திருப்புகழ் 462 திருடிகள் இணக்கி  (சிதம்பரம்)
Thiruppugazh 462 thirudigaLiNakki  (chidhambaram)
Thiruppugazh - 462 thirudigaLiNakki - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனத்தத் தந்த தந்தன
     தனதன தனத்தத் தந்த தந்தன
          தனதன தனத்தத் தந்த தந்தன ...... தனதான

......... பாடல் .........

திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி
     நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள்
          சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள் ...... சதிகாரர்

செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள்
     அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள்
          செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர் ...... வெகுமோகக்

குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக
     ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள்
          குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர் ...... விழியாலே

கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள்
     நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள்
          குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக ...... ளுறவாமோ

இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு
     மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு
          மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட ...... வருசூரர்

இபமொடு வெதித்தச் சிங்க மும்பல
     இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட
          இவுளியி ரதத்துற் றங்க மங்கிட ...... விடும்வேலா

அரிகரி யுரித்திட் டங்க சன்புர
     மெரிதர நகைத்துப் பங்க யன்சிர
          மளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவ ...... ரருள்கோனே

அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல்
     குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற
          அழகிய திருச்சிற் றம்ப லம்புகு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

திருடிகள் இணக்கிச் சம்பளம் பறி நடுவிகள் மயக்கிச்
சங்க(ம்) உண்கிகள்
... (வந்தவர்கள் பணத்தைத்) திருடுவோர். தம்
விருப்பப்படி கைப்பொருளைப் பறிக்கும் நீதி பூண்டவர்கள். மயங்க
வைத்துக் கலவி செய்பவர்கள்.

சிதடிகள் முலைக் கச்சு உம்பல் கண்டிகள் சதி காரர்
செவிடிகள் மதப்பட்டு உங்கு(ம்) குண்டிகள்
... அறிவிலர். கச்சு
அணிந்த மலை போன்ற மார்பகங்களைக் கொண்டவர்கள். கண்டித்துப்
பேசுபவர்கள். எப்போதும் சதி செய்பவர்கள். (வேண்டுமென) காது
கேளாதவர்கள் போல் நடிப்பவர்கள். அகங்காரம் கொண்டு உங்கார
ஒலியை எழுப்பும் இழிந்தவர்.

அசடிகள் பிணக்கிட்டும் புறம்பிகள் செழுமிகள் அழைத்து
இச்சம் கொ(ள்)ளும் செ(ய்)யர் வெகு மோகக் குருடிகள்
...
முட்டாள்கள். ஊடல் செய்துகொண்டு ஒழுக்கத்துக்குப் புறம்பானவர்கள்.
செழிப்பான அழகு கொண்டவர்கள். வருபவர்களை அழைத்து தமது
இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் செயல் திறத்தைக் கொண்டவர்கள்.
மிக்க காமம் பூண்ட குருடிகள்.

நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும்
பிணங்கிகள் குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர்
விழியாலே கொளுவிகள்
... சிரித்துக் கொண்டே தமது விருப்பத்தை
வெளியிடும், கள்ளுண்ட உதட்டினர். (பெற்ற பொருளைக்) கணக்குப்
பார்த்துப் பார்த்து பிணக்கம் கொள்ளுபவர்கள். தந்திரவாதிகள்.
(வருபவரின் உணவில்) மருந்து வைத்து மயக்கும் கொடிய குணம்
படைத்தவர்கள். கண்களால் (தம் பக்கம்) இழுத்துக் கொள்ளுபவர்கள்.

மினுக்குச் சங்கு இரங்கிகள் நடனமு(ம்) நடித்திட்டு ஒங்கு
சண்டிகள் குணம் அதில் முழுச் சுத்த அசங்க்ய சங்கிகள்
உறவு ஆமோ
... நடனம் செய்து விளங்கும் பிடிவாத குணம்
படைத்தவர்கள். குணத்தைப் பற்றிக் கூறுங்கால், முழுமையும்
கணக்கற்ற பேர்களுடன் சம்பந்தம் உடையவர்கள் (ஆகிய
விலைமாதர்களின்) இணக்கம் நல்லதோ?

இருடியர் இனத்து உற்று உம் பதம் கொ(ள்)ளும்
மறையவன் நிலத் தொக்கும் சுகம் பெறும் இமையவர் இனக்
கட்டும் குலைந்திட வரு சூரர்
... ரிஷிகள் இனத்தோர் கூட்டமும்,
உமது பதவியில் இருக்கும் பிரமன் படைத்த மண்ணுள்ளோர்
கூட்டமும், சுகம் பெற்றிருந்த தேவர் கூட்ட மிகுதியும் நிலை
குலையும்படி வந்த சூரர்கள்,

இபமொடு வெதித்தச் சிங்கமும் பல இரதமொடு எ(ந்)தத்
திக்கும் பிளந்திட இவுளி இரதத்து உற்று அங்க(ம்) மங்கிட
விடும் வேலா
... அவர்களுடைய யானைக் கூட்டங்களோடு,
வேறுபட்ட சிங்கங்களும், பல தேர்களும் எந்தத் திக்கும் பிளவு உண்டு
அழிய, குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் உள்ள உடல்கள் நாசம்
அடைய வேலைச் செலுத்தியவனே,

அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம் எரிதர நகைத்துப்
பங்கயன் சிரம் அளவொடும் அறுத்துப் பண்டு அணிந்தவர்
அருள் கோவே
... சிங்கத்தையும் யானையையும் தோலை உரித்து,
மன்மதனையும் திரி புரங்களையும் எரிபட்டு அழியச் சிரித்து,
பிரமனுடைய (ஐந்து) தலைகளில் ஒன்றை ஒரு கணக்காக அறுத்து
முன்பு பிரம கபாலத்தை அணிந்தவராகிய சிவபெருமான்
தந்தருளிய தலைவனே,

