திருப்புகழ் 453 வண்டையொத்து  (சிதம்பரம்)
Thiruppugazh 453 vaNdaiyoththu  (chidhambaram)
Thiruppugazh - 453 vaNdaiyoththu - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
     தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
          தந்தனத் தத்தன தந்தனத் தத்தன ...... தந்ததான

......... பாடல் .........

வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு
     வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை
          வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு ...... கென்பக்ரீவம்

மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பணை
     கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு
          வந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொரு ...... ளன்பினாலே

கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள்
     கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன
          குங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில் ...... மங்குறாமல்

கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துனி
     னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ்
          குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை ...... யென்றுசேர்வேன்

அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு
     டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம
          டஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிட ...... லென்பதாளம்

அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள்
     கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல
          னஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள் ...... வந்தசூரர்

கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச
     னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர்
          கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையி ...... லங்குவேலால்

கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக
     ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன
          கம்பலத் திற்குற மங்கைபக் கத்துறை ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

வண்டை ஒத்துக் கயல் கண் சுழற்றுப் புருவம் சிலைக்குத்
தொடு அம்பை ஒத்துத் தொடை வண்டு சுற்றுக் குழல்
கொண்டல் ஒத்து
... வண்டைப் போல், கயல் மீன் அனைய கண் தன்
சுழற்சியால் புருவமாகிய வில்லில் தொடுக்கப்பட்ட அம்பை நிகர்க்கவும்,
(அணிந்துள்ள) மாலையில் வண்டு சுற்றுகின்ற கூந்தல் மேகத்தை
நிகர்க்கவும்,

கமுகு என்ப க்ரீவம் மந்தரத்தைக் கட(ம்) பொங்கு இபத்துப்
பணை கொம்பை ஒத்துத் தனம் முந்து கு(கூ)ப்ப
... கழுத்து
கமுக மரம் என்று சொல்லும்படியும், மந்திரமலையையும் மதம்
பொங்குகின்ற யானையின் பருத்த தந்தங்களையும் நிகர்த்து மார்பகங்கள்
மின்னிட்டுக் கூம்ப,

தெரு வந்து எத்திப் பொரு மங்கையர்க் கைப் பொருள்
அன்பினாலே கொண்டு அழைத்துத் தழுவும் கை தட்டில்
பொருள் கொண்டு தெட்டிச் சரசம் புகழ்க்குக் குனகும்
குழற்கு
... தெருவில் வந்து வஞ்சித்து சண்டை செய்யும் விலைமாதர்கள்
தமது கையில் கிடைத்த பொருளின் பொருட்டுக் காட்டும் அன்பினால்,
(தமது வீட்டுக்குக்) கொண்டு போய், தழுவும் கைகளால் தட்டில்
பொருளைப் பெற்றவுடன் வஞ்சனை எண்ணத்துடன் காம லீலைகளைச்
செய்தும், புகழ்ந்தும் கொஞ்சியும் பேசுகின்ற, அடர்ந்த குழலை உடைய
பொது மகளிரின் பொருட்டு

இப்படி நொந்து கெட்டுக் குடில் மங்கு உறாமல் கொண்டு
சத்திக் கடல் உண்டு உகப்பத் துன் நின் அன்பருக்குச்
செயல் தொண்டு பட்டுக் கமழ் குங்குமத்தில் சரணம் பிடித்துக்
கரை என்று சேர்வேன்
... இவ்வாறு மனம் கெட்டு, உடம்பு வாட்டம்
அடையாமல், (தமது) ஆற்றலைக் கொண்டு கடலைக் குடித்து உமிழ்ந்து
உன்னை அடுத்த உன்னுடைய அன்பரான அகத்தியருக்கு பணி
செய்து தொண்டு ஆற்றி, நறு மணம் வீசும் செஞ்சாந்துள்ள
திருவடிகளைப் பற்றி (முக்திக்) கரையை என்று அடைவேன்?

