திருப்புகழ் 482 காதைக் காதி  (சிதம்பரம்)
Thiruppugazh 482 kAdhaikkAdhi  (chidhambaram)
Thiruppugazh - 482 kAdhaikkAdhi - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத் தான தத்த தானத் தான தத்த
     தானத் தான தத்த ...... தனதான

......... பாடல் .........

காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற
     காமப் பூச லிட்டு ...... மதியாதே

காரொத் தேய்நி றத்த வோதிக் காவ னத்தி
     னீழற் கேத ருக்கி ...... விளையாடிச்

சேதித் தேக ருத்தை நேருற் றேபெ ருத்த
     சேலொத் தேவ ருத்தும் ...... விழிமானார்

தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க
     தீமைக் காவி தப்ப ...... நெறிதாராய்

மாதைக் காத லித்து வேடக் கான கத்து
     வாசத் தாள்சி வப்ப ...... வருவோனே

வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி
     மாளப் போர்தொ லைத்த ...... வடிவேலா

வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன்
     வீரத் தேர்ம றைத்த ...... புலியூர்வாழ்

மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க
     வேதத் தோர்து தித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி அற்ற காமப் பூசல்
இட்டு மதியாதே
... காதை வெட்டுவது போல வேகமாக (அந்தக்
காதின் மேல்) மோதி, கேட்டறியாத காமப் போரை விளைவித்து,
யாரையும் மதிக்காமல்,

கார் ஒத்த ஏய் நிறத்த ஓதிக் காவனத்தின் நீழற்கே தருக்கி
விளையாடி
... மேகத்தை ஒத்து நிகர்க்கும் கருநிறத்தை உடைய
கூந்தலாகிய காட்டின் நிழலிலே களிப்புற்று விளையாடி,

சேதித்தே கருத்தை நேர் உற்றே பெருத்த சேல் ஒத்தே
வருத்தும் விழி மானார்
... (தன்னைக் கண்டவர்களுடைய)
கருத்தை அழித்து, ஒழுங்காக பெரிதாக விளங்கி சேல் மீன் போன்று
(ஆண்களை) வருத்துகின்ற கண்களை உடைய பெண்களின்

தேமல் பார வெற்பில் மூழ்கித் தாபம் மிக்க தீமைக்கு ஆவி
தப்ப நெறி தாராய்
... தேமல் படர்ந்துள்ள கனத்த மலை போன்ற
மார்பிலே மூழ்கி, காம வேட்கை மிக்க கொடுமையினின்றும்,
என்னுடைய உயிர் பிழைக்கும்படியான நல்ல வழிகளைத் தந்தருளுக.

மாதைக் காதலித்து வேடக் கானகத்து வாசத் தாள் சிவப்ப
வருவோனே
... (வள்ளிப்) பெண் மீது ஆசை கொண்டு, வேடர்கள்
வாழும் காட்டில் நறுமணம் வீசும் திருவடிகள் சிவந்து போகச்
சென்றவனே,

வாரிக்கே ஒளித்த மாயச் சூரை வெட்டி மாளப் போர்
தொலைத்த வடிவேலா
... கடலில் சென்று ஒளிந்துகொண்ட,
மாயத்தில் வல்ல (மாமரமாகிய) சூரனை வெட்டி, அவன் மாளும்படி
போர் செய்து முடித்த கூரிய வேலனே,

வீதித் தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன் வீரத் தேர்
மறைத்த புலியூர் வாழ்
... வீதியில் தேர் செல்லுவதால் எழும் தூசியிலே
சூரியனுடைய வீரத் தேரும் மறைபடும் புலியூர் ஆகிய சிதம்பரத்தில்
இருக்கும்

மேலைக் கோபுரத்து மேவிக் கேள்வி மிக்க வேதத்தோர்
துதித்த பெருமாளே.
... மேற்குக் கோபுரத்தில் வீற்றிருந்து, கேள்வி
ஞானம் மிக்க மறையோர்கள் துதிக்கின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.451  pg 2.452 
 WIKI_urai Song number: 623 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 482 - kAdhaik kAdhi (chidhambaram)

kAthaik kAthi meththa mOthik kELvi yatRa
     kAmap pUsa littu ...... mathiyAthE

kAroth thEyni Raththa vOthik kAva naththi
     neezhaR kEtha rukki ...... viLaiyAdic

chEthith thEka ruththai nErut REpe ruththa
     sEloth thEva ruththum ...... vizhimAnAr

thEmaR pAra veRpil mUzhkith thApa mikka
     theemaik kAvi thappa ...... neRithArAy

mAthaik kAtha liththu vEdak kAna kaththu
     vAsath thALsi vappa ...... varuvOnE

vArik kEyo Liththa mAyac cUrai vetti
     mALap pOrtho laiththa ...... vadivElA

veethith thErna daththu thULath thAla rukkan
     veerath thErma Raiththa ...... puliyUrvAzh

mElaik kOpu raththu mEvik kELvi mikka
     vEthath thOrthu thiththa ...... perumALE.

......... Meaning .........

(The first six lines describe the eyes of the whores).

kAthaik kAthi meththa mOthik kELvi atRa kAmap pUsal ittu mathiyAthE: They roll swiftly towards the sides and collide with the ears as if they are about to sever them; they wage a war of passion unheard of; they care for none;

kAr oththa Ey niRaththa Othik kAvanaththin neezhaRkE tharukki viLaiyAdi: they play about delightfully under the shade of the forest-like dense hair, dark as the cloud;

sEthiththE karuththai nEr utRE peruththa sEl oththE varuththum vizhi mAnAr: they destroy the thinking process (of their paramours); they remain picture perfect and large, looking like the sEl fish, and torment (the men); these are the eyes of the whores

thEmal pAra veRpil mUzhkith thApam mikka theemaikku Avi thappa neRi thArAy: in whose heavy mountain-like discloured (due to acne) bosom, I have drowned myself; rescuing my life from the evil and passionate hankering for them, kindly show me certain righteous ways and means!

mAthaik kAthaliththu vEdak kAnakaththu vAsath thAL sivappa varuvOnE: Loving the damsel, VaLLi, You went inside the forest of the hunters on Your fragrant feet that became red from the strain!

vArikkE oLiththa mAyac cUrai vetti mALap pOr tholaiththa vadivElA: When the magical demon SUran hid in the sea (in the disguise of a mango tree), You ended the war by killing him with Your sharp spear, Oh Lord!

veethith thEr nadaththu thUL aththAl arukkan veerath thEr maRaiththa puliyUr vAzh: Your abode is PuliyUr (Chidhambaram) where chariots driven on the streets raise so much dust that the sun's chariot becomes indistinct;

mElaik kOpuraththu mEvik kELvi mikka vEthaththOr thuthiththa perumALE.: there You are seated in the western temple tower; well-informed and wise VEdic scholars worship You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 482 kAdhaik kAdhi - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]