திருப்புகழ் 596 வருத்தம் காண  (திருச்செங்கோடு)
Thiruppugazh 596 varuththamkANa  (thiruchchengkodu)
Thiruppugazh - 596 varuththamkANa - thiruchchengkoduSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தந் தான தானன தனத்தந் தான தானன
     தனத்தந் தான தானன ...... தனதான

......... பாடல் .........

வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு
     மயக்கம் பூண மோதிய ...... துரமீதே

மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய
     மரிக்கும் பேர்க ளோடுற ...... வணியாதே

பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய
     பிறப்புந் தீர வேயுன ...... திருதாளே

பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள்
     பெலத்தின் கூர்மை யானது ...... மொழிவாயே

இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடு
     எதிர்த்துஞ் சூரர் மாளவெ ...... பொரும்வேலா

இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன
     எனத்திண் கூளி கோடிகள் ...... புடைசூழத்

திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ்
     செழித்தன் பாக வீறிய ...... பெருவாழ்வே

திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு
     திருச்செங் கோடு மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும் ... வருத்தம்
உண்டாகும் வழியையே தேடும் குணத்தில் ஈடுபட்ட மாதர்களும்

மயக்கம் பூண மோதிய துரம் ஈதே ... மயக்கம் கொள்ளும்படி
அவர்களோடு உறவாடும் சுமையே இவ்வுடலாகும்.

மலக்கம் கூடியேயின உயிர்க்கும் சேதமாகிய மரிக்கும்
பேர்களோடு உறவு அணியாதே
... துன்பங்களோடு கூடிப்
பொருந்திய, உயிர்கள் (நற்கதி காணாது) கேடு அடையச் செய்யும்,
சாகப்போகும் மக்களுடைய உறவை நான் மேற்கொள்ளாமல்,

பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும்
தீரவே
... பெருத்து வளரும் பாவம் மிக்க (ஆணவம், கன்மம், மாயை
என்ற) மும்மலங்களின் கொடுமை கூடிய பிறப்பு ஒழியவே,

உனது இரு தாளே பெறத் தந்து ஆளவே ... உனது
திருவடிகளைப் பெறுமாறு எனக்குத் தந்து, என்னை ஆண்டருள்வாயாக.

உயர்ச் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது
மொழிவாயே
... மேலான சுவர்க்கத்தை நான் சேர்வதற்காக நீ அருள்
புரியும் சக்தியின் நுண் பொருளை எனக்கு மொழிந்தருளுக.

இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி வேல் கொடு
எதிர்த்தும் சூரர் மாளவே பொரும் வேலா
... இரத்தம் பெருகிப்
பாய உடலிலும் மார்பிலும் தாக்கி, வேலைக் கொண்டு எதிர்த்தும்
அசுரர்கள் இறந்து பட போர் புரிந்த வேலனே,

இசைக்கும் தாள மேளமே தனத்தந் தான தானன எனத் திண்
கூளி கோடிகள் புடை சூழ
... ஒலிக்கின்ற தாளமும் மேளமும்
தனத்தந் தான தானன என்ற ஒலியை எழுப்ப, வலிய கோடிக் கணக்கான
பூத கணங்கள் பக்கங்களில் சூழ,

திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ்
செழித்து அன்பாக வீறிய பெரு வாழ்வே
... மிகவும் அன்புடன்
ஒப்பற்ற மயிலை விரும்பி, புகழ் ஓங்கி வளர்ந்து அன்பே உருவாக
விளங்கும் பெருஞ் செல்வமே,

திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு ...
திரண்ட சங்குகளும், நீர் நிலைகளும், குளங்களும் மிகுத்து, கருங்
குவளை மலர்கள் சூழ்ந்து மலரும்

திருச்செங்கோடு மேவிய பெருமாளே. ... திருச் செங்கோடு*
என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து
6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால்
நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.


'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே'
- என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.941  pg 1.942 
 WIKI_urai Song number: 378 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 596 - varuththam kANa (thiruchchengkOdu)

varuththam kANa nAdiya kuNaththan pAna mAtharu
     mayakkam pUNa mOthiya ...... thurameethE

malakkam kUdi yEyina vuyirkkum cEtha mAkiya
     marikkum pErka LOduRa ...... vaNiyAthE

peruththum pAva neediya malaththin theemai kUdiya
     piRappum theera vEyuna ...... thiruthALE

peRaththan thALa vEyuyarc cuvarkkam cEra vEyaruL
     pelaththin kUrmai yAnathu ...... mozhivAyE

iraththam pAya mEnika Luraththum cAdi vElkodu
     ethirththum cUrar mALave ...... porumvElA

isaikkum thALa mELame thanaththan thAna thAnana
     enaththiN kULi kOdikaL ...... pudaisUzhath

thiruththan pAka vEyoru mayiRkoN dAdi yEpukazh
     cezhiththan pAka veeRiya ...... peruvAzhvE

thiratchang Odai vAvikaL mikuththum kAvi sUzhtharu
     thiruchcheng kOdu mEviya ...... perumALE.

......... Meaning .........

varuththam kANa nAdiya kuNaththu anpAna mAtharum mayakkam pUNa mOthiya thuram eethE: This body is but a huge burden that indulges in delusory carnal pleasure with women whose sole aim is to seek the path of misery.

malakkam kUdiyEyina uyirkkum sEthamAkiya marikkum pErkaLOdu uRavu aNiyAthE: In order that I do not associate with such mortal women who are disastrous and who waste my life away,

peruththum pAva neediya malaththin theemai kUdiya piRappum theeravE: and to put an end to this birth which is plagued with three kinds of slags (arrogance, karma and delusion) full of deadly sins,

unathu iru thALE peRath thanthu ALavE: kindly grant Your hallowed feet and take control of me;

uyarc cuvarkkam sEravE aruL pelaththin kUrmaiyAnathu mozhivAyE: Will You please explain the power of Your subtle grace that enables me to attain blissful liberation?

iraththam pAya mEnikaL uraththum cAdi vEl kodu ethirththum cUrar mALavE porum vElA: Blood gushed when You wielded Your spear on the chests and bodies of the demons, killing them in the battlefield, Oh Lord!

isaikkum thALa mELamE thanaththan thAna thAnana enath thiN kULi kOdikaL pudai sUzha: Millions of strong devils surrounded on all sides as the sound of "thanaththan thAna thAnana" emanated from the beating of drums;

thiruththa anpAkavE oru mayil koNdAdiyE pukazh cezhiththu anpAka veeRiya peru vAzhvE: You mount Your matchless peacock fondly and remain exalted as an icon of compassion, Oh my great Treasure!

thiraL changu Odai vAvikaL mikuththum kAvi sUzh tharu: In this place, rich conch shells abound, and there are many brooks and ponds, with black lilies blossoming everywhere;

thiruchchengkOdu mEviya perumALE.: this is Your abode, ThiruchchengkOdu*, Oh Great One!


* ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given.


In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 596 varuththam kANa - thiruchchengkodu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]