திருப்புகழ் 481 ஆரத்தோடு அணி  (சிதம்பரம்)
Thiruppugazh 481 AraththOduaNi  (chidhambaram)
Thiruppugazh - 481 AraththOduaNi - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத் தானன தானன தானன
   தானத் தானன தானன தானன
      தானத் தானன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

ஆரத் தோடணி மார்பிணை யானைகள்
   போருக் காமென மாமுலை யேகொடு
      ஆயத் தூசினை மேவிய நூலிடை ...... மடமாதர்

ஆலைக் கோதினி லீரமி லாமன
   நேசத் தோடுற வானவர் போலுவர்
      ஆருக் கேபொரு ளாமென வேநினை ...... வதனாலே

காருக் கேநிக ராகிய வோதிய
   மாழைத் தோடணி காதொடு மோதிய
      காலத் தூதர்கை வேலெனு நீள்விழி ...... வலையாலே

காதற் சாகர மூழ்கிய காமுகர்
   மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள்
      காமத் தோடுற வாகையி லாவருள் ...... புரிவாயே

சூரர்க் கேயொரு கோளரி யாமென
   நீலத் தோகைம யூரம தேறிய
      தூளிக் கேகடல் தூரநி சாசரர் ...... களமீதே

சோரிக் கேவெகு ரூபம தாவடு
   தானத் தானன தானன தானன
      சூழிட் டேபல சோகுக ளாடவெ ...... பொரும்வேலா

வீரத் தால்வல ராவண னார்முடி
   போகத் தானொரு வாளியை யேவிய
      மேகத் தேநிக ராகிய மேனியன் ...... மருகோனே

வேதத் தோன்முத லாகிய தேவர்கள்
   பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்
      மேலைக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆரத்தோடு அணி மார்பு இணை யானைகள் போருக்கு ஆம்
என மா முலையே கொடு
... முத்து மாலையோடு ஆபரணங்களைக்
கொண்ட மார்பில் இணையாக உள்ள யானைகள் சண்டைக்கு
எழுந்துள்ளன போன்ற பெரிய மார்பகங்களைக் கொண்டவர்களாய்,

ஆயத் தூசினை மேவிய நூல் இடை மட மாதர் ... தேர்ந்து எடுத்த
ஆடையை அணிந்துள்ள நுண்ணிய இடையை உடைய அழகிய மாதர்கள்,

ஆலைக் கோதினில் ஈரம் இலா மன நேசத்தோடு
உறவானவர் போலுவர்
... கரும்பாலையில் சாறு நீங்கிய சக்கை போல்
கருணை இல்லாத மன அன்புடனே உறவு கொண்டவர் போன்றவர்கள்,

ஆருக்கே பொருளாம் எனவே நினைவு அதனாலே ... யாரோடு
உறவு கொண்டால் காசு கிடைக்கும் என்ற ஒரு எண்ணத்தையே
நினைவாகக் கொண்ட காரணத்தால்,

காருக்கே நிகராகிய ஓதிய மாழைத் தோடு அணி காதொடு
மோதிய காலத் தூதர் கை வேல் எனு நீள் விழி வலையாலே
...
கருமேகத்துக்கு ஒப்பான கூந்தலை உடையவர்கள், பொன்னாலாகிய
தோடு என்கின்ற ஆபரணத்தை அணிந்த காதை வந்து மோதுகின்ற,
யமனுடைய தூதவரின் கையில் உள்ள வேல் போலுள்ள, நீண்ட கண்கள்
என்கின்ற வலையாலே,

காதல் சாகர மூழ்கிய காமுகர் மேலிட்டே எறி கீலிகள்
நீலிகள்
... காதல் கடலில் முழுகிய காமுகர் மீதிற்பட்டு அவர்கள்
அதிரும்படி எறிகின்ற தந்திரவாதிகள், நீலி என்னும் பேய் போல் நடிக்க
வல்லவர்களாகிய விலைமாதர்கள் மீது

காமத்தோடு உறவாகை இலா அருள் புரிவாயே ...
காமவசப்பட்டு உறவுகொள்ளுதல் இல்லாதபடி அருள் புரிவாயாக.

சூரர்க்கே ஒரு கோளரியாம் என நீலத் தோகை மயூரம் அது
ஏறிய
... சூரர்களை அழிப்பதற்கே எனத் தோன்றிய ஒரு சிங்கம் போல்,
நீலத் தோகையை உடைய மயிலின் மேல் ஏறியவனே,

தூளிக்கே கடல் தூர நிசாசரர் கள(ம்) மீதே சோரிக்கே வெகு
ரூபமதா(ய்) அடு
... புழுதியால் கடல் நிரம்பி தூர்ந்து போக, அசுரர்கள்
போர்க்களத்தில் ரத்த மயமாக விளங்கப் போர் செய்து,

தானத் தானன தானன தானன சூழிட்டே பல சோகுகள்
ஆடவெ பொரும் வேலா
... தானத் தானன தானன தானன என்று
சூழ்ந்து கொண்டு பல பேய்க் கூட்டங்கள் கூத்தாடும்படி சண்டை செய்த
வேலனே,

