் கரிய
வடிவத்திலிருந்து இருள் வீசவும்,

எயிறு நிலவெழ ... அவர்களின் பற்களிலிருந்து ஒளி வீசவும்,

சுழல்விழி தழலெழ ... சுழல்கின்ற கண்களிலிருந்து நெருப்புப் பொறி
பறக்கவும்,

எழுகிரி நெரிய ... ஏழு குலகிரிகள் நெரிந்து பொடிபடவும்,

அதிர்குரல் புகையெழ இடியெழ ... அதிர்கின்ற குரலிலிருந்து புகை
எழவும், இடி போன்ற பேரொலி எழவும்,

நெடுவானும் நிலனும் வெருவர ... விசாலமான ஆகாயமும், பூமியும்
அச்சப்படவும்

வருநிசிசரர்தள ... வருகின்ற அசுரர்களின் சேனைகள்

நிகில சகலமு மடிய ... சிறிதும் மீதமில்லாமல் முழுவதும் அழிந்தொழிய

ஓர் படைதொடு நிருப ... ஒப்பற்ற சர்வ சம்கார வேற்படையை ஏவிய
தலைவனே,

குருபர ... மேலான குருநாதனே,

சுரபதி பரவிய பெருமாளே. ... தேவர் கோமான் இந்திரனால்
துதிக்கப் பெற்ற பெருமாளே.


குறிப்பு:

இப்பாடலில் 'தர' என்னும் சொல் 13 முறையும் 'எழ' என்னும் சொல் 6 முறையும் வந்திருப்பது சிறப்பு.


* 'சூரியன், 'சந்திரன்', 'அக்கினி' என மூன்று கண்கள் வீதம் முருகனின்
ஆறு முகங்களுக்கு 18 கண்கள் உள்ளன. இதைத்தான் ஆதி சங்கரர்
சுப்ரமண்ய புஜங்கத்தில் 'அஷ்டாதச விலோசனே' என்று கூறுகிறார்.


** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து
6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால்
நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.


'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே'
- என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.959  pg 1.960  pg 1.961  pg 1.962 
 WIKI_urai Song number: 387 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 605 - kodiya maRali (thiruchchengkOdu)

kodiya maRaliyum avanadhu kadagamu
     madiya orudhinam irupadham vazhipadu
          kudhalai adiyavan inadharuL koduporum ...... amarkANa

kuRavar magaLpuNar buyagiri samugamum
     aRu mugamumvegu nayanamu raviyumizh
          kodiyum akilamum veLipada irudhisai ...... irunAlum

padiyu nediyana ezhupuNa riyumudhu
     thigiri thigiriyum varugena varuthagu
          bavuri varumoru marakatha thurakadha ...... misaiyERip

pazhaya adiyavar udanimai yavargaNam
     irupudaiyu migu thamizhkodu maRaikodu
          parava varumadhil aruNaiyil oruvisai ...... varavENum

sadila dhara vidadhara paNidhara dhara
     parasu dhara sasidhara susidhara vidha
          thamaru gamiruga dharavani dharasira ...... dharapArath

dharaNidhara dhanudhara vegu mugakula
     thadini dhara sivasutha guNadhara paNi
          sayila vitharaNa tharupura sasitharu ...... mayilvAzhvE

nediya vudaluru iruLezha nilavezha
     eyiRu suzhalvizhi thazhalezha ezhugiri
          neriya adhirkural pugaiyezha idiyezha ...... neduvAnum

nilanum veruvara varu nisicharar dhaLa
     nikila sakalamu madiyavor padaithodu
          niruba gurupara surapathi paraviya ...... perumALE.

