திருப்புகழ் 466 மதவெம் கரி  (சிதம்பரம்)
Thiruppugazh 466 madhavemkari  (chidhambaram)
Thiruppugazh - 466 madhavemkari - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
     தனனந் தனத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு
     வளரும் தனத்த ணிந்த ...... மணியாரம்

வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்கு
     வரருந் திகைத்தி ரங்க ...... வருமானார்

விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள்
     மிகைகண் டுறக்க லங்கி ...... மருளாதே

விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து
     மிகவிஞ் சுபொற்ப தங்கள் ...... தருவாயே

நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த
     நடநம் பருற்றி ருந்த ...... கயிலாய

நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்
     நவதுங் கரத்ந முந்து ...... திரடோளுஞ்

சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல்
     திறல்செங் கணச்சு தன்றன் ...... மருகோனே

தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த
     திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு எனத் திரண்டு
வளரும் தனத்து அணிந்த மணி ஆரம்
... மதம் கொண்ட கொடிய
யானையின் இரண்டு வலிமையான கொம்புகள் என்று சொல்லும்படியாக,
திரட்சியுற்று வளர்கின்ற மார்பகங்கள் மீது அணிந்துள்ள ரத்தின மாலை,

வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நி(நீ)த்து இலங்கு
வரரும் திகைத்து இரங்க வரும் மானார்
... செங்கையில் வளைகள்,
இவைகள் ஒளி சிறந்து விளங்குவதைப் பார்த்து எல்லாவற்றையும்
துறந்தவர்களான சான்றோர்களும் திகைப்புற்று மனம் நெகிழும்படி
வருகின்ற மான் போன்ற மாதர்களின்

வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை
கண்டு உறக் கலங்கி மருளாதே
... விதம் விதமான இன்பம் தரும்
செயல்களையும், சிரிப்புடன் கொஞ்சிப் பேசும் குணங்களின்
மேம்பாட்டையும் பார்த்து, அவை மனத்தில் அழுந்த, உள்ளம் கலங்கி
மோக மயக்கம் கொள்ளாமல்,

வி(து)டு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உனைப்
புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே
... ஆசை
விட்டொழிந்து, சிறிதேனும் சந்தேகம் கொள்ளாமல் உன்னை உணர்ந்து,
உன்னைச் சுற்றி வலம் வந்து, உன்னைப் புகழ்ந்திட, மிக மேலான,
அழகிய திருவடிகளைத் தந்து அருளுக.

நதியும் திருக் கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர்
உற்று இருந்த கயிலாய நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன்
...
கங்கை ஆற்றையும், அழகிய கரந்தை மலரையும், பிறைச் சந்திரனையும்
சடையில் அணிந்தவரும், நடனம் ஆடுகின்றவருமான நடராஜப்
பெருமான் பொருந்தி வீற்றிருந்த கயிலாய மலையை, தனது கையால்
பிடுங்க முயன்ற அசுரனாகிய ராவணனுடைய

சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும்
சிதையும்படிக்கு ஒர் அம்பு தனை முன் தொடுத்த கொண்டல்
திறல் செம் கண் அச்சுதன் தன் மருகோனே
... தலைகளும்,
உடலும், உயர்ந்த நவரத்தின மாலை விளங்கும் திரண்ட தோள்களும்
சிதைந்து போகும்படி ஒப்பற்ற அம்பை முன்பு செலுத்தியவரும், மேகம்
போன்று கரு நிறம் கொண்டவரும், வலிமை விளங்கும் செவ்விய
கண்களை உடையவருமான ராமனின் (திருமாலின்) மருகனே,

தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உறப் பணிந்த
திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே.
... நாள்தோறும் உன்னைத்
தொழுவதின் பயனை உணர்ந்த தேவர்கள் உன்னைத் தாழப் பணிந்த
திரு அம்பலத்தே (சிதம்பரத்தில்) அமர்ந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.407  pg 2.408 
 WIKI_urai Song number: 607 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 466 - madhavem kari (chidhambaram)

mathaveng karikki raNdu valukom penaththi raNdu
     vaLarum thanaththa Nintha ...... maNiyAram

vaLaiseng kaiyiRchi Rantha voLikaN duniththi langu
     vararun thikaiththi ranga ...... varumAnAr

vithavin githapri yangaL nakaikon juthaRku NangaL
     mikaikaN duRakka langi ...... maruLAthE

vidusan gaiyatRu Narnthu valamvan thunaippu kazhnthu
     mikavin jupoRpa thangaL ...... tharuvAyE

nathiyun thirukka ranthai mathiyunj chadaikka Nintha
     nadanam parutRi runtha ...... kayilAya

nakaman gaiyiRpi dungu masuran siraththo dangam
     navathun garathna munthu ...... thiradOLum

sithaiyum padikko rampu thanaimun thoduththa koNdal
     thiRalseng kaNacchu thanRan ...... marukOnE

thinamum karuththu Narnthu surarvan thuRappa Nintha
     thiruvam palaththa marntha ...... perumALE.

......... Meaning .........

matha vem karikku iraNdu valu kompu enath thiraNdu vaLarum thanaththu aNintha maNi Aram: The string of precious gems adorns their plumpy and bulging breasts that look like two strong tusks of an enraged elephant;

vaLai sem kaiyil siRantha oLi kaNdu ni(nee)ththu ilangu vararum thikaiththu iranga varum mAnAr: they wear bangles on their reddish arms; looking at the brightness of these ornaments, even the wise ones who have completely renounced everything are awestruck, and their heart melts when these deer-like women pass by;

vitha ingitha priyangaL nakai konjuthal kuNangaL mikai kaNdu uRak kalangi maruLAthE: looking at the versatility of the pleasure-giving methods of these women and admiring their giggling and flirting capacity, a deep impression is made in the mind; I do not wish to be overcome by this delusory passion;

vi(t)tu sangai atRu uNarnthu valam vanthu unaip pukazhnthu mika vinju pon pathangaL tharuvAyE: I wish to get rid of this desire and to realise You without an iota of doubt; I wish to circumambulate You praising Your glory; and for that, kindly bless me with Your supreme and hallowed feet, Oh Lord!

nathiyum thiruk karanthai mathiyum chadaikku aNintha nadanampar utRu iruntha kayilAya nakam angaiyil pidungum asuran: He wears on His matted hair the river Gangai, the beautiful karanthai flower and the crescent moon; He is the dancing Lord NadarAjan, seated majestically on the Mount KailAsh which was shaken by the demon RaVaNan in an attempt to lift the mountain with his bare hands;

siraththodu angam nava thunga rathnam unthu thiraL thOLum sithaiyumpadikku or ampu thanai mun thoduththa koNdal thiRal sem kaN acchuthan than marukOnE: that RAvaNan's heads, body and strong shoulders, adorned with strings of precious gems of nine varieties, were all destroyed when He once wielded a unique arrow; His complexion is like the dark cloud; His eyes are reddish revealing His strength; and You are the nephew of that RAmA (Lord VishNu)!

thinamum karuththu uNarnthu surar vanthu uRap paNintha thiru ampalaththu amarntha perumALE.: The celestials know the value of worshipping You everyday; they come and prostrate at Your hallowed feet in Chidhambaram which is Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 466 madhavem kari - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]