அமரர் த(ம்) மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் த(ம்) மகள்
பக்கம் சிறந்து உற அழகிய திருச் சிற்றம்பலம் புகு
பெருமாளே.
... தேவர்களின் மகளான தேவயானையிடம்
விருப்பத்தைக் காட்டி, குறப் பெண்ணாகிய வள்ளி (உனது) வலப்
புறத்தில் சிறப்புற்று வீற்றிருக்க, அழகிய சிதம்பரத்தில் புக்கு
விளங்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.395  pg 2.396  pg 2.397  pg 2.398  pg 2.399  pg 2.400 
 WIKI_urai Song number: 603 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 462 - thirudigaL iNakki (chidhambaram)

thirudika LiNakkic champa LampaRi
     naduvikaL mayakkic changa muNkikaL
          sithadikaL mulaikkac chumpal kaNdikaL ...... sathikArar

sevidikaL mathappat tungu kuNdikaL
     asadikaL piNakkit tumpu RampikaL
          sezhumika Lazhaiththic chango Lumcheyar ...... vekumOkak

kurudikaL nakaiththit tampu lampuka
     LuthadikaL kaNakkit tumpi NangikaL
          kusalikaL maruththit tumko dunguNar ...... vizhiyAlE

koLuvikaL minukkuc changi rangikaL
     nadanamu nadiththit tongu saNdikaL
          kuNamathil muzhucchuth thasankya sangika ...... LuRavAmO

irudiya rinaththut Rumpa thamkoLu
     maRaiyava nilaththok kumsu kampeRu
          mimaiyava rinakkat tungu lainthida ...... varucUrar

ipamodu vethiththac chinga mumpala
     irathamo dethaththik kumpi Lanthida
          ivuLiyi rathaththut Ranga mangida ...... vidumvElA

arikari yuriththit tanga sanpura
     merithara nakaiththup panga yansira
          maLavodu maRuththup paNda Ninthava ...... raruLkOnE

amarartha makatkit tampu rinthunal
     kuRavartha makatpak kamchi RanthuRa
          azhakiya thiruchchit Rampa lampuku ...... perumALE.

......... Meaning .........

thirudikaL iNakkic champaLam paRi naduvikaL mayakkic changa(m) uNkikaL: They steal money (from their suitors). They have a strange sense of justice of grabbing the belongings (of the suitors) as much as they wish. They enchant (their suitors) and make love to them.

sithadikaL mulaik kacchu umpal kaNdikaL sathi kArar sevidikaL mathappattu ungu(m) kuNdikaL: They are idiotic. Their bloused breasts look like mountain. Their speech is strict. They are always up to some conspiracy. (Deliberately) they pretend as though they are hard of hearing. They are so mean that they grunt noisily.

asadikaL piNakkittum puRampikaL sezhumikaL azhaiththu iccham ko(L)Lum se(y)yar veku mOkak kurudikaL: They are stupid. They quarrel during love-making and do unrighteous things. Their beauty is bountiful. They are capable of inviting their suitors to visit them in order to satisfy their own desires. Obsessive passion makes them blind.

nakaiththu ittam pulampu kaL uthadikaL kaNakkittum piNangikaL kusalikaL maruththu ittum kodum kuNar vizhiyAlE koLuvikaL: With a smile on their lips, wet with alcohol they have sipped, they are able to state their desire. Repeatedly counting the money they grabbed, they express their disdain. They are schemers. They have the wicked habit of administering charm powder (in suitors' food). They are able to lure people (to themselves) by merely playing with their eyes.

minukkuc changu irangikaL nadanamu(m) nadiththittu ongu saNdikaL kuNam athil muzhuc chuththa asankya sangikaL uRavu AmO: They show off with their compulsive dancing. If one has to speak about their character, It would suffice to say that they have relationship with countless number of people; what good is it to have a liaison with whores of this type?

irudiyar inaththu utRu um patham ko(L)Lum maRaiyavan nilath thokkum sukam peRum imaiyavar inak kattum kulainthida varu cUrar: The demons marched aggressively upsetting the multitude of sages, all earthlings created by Lord BrahmA who is on an elevated rank in Your realm and the entire crowd of the DEvAs in the blissful celestial land;

ipamodu vethiththac chingamum pala irathamodu e(n)thath thikkum piLanthida ivuLi irathaththu utRu anga(m) mangida vidum vElA: killing those demons, their armies of elephants, unique lions and many chariots were split and destroyed in all directions, and the bodies on the chariots attached to horses were also decimated when You wielded the spear, Oh Lord!

ari kari uriththittu angasan puram erithara nakaiththup pangayan siram aLavodum aRuththup paNdu aNinthavar aruL kOvE: Peeling off the hides of a lion and an elephant, burning down Manmathan (God of Love) and Thiripuram by His mere smile, He holds in His hand the skull of BrahmA, which came from the severed head carefully chosen (from the five heads of BrahmA); and that Lord SivA graciously delivered You as His son, Oh Lord!

amarar tha(m) makatku ittam purinthu nal kuRavar tha(m) makaL pakkam siRanthu uRa azhakiya thiruc chitRampalam puku perumALE.: Showing Your affection to DEvayAnai, the daughter of the celestials, and holding VaLLi, the damsel of the KuRavAs, on Your right, You have taken Your seat in the beautiful Golden Stage at Chidhambaram, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 462 thirudigaL iNakki - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]