திருப்புகழ் 319 தசைதுறுந் தொக்கு  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 319 thasaidhuRunthokku  (kAnjeepuram)
Thiruppugazh - 319 thasaidhuRunthokku - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

......... பாடல் .........

தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்
     சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந்
          தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந் ...... த்ரியமாறித்

தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும்
     தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன்
          தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங் ...... கழலாநின்

றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந்
     ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங்
          கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண் ...... டுமியாமற்

றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்
     கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்
          டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் ...... றருள்வாயே

குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்
     டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங்
          குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங் ...... கதிர்நேமிக்

குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண்
     டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங்
          குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங் ...... கதிர்வேலா

திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்
     சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண்
          டிரையலங் கத்துப் புக்குல விச்சென் ...... றெதிரேறிச்

சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்
     றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ்
          சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தசை துறுந்து ஒக்குக் கட்டு அளை சட்ட(க)ம் சரிய வெண்
கொக்குக்கு ஒக்க நரைத்து
... மாமிசமும் நெருங்கிய தோலும்
அளந்து வைக்கப்பட்ட உடல் தளர்ந்து போக, தலைமயிர்
வெண்ணிறமுடைய கொக்கு போல நரைத்து,

அம் தலை உடம்பு எய்த்து எற்புத் தளை நெக்கி இந்த்ரிய(ம்)
மாறி
... அழகிய தலை, உடம்பு எல்லாம் இளைத்து, எலும்புக் கட்டுகள்
நெகிழ்ச்சி உற்று, ஐம்பொறிகளும் தொழில் மாற்றம் அடைந்து,

தடி கொ(ண்)டும் திக்குத் தப்ப நடக்கும் தளர்வு உறும் சுத்தப்
பித்த விருத்தன்
... தடி ஏந்தி திசை தடுமாறி நடக்கும்படியாக
தளர்ச்சி அடையும் சுத்தப் பித்தம் கொண்ட கிழவனாய்,

தகை பெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று ...
அழகு பெற்றிருந்த பல் வரிசைகள் முழுமையும் கழன்று போய்,

அசலரும் செச்செ செச்செ எனச் சந்ததிகளும் சிச்சி சிச்சி
என
... அயலாரும் சே சே என்று இகழ, பிள்ளைகளும் சீ சீ என்று
பரிகசிக்க,

தங்கு அரிவையும் துத்து துத்து எனக் கண்டு உமியா
மற்றவரு(ம்) நிந்திக்கத் தக்க பிறப்பு இங்கு அலம் அலம்
...
உடன் தங்கியிருந்த பெண்களும் தூ தூ என்று பார்த்தவுடன்
அவமதித்துத் துப்ப, பிறர் யாவரும் இகழும்படியான இந்தப் பிறப்பு
இங்கு போதும் போதும்.

செச்சைச் சித்ர மணித் தண்டை அரவிந்தத்தில் புக்கு
அடைதற்கு என்று அருள்வாயே
... வெட்சி மலர் அணிந்ததும்,
அழகிய ரத்தின மணிகள் அணிந்ததும், தாமரை போன்றதுமான
உன் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எப்போது எனக்கு அருள்வாய்?

குசை முடிந்து ஒக்கப் பக்கரை இட்டு எண் திசையினும்
தத்தப் புத்தியை நத்தும் குரகதம் கட்டிக் கிட்டி நடத்தும்
கதிர் நேமி குல ரதம் புக்கு
... கடிவாளம் இட்டு நன்றாக அங்கவடி
சேர்த்து, எட்டுத் திக்குகளிலும் தாவிச் செல்லும், அந்த ஞானத்தை
விரும்பும் (வேதங்களாகிய நான்கு) குதிரைகளைப் பூட்டி நெருங்கச்
செலுத்தும் சூரிய சந்திரர்களாகிய சக்கரங்கள் அமைந்த சிறந்த தேரில் ஏறி,

ஒற்றைக் கணை இட்டு எண் திரிபுரம் சுட்டுக் கொட்டைப்
பரப்பும் குரிசில் வந்திக்கக் கச்சியில் நிற்கும் கதிர் வேலா
...
(திருமாலாகிய) ஒரே அம்பை எய்து, மதிக்கத்தக்கத் திரிபுரங்களை
எரித்து தமது வெற்றியைப் பரப்பிய தலைவராகிய சிவபெருமான்
வணங்க காஞ்சீபுரத்தில் நிற்கும் ஒளி வேலனே,

திசை முகன் தட்டுப் பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு
விழ
... பிரமன் தடைபட்டு நிற்கும்படியும், வலிமை வாய்ந்த கிரெளஞ்ச
மலையும் வேலால் குத்துப்பட்டு விழுந்து அழியவும்,

தெண் திரை அலங்கத்துப் புக்கு உலவிச் சென்று எதிர் ஏறிச்
சிரம் அதுங்க
... தெள்ளிய அலைகள் வீசும் கடலையும் எல்லா மதில்
சுவர்களையும் தாண்டி உலவிச் சென்று பகைவர்களை எதிர்த்து வென்று
(அசுரர்களுடைய) தலைகளும் அமுங்கி நாசம் அடைய,

பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்திக்
கறை கட்கம் சிதறி நின்று எட்டிப் பொட்டு எழ வெட்டும்
பெருமாளே.
... அகன்ற கண்கள் திகைப்பு அடைய, அசுரர்களுடைய
நெஞ்சில் வேலால் குத்தி, அவர்கள் கையிலிருந்த கறைபட்ட
வாளாயுதங்கள் சிதறிச் சென்று தூரத்தில் போய் போர்க்களத்தில் பொடி
பட்டு விழும்படி வெட்டி வீழ்த்திய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.41  pg 2.42  pg 2.43  pg 2.44 
 WIKI_urai Song number: 461 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 319 - thasaithuRun thokku (kAncheepuram)

thasaithuRun thokkuk kattaLai sattam
     chariyaveN kokkuk kokkana raiththan
          thalaiyudam peyththeR puththaLai nekkin ...... thriyamARith

thadikodun thikkuth thappana dakkum
     thaLarvuRum suththap piththavi ruththan
          thakaipeRum paRkoth thukkaLa naiththum...... kazhalAnin

Rasalarum checchec checcheye nacchan
     thathikaLum chicchic chicchiye naththang
          arivaiyum thuththuth thuththuve nakkaN ...... dumiyAmat

Ravarunin thikkath thakkapi Rapping(u)
     alamalam checchaic chithrama NiththaN
          daiyaravin thaththiR pukkadai thaRken ...... RaruLvAyE

kusaimudin thokkap pakkarai yitteN
     disaiyinun thaththap puththiyai naththung
          kurakathang kattik kittina daththum ...... kathirnEmik

kularatham pukkot RaikkaNai yitteN
     diripuram chuttuk kottaipa rappum
          kurisilvan thikkak kacchiyil niRkung ...... kathirvElA

thisaimukan thattup pattezha vaRkum
     sikariyung kuththup pattuvi zhaththeN
          diraiyalang kaththup pukkula vicchen ...... RethirERic

chiramathung kappoR kattikai yittan
     RavuNarnen jiRkuth thikkaRai katkam
          sithaRinin Rettip pottezha vettum ...... perumALE.

......... Meaning .........

thasai thuRunthu okkuk kattu aLai satta(ka)m sariya veN kokkukku okka naraiththu: This body, made up of measured quantities of flesh and skin, loses its firmness; the hair turns white like the crane;

am thalai udampu eyththu eRputh thaLai nekki inthriya(m) mARi: the fine head and the robust body weaken; the bone structure crumbles; all the five sensory organs undergo changes in their activities;

thadi ko(N)dum thikkuth thappa nadakkum thaLarvu uRum suththap piththa viruththan: I have become weak turning into a totally crazy old man leaning on my walking stick, staggering haphazardly with no sense of direction;

thakai peRum pal koththukkaL anaiththum kazhalA ninRu: the neat rows of my teeth have fallen off;

asalarum checche checche enac chanthathikaLum chicchi chicchi ena: while my neighbours are pooh-poohing me, I am also ridiculed by my children;

thangu arivaiyum thuththu thuththu enak kaNdu umiyA matRavaru(m) ninthikkath thakka piRappu ingu alam alam: the womenfolk in my house spit at me in contempt; all others mock at me dirisively; I have had enough of this life on this earth;

secchaic chithra maNith thaNdai aravinthaththil pukku adaithaRku enRu aruLvAyE: when will You bless me to attain and hold on to Your hallowed lotus feet, wearing the vetchi flowers and adorned by precious rubies and gems?

kusai mudinthu okkap pakkarai ittu eN thisaiyinum thaththap puththiyai naththum kurakatham kattik kitti nadaththum kathir nEmi kula ratham pukku: He mounted a great chariot whose wheels were the Sun and the Moon to which were attached tightly harnessed and well decorated horses (namely, the four VEdAs); those horses, seeking true knowledge, leapt and sped in the eight directions;

otRaik kaNai ittu eN thiripuram suttuk kottaip parappum kurisil vanthikkak kacchiyil niRkum kathir vElA: He is the great leader who wielded a single arrow (namely, Lord VishNu) and burnt down the celebrated Thiripuram; His victory was proclaimed everywhere; that Lord SivA worships You, Oh Lord with the bright spear, seated in Kancheepuram!

thisai mukan thattup pattu ezha vaRkum sikariyum kuththuppattu vizha: Lord Brahma was stunned and standing perplexed; the mighty mountain Krouncha was pierced by the spear and destroyed;

theN thirai alangaththup pukku ulavic chenRu ethir ERic chiram athunga: You marched ahead across the seas with clear waves and over all the fortress walls and fought with the enemies conquering them and crushing the heads of the demons;

pon kaN thikai ittu anRu avuNar nenjsil kuththik kaRai kadkam sithaRi ninRu ettip pottu ezha vettum perumALE.: the wide eyes of the demons froze in shock when You thrust the spear into their hearts; You severed their arms so powerfully that the blood-stained swords in their hands were smashed to pieces and scattered all over, falling far away in the battlefield, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 319 thasaidhuRun thokku - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]