திருப்புகழ் 491 கொந்தள வோலைகள் ஆட  (சிதம்பரம்)
Thiruppugazh 491 kondhaLavOlaigaLAda  (chidhambaram)
Thiruppugazh - 491 kondhaLavOlaigaLAda - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தன தானன தானத்தம்
     தந்தன தானன தானத்தம்
          தந்தன தானன தானத்தம் ...... தனதான

......... பாடல் .........

கொந்தள வோலைக ளாடப்பண்
     சங்கொளி போல்நகை வீசித்தண்
          கொங்கைகள் மார்பினி லாடக்கொண் ...... டையென்மேகம்

கொங்கெழு தோள்வளை யாடக்கண்
     செங்கயல் வாளிகள் போலப்பண்
          கொஞ்சிய கோகில மாகப்பொன் ...... பறிகாரர்

தந்திர மாமென வேகிப்பொன்
     தொங்கலொ டாரமு மாடச்செந்
          தம்பல வாயொடு பேசிக்கொண் ...... டுறவாடிச்

சம்பள மீதென வோதிப்பின்
     பஞ்சணை மேல்மய லாடச்சஞ்
          சங்கையில் மூளியர் பால்வைக்குஞ் ...... செயல்தீராய்

அந்தக னாருயிர் போகப்பொன்
     திண்புர மோடெரி பாயப்பண்
          டங்கச னாருடல் வேகக்கண் ...... டழல்மேவி

அண்டர்க ளோடட லார்தக்கன்
     சந்திர சூரியர் வீழச்சென்
          றம்பல மீதினி லாடத்தன் ...... குருநாதா

சிந்துர மோடரி தேர்வர்க்கம்
     பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன்
          சிந்திட வேல்விடு வாகைத்திண் ...... புயவேளே

செங்குற மாதுமி னாளைக்கண்
     டிங்கித மாயுற வாடிப்பண்
          செந்தமிழ் மால்புலி யூர்நத்தும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொந்தள ஓலைகள் ஆடப் பண் சங்கு ஒளி போல் நகை
வீசித் தண் கொங்கைகள் மார்பினில் ஆட
... தலை மயிர்ச்
சுருளின் கீழுள்ள காதோலைகள் அசைய, சீரான சங்கின் ஒளியைப்
போல பற்கள் ஒளியை வீசி, குளிர்ச்சியான மார்பகங்கள்
நெஞ்சில் அசைய,

கொண்டை என் மேகம் கொங்கு எழு தோள் வளை ஆடக்
கண் செம் கயல் வாளிகள் போல
... கொண்டை என்கின்ற கறுத்த
மேகமும் வாசனையை எழுப்பி வீச, தோள் வளையல்கள் ஆட, கண்கள்
சிவந்த கயல் மீன் போலவும் அம்புகள் போலவும் விளங்க,

பண் கொஞ்சிய கோகிலமாகப் பொன் பறிகாரர் தந்திரமாம்
என ஏகி
... இசை கொஞ்சும் குயிலென விளங்கி, பொன் காசுக்களைப்
பறிப்பவர்களாகிய விலைமாதர்கள் தந்திரச் செயல்களுடன் சென்று,

பொன் தொங்கலொடு ஆரமும் ஆடச் செம் தம்பல வாயொடு
பேசிக் கொண்டு உறவாடி
... பொன் மாலையுடன் ஆரமும் கழுத்தில்
அசைய, சிவந்த தாம்பூலக் கரையுடைய வாயுடன் பேசியிருந்து, பல உறவு
முறைகளைக் கையாண்டு,

சம்பளம் ஈது என ஓதிப் பின் பஞ்சணை மேல் மயல் ஆடு
அச்சம் சங்கை இல் மூளியர் பால் வைக்கும் செயல் தீராய்
...
(தனக்குக் கொடுக்க வேண்டிய) தொகை இவ்வளவு என்று நிச்சயித்து,
அதன் பின்னர் பஞ்சு மெத்தையின் மேல் காம மயக்கப் பேச்சுக்களைப்
பேசும், பயமும் வெட்கமும் இல்லாத அறிவிலிகளிடத்தே அன்பு வைக்கும்
இழிச் செயலை ஒழித்தருளுக.

அந்தகன் ஆருயிர் போகப் பொன் திண் புரமோடு எரி பாயப்
பண்டு அங்கசனார் உடல் வேகக் கண் தழல் மேவி
...
யமனுடைய அரிய உயிர் அழிந்து போகவும், அழகிய வலிய திரி புரங்கள்
எரி பாய்ந்து அழியவும், முன்பு மன்மதனுடைய உடல் வெந்து விழவும்,
நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பைச் செலுத்தி,

அண்டர்களோடு அடல் ஆர் தக்கன் சந்திர சூரியர் வீழச்
சென்று அம்பல மீதினில் ஆடு அத்தன் குருநாதா
...
தேவர்களுடன் வலிமை பொருந்திய தக்கன், சந்திர சூரியர்களும்
பங்கப்பட விழச் செய்தபின் போய் (சிதம்பரத்திலுள்ள) பொன்
அம்பலத்தின் மீது கூத்தாடின பெருமானாகிய சிவபிரானுக்குக்
குரு நாதனே,