வீரத்தால் வல ராவணனார் முடி போகத் தான் ஒரு வாளியை
ஏவிய மேகத்தே நிகராகிய மேனியன் மருகோனே
... வீரத்தில்
வல்ல ராவணனுடைய தலைகள் அற்று விழ, ஒரு ஒப்பற்ற அம்பைச்
செலுத்திய, மேகம் போன்று கறுத்த நிறமுடைய மேனியைக் கொண்ட,
(ராமனின்) திருமாலின் மருகனே,

வேதத்தோன் முதலாகிய தேவர்கள் பூசித்தே தொழ வாழ்
புலி ஊரினில்
... பிரமன் முதலாகிய தேவர்கள் எப்போதும் பூஜை
செய்து தொழுது வாழும் சிதம்பரத்தில்,

மேலைக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே. ... மேற்குக்
கோபுர வாசலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.447  pg 2.448  pg 2.449  pg 2.450 
 WIKI_urai Song number: 622 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 481 - AraththOdu aNi (chidhambaram)

Arath thOdaNi mArpiNai yAnaikaL
   pOruk kAmena mAmulai yEkodu
      Ayath thUsinai mEviya nUlidai ...... madamAthar

Alaik kOthini leerami lAmana
   nEsath thOduRa vAnavar pOluvar
      Aruk kEporu LAmena vEninai ...... vathanAlE

kAruk kEnika rAkiya vOthiya
   mAzhaith thOdaNi kAthodu mOthiya
      kAlath thUtharkai vElenu neeLvizhi ...... valaiyAlE

kAthaR sAkara mUzhkiya kAmukar
   mElit tEyeRi keelikaL neelikaL
      kAmath thOduRa vAkaiyi lAvaruL ...... purivAyE

cUrark kEyoru kOLari yAmena
   neelath thOkaima yUrama thERiya
      thULik kEkadal thUrani sAsarar ...... kaLameethE

sOrik kEveku rUpama thAvadu
   thAnath thAnana thAnana thAnana
      sUzhit tEpala sOkuka LAdave ...... porumvElA

veerath thAlvala rAvaNa nArmudi
   pOkath thAnoru vALiyai yEviya
      mEkath thEnika rAkiya mEniyan ...... marukOnE

vEthath thOnmutha lAkiya thEvarkaL
   pUsith thEthozha vAzhpuli yUrinil
      mElaik kOpura vAsalil mEviya ...... perumALE.

......... Meaning .........

AraththOdu aNi mArpu iNai yAnaikaL pOrukku Am ena mA mulaiyE kodu: Pearl necklace and other jewels adorn their chest on which the big breasts rise as though two elephants are about to charge in a war;

Ayath thUsinai mEviya nUl idai mada mAthar: these beautiful women have made the choicest selection of cloth to wrap around their slender waist;

Alaik kOthinil eeram ilA mana nEsaththOdu uRavAnavar pOluvar: their relationship is unkind, with a heart dry like the slag in the sugarmill after the juice is extracted;

ArukkE poruLAm enavE ninaivu athanAlE: their only thought is about who they should entertain so that they could make money;

kArukkE nikarAkiya Othiya mAzhaith thOdu aNi kAthodu mOthiya kAlath thUthar kai vEl enu neeL vizhi valaiyAlE: their hair is like the dark cloud; spreading the net of their long eyes which resemble the spears in the hands of the messengers of Yaman (God of Death) and which swing about colliding with their ears bearing golden studs,

kAthal sAkara mUzhkiya kAmukar mElittE eRi keelikaL neelikaL: they cleverly cast it (the net) upon their suitors immersed in a sea of passion, jolting them in that process; these whores are capable of acting like the she-devil, neeli;

kAmaththOdu uRavAkai ilA aruL purivAyE: kindly bless me so that I do not have any passionate relationship with them!

cUrarkkE oru kOLariyAm ena neelath thOkai mayUram athu ERiya: You mounted the blue peacock which was like a lion that emerged only to destroy the demon SUran and his clan;

thULikkE kadal thUra nisAsarar kaLa(m)meethE sOrikkE veku rUpamathA(y) adu: the entire sea was filled with dust particles and became dehydrated; the demons on the battlefield bled profusely when You fought the war;

thAnath thAnana thAnana thAnana sUzhittE pala sOkukaL Adave porum vElA: and many gangs of devils surrounded and danced to the tune of "thAnath thAnana thAnana thAnana" as You wielded the spear, Oh Lord!

veeraththAl vala rAvaNanAr mudi pOkath thAn oru vALiyai Eviya mEkaththE nikarAkiya mEniyan marukOnE: You are the nephew of Lord VishNu (RAmA), with the complexion of dark cloud, who knocked down the heads of the brave demon, RAvaNan, by wielding a matchless arrow!

vEthaththOn muthalAkiya thEvarkaL pUsiththE thozha vAzh puli Urinil: In this place, Chidhambaram, where BrahmA and other celestials live in a state of continuous worship,

mElaik kOpura vAsalil mEviya perumALE.: You have taken Your seat in front of the western temple tower, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 481 AraththOdu aNi - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]