திருப்புகழ் 361 காவிப் பூவை  (திருவானைக்கா)
Thiruppugazh 361 kAvippUvai  (thiruvAnaikkA)
Thiruppugazh - 361 kAvippUvai - thiruvAnaikkASri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத் தான தான தனதன
     தானத் தான தான தனதன
          தானத் தான தான தனதன ...... தனதான

......... பாடல் .........

காவிப் பூவை யேவை யிகல்கவன
     நீலத் தால கால நிகர்வன
          காதிப் போக மோக மருள்வன ...... இருதோடார்

காதிற் காதி மோதி யுழல்கண
     மாயத் தார்கள் தேக பரிசன
          காமக் ரோத லோப மதமிவை ...... சிதையாத

பாவிக் காயு வாயு வலம்வர
     லாலிப் பார்கள் போத கருமவு
          பாயத் தான ஞான நெறிதனை ...... யினிமேலன்

பாலெக் காக யோக ஜெபதப
     நேசித் தார வார பரிபுர
          பாதத் தாளு மாறு திருவுள ...... நினையாதோ

கூவிக் கோழி வாழி யெனமயி
     லாலித் தால கால மெனவுயர்
     கூளிச் சேனை வான மிசைதனில் ...... விளையாடக்

கோரத் தீர சூர னுடைவினை
          பாறச் சீற லேன பதிதனை
          கோலக் கால மாக அமர்செய்த ...... வடிவேலா

ஆவிச் சேல்கள் பூக மடலிள
     பாளைத் தாறு கூறு படவுய
          ராலைச் சோலை மேலை வயலியி ...... லுறைவோனே

ஆசைத் தோகை மார்க ளிசையுட
     னாடிப் பாடி நாடி வருதிரு
          ஆனைக் காவில் மேவி யருளிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

காவிப் பூவை ஏவை இகல்வன ... கருங்குவளைப் பூவுடனும்,
அம்புடனும் ஒத்திருந்தும் மாறுபடுவன.

நீலத்து ஆலகால நிகர்வன ... கருநீல ஆலகால விஷத்தை ஒப்பன.

காதிப் போக மோகம் அருள்வன ... கொல்லும் தன்மையதாய்
இன்பத்தையும் காம மயக்கத்தையும் கொடுப்பன.

இரு தோடார் காதில் காதி மோதி உழல் க(ண்)ண ... இரண்டு
தோடுகளை அணிந்துள்ள காதுகளை வெட்டுவன போலப் போய்
மோதித் திரியும் கண்களைக் கொண்டு,

மாயத்தார்கள் தேக பரிசன காம க்ரோத லோப மதம் இவை
சிதையாத பாவிக்கு
... மாயக்காரிகள் (ஆகிய வேசையர்களின்)
தேகத்தைத் தொடுதற்குள்ள ஆசை, கோபம், ஈயாமை, செருக்கு இவை
அழியாத பாவியாகிய எனக்கு,

ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான
ஞான நெறி தனை
... ஆயுளும், பிராணவாயுவும் வலிமை வரும்படி
அன்பு வைத்தவர்களுடைய அறிவோடு கூடிய தொழில்களின்
உபாயத்தைக் காட்டும் ஞான வழியை,

இனி மேல் அன்பா (இ)லக்கு ஆ(க்)க யோக ஜெப தப
நேசித்து
... இனி மேல் என் மீது அன்பு வைத்து, (அந்த வழியே) குறியாக
வைத்துக் கொண்டு, ஜெப தபம் இவைகளில் அன்பு வரும்படிச் செய்து,

ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள(ம்)
நினையாதோ
... பேரொலி செய்யும் சிலம்பு அணிந்த உன் திருவடியில்
என்னை ஆண்டு கொண்டு ஆளுமாறு நினைந்து அருளக் கூடாதோ?

கூவிக் கோழி வாழி என மயில் ஆலித்து ஆலகாலம் என
உயர்
... கோழியானது கூவி வாழிய என்று வாழ்த்தி, மயில் ஆரவாரம்
செய்து விஷம் போல உயர்ந்து விளங்க,

கூளிச் சேனை வான மிசை தனில் விளையாட ... சிவ
கணங்களாகிய பூதகணச் சேனைகள் வானில் விளையாட,

கோரத் தீர சூரனுடை வினை பாற ... அச்சம் தருபவனும்
தீரனுமான சூரனுடைய முயற்சி சிந்தி அழிய,

சீறல் ஏனபதி* தனை கோலக்காலமாக அமர் செய்த
வடிவேலா
... சீறிப் பெருங் கோபத்துடன் வந்த ஆதிவராகத்தை*
கூச்சலிட்டு அடங்க போர் செய்த கூரிய வேலனே,

ஆவிச் சேல்கள் பூகம் மடல் இள பாளைத் தாறு கூறுபட ...
குளத்தில் உள்ள சேல் மீன்கள் கமுக மரத்தின் ஏடுகளாகிய இளம்
பாளைகளின் குலைகள் பிளவுபடும்படி,

உயர் ஆலைச் சோலை மேலை வயலியில் உறைவோனே ...
உயர்ந்து பாயும் கரும்புகள் நிறைந்த சோலையைக் கொண்ட, மேலை
வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே,

ஆசைத் தோகைமார்கள் இசை உடன் ஆடிப் பாடி நாடி வரு ...
ஆசை நிரம்பிய பெண்கள் இசைபாடிக் கொண்டு விரும்பி வந்து
வணங்குகின்ற

திரு ஆனைக் காவில் மேவி அருளிய பெருமாளே. ...
திருவானைக்கா என்னும் ஊரில் விருப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே.


