திருப்புகழ் 571 நிராமய புராதன  (விராலிமலை)
Thiruppugazh 571 nirAmayapurAdhana  (virAlimalai)
Thiruppugazh - 571 nirAmayapurAdhana - virAlimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதன தனாதனத் ...... தனதான

......... பாடல் .........

நிராமய புராதன பராபர வராம்ருத
     நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி

நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
     நிராயுத புராரியச் ...... சுதன்வேதா

சுராலய தராதல சராசர பிராணிகள்
     சொரூபமி வராதியைக் ...... குறியாமே

துரால்புகழ் பராதின கராவுள பராமுக
     துரோகரை தராசையுற் ...... றடைவேனோ

இராகவ இராமன்முன் இராவண இராவண
     இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென்

றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
     யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே

விராகவ சுராதிப பொராதுத விராதடு
     விராயண பராயணச் ...... செருவூரா

விராவிய குராவகில் பராரைமு திராவளர்
     விராலிம லைராஜதப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நிராமய புராதன ... நோய் இல்லாததும், பழமையானதும்,

பராபர ... எல்லாவற்றிற்கும் மேலானதும்,

வராம்ருத ... வரத்தைத் தருவதும், அழிவற்றதும்,

நிராகுல ... கவலை அற்றதும்,

சிராதிகப் ப்ரபையாகி ... முதன்மையான பேரொளியாக விளங்கி,

நிராச ... ஆசையற்றதும்,

சிவராஜ தவராஜர்கள் பராவிய ... சிவத்தில் மகிழும் தவசிரேஷ்டர்கள்
புகழ்வதுமாகி,

நிராயுத புர அரி ... ஆயுதமே இல்லாமல் (புன்னகையால்) திரிபுரத்தை
எரித்த சிவன்,

அச்சுதன்வேதா ... திருமால், பிரமன்,

சுராலய தராதல ... தேவலோகம், மண்ணுலகம்,

சர அசர பிராணிகள் ... இயங்கியும் நிலைத்தும் இருக்கும் உயிர்கள்,

சொரூபமிவர் ... இந்த எல்லா உருவங்களிலும் கலந்த

ஆதியைக் குறியாமே ... முழு முதற் பொருளாகிய முருகனைக்
குறித்து தியானிக்காமல்,

துரால்புகழ் ... பயனற்ற புகழைக் கொண்ட

பர ஆதின ... மற்றவருக்கு அடிமைப்பட்டு,

கராவுள ... முதலை போன்ற உள்ளத்தை உடையவரும்

பராமுக துரோகரை ... அலட்சிய சுபாவம் கொண்டவருமான
பாவிகளை

தராசையுற்று அடைவேனோ ... மண்ணாசை கொண்டு நான்
சேரலாமோ?

இராகவ இராமன் முன் ... ரகுவின் மரபிலே வந்த இராம பிரான்
முன்னொருநாளில்

இராவண இராவண இராவண இராஜன் ... அழுகுரலுற்றவனும்,
இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன்
என்ற அரசன்

உட்குடன்மாய் வென்ற ... அச்சப்பட்டு மாயும்படியாக வெற்றி
கொண்ட

இராகன்மலர் ஆள் ... அன்பு நிறைந்தவனாகிய திருமாலின்
கண்ணையே மலராகக் கொண்டருளிய

நிஜ புராணர் குமரா ... உண்மை வரலாற்றை* உடைய
சிவபெருமானின் திருக்குமரா,

கலை இராஜ ... கலைகளுக்கு எல்லாம் தலைவனே,

சொலவாரணர்க்கு இளையோனே ... புகழப்படும் அந்த
யானைமுகத்தோனுக்குத் தம்பியே,

விராகவ சுராதிப ... ஆசையே இல்லாதவனே, தேவர்களுக்கு
அதிபதியே,

பொராது தவிராது அடு ... போர் செய்யாமலேயே, தவறாமல்,
வெல்லவல்ல

விராயண பராயண ... வீர வழியிலே மிக விருப்பம் உடையவனே,

செருவூரா ... திருப்போரூரில் உறைபவனே,

விராவிய குராவகில் ... கலந்து விளங்கும் குராமரமும், அகில் மரமும்

பராரை முதிராவளர் ... பருத்த அடிமரத்துடன் நன்கு முதிர்ந்து
வளர்கின்ற

விராலிமலை ராஜதப் பெருமாளே. ... விராலிமலையில்**
வாழ்கின்ற, அரசகுணம் படைத்த பெருமாளே.


