திருப்புகழ் 497 காவி உடுத்தும்  (சிதம்பரம்)
Thiruppugazh 497 kAviuduththum  (chidhambaram)
Thiruppugazh - 497 kAviuduththum - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தனத்தம் தான தனத்தம்
     தான தனத்தம் ...... தனதான

......... பாடல் .........

காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
     காடுகள் புக்குந் ...... தடுமாறிக்

காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
     காசினி முற்றுந் ...... திரியாதே

சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
     தேற வுதிக்கும் ...... பரஞான

தீப விளக்கங் காண எனக்குன்
     சீதள பத்மந் ...... தருவாயே

பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
     பாழ்பட வுக்ரந் ...... தருவீரா

பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
     பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா

தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
     சோலை சிறக்கும் ...... புலியூரா

சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்
     தோகை நடத்தும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

காவி யுடுத்தும் ... காவித் துணியை உடுத்திக் கொண்டும்,

தாழ்சடை வைத்தும் ... தாழ்ந்து தொங்கும் சடையை வளர்த்து
வைத்தும்,

காடுகள் புக்கும் தடுமாறி ... காடுகளில் புகுந்து தடுமாறியும்,

காய்கனி துய்த்தும் ... காய், பழவகைகளைப் புசித்தும்,

காயம் ஒறுத்தும் ... தேகத்தை விரதங்களால் வருத்தியும்,

காசினி முற்றும் திரியாதே ... உலகம் முழுவதும் திரிந்து
அலையாமல்,

சீவன் ஒடுக்கம் ... சீவனை* (சிவமயமாக) ஒடுக்குதலும்

பூத வொடுக்கம் ... ஐம்பூதங்களுடைய ஒடுக்குதலும்

தேற உதிக்கும் ... நன்றாக உண்டாகும்படி,

பரஞான தீப விளக்கம் காண ... மேலான ஞான ஒளி
விளக்கத்தினையான் காணும்படி,

எனக்குன் சீதள பத்மம் தருவாயே ... எனக்கு உன் குளிர்ந்த
தாமரை அடிகளைத் தந்தருள்க.

பாவ நிறத்தின் தாருக வர்க்கம் ... பாவமே உருவெடுத்த
தாருகாசுரன் கூட்டத்தினர்

பாழ்பட உக்ரம் தருவீரா ... பாழ்பட்டொழிய கோபம் காட்டிய வீரனே,

பாணிகள் கொட்டும் பேய்கள் ... போர்க்களத்தில் கைகளைக்
கொட்டும் பேய்கள்

பிதற்றும் பாடலை மெச்சும் கதிர்வேலா ... உளறும்
பாடல்களைப் பாராட்டும் ஒளி வேலனே,

தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்கும் ... அன்னங்கள் நிற்கும்
வயல்கள் சூழ்ந்த

சோலை சிறக்கும் புலியூரா ... சோலைகள் விளங்கும்
புலியூரனே (சிதம்பரேசனே),

சூரர் மிகக்கொண்டாட ... சூரர்கள் மிகக் கொண்டாடும்படியாக

நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே. ... நடனமாடும்
மயிலினை நடத்தும் பெருமாளே.


* சீவன் என்பதில் உள்ள (சீ) இரு மாத்திரை நெடில். அதனை ஒரு மாத்திரை
குறில் எழுத்தாக (சி) ஒடுக்கினால், சீவன் சிவன் என்று ஆகிவிடும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.493  pg 2.494  pg 2.495  pg 2.496 
 WIKI_urai Song number: 638 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Kumaravayaloor Thiru T. Balachandhar
'குமார வயலூர்' திரு T. பாலசந்தர்

Thiru T. Balachandhar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 497 - kAvi uduththum (chidhambaram)

kAvi uduththun thAzh sadai vaiththung
     kAdugaL pukkun ...... thadumARi

kAy kani thuyththung kAyam oRuththung
     kAsini mutrun ...... thiriyAdhE

jeevan odukkam bUtha odukkam
     thERa uddhikkum ...... paranyAna

dheepa viLakkang kANa enakkun
     seethaLa padhman ...... tharuvAyE

pAva niRaththin thAruka varggam
     pAzh pada ugran ...... tharu veerA

pANigaL kottum pEygaL pidhatrum
     pAdalai mechchung ...... kadhirvElA

thUvigaL niRkum sAli vaLaikkum
     sOlai siRakkum ...... puliyUrA

sUrar migak koNdAda nadikkun
     thOgai nadaththum ...... perumALE.

......... Meaning .........

kAvi uduththun: Wearing saffron coloured robes,

thAzh sadai vaiththung: growing long unkempt wild tresses,

kAdugaL pukkun thadumARi: roaming aimlessly around jungles,

kAy kani thuyththum: living on fruits and vegetables,

kAyam oRuththung: torturing the body with fasting and other rituals,

kAsini mutrun thiriyAdhE: and wandering all over the world are futile.

jeevan odukkam: The shrinking of the self into the soul

bUtha odukkam thERa uddhikkum: and the control of the five elements and senses will give rise to

paranyAna dheepa viLakkam: supreme knowledge and a great illumination.

kANa enakkun seethaLa padhman tharuvAyE: To enable me to see that Light, You must grant me Your cool lotus feet.

pAva niRaththin thAruka varggam pAzh pada: TharukAsuran and his clan, who were nothing but embodiment of sin, were decimated

ugran tharu veerA: by Your anger, Oh valorous One!

pANigaL kottum pEygaL pidhatrum: Overjoyed by Your victory, the ghosts in the battlefield clap their hands and sing cacaphonously,

pAdalai mechchung kadhirvElA: and those songs are hailed by You, Oh Lord with the bright Spear!

thUvigaL niRkum sAli vaLaikkum sOlai: Swans abound in the paddy fields, and plenty of groves surround

siRakkum puliyUrA: the town, PuliyUr (Chidhambaram); and You are there!

sUrar migak koNdAda nadikkun thOgai: Your peacock dances to the joy of all warriors,

nadaththum perumALE.: and You move about mounted on that peacock, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 497 kAvi uduththum - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]