* ஏனபதி = ஆதிவராகம். இரணியாக்ஷன் என்பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்
கொண்டு கடலின் கீழ் ஒளித்தான். பூமி தேவி முறையிட, திருமால் வராக ரூபம்
எடுத்து, இரணியாக்ஷனைக் கொன்று பூமியை நிலை நிறுத்தினார். அரக்கன்
ரத்தத்தைக் குடித்த வராகம் மதம் கொள்ள, சிவபெருமான் முருகனை அனுப்பினார்.
போரில் வராகத்தை முருகன் அடக்கி அதன் கொம்பைப் பிடுங்கிச்
சிவனிடம் சேர்ப்பித்தார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.151  pg 2.152  pg 2.153  pg 2.154 
 WIKI_urai Song number: 503 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 361 - kAvip pUvai (thiruvAnaikkA)

kAvip pUvai yEvai yikalkavana
     neelath thAla kAla nikarvana
          kAthip pOka mOka maruLvana ...... iruthOdAr

kAthiR kAthi mOthi yuzhalkaNa
     mAyath thArkaL thEka parisana
          kAmak rOtha lOpa mathamivai ...... sithaiyAtha

pAvik kAyu vAyu valamvara
     lAlip pArkaL pOtha karumavu
          pAyath thAna njAna neRithanai ...... yinimElan

pAlek kAka yOka jepathapa
     nEsith thAra vAra paripura
          pAthath thALu mARu thiruvuLa ...... ninaiyAthO

kUvik kOzhi vAzhi yenamayi
     lAlith thAla kAla menavuyar
          kULic chEnai vAna misaithanil ...... viLaiyAdak

kOrath theera cUra nudaivinai
     pARac cheeRa lEna pathithanai
          kOlak kAla mAka amarseytha ...... vadivElA

Avic chElkaL pUka madaliLa
     pALaith thARu kURu padavuya
          rAlaic chOlai mElai vayaliyi ...... luRaivOnE

Asaith thOkai mArka Lisaiyuda
     nAdip pAdi nAdi varuthiru
          Anaik kAvil mEvi yaruLiya ...... perumALE.

......... Meaning .........

kAvip pUvai Evai ikalvana: Although they look like the black lily and the arrows, they subtly differ from them;

neelaththu AlakAla nikarvana: their hue is like dark blue poison, AlakAlam;

kAthip pOka mOkam aruLvana: they are capable of dispensing simultaneously bliss that could kill and a delusion of passion;

iru thOdAr kAthil kAthi mOthi uzhal ka(N)Na: and they swing moving back and forth attacking the ears with the two ear-studs as if to sever them; possessing such eyes,

mAyaththArkaL thEka parisana kAma krOtha lOpa matham ivai sithaiyAtha pAvikku: are the enchanting whores to touch whose bodies I have unabated desire; I also have anger, miserliness and arrogance; to redeem such a sinner like me,

Ayu vAyu valam vara lAlippArkaL pOtha karuma upAyaththAna njAna neRi thanai: kindly show me the path of wisdom, that can be revealed by people who are interested in my long life and strong source of oxygen and who could offer me ways and means of practical activities that leads to enlightenment;

ini mEl anpA (i)lakku A(k)ka yOka jepa thapa nEsiththu: from now on, kindly love me so that I keep that path as my goal and I become interested in meditation and penance;

AravAra paripuram pAthaththu ALumARu thiru uLa(m) ninaiyAthO: can You not think of taking charge of me unto Your hallowed feet adorned at the lilting anklets?

kUvik kOzhi vAzhi ena mayil Aliththu AlakAlam ena uyar: The rooster crowed aloud saying "Hail to You" while the peacock danced excitedly soaring high like the rising poison, AlakAlam;

kULic chEnai vAna misai thanil viLaiyAda: the armies of devils who serve Lord SivA gathered in the sky playing;

kOrath theera cUranudai vinai pARa: and the efforts of the frightening and valorous demon, SUran, were wasted and destroyed;

seeRal Enapathi* thanai kOlakkAlamAka amar seytha vadivElA: when AdhivarAgan* who came to the war screaming and charging with rage, was overpowered by Your sharp spear, Oh Lord!

Avic chElkaL pUkam madal iLa pALaith thARu kURupada uyar Alaic chOlai mElai vayaliyil uRaivOnE: The sEl fish in the pond of this town, West VayalUr, surrounded by groves of sugarcanes, jump about soaring so high as to strike the young bunches of betelnuts in the kamuga trees; You have Your abode in this place;

Asaith thOkaimArkaL isai udan Adip pAdi nAdi varu: Girls filled with love willingly come singing Your praise to worship You at

thiru Anaik kAvil mEvi aruLiya perumALE.: ThiruvAnaikkA where You are seated with relish, Oh Great One!


* Enapathi = AthivarAkam, incarnation as a boar by Lord VishNu; when HiraNyAkshan, the demon, rolled the earth as a mat and hid it under the sea, Mother Earth appealed to Lord VishNu who took the incarnation of a boar (varAkam), killed HiraNyAkshan and restabilised the earth. Having imbibed the demon's blood, the boar became uncontrollable and began to wreak havoc on the earth. Lord SivA sent Murugan to tame the boar. In the ensuing war, Murugan subdued the boar and broke its horn to present it as a souvenir to Lord SivA.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 361 kAvip pUvai - thiruvAnaikkA

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]