திருப்புகழ் 583 மோதி இறுகி  (விராலிமலை)
Thiruppugazh 583 mOdhiiRugi  (virAlimalai)
Thiruppugazh - 583 mOdhiiRugi - virAlimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தனதனன தான தனதனன
     தான தனதனன ...... தந்ததான

......... பாடல் .........

மோதி யிறுகிவட மேரு வெனவளரு
     மோக முலையசைய ...... வந்துகாயம்

மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி
     மூட மெனஅறிவு ...... கொண்டதாலே

காதி வருமியம தூதர் கயிறுகொடு
     காலி லிறுகஎனை ...... வந்திழாதே

காவ லெனவிரைய வோடி யுனதடிமை
     காண வருவதினி ...... யெந்தநாளோ

ஆதி மறையவனு மாலு முயர்சுடலை
     யாடு மரனுமிவ ...... ரொன்றதான

ஆயி யமலைதிரி சூலி குமரிமக
     மாயி கவுரியுமை ...... தந்தவாழ்வே

சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசை
     தோய வளர்கிரியி ...... னுந்திநீடு

சோலை செறிவுளவி ராலி நகரில்வளர்
     தோகை மயிலுலவு ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

மோதி இறுகி வட மேரு என வளரும் மோக முலை அசைய
வந்து
... மேல் எழுந்து, திண்ணிதாய், வடக்கில் உள்ள மேரு மலை போல்
வளருவதாய், காமத்தை ஊட்டும் மார்பகங்கள் அசையும்படி அருகே வந்து,

காயம் மோசம் இடும் அவர்கள் மாயை தனில் முழுகி மூடம்
என அறிவு கொண்டதாலே
... உடலைக் கொண்டு மோசம்
செய்கின்ற விலைமகளிரின் மாயையில் முழுகி, மூடத்தன்மை
என்னும்படி அறிவைக் கொண்ட காரணத்தால்,

காதி வரும் இயம தூதர் கயிறு கொடு காலில் இறுக எனை
வந்து இழாதே
... உயிரைப் பிரிக்க வரும் யம தூதர்கள் பாசக் கயிற்றால்
காலில் அழுத்தமாகக் கட்டி என்னை வந்து இழுக்காமல்,

காவல் என விரைய ஓடி உனது அடிமை காண வருவது இனி
எந்த நாளோ
... எனக்குக் காவலாக இருந்து வேகமாக ஓடிவந்து, உன்
அடிமையாகிய நான் காணும்படி நீ வருவது இனி எந்த நாள் ஆகுமோ?

ஆதி மறையவனும் மாலும் உயர் சுடலை ஆடும் அரனும் இவர்
ஒன்று அதான ஆயி
... ஆதி மறையவன் ஆகிய பிரமனும், திருமாலும்,
பெரிய சுடுகாட்டில் ஆடும் சிவனும் (ஆகிய இம் மூன்று பேரும்)
ஒன்றதான தாய்,

அமலை திரி சூலி குமரி மகமாயி கவுரி உமை தந்த வாழ்வே ...
குற்றம் அற்றவள், திரி சூலம் ஏந்தியவள், குமரி, மகமாயி, கெளரி, உமா
தேவி ஈன்ற செல்வமே.

சோதி நிலவு கதிர் வீசும் மதியின் மிசை தோய வளர் கிரியின்
உந்தி நீடுசோலை செறிவு(ள்)ள
... சோதியான ஒளிக்
கிரணங்களை வீசும் சந்திரன் மேலே தோயும்படி வளர்ந்துள்ள மலையின்
இடையே பாயும் ஆறும், நீண்ட சோலைகளும் நெருங்கியுள்ள

விராலி நகரில் வளர் தோகை மயில் உலவு தம்பிரானே. ...
விராலி நகரில்* பொலிந்து விளங்கும் தோகை மயிலின் மேல் உலவும்
தம்பிரானே.


* விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில்
மணப்பாறைக்கு அருகே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.903  pg 1.904 
 WIKI_urai Song number: 365 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 583 - mOdhi iRugi (virAlimalai)

mOthi yiRukivada mEru venavaLaru
     mOka mulaiyasaiya ...... vanthukAyam

mOsa midumavarkaL mAyai thanilmuzhuki
     mUda menARivu ...... koNdathAlE

kAthi varumiyama thUthar kayiRukodu
     kAli liRukaenai ...... vanthizhAthE

kAva lenaviraiya vOdi yunathadimai
     kANa varuvathini ...... yenthanALO

Athi maRaiyavanu mAlu muyarsudalai
     yAdu maranumiva ...... ronRathAna

Ayi yamalaithiri cUli kumarimaka
     mAyi kavuriyumai ...... thanthavAzhvE

sOthi nilavukathir veesu mathiyinmisai
     thOya vaLarkiriyi ...... nunthineedu

sOlai seRivuLavi rAli nakarilvaLar
     thOkai mayilulavu ...... thambirAnE.

......... Meaning .........

mOthi iRuki vada mEru ena vaLarum mOka mulai asaiya vanthu: Their bulging and robust bosom, growing like the Mount MEru in the north, moving provocatively, these whores approach and

kAyam mOsam idum avarkaL mAyai thanil muzhuki mUdam ena aRivu koNdathAlE: lead to treacherous acts with their body; I am drowned in delusory passion for them behaving in an utterly foolish manner;

kAthi varum iyama thUthar kayiRu kodu kAlil iRuka enai vanthu izhAthE: lest the messengers of Yaman (God of Death) come to take my life by tying my feet tightly with the rope of bondage and hauling me away,

kAval ena viraiya Odi unathu adimai kANa varuvathu ini entha nALO: You will have to rush to my rescue; will there be a day when I, Your bonded slave, am blessed with the vision of Your coming?

Athi maRaiyavanum mAlum uyar sudalai Adum aranum ivar onRu athAna Ayi: She is the Mother in whom the Trinity have combined into one form, namely, the primordial Lord of the VEdAs, BrahmA, Lord VishNu and Lord SivA, who dances in the large cremation ground;

amalai thiri cUli kumari makamAyi kavuri umai thantha vAzhvE: She is unblemished; She holds the Trident as a weapon; She is youthful; She is MahAmAyi, Gowri and UmAdEvi; You are the Treasure brought forth by Her, Oh Lord!

sOthi nilavu kathir veesum mathiyin misai thOya vaLar kiriyin unthi needusOlai seRivu(L)La: On this high mountain, the moon hovers with all its dazzling rays touching the crest; a river flows by, and long and dense groves abound;

virAli nakaril vaLar thOkai mayil ulavu thambirAnE.: This is the town of VirAlinagar* where You roam about elegantly, mounted on the peacock with a beautiful plume, Oh Great One!


* VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 583 mOdhi iRugi - virAlimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]