அண்டம் மிட்டிக் குட டிண்டிமிட்டிக்கு குடந்த கொட்டத்
தகு டிங்கு தொக்கத் தமடம் சகட்டைக் குண கொம்பு
(இ)டக்கைக்கு இடல் என்ப தாளம்
... அண்டங்களை நெருங்கி
வளைய, டிண்டிமிட்டிக்கு இவ்வாறாக ஒலிகளை குடமுழ (கட)
வாத்தியம் முழக்கம் செய்ய, தகுந்த டிங்கு என்னும் ஒலி ஒன்று கூட,
தம்பட்டம் என்னும் பறை, சகண்டை (துந்துபி) என்னும் முரசு, சிறந்த
ஊது கொம்பு, இடக்கை ஆகியவைகளுக்கு உதவியாக தாளம் ஒலிக்க,

அண்டம் எட்டுத் திசை உ(ம்)பல் சர்ப்பத் திரள்கொண்டல்
பட்டுக் கிரியும் பொடித்து புலன் அஞ்சு அவித்துத் திரள்
அண்டம் முட்டத் துகள்
... அண்டங்களும், எட்டு திசைகளும்,
(எட்டு) யானைகளும், எட்டு பாம்புகளும், மேகமும் குலைபட்டு,
மலைகளும் பொடியாய், ஐந்து பொறிகளையும் கெடுத்து, திரண்ட
அண்டங்களில் முழுமையும் தூசி உண்டாக,

வந்த சூரர் கண்டம் அற்றுக் குடல் என்பு நெக்குத் தசனம்
கடித்துக் குடிலம் சிவப்பச் செ(ந்)நீர் கண் தெறிக்கத் தலை
பந்து அடித்துக் கையில் இலங்கு வேலால்
... எதிர்த்து வந்த
அசுரர்களின் கழுத்து அறுபட்டுப் போய், குடலும், எலும்பும் தளர்ச்சி
உற்று, பற்களைக் கடித்து, தலை மயிர் (ரத்தத்தால்) சிவப்பாக, ரத்தம்
கண்களினின்றும் வெளிப்பட்டுச் சிதற, (அசுரர்களின்) தலைகளைப்
பந்து அடிப்பது போல் அடித்து, கையில் ஏந்திய வேலாயுதத்தால்

கண் களிக்கக் ககனம் துளுக்கப் புகழ் இந்திரற்குப் பதம்
வந்து அளித்துக் கனக அம்பலத்தில் குற மங்கை பக்கத்து
உறை தம்பிரானே.
... கண் குளிர்ச்சி அடைய விண்ணுலகம் (இழந்த
பொலிவை மீண்டும் வரப் பெற்று) செழிப்புற, (தன்னைப்) புகழ்ந்த
இந்திரனுக்கு இந்திர பதவியை அருள் செய்து, பொன்னம்பலத்தில்
குற மகள் வள்ளியம்மையின் பக்கத்தில் வீற்றிருக்கும் தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.367  pg 2.368  pg 2.369  pg 2.370 
 WIKI_urai Song number: 594 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 453 - vaNdaiyoththu (chidhambaram)

vaNdaiyoth thukkayal kaNsuzhat Ruppuru
     vanjilaik kuththodu ampaiyoth thuththodai
          vaNdusut Rukkuzhal koNdaloth thukkamu ...... kenpakreevam

mantharath thaikkada pongipath thuppaNai
     kompaiyoth thuththana munthukup paththeru
          vanthueth thipporu mangaiyark kaipporu ...... LanpinAlE

koNdazhaith thuththazhu vungaithat tiRporuL
     koNduthet ticchara sampukazhk kukkuna
          kunguzhaR kippadi nonthuket tukkudil ...... manguRAmal

koNdusath thikkada luNdukup paththuni
     nanparuk kuccheyal thoNdupat tukkamazh
          kungumath thiRchara Nampidith thukkarai ...... yenRusErvEn

aNdamit tikkuda diNdimit tikkuku
     danthakot taththaku dinguthok kaththama
          danjakat taikkuNa kompudak kaikkida ...... lenpathALam

aNdamet tuththisai yumpalsarp paththiraL
     koNdalpat tukkiri yumpodith thuppula
          nanjavith thuththira LaNdamut taththukaL ...... vanthacUrar

kaNdamat Rukkuda lenpunek kuththasa
     nangadith thukkudi lanjivap pacchenir
          kaNtheRik kaththalai panthadith thukkaiyi ...... languvElAl

kaNkaLik kakkaka nanthuLuk kappuka
     zhinthiraR kuppatham vanthaLith thukkana
          kampalath thiRkuRa mangaipak kaththuRai ...... thambirAnE.