......... Meaning .........

kodiya maRaliyum avanadhu kadagamu madiya: The evil Death-God (Yaman) and his deadly army should all perish;

orudhinam irupadham vazhipadu kudhalai adiyavan ninadharuL kodu: and me, the little babbling child, worshipping Your two feet, with Your grace

porum amarkANa: should fight that Yaman. To witness my fight, You must come

kuRavar magaLpuNar buyagiri samugamum: with Your twelve mountain-like shoulders that are embraced by VaLLi, the damsel of the KuRavAs;

aRu mugamumvegu nayanamu: with Your six lovely faces; with several (eighteen*) eyes;

raviyumizh kodiyum: and with the Rooster in Your staff that announces the arrival of the sun everyday.

akilamum veLipada: You should manifest Yourself in such entirety.

irudhisai irunAlum: From west to east and in all eight directions,

padiyu nediyana ezhupuNa riyum: around the world, around the seven long oceans, and

mudhu thigiri thigiriyum varugena varuthagu: upon Your command to fly around the ancient mountain of ChakravALagiri, it could do so in a minute;

bavuri varumoru marakatha thurakadha: that is Your dancing Peacock, more like an emerald horse;

misaiyERi: and You must come mounted on that Peacock

pazhaya adiyavar udan imaiyavargaNam irupudaiyu: flanked by Your old devotees and the DEvAs in multitude

migu thamizhkodu maRaikodu: singing a lot of Tamil hymns, chanting VEdAs,

parava varumadhil aruNaiyil oruvisai varavENum: and praising Your Glory. Your coming to me should be similar to the vision You gave me in ThiruvaNNAmalai previously!

sadila dhara vidadhara: He adorns His head with tresses; He holds the venomous poison in His neck;

paNidhara: He wears the serpent as His jewellery;

dhara parasu dhara sasidhara susidhara: He holds the great mazhu (pickaxe) in His hand; He wears the crescent moon; He is an embodiment of purity;

idha thamaru gamiruga dhara: He holds the hand-drum that sounds soothingly; He holds the deer in His holy hand;

vani dhara sira dhara: He holds PArvathi on the left side of His body; He holds one of BrahmA's heads in the hand;

pArath dharaNidhara: He holds the heavy world in one hand;

dhanudhara: He holds Mount MEru as one of His bows;

vegu mugakula thadini dhara: and He holds on His tresses the great River GangA, with a thousand faces.

sivasutha: He is Lord SivA, and You are His Son!

guNadhara paNisayila: You are the most virtuous! Your abode is NAgamalai** also known as ThiruchchengkOdu!

vitharaNa: You are the most compassionate One!

tharupura sasitharu mayilvAzhvE: You are the consort of DEvayAnai, whose beauty is like a peahen and who is the daughter of IndrANi, of DEvAs' Land, with plenty of KaRpaga trees.

nediya vudaluru iruLezha: Darkness from the bodies of the asuras (demons) spread everywhere;

nilavezha eyiRu: their white teeth sparkled like moonlight;

suzhalvizhi thazhalezha: from their fiery eyes, sparks of fire emerged;

ezhugiri neriya: the seven hills of the asuras were shattered into pieces;

adhirkural pugaiyezha idiyezha: from the dying asuras and burning bodies, thunderous noise and smoke arose;

neduvAnum nilanum veruvara varu nisicharar dhaLa: and the armies of the asuras invading fiercely, scaring the sky and the earth,

nikila sakalamu madiya: were thoroughly uprooted and killed,

vor padaithodu niruba: when You threw Your unique weapon, the Spear Oh Lord!

gurupara surapathi paraviya perumALE.: Oh Supreme Master, You are worshipped by IndrA, Oh Great One!


Note: In this song, the word 'dhara' meaning "holding" has come 13 times and 'ezha' meaning "rising" has come 6 times.


* For each face, there are three eyes, namely, the Sun, the Moon and Agni, the Fire God; thus for six faces, there are 18 eyes.


** NAgamalai is another name of ThiruchchengkOdu because the mount is shaped like a serpent.
ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station.
As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given.


In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 605 kodiya maRali - thiruchchengkodu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]