சிந்துரமோடு அரி தேர் வர்க்கம் பொங்கமொடு ஏழ் கடல்
சூர் பத்மன் சிந்திட வேல் விடு வாகைத் திண் புய வேளே
...
யானையுடன், குதிரை, தேர்க் கூட்டங்களின் சேனைகள் எழுச்சியுடன்,
ஏழு கடல்களும், சூரபத்மனும் அழிபட வேலைச் செலுத்திய வெற்றி
வாய்ந்த வலிய புயங்களைக் கொண்ட தலைவனே,

செம் குற மாது மி(ன்)னாளைக் கண்டு இங்கிதமாய்
உறவாடிப் பண் செந்தமிழ் மால் புலியூர் நத்தும் பெருமாளே.
...
செவ்விய குற மாதாகிய வள்ளி என்னும் மின்னல் போன்ற அழகியைப்
பார்த்து, இனிமையாய் உறவு பூண்டு, இசை நிரம்பிய செந்தமிழ்
விளங்கும் புலியூராகிய சிதம்பரத்தை விரும்பும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.475  pg 2.476  pg 2.477  pg 2.478 
 WIKI_urai Song number: 632 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 491 - konthaLavOlai (chidhambaram)

konthaLa vOlaika LAdappaN
     sangoLi pOlnakai veesiththaN
          kongaikaL mArpini lAdakkoN ...... daiyenmEkam

kongezhu thOLvaLai yAdakkaN
     sengayal vALikaL pOlappaN
          konjiya kOkila mAkappon ...... paRikArar

thanthira mAmena vEkippon
     thongalo dAramu mAdacchen
          thampala vAyodu pEsikkoN ...... duRavAdic

champaLa meethena vOthippin
     panjaNai mElmaya lAdacchanj
          changaiyil mULiyar pAlvaikkum ...... seyaltheerAy

anthaka nAruyir pOkappon
     thiNpura mOderi pAyappaN
          dangasa nArudal vEkakkaN ...... dazhalmEvi

aNdarka LOdada lArthakkan
     chanthira cUriyar veezhacchen
          Rampala meethini lAdaththan ...... gurunAthA

sinthura mOdari thErvarkkam
     pongamo dEzhkadal cUrpathman
          sinthida vElvidu vAkaiththiN ...... puyavELE

senguRa mAthumi nALaikkaN
     dingitha mAyuRa vAdippaN
          senthamizh mAlpuli yUrnaththum ...... perumALE.

......... Meaning .........

konthaLa OlaikaL Adap paN sangu oLi pOl nakai veesith thaN kongaikaL mArpinil Ada: The swinging ear-studs beneath their curly hair swayed; the neat rows of their teeth, bright like the conch-shell, dazzled; their cool bosom heaved on the chest;

koNdai en mEkam kongu ezhu thOL vaLai Adak kaN sem kayal vALikaL pOla: their tufted hair was like the dark cloud exuding a fragrance; the ornaments in their shoulders quivered; their eyes looked like the reddish kayal fish and arrows;

paN konjiya kOkilamAkap pon paRikArar thanthiramAm ena Eki: their voice sounded like the musical cuckoo's; these whores are expert gold-grabbers and they go about conjuring up several tricks;

pon thongalodu Aramum Adac chem thampala vAyodu pEsik koNdu uRavAdi: with golden chains and garlands dangling around their neck, they engage in a chat with their mouth reddened by the chewing of betel leaves; they invent many a relationship (with their suitors)

sampaLam eethu ena Othip pin panjaNai mEl mayal Adu accham sangai il mULiyar pAl vaikkum seyal theerAy: and negotiate the wage (due to them for their services); then, they take their suitors to the cotton bed on which the whores blabber words filled with delusory passion; kindly rid me of this base act of mine of doting on these stupid women who do not know fear or shame!

anthakan Aruyir pOkap pon thiN puramOdu eri pAyap paNdu angasanAr udal vEkak kaN thazhal mEvi: The dear life of Yaman (God of Death) was extinguished; the beautiful and strong townships of Thiripuram were burnt down; earlier, the body of Manmathan (God of Love) was scorched; and the flames emanating from the fiery eyes on His forehead,

aNdarkaLOdu adal Ar thakkan chanthira cUriyar veezhac chenRu ampala meethinil Adu aththan gurunAthA: maimed and knocked down the celestials and the strong king Dhakshan, along with the Moon and the Sun; then, He went on to the golden stage (in Chidhambaram) and danced; He is Lord SivA, and You are His Great Master, Oh Lord!

sinthuramOdu ari thEr varkkam pongamodu Ezh kadal cUr pathman sinthida vEl vidu vAkaith thiN puya vELE: The surging armies of elephants, horses and chariots, along with the seven seas and the demon SUran were all destroyed when You wielded the victorious spear with all the strength of Your powerful shoulders, Oh Great Leader!

sem kuRa mAthu mi(n)aLaik kaNdu ingithamAy uRavAdip paN senthamizh mAl puliyUr naththum perumALE.: Having met VaLLi, the reddish damsel of the KuRavAs, whose beauty is like that of the lightning, You fostered a sweet relationship with her and chose to reside in PuliyUr (Chidhambaram), a town filled with musical and chaste Tamil, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 491 kondhaLa vOlaigaL Ada - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]