......... Meaning .........

vaNdai oththuk kayal kaN suzhatrup puruvam silaikkuth thodu ampai oththuth thodai vaNdu sutruk kuzhal koNdal oththu: They roll their beetle-like eyes that resemble kayal fish and the arrows wielded from their bow-like eyebrow; beetles swarm around the garland worn on their hair that looks like the black cloud;

kamuku enpa kreevam mantharaththaik kada(m) pongu ipaththup paNai kompai oththuth thanam munthu ku(kU)ppa: their neck looks like the (soft) betelnut tree; their dazzling and curved-in breasts look like Mount ManthirA and the bulky ivory tusks of an elephant in rage;

theru vanthu eththip poru mangaiyark kaip poruL anpinAlE koNdu azhaiththuth thazhuvum kai thattil poruL koNdu thettic charasam pukazhkkuk kunakum kuzhaRku: these whores come out on the street and pick up a quarrel treacherously; for the sake of the money that is handed to them, they feign love and lead their suitors to their home; while embracing (their suitors), they grab the money on the plate and carry on their passionate pranks with an ulterior motive of deception; they resort to a lot of flirting and tantalising speech praising their suitors; pining for these whores, endowed with rich hair,

ippadi nonthu kettuk kudil mangu uRAmal koNdu saththik kadal uNdu ukappath thun nin anparukkuc cheyal thoNdu pattuk kamazh kungumaththil charaNam pidiththuk karai enRu sErvEn: I am corrupting my mind, letting my body wither; lest I deteriorate like this, when will I attain the shores of liberation by holding on to Your hallowed feet, fragrant with red vermillion paste, by serving the devotees near You like the great Sage Agasthiyar, who, by dint of his own skill, devoured the seas and spat them out?

aNdam mittik kuda diNdimittikku kudantha kottath thaku dingu thokkath thamadam sakattaik kuNa kompu (i)dakkaikku idal enpa thALam: Resounding in all the worlds at a close range, many percussion instruments made of earth were beaten raising a noise like "diNdimittikku"; the sound of "dingu" joined that noise in harmony; the hand-drums (thampattam), the drums chakaNdai (thunthupi), the famous trumpet and the left-handed drum idakkai were all beaten to the timing of the meter;

aNdam ettuth thisai u(m)pal sarppath thiraLkoNdal pattuk kiriyum podiththu pulan anju aviththuth thiraL aNdam muttath thukaL: all the worlds, the eight cardinal directions, the eight elephants, the eight serpents and the clouds were shaken; all the mountains were smashed to pieces; the five sensory organs (of the demons) were subdued and all the swollen-up worlds were filled with dust

vantha cUrar kaNdam atruk kudal enpu nekkuth thasanam kadiththuk kudilam sivappac che(n)neer kaN theRikkath thalai panthu adiththuk kaiyil ilangu vElAl: when You wielded the spear from Your hand severing the necks of the confronting demons whose intestines and bones ached, their teeth grinding, their hair turning red (due to bleeding), their eyes spewing blood that scattered everywhere and their heads being hit as if they were balls;

kaN kaLikkak kakanam thuLukkap pukazh inthiraRkup patham vanthu aLiththuk kanaka ampalaththil kuRa mangai pakkaththu uRai thambirAnE.: the celestial land (regaining its lost lustre) looked very prosperous pleasing the eyes; the sovereign status was graciously re-conferred upon Indra who stood there lauding You; and You took Your seat on the golden stage in Chidhambaram with VaLLi, the damsel of the KuRavAs, standing by Your side, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 453 vaNdaiyoththu - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]