* திருவீழிமிழலையில் திருமால் சிவனை நாள்தோறும் 1000 தாமரை மலர்களால்
அர்ச்சித்து வழிபட்டு வந்தார். திருமாலின் அன்பைச் சோதிக்க, சிவன் ஒருநாள்
ஒரு மலரை ஒளித்து மறைக்க, திருமால் குறைந்த மலருக்கு பதிலாக, தாமரை
போன்ற தம் கண்ணையே மலராக அர்ச்சித்தபோது, சிவன் திருமாலின் அன்பை
மெச்சி சக்ராயுதத்தைப் பரிசாக வழங்கினார் என்பது வரலாறு.


** விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில்
மணப்பாறைக்கு அருகே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.867  pg 1.868  pg 1.869  pg 1.870 
 WIKI_urai Song number: 353 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 571 - nirAmaya purAdhana (virAlimalai)

nirAmaya purAdhana parApara varAmrutha
     nirAkula sirAdhikap ...... prabaiyAgi

nirAsasi varAjatha varAjargaL parAviya
     nirAyuda purAri ...... achacuthanvEdhA

surAlaya tharAthala sarAsara pirANigaL
     sorUpami varAdhiyaik ...... kuRiyAmE

thurAlpugazh parAdhina karAvuLa parAmuga
     dhurOgarai tharAsaiyutru ...... adaivEnO

irAgava irAmanmun irAvaNa irAvaNa
     irAvaNa irAjanut ...... kudanmAyvendru

irAgan malarANija purANar kumarAkalai
     irAjaso lavAraNarkku ...... iLaiyOnE

virAgava surAdhipa porAdhu thavirAdhadu
     virAyaNa parAyaNa ...... cheruvUrA

virAviya kurAvagil parAraimu dhirAvaLar
     virAlimalai rAjathap ...... perumALE.

......... Meaning .........

nirAmaya purAdhana parApara: That which is free from disease, which is ancient, and supreme;

varAmrutha nirAkula: which grants a boon, is immortal and without worries;

sirAdhikap prabaiyAgi nirAsa: which is foremost, luminous and without any desire;

sivarAja thavarAjargaL parAviya: which is worshipped by Saivite holy men;

nirAyuda purAri: which is SivA, who burnt down Thirisirapuram without any weapon;

achacuthanvEdhA: which is Vishnu and BrahmA;

surAlaya tharAthala: which is Heaven and Earth;

sarAsara pirANigaL: which is in all animals and plants, movable and immovable; and

sorUpami varAdhiyaik kuRiyAmE: That ancient form in all these is MurugA - I did not meditate concentrating on that form.

thurAlpugazh parAdhina karAvuLa parAmuga: Instead, I became a slave to useless people who have a mind of a crocodile and are indifferent to me;

dhurOgarai tharAsaiyutru adaivEnO: and why should I go after these treacherous people with materialistic desires?

irAgava irAmanmun: Once, Rama, who hails from Raghu's dynasty,

irAvaNa irAvaNa irAvaNa irAjanut kudanmAyvendru: won over RAvaNan, who had a crying voice out of fear for Rama and with a dark complexion like the night;

irAgan: (that Rama is none other than) the loving Vishnu;

malarANija purANar kumarA: His daily worship with flowers to SivA (including His lotus eye as a flower)* is a known true story; and You are the Son of that SivA!

kalai irAja: You are the King of all arts!

so lavAraNarkku iLaiyOnE: You are the younger brother of famous elephant-faced VinAyagA!

virAgava surAdhipa: You are without any attachment! You are the leader of all DEvAs!

porAdhu thavirAdhadu virAyaNa parAyaNa: Without fighting any wars, You are always able to win, and You never fail in Your victorious pursuits!

cheruvUrA: You reside in the town of ChruvUr (ThiruppOrUr).

virAviya kurAvagil parAraimu dhirAvaLar: There is a variety of kurA trees and agil trees, with huge and thick trunks, surrounding

virAlimalai rAjathap perumALE.: VirAlimalai** where You rule right royally, Oh Great One!


* Once in Thiriveezhimizhalai Vishnu worshipped SivA offering daily 1,000 lotus flowers. One day, to test Vishnu's commitment, Sive hid a lotus flower. Vishnu realized that He was short of one flower and offered His own eye, which was lotus-like. SivA was touched by Vishnu's devotion and blessed Him with the ChakrA (which is Sudharsana) - This story is in Vishnu PurANam.


** VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 571 nirAmaya purAdhana - virAlimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]