திருப்புகழ் 440 மொழிய நிறம்  (திருவருணை)
Thiruppugazh 440 mozhiyaniRam  (thiruvaruNai)
Thiruppugazh - 440 mozhiyaniRam - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தந்ததத்த தனதன தந்ததத்த
     தனதன தந்ததத்த ...... தனதான

......... பாடல் .........

மொழியநி றங்கறுத்து மகரவி னங்கலக்கி
     முடியவ ளைந்தரற்று ...... கடலாலும்

முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள்
     முழுகியெ ழுந்திருக்கு ...... நிலவாலும்

மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற
     மயல்தணி யும்படிக்கு ...... நினைவாயே

மரகத துங்கவெற்றி விகடந டங்கொள்சித்ர
     மயிலினில் வந்துமுத்தி ...... தரவேணும்

அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி
     னமுதத னம்படைத்த ...... திருமார்பா

அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்கு
     மருணைவ ளம்பதிக்கு ...... மிறையோனே

எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்க
     எழுசயி லந்தொளைத்த ...... சுடர்வேலா

இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த
     ரிவர்கள்ப யந்தவிர்த்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மொழிய நிறங்கறுத்து மகர இனங்கலக்கி ... யாவரும் குறிப்பிட்டுச்
சொல்லும்படியாக நிறம் கருமையடைந்து, மகர மீன்களின் கூட்டத்தால்
கலக்கப்பட்டு,

முடிய வளைந்து அரற்று கடலாலும் ... கிடைக்கின்ற முழு
இடத்தையும் வளைத்து ஆரவாரம் செய்யும் கடலாலும்,

முதிர விடம் பரப்பி வடவை முகந்து அழற்குள் முழுகி
எழுந்திருக்கு நிலவாலும்
... (சந்திரனின் கலைகள்) வளர்ந்து,
விஷத்தை எங்கும் பரப்பி, (யுக முடிவில் தீப் பிரளயமாக வரும்)
வடவா முகாக்கினியை மொண்டு கொண்டும், நெருப்பில்
மூழ்கியும் எழுந்துவரும் நிலவாலும்,

மழை அளகம் தரித்த கொடியிடை வஞ்சியுற்ற மயல் தணி
யும்படிக்கு நினைவாயே
... கார்மேகம் போன்ற கூந்தலைக்
கொண்ட, வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய என் மகள்
அடைந்த விரக தாபம் தணியும்படிக்கு நீ நினைந்து,

மரகத துங்கவெற்றி விகட நடங்கொள் சித்ர மயிலினில் வந்து
முத்தி தரவேணும்
... பச்சை நிறம், தூய்மை, வெற்றி இவைகளைக்
கொண்டதாகவும், அழகுள்ள நடனம் கொண்டதாகவும் உள்ள
அலங்கார மயில் மீது வந்து அவளுக்கு முக்தியைத் தரவேண்டும்.

அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தின் அமுத
தனம்படைத்த திருமார்பா
... அழகிய மென்மை வாய்ந்த குறத்தி
வள்ளியின் புளகம் கொண்டதும், சந்தனமும் அமுதமும்
பொதிந்ததுமான மார்பகத்தை அணைந்துள்ள திருமார்பனே,

அமரர் புரந்தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை
வளம்பதிக்கும் இறையோனே
... தேவர்களின் ஊராகிய
அமராவதியிலும், அழகிய திருச்செந்தூரிலும், திருவருணை என்ற
வளமான தலத்திலும் தங்கும் இறைவனே,

எழு புவனம் பிழைக்க அசுரர் சிரந்தெறிக்க எழு சயிலம்
தொளைத்த சுடர்வேலா
... ஏழு உலகங்களும் பிழைக்க, அசுரர்களின்
தலைகள் தெறிக்கும்படியாக ஏழு மலைகளையும் தொளைத்த
ஒளி வேலனே,

இரவிகள் அந்தரத்தர் அரியர பங்கயத்தர் இவர்கள்
பயந்தவிர்த்த பெருமாளே.
... ஆதித்தர்கள் (அதிதியின் புத்திரர்கள்),
விண்ணுலகத்தவர், திருமால், ருத்திரன், தாமரை மீதமர்ந்த பிரமன்
இவர்களது பயத்தை ஒழித்த பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய்
கூறுவதுபோல அமைந்தது.
கடல், நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.333  pg 2.334 
 WIKI_urai Song number: 581 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 440 - mozhiya niRam (thiruvaNNAmalai)

mozhiyani RangaRuththu makaravi nangalakki
     mudiyava LaintharatRu ...... kadalAlum

muthiravi damparappi vadavaimu kanthazhaRkuL
     muzhukiye zhunthirukku ...... nilavAlum

mazhaiyaLa kanthariththa kodiyidai vanjiyutRa
     mayalthaNi yumpadikku ...... ninaivAyE

marakatha thungavetRi vikadana damkoLsithra
     mayilinil vanthumuththi ...... tharavENum

azhakiya menkuRaththi puLakitha santhanaththi
     namuthatha nampadaiththa ...... thirumArpA

amararpu ranthanakku mazhakiya senthilukku
     maruNaiva Lampathikku ...... miRaiyOnE

ezhupuva nampizhaikka asurarsi rantheRikka
     ezhusayi lanthoLaiththa ...... sudarvElA

iravika Lantharaththar ariyara pangayaththa
     rivarkaLpa yanthavirththa ...... perumALE.

......... Meaning .........

mozhiya niRamkaRuththu makara inamkalakki mudiya vaLainthu aratRu kadalAlum: Because of the sea that has become notoriously black and stirred up by multitude of makara fish, makes a roaring noise, surrounding all available space,

muthira vidam parappi vadavai mukanthu azhaRkuL muzhuki ezhunthirukku nilavAlum: and because of the moon in its waxing phase spreading poison everywhere through its rays, that dips deep into the vadavA mukAgni (the inferno that spreads from the north pole on the doom's day at the end of the aeon) and comes out after immersing in fire,

mazhai aLakam thariththa kodiyidai vanjiyutRa mayal thaNi yumpadikku ninaivAyE: this girl of mine, with hair like the dark cloud and a waistline like the creeper vanji (rattan reed), is suffering due to pangs of separation from You; kindly consider alleviating her suffering

marakatha thungavetRi vikada nadangoL sithra mayilinil vanthu muththi tharavENum: by granting her liberation on coming to her, mounted on the graceful peacock having greenish hue, purity and victory and which dances beautifully!

azhakiya menkuRaththi puLakitha santhanaththin amutha thanampadaiththa thirumArpA: She is the beautiful and soft KuRavA girl; You hug, with Your hallowed chest, the exhilarated bosom of that VaLLi, which is smeared with sandal paste and nectar!

amarar puranthanakkum azhakiya senthilukkum aruNai vaLampathikkum iRaiyOnE: You are the Deity of amarAvathi, the capital of the celestial land, beautiful ThiruchchendhUr and the prosperous town of ThiruvaNNAmalai, Oh Lord!

ezhu puvanam pizhaikka asurar sirantheRikka ezhu sayilam thoLaiththa sudarvElA: To protect the seven worlds, You wielded the bright spear that shattered the heads of the demons and pierced through the seven mountains, Oh Lord!

iravikaL antharaththar ariyara pangayaththar ivarkaL payanthavirththa perumALE.: The AdhityAs (sons of adhithi), the celestials, Lord VishNu, Rudran and BrahmA, seated on the lotus, were all relieved when You allayed their fear, Oh Great One!


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's mother's role, expresses the pang of separation from the hero, Murugan. The roaring sea and the moon are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 440 mozhiya